-
19th November 2014, 10:58 AM
#2911
Junior Member
Newbie Hubber
ராகவேந்தர் சார்,
முரளி சொன்னதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளாமல் வீண் தர்க்கம் செய்வதில் அர்த்தமில்லை.
1)ஒரு நடிகராக,மற்றோருக்கு வெறி பிடித்த ரசிகர் கும்பல் இருக்கலாம். அவர்கள் சிறு வயதில் தீவிர ரசிகர்களாக உருமாற்றப்பட்டு, அந்த வெறியிலே தொடர்பவர்கள். அவர்கள் படு கீழ்த்தரமான படங்களை/கற்பனை வளமற்ற நடிப்பை கூட ஆஹா ஓஹோ என்பார்கள். இவர்களுடன் பொது மக்கள் இணைவதேயில்லை. ஆனால் சிவாஜியை பொறுத்த அளவில் அவரை ஒரு நடிகராக தமிழறிந்த அனைவரும் விரும்புகிறார்கள். வெவ்வேறு மனநிலைகளில். வெறி பிடித்தவர்கள் கம்மி. என்னையே எடுத்து கொண்டால் ,என் அன்னையால் சிவாஜி அறிமுகமாகி ,புதிய பறவை பார்த்து 6 வயதில் ரசிகனானவன். அப்போது எனக்கு பல ஆதர்சங்கள் உண்டு. ஆனால் ,நான் சிவாஜி ரசிகனாக தொடர்வது ,என் தேர்ந்தெடுப்பு .அவருடைய நடிப்பு எனக்கு தொடர்ந்து அளிக்கும் பரவசம்,புதுமை,பன்முகத்தன்மை. ஆனால் அவர் நடித்த எல்லாம் உன்னதமே என்று சொல்ல வேண்டும் ,மாற்று திரியினரை பாருங்கள், எல்லாவற்றையும் புகழ்ந்தே எழுதுகிறார்கள் என்றால், நான் பெருமையாக சொல்கிறேன். இரண்டு எழுத்தாள நண்பர்கள், மூன்று பிரசித்தி பெற்ற இயக்குனர்கள், இரண்டு பேர் பெற்ற பதிவர்கள், இதற்கு மேல் எந்த நடிகனை பற்றி எந்த காலத்திலும் எழுத பட்டதில்லை என்று சொன்னது போதும்.
நான் அவர்களுக்கு சொன்ன பதில், நான் எழுதிய கரு பொருளின் தன்மை அப்படி. வேறு எவனையும் பற்றி இப்படி எழுதும் அளவு,எவனும் சாதித்ததில்லை.இன்னும் எழுத எவ்வளவோ உண்டு என்று.
ஆனாலும் விமரிக்கும் உரிமையை விட்டு கொடுக்க மாட்டேன். வாசு,நீங்கள் எவ்வளவு வலியுறுத்திய போதும்.
2)ஜோவின் கருத்து எனக்கு உடன்பாடுடையதே. மற்ற நடிகர்கள், தங்கள் ஒருமுனை பட்ட ,கற்பனை வளமற்ற ,பொழுது போக்கு படங்களால் சிறுவர்களை கவர்ந்து தக்க வைக்கிறார்கள்.வாழ்நாள் முழுவதும். அவர்களை பற்றி இரு வரி கூட எழுத தகுதியிருக்காது. நடிகர்ததிலகமோ, 1952 முதல் 1957 வரை தன்னுடைய புதுமை மிகுந்த வேறு பட்ட நடிப்பினால் பண்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். 1958 முதல் 1965 வரை தாய்மார்கள்,தந்தை மார்களின் பிடித்த நாயகன். 1966 முதல் 1975 வரை நகர கிராம,சிறுவர்,இளைஞர்,முதியவர், அனைவரின் கனவு ஸ்டார். 1976 முதல் 1985 வரை தன் முற்கால ரசிகர்களாலும், போட்டியின்மையாலும் ஒரே சூப்பர் ஸ்டார் என்ற அளவில் கொடி நாட்டினார். இந்த 1958-1965,1976-1985 காலகட்டங்களில் சிறுவர்களை கவர்ந்து தக்க வைக்கவில்லை.படங்களின் தன்மை அப்படி.
3)ஒரே படத்தில் sampling முறையில் அவர் திறமை அளக்க பட முடியாது. அவரை தொடர வேண்டும்.அவரை பற்றி எடுத்து சொல்ல வேண்டும். அது சுலபமல்ல. வேதங்களை,பகவத்கீதையை, கம்ப ராமாயணத்தை எல்லாரும் உடனே புரிந்து கொள்ளவா முடியும்?நடிகர்திலகத்தின் நடிப்பு அத்தகைய வீச்சு கொண்டது. அவர் நடிகர்களின் நடிகன். இதை எடுத்து சொல்ல பலதர பட்ட மனிதர்கள் நமக்கு தேவை.
அதனால் எல்லா தர பட்ட மக்களிலும் (நடிகர்கள் உட்பட)நமக்கு பரப்புரையாளர்கள் அவசியம்.இது ராஜேஷ்குமார் எழுத்து போன்ற படைப்புகளுக்கு தேவையில்லை .
ஜோ சொன்னதுடன் 100 சதவிகிதம் உடன் படுகிறேன்.(சொன்ன விதம் சிறிது கசப்பானது)
4)சிவாஜியை ஆத்மார்த்தமாக பூஜிப்பவர் கமல்,ரஜினி போன்றோர். அடுத்த திரியை பாருங்கள். யார் புகழ்ந்தாலும் எடுத்து போட்டு அர்ச்சனை செய்யும் போது ,நாம் மட்டும் புகழ்வோரை இகழ்ந்து,நதி மூலம்,ரிஷிமூலம் பார்ப்பதா?அதுவும் ரவிகிரன் போன்ற நண்பர்களை விட எதிரிகளே மேல் என்ற அளவில் முதிர்ச்சியில்லாமல் எழுதி தள்ளுகிறார்.கமலை அனாவசியமாக விமர்சிப்பது அவருடைய பொழுது போக்கு.பல பிறவிகளில் ,பல பெயர்களில் இதையே தொடர்கிறார். இது மிக கண்டிக்க தக்கது.
5)பட்டா கத்தி என்ற ராமதாஸ் என்ற கிருபா, உங்கள் எழுத்து நன்றாக உள்ளது.மாற்று திரி கலைவேந்தன் போல உங்கள் பங்களிப்பை தொடருங்கள்.ஆனால் negative tone குறையுங்கள்.
எனக்கு எழுதும் ஆசையை குறைக்கிறார்கள். இங்கிருந்தால் மாற்றுதிரி நண்பர்களை போலத்தான் எழுத,பதிவளிக்க வேண்டுமென்றால் நான் தயாரில்லை. சிவாஜி வேறு பட்ட உன்னதர். அவர் ரசிகர்களும் அப்படியே. அதனால்தான் நம் படங்களும்,எழுத்துக்களும் பொது ரசிகர்களாலும் நேசிக்க படுகின்றன.
வாசு,ராகவேந்தர் - நீங்கள் உங்கள் இஷ்ட படி திரி நடந்தால்தான் பங்களிப்பு. இல்லையென்றால் வெளிநடப்பு என்று நம் ஒற்றுமையை,தனித்தன்மையை குலைக்கிறீர்கள்.இந்த திரியில் உங்களுக்குதானே உரிமை அதிகம்?எங்களை குட்டி விட்டு தொடர வேண்டியதுதானே? ஒரு சாதாரண டிராபிக் குற்றத்துக்கு,மரண தண்டனையா? யாரோ ஒருவர் ஏதோ உடன்பாடில்லாததை பேசினால் வருஷ கணக்கில் புறக்கணிப்பா?
வாசு -உங்கள் ஆடையழகர்,கதாநாயகியர் வரிசைக்காக ஏங்கியுள்ளேன். வாருங்கள்.
ராகவேந்தர்- நீங்கள் எங்களை கண்டியுங்கள்.திட்டுங்கள். குட்டுங்கள்.ஆனால் மனம் வெறுத்து வெளியேற வேண்டாம். உங்கள் பணி எங்களுக்கு தேவை.
Last edited by Gopal.s; 19th November 2014 at 11:06 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
19th November 2014 10:58 AM
# ADS
Circuit advertisement
-
19th November 2014, 11:04 AM
#2912
Junior Member
Veteran Hubber
Raghavender Sir,
With due respect to your services to Nadigar Thilagam - be it is direct or indirect.
Our people have never initiated any anti-slogans or anti-discussion in the other thread. We have always responded to their indirect or direct attacks that was harped on by couple of them of the other thread whose ONLY AGENDA was to do so. And, you have comfortably forgotten about that ! I do not know if it is deliberate or by oversight YET, you did that and this was not expected from you.
I agree to your point that few of our own people have criticized about NT and his few films claiming that they have the right to do so & That is 100% wrong i too agree. They do not have any right interms of NT....as MR Radha says in one of the interview...2 rooba kuduththu ticket vaanginiyaa..padam paathiyaa..poite irukkanum...adha aaraaichi pannadhe.., is absolutely right.
Infact, Can Mr. Gopal who does that quite often as his right, can he demonstrate how that scene need to be performed ? He cannot !!! So, such people should avoid criticizing NT if they are unable to prove that their version is better..! This is my opinion !
Kovilukku pona saami kumbudu....kovilukku vandhu naan saamiya kumbuduren...adhanaanala enakku saamiya vimarsikkum urimai undunnu mattum solladhe...is my contention.
RKS
-
19th November 2014, 11:10 AM
#2913
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RavikiranSurya
Infact, Can Mr. Gopal who does that quite often as his right, can he demonstrate how that scene need to be performed ? He cannot !!! So, such people should avoid criticizing NT if they are unable to prove that their version is better..! This is my opinion !
RKS
I am ready to prove it Ravikiran.
-
19th November 2014, 01:03 PM
#2914
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
I am ready to prove it Ravikiran.
There you are !!! ....So you have been watching us all these days and still you keep quiet to see where it lands !!!!
Please prove it Gopal Sir !
You have been writing about so many methods of acting / performance with your experience of viewing the same across the world.
Kindly act and video record by performing for the following scene in your own way ..rather as per your claim the right way of doing it and publish it here !
I will evaluate your performance Gopal sir !
Let's see if you are able to make it first, if you are able to do that, then your critic on NT film could follow !!
please take this as an open challenge from me ! Let us see who wins !
Regards
RKS
Last edited by RavikiranSurya; 19th November 2014 at 02:41 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th November 2014, 01:16 PM
#2915
Junior Member
Newbie Hubber
ஆதிராம்,
நீங்கள் பெட்டியை திறந்து விட்டீர்கள் என்பதாலும், வாசு-ராகவேந்தர் ,இந்த திரியின் ஒருங்கமைவுக்கு என்னுடைய சில விமரிசனங்கள் குந்தகம் விளைவிப்பதாக கருதினர்-கருதிகிறர் -கருதுவர்.
நானாக எந்த மோசமான விமரிசனமும் அவர் மீது வலுவில் வைத்ததில்லை. அவரை உலக அளவில் நிறுவ ,நாம் தேர்ந்துடுத்து செயல் பட வேண்டும் என்று சொன்னது முதல் எதிர்வினையாக ,என் பக்தியை விமர்சனத்திற்குள்ளாக்கியது. அடுத்து ஆஸ்கார் பற்றி விவாதிக்கும் போதும், நம் தேர்ந்தெடுப்பு கவனமாக இருக்க வலியுறுத்தி ,சில விவாதங்கள் நடந்தன. அடுத்து சிரஞ்சீவி, நடிப்பின் இலக்கணம் திரியில் பதிய பெற்றதால் சில வேண்டாத விவாதங்கள். இவற்றில் சரி-தவறு என்று பேசாமல் உட்புகாமல், கேட்கிறேன். சிவாஜியை பற்றி பண்புடனா மாற்று திரியினர் எழுதினார்கள்?
நாங்கள்தான் விமரிசித்து மாண்பை குலைத்து விட்டோமா?
எல்லோரும் மற்ற திரிகளின் மாண்புமிகு பெருமதிப்பு பெற்று உயரும் போது (பின்னே இப்படி நன்னடத்தை சான்றிதழ் அளித்து ?),நம் தலையெழுத்து இரண்டிலும் கெட்ட பேர்.
இந்த அழகில், எப்போதோ ஆடிக்கு ஒரு முறை,அமாவாசைக்கு ஒன்று என வரும் கமல் ரசிகர்களுக்காக கமலை புகழ்கிறேன் என்று ஒரு பிரகஸ்பதி.(கடலூர் அருகே பாண்டியிலிருந்து). நானே ஒரு கமல் ரசிகன். இது எனக்கு பெருமையே.
Last edited by Gopal.s; 19th November 2014 at 04:10 PM.
-
19th November 2014, 02:08 PM
#2916
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
4)சிவாஜியை ஆத்மார்த்தமாக பூஜிப்பவர் கமல்,ரஜினி போன்றோர். அடுத்த திரியை பாருங்கள். யார் புகழ்ந்தாலும் எடுத்து போட்டு அர்ச்சனை செய்யும் போது ,நாம் மட்டும் புகழ்வோரை இகழ்ந்து,நதி மூலம்,ரிஷிமூலம் பார்ப்பதா?அதுவும் ரவிகிரன் போன்ற நண்பர்களை விட எதிரிகளே மேல் என்ற அளவில் முதிர்ச்சியில்லாமல் எழுதி தள்ளுகிறார்.கமலை அனாவசியமாக விமர்சிப்பது அவருடைய பொழுது போக்கு.பல பிறவிகளில் ,பல பெயர்களில் இதையே தொடர்கிறார். இது மிக கண்டிக்க தக்கது.
ராகவேந்தர்- நீங்கள் எங்களை கண்டியுங்கள்.திட்டுங்கள். குட்டுங்கள்.ஆனால் மனம் வெறுத்து வெளியேற வேண்டாம். உங்கள் பணி எங்களுக்கு தேவை.
திரு. கோபால்
உண்மைகள் உங்களுக்கு மற்றும் ஒருதலை பட்சமாக எப்போதும் நடப்பவர்களுக்கு, கசக்கும்போது, அதை எழுதுபவன் நான் முதிர்சியற்றவனாவதும், எழுத்து முதிர்ச்சியற்றதாவதும் இயற்கையே.!
நீங்கள் என்னதான் என்னை பிராண்டிங் செய்ய நினைத்தாலும், என்னுடைய எழுத்துக்களை படிப்பவர்களுக்கு அதில் உள்ள ஞாயம் நிச்சயமாக புரியும். அதே சமயத்தில் உங்கள் எழுத்தை இதுவரை படித்தவர்க்கு உங்களுடைய விளையாட்டும் புரியும் !
திரு கமல் அவர்களை தாக்கி எழுதி பொழுதை போக்கும் நிலையில் நான் இல்லை. திரு கமல் அவர்களை பற்றி நான் அறியாதவனும் அல்ல !
மேலும் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் போதவில்லையே என்ற நிலையில் இருப்பவன் நான்.
பல நூறு ஆட்கள் வேலைசெய்யும் ஒரு நிறுவனத்தில் விற்பனை துறையின் உயரிய பொறுப்பில் இருப்பவன் நான். தங்களை போல பல நாடுகள் போகவேண்டிய அவசியம் இல்லை என்றாலும், பல ஊர்களுக்கு வேலை நிமித்தமாக அடிக்கடி சென்று வருபவன். போக்கும் அளவிற்கு பொழுது என்னிடம் இல்லை.
அதுவும் பொழுதுபோகிர்க்காக திரு கமலை பற்றி குறை கூறுபவன் நான் அல்ல.
ஆகையால் கட்டபொம்மனில் நடிகர் திலகம் கூறுவதை போல "அந்த கதையை இங்கு விடாதே அப்பனே ! "
மாற்று திரியினரை பற்றி உரைத்தீர்கள். யார் புகழ்ந்தாலும் அவர்களை எடுத்துபோட்டு அர்ச்சனை செய்கிறார்கள் என்று. ....மிக மிக சரியே..! அவர்களிடம் உள்ள பல நல்ல குணங்களில் இதுவும் ஒன்று.
முதலில் அதை கூட நீங்கள் செய்தீர்களா என்று எண்ணி பாருங்கள் !
அட... அதை கவனித்த நீங்கள் எந்த தருணத்திலும் அவர்களுக்கு ஏதாவது பிடிக்காத படமோ, performance இல்லை என்றால் அதை நீங்கள் அல்லது அவ்வப்போது திரிக்கு வரும் உங்களுடைய ஒரு சில நண்பர்கள் நடிகர் திலகம் படம் அல்லது அவர் நடிப்பை விமர்சனம் என்ற போர்வையில் அவமான படுத்துவதை போல மக்கள் திலகத்தை அங்குள்ள அனைவரும் அவமானபடுத்தும் வகையில் பொதுவில் உள்ள திரியில் ஒருக்காலும் எழுதவில்லையே..! -
அதை ஏன் இங்கு பதிவுசெய்யவில்லை நீங்கள் ? அந்த நேர்மை உங்களிடம் இல்லையே !
நடிகர் திலகத்தை விமர்சனம் செய்து நேர்மையாளன் என்றும் நடுநிலையாளன் என்றும் உங்களது உரிமை என்றும் மானியம் விடும் நீங்கள், முதலில் உங்களை விமர்சனம் செய்துகொள்ளுங்கள் அல்லது நீங்கள் ஆதரவு காட்டும் மற்ற நடிகர்களையும் நடிகர் திலகத்திடம் எடுக்கும் இதே உரிமையோடு விமர்சனம் செய்யுங்கள்...!
நீங்கள் எழுதுவதை போல யாராலும் எழுதமுடியாது என்ற எண்ணம் மட்டும் வேண்டாம்.
ஒரே மாதிரி ரகங்கள் இருக்கவேண்டாம் என்பதால் வேறு ரகமாக எழுதுபவர்கள் திரியில் உண்டு.
திரு சிவாஜி செந்தில் அவர்கள் இன்னும் சொல்லப்போனால் உங்களை விட ஒரு படி வித்தியாசமாக காட்சிகோப்புகளுடன் புதிதாக வரும் பாமரன் புரிந்துகொள்ளும் விதத்தில் இங்கு பதிவேற்றுகிறார்....அதுவும் ஒரு VIEWER FRIENDLY SCHOOL OF PERFORMANCE ரகமே !
ஒவொருவருக்கும் ஒரு நடை உண்டு..! உங்களுக்கு அதை ஜீரணிக்கும் சக்தி குறைவு ! அவ்வளவே !
நான் எழுதுவதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளாமல் வீண் தர்க்கம் செய்வதில் அர்த்தமில்லை சார் !
RKS
Last edited by RavikiranSurya; 19th November 2014 at 02:25 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th November 2014, 03:17 PM
#2917
Junior Member
Veteran Hubber
United We stand and succeed ! Divided We Fail and Fall!! Our Thread follows the premise 'Unity in Diversity' that is the 'promise' phrase for our whole Nation!!!?
: Clash of the Titans weakens our functions
அள்ள அள்ளக் குறையாத நடிகர்திலக அட்சய பாத்திரத்தின் மேன்மை போற்றுவோமே !
நடிகர்திலகத்தின் மேன்மை போற்றும் மேதமைத் திரியின் மேதகு நண்பர்களே! ஒரு பொருட்காட்சியைக் கையில் ஒரு பெரிதாக்கப்பட்ட பஞ்சுமிட்டாயையோ அல்லது பொரிக்கப்பட்ட ஒரு பெரிய டெல்லி அப்பளத்தையோ அல்லது ஒரு பாக்கெட் பாப்கார்ன் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலையை ரசித்து மகிழ்ந்த அனுபவம் நம்மெல்லொர்க்கும் கிடைத்திருக்கும். பொருட்காட்சியை முழுக்க சுற்றிமுடிக்கும் வரை கொஞ்சம்கொஞ்சமாக நொறுக்குத்தீனியாக சுவைத்துக் கொண்டே வரும்போது நாவுடன் சேர்ந்து மனமும் இனிப்பதாக உணர்வோம்.இதே பஞ்சுமிட்டாய் அல்லது அப்பளத்தை இரண்டு கைகளாலும் அடித்து நொறுக்கிப் பொடியாக்கி விழுங்கிட ஒரு நொடி போதுமே! இந்தத்திரி பல்வேறு மாறுபட்ட கோணங்களில் உயிர்ப்புத் தன்மையுடன் வெவ்வேறு குணாதிசயங்கள் திறமைமுகங்கள் கொண்ட பகுத்தாய்ந்திடும் சிறப்புப் பதிவர்கள் நிறைந்த நடிகர்திலகத்தின் புகழார்வலர்களுக்கான பொருட்காட்சித்திரி ! நாம் அனைவருமே பழரசத்தை புதிய புதிய கோப்பைகளில் பார்வையிடுவோர்க்கு விருந்தாகப் படைத்திடாது இப்பொருட்காட்சியின் நடுநாயகமாக வீற்றிருக்கும் நடிகர்திலகம் என்னும் அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரத்தை அலட்சியப்படுத்துவது நமக்குத்தானே இழப்பு.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் திரு.ராமச்சந்திரன் (SPCHOWDRYRAM!) அவர்களுடன் சிறிதுநேரம் சந்தித்து உரையாடும் மகிழ்ச்சியான தருணம் முகிழ்த்தது. நேரில் சந்தித்த ஆனந்தம் நம்மிடையேயுள்ள கருத்து வேறுபாடுகளை கரைத்துவிடுகிறது. திரி வலுப்பெற்றிட அவரின் ஆதங்கங்களையும் உணர முடிந்தது. பதிவர்களின் ஒரு நேர்முக சந்திப்பும் கருத்துப் பரிமாறுதல்களும் சிறந்த தீர்வாகலாம் !!
Enjoy the events of this NT exhibition, second by second, with a cotton candy or a lolly pop or a mega pappad in hand (your esteemed write-ups !), forgetting the outside noise pollution and our own mind voice contamination !!
நடிகர்திலகம் என்னும் தன்னந்தனிக் காட்டு ராஜாவின் தோட்டத்திலே நாமெல்லாம் (மணம் மிகுந்த ...ஆனாலும் சிறிது முட்களும் நிறைந்த) ரோஜாக்களே !!
ஒன்னா இருக்க கத்துக்கணும் ....உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
அண்ணன் தம்பிகளுக்குள்... .....கவலைகள் கிடக்கட்டும்......மறந்துவிட்டு.....காரியம் நடக்கட்டுமே!
இனியது இனியது (நம் NT திரி)உலகம்......இனி அது இனித்திட ஒன்று படுவோம் !
Last edited by sivajisenthil; 20th November 2014 at 06:49 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th November 2014, 08:24 PM
#2918
Senior Member
Seasoned Hubber
முரளி சார்
மிக்க நன்றி, பொதுவாக தன்னிலை விளக்கம் அளிப்பவர்கள் தான் தங்களுடைய பதிவை மேற்கோள் காட்டி எழுதுவார்கள். இங்கே ஒருவர் பொருட்டு இன்னொருவர் மேற்கோள் காட்டி எழுதுவதைப் பார்க்கிறேன். அதுவும் நடுவர் அவர்களே. வாழ்க ஜனநாயகம்.
என்னுடைய பதிவில் எழுதியது இங்கே நிலவி வரும் போக்கினை. தாங்கள் ஒன்றிரண்டை எடுத்து மேற்கோள் காட்டி எழுதுவதால் நான் கூறியது இல்லை என்று ஆகிவிடுமா. இங்கே யாரும் நடிகர் திலகத்தை விமர்சிக்கவே இல்லை என தங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். இல்லாமலா பக்கம் பக்கமாக விவாதங்கள் இடம் பெற்றன.
நம்மைவிட நடிகர் திலகத்தை முன்னிறுத்துவோம் என எழுதியிருக்கிறீர்கள். இதை யாருக்கு சொல்ல வேண்டும் என்பதை தங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள்.
மாற்று முகாம் நண்பர்களின் பதிவுகளைப் பற்றிக் கூறியிருக்கிறீர்கள். அவர்கள் பதிவிட்டது அவர்களுடைய திரியில்.
நான் குறிப்பிட்டது நம்முடைய திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி அவர்கள் எழுதியிருக்கிறார்களா என்பதைப் பற்றி.
கழிசடை, கிழட்டு மூஞ்சி என்றெல்லாம் அவர்கள் திரியில் நடிகர் திலகத்தை ஒரு நாளும் எழுதியதில்லை. இதையெல்லாம் எழுதியது நம் திரியில் தான். இதைத் தாங்கள் மறுக்க முடியாது. பதிவுகள் இருக்கின்றனவா நீக்கப்பட்டு விட்டனவா என்பதெல்லாம் வேறு விஷயம்.
சாந்தி திரையரங்க பட்டியலைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். நாங்கள் எழுதிய சுவர் பட்டியல் நாளடைவில் நம்முடைய அருமை நண்பர்களால் மிகவும் சிறப்பாக கல்வெட்டாய்ப் பொறிக்கப்பட்டு நீண்ட நாட்களாகி விட்டன. மாற்றுத் திரியில் அவர்கள் எந்தப் பட்டியலில் மேற்கோள் காட்டினார்கள் என்பது தெரியாது. எதுவாக இருந்தாலும் இவையெல்லாம் திருத்தம் செய்ய முடியாத வடிவில் அமைக்கப்பட்டவை. இதில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை. தவறாக இருந்தாலும் சரியாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத விஷயத்திற்கு தர்க்கம் செய்வதில் அர்த்தமில்லை. இதுவே என் நிலைப்பாடு.
நான் நல்ல பேரை வாங்க வேண்டும் என்கின்ற சுயநலத்தில் எதையுமே செய்வதில்லை. அந்த மாதிரி எண்ணமும் எனக்கில்லை. உங்களையும் நான் அந்த எண்ணத்தில் நினைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் இங்கே தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்த கீழ்த்தரமான அர்ச்சனைகளைப் போன்று வேறு யாருக்கும் கிடைத்ததில்லை. இதையெல்லாம் செய்தது படிக்காத பாமரரல்ல.
தாங்கள் மேற்கோள் காட்டிய பதிவில் ஒரு பகுதிக்கு சம்பிரதாயத்துக்காக அதுவும் மிகவும் மென்மையாக தாங்கள் தெரிவித்திருக்கும் எதிர்வினையை விடக் கடுமையாக எனக்கு அளித்திருக்கும் பதில் பதிவு தொனிப்பதிலிருந்தே நான் சொல்லாமல் தங்களுடைய அணுகுமுறை விளங்கும்.
தங்களுடைய நட்பு வட்டாரத்தை நான் குறை சொல்லவில்லை. தாங்கள் எனக்காக அவர்களை இழக்கவும் தேவையில்லை. ஆனால் நாலு சிவாஜி ரசிகர்கள் இங்கு சிலாகித்துக் கொள்வதால் நடிகர் திலகத்தின் புகழ் பரவாது என்கின்ற வரிகள் நீடிக்கும் வரை என் மன வேதனை நீடிக்கத் தான் செய்யும். அதை ஒரு நடுவர் என்கின்ற முறையில் தங்களால் ஆற்ற முடியாது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th November 2014, 08:27 PM
#2919
Junior Member
Veteran Hubber
உலகப்பெரும் இதிகாசம் கர்ணன் மற்றும் மறைநூல் பைபிள்.....இரண்டிலுமே ஒரு ஒற்றுமையான நிகழ்வு ....பிறந்தவுடன் பெற்றவளாலேயே கைவிடப்பட்டு ஆற்றிலே மிதக்க விடப்பட்ட சபிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் கர்ணனும் மோஸசும்! நடிகர்திலகமும் சார்ல்டன் ஹெஸ்டனும் ஏற்ற உள்ளத்தை உலுக்கியெடுத்த பாத்திரப்படைப்புகள்! The animated version too infiltrates into our heart and mind!
-
19th November 2014, 08:46 PM
#2920
Senior Member
Diamond Hubber
ஐயா! மன்னியுங்கள் .. அதை பின் வருமாறு திருத்தி விடுகிறேன் .
"கோபாலும் ஜோவும் தொலைபேசி தங்களுக்குள்ளே மாறி மாறி சிவாஜியை சிலாகித்துக்கொள்வதால் ஒன்றும் ஆகி விடாது "
Last edited by Murali Srinivas; 23rd November 2014 at 12:27 AM.
Bookmarks