-
19th November 2014, 03:28 PM
#1421
Senior Member
Diamond Hubber
ரொம்ப நன்றி கலைவேந்தன் சார் பதிவுகளை வாசித்து தங்கள் இனிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு.
அதே போல தங்கள் எழுத்து நடையை ரசித்து வினோத், கோபால், கிருஷ்ணா போன்றவர்களிடம் அலைபேசியில் பேசி மகிழ்ந்ததுண்டு. சரளமான நடையில் தனித்தன்மையான பாணி தங்களுடையது. இது உண்மை. வெறும் புகழ்ச்சிக்காக அல்ல.
'எதிர்பாராமல் விருந்தாளி' பாடலைத் தாங்கள் கேட்டவுடனே முடிவு செய்து விட்டேன் கலைவேந்தன் சார் நம்மைப் போல ரசனை உள்ள ரசிகர் என்று. அதிகமாக யாரும் கேட்காத பாடல். நீங்கள் அருமையாக எடுத்துக் கொடுத்துள்ளீர்கள். எல்லோரும் 'அந்த சிவகாமி மகனை'க் கூப்பிட, நம் போன்றவர்கள் 'எதிர்பாராமல் விருந்தாளி'யை அழைத்து வித்தியாசப் படுத்துவோம். இப்படி ஒரு ரசனை எல்லோருக்கும் எளிதில் வாய்த்து விடாது. ஆனால் 'மதுர கானங்கள்' திரி இத்தகைய ரசிகர்களை பெற்று மகிழ்ந்து கொண்டிருக்கிறது.

நான் அந்தப் பாடலை தினம் தினம் கேட்பேன் கலை சார். அத்துடன் சேர்த்து அதே 'பட்டணத்தில் பூதம்' படத்தில் என் ராட்சஸி பாடிய, ஜோதி லஷ்மி சீனப் பெண் மாதிரி வேடம் பூண்டு ஆடிய 'இதழை விரித்தது ரோஜா'வும் தினம் தினம் என் இசைத் தோட்டத்தில் மலரும். இந்தப் பாடலைக் கேட்கும் போது சடாரென திரு எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த 'நீரும் நெருப்பும்' படத்தில் அதே ஜோதிலஷ்மி அசோகனிடம் ஆடிப் பாடும் பாடலான 'கட்டு மெல்லக் கட்டு' பாடல் ஞாபகம் வராமல் இருக்காது.
என்ன சரிதானே கலை சார்?
ரிலாக்ஸுக்காக அடிகடி இங்கே வாருங்கள். இது போன்ற அபூர்வ முத்துக்களைக் கொடுங்கள். நாங்கள் அதைக் கோ(சே)ர்த்து வைத்துக் கொள்கிறோம்.
நன்றி!
Last edited by vasudevan31355; 19th November 2014 at 03:37 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
19th November 2014 03:28 PM
# ADS
Circuit advertisement
-
19th November 2014, 03:46 PM
#1422
நிறைய நினைவலைகளை மீட்டி விட்டீர்கள் . நன்றி sss சார்
சுஜாதாவின் கதை 'யாரோ அழைகிறார்கள்' என்று நினைக்கிறன் sss சார்
ஆனால் இதே தலைப்பில் ராஜன் சர்மா என்று ஒரு இயக்குனர் வெளியிட்ட படம் வந்தது .
இதே போன்று நடிகர் கமல் இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு எழுதிய பொம்மை மாத இதழில் ஒரு கடிதம் ஒன்று நினைவில் உண்டு. அதில் ருத்ரய்யாவிற்காக அனந்து அவர்களை பாலச்சந்தர் முகாமில் இருந்து வெளி கொண்டு வந்ததை பற்றி விரிவாக எழுதி இருப்பார். தர்மேந்திரா நடித்த jugnu ஹிந்தி திரைப்படம் முதலில் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி என்று ஆரம்பித்து பின்னர் தயாரிப்பாளர் கமல் நடிக்க வேண்டும் என்ற உடன் மகேந்திரன் விலகி கொண்டதாகவும் பின்னர் அது i v சசி இயக்கத்தில் வெளி வந்தது . அந்த கடிதம் 1980 களில் மிகவும் பிரசித்தம். இப்போது அதன் copy யாரிடமாவது இருக்கிறதா என்று தெரியவில்லை . இதனால் கமல் பாலச்சந்தர் உறவில் விரிசல் ஏற்பட்டதாக சொல்லப்பட்ட கேள்வி .பின்னர் புன்னகை மன்னனில் சரி செய்யப்பட்டது .வறுமையின் நிறம் சிகப்பு திரை படத்திற்கு பிறகு கமல் 5 ஆண்டுகள் இடைவெளியில் புன்னகை மன்னனில் தான் இணைவார்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
sss thanked for this post
sss liked this post
-
19th November 2014, 03:47 PM
#1423
Junior Member
Platinum Hubber
Last edited by esvee; 19th November 2014 at 03:49 PM.
-
19th November 2014, 03:59 PM
#1424
Junior Member
Platinum Hubber
சரி கோபால்... இனிமேல் ஜெய்சங்கர் பாட்டு போடுகிறேன். பட்டணத்தில் பூதம் படத்தில் எதிர்பாராமல் விருந்தாளி இங்கு ஏன் வந்தாள் என்று நினைத்தாயோ? இசையரசியின் குரலில் அருமையான மெலடி. ஜெய்சங்கருக்கு மயக்க மருந்து கொடுத்து கே.ஆர்.விஜயா தூங்க வைப்பது போன்று காட்சியமைப்பு. அதற்கேற்ப பாடலும் தாலாட்டாக இருக்கும். நண்பர்கள் தரவேற்றினால் நன்று. திருப்தியா கோபால்? போயிட்டு...... வருவேன்.
Super kalaiventhan
-
19th November 2014, 05:31 PM
#1425
Senior Member
Diamond Hubber
வினோத் சார்,
கொஞ்ச வருடங்களுக்கு முன்பு 'ஈ' என்றொரு படம் வந்து வசூலில் சக்கை போடு போட்டது. படத்தின் வில்லனை பழி வாங்க அவனால் பலி வாங்கப்பட்ட நாயகன் ஈ வடிவில் வில்லன் எங்கு சென்றாலும் துரத்தி துரத்தி அந்த சின்ன உருவத்தை வைத்துக் கொண்டு இம்சை கொடுக்கும். வில்லன் யாரென்றும் ஈ யாரென்றும் புரிந்திருக்கணுமே இந்நேரம்! உங்களுக்கா புரியாது? 3 ஸ்டம்ப்களை மட்டுமே போட்டு ஹப்பையே கிளீன் போல்ட் ஆக்கியவராயிற்றே நீங்கள்.
-
19th November 2014, 06:11 PM
#1426
Senior Member
Diamond Hubber
பொதுவாக இந்தந்த நடிக நடிகையருக்கு இந்தந்த பின்னணிக் குரல்கள் பொருத்தமாய் இருக்கும் என்று நாம் சொல்வோம்.
இரு திலகங்களுக்கும் பாடகர் திலகத்தின் குரல்
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஜேசுதாஸ்.
ஜெய்சங்கருக்கு பாடகர் திலகத்தின் குரல்
ரவிக்கு பாடகர் திலகம், பாலா, சீர்காழி
முத்துராமனுக்கு பி.பி ஸ்ரீனிவாஸ், கோவை சௌந்தர ராஜன்
சிவக்குமாருக்கு - பாலா
ஏ .வி.எம் ராஜனுக்கு பாடகர் திலகத்தின் குரல், தாராபுரம் சுந்தரராஜன்
நாகேஷுக்கு ஏ.எல்.ராகவன், சீர்காழி, சாய்பாபா
பாலையாவுக்கு பாலமுரளி
கமலுக்கு பாலா
ரஜினிக்கு மலேஷியா
பிரபுவுக்கு பாலா, மனோ
ஜெமினிக்கு ஏ.எம்.ராஜா, பி.பி ஸ்ரீனிவாஸ்
ரங்காராவிற்கு கண்டசாலா
எஸ்.ஏ நடராஜனுக்கு திருச்சி லோகநாதன்
நாகையாவிற்கு சீர்காழி
குலதெய்வம் ராஜ கோபாலுக்கு சீர்காழி
தங்கவேலுவுக்கு சீர்காழி, எஸ்.சி கிருஷ்ணன்.
நம்பியாருக்கு???????
மாஸ்டர் சேகருக்கு ராட்சசி
தேங்காய் - பொன்னுசாமி, கோவை சௌந்தரராஜன்
ஸ்ரீகாந்திற்கு - ??????
மோகன் - எஸ்.என்.சுரேந்தர்
நடிகைகளில்
ஜெயலலிதா - ராட்சசி
கே.ஆர் விஜயா- சுசீலா, வாணி ஜெயராம்
பத்மினி - லீலா
காபரே நடன நடிகைகள் - ஈஸ்வரி
ஜெயமாலினி - சுசீலா
லஷ்மிக்கு - ஈஸ்வரி
வைஜயந்திமாலா- சுசீலா
சச்சு - ஈஸ்வரி
சௌகார் ஜானகி - எம்.எஸ்.ராஜேஸ்வரி
தேவிகா - சுசீலா
அஞ்சலி தேவி - சுசீலா
நிர்மலா - சுசீலா, ஈஸ்வரி
விஜய குமாரி - ஜானகி
புஷ்பலதா - ராட்சசி
சுஜாதா - வாணி ஜெயராம்
லதா - வாணி ஜெயராம்
மஞ்சுளா - சுசீலா , வாணி ஜெயராம்
வாணிஸ்ரீ - சுசீலா, ஈஸ்வரி
ஜெயந்தி - சுசீலா
காஞ்சனா - சுசீலா, ஈஸ்வரி
ராஜஸ்ரீ - ராட்சசி
பத்ம்மப்ரியா - சுசீலா
மனோரமா - ஈஸ்வரி
சாவித்திரி - லீலா, ராணி, சுசீலா
உஷா நந்தினி - ஜானகி
சுமித்ரா - சுசீலா
ஜெயசித்ரா - ஈஸ்வரி
படாபட் - ஈஸ்வரி
பாரதி - சொர்ணா, ஈஸ்வரி
சைலஸ்ரீ - ஈஸ்வரி
ஸ்ரீபிரியா - வாணி ஜெயராம்
எம்.என்.ராஜம் - எம்.எஸ்.ராஜேஸ்வரி
ஹெலன் - ஜிக்கி
ஸ்ரீவித்யா - சுசீலா, வாணி ஜெயராம்
ஸ்ரீதேவி - ஜானகி
சில்க் - வாணி ஜெயராம்
ஜி.வரலஷ்மி - ஜிக்கி
படாபட் ஜெயலஷ்மி - ஈஸ்வரி
அஞ்சலி தேவி - சுசீலா
பிரமிளா - ஈஸ்வரி, ஜானகி
நண்பர்கள் தொடருங்கள்.
Last edited by vasudevan31355; 19th November 2014 at 08:58 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
19th November 2014, 06:39 PM
#1427
Junior Member
Newbie Hubber

Originally Posted by
KALAIVENTHAN
ஆங்... முக்கியமான விஷயம். நண்பர் கோபாலை பற்றியும் அவரது எழுத்தாற்றல் பற்றியும் நான் ஒன்றும் சொல்லவில்லையே என்று யாரும் கருத வேண்டாம். அவரது எழுத்தாற்றல் அனைவரும் அறிந்ததே. இவர்தான் கலைஞர் திரு.மு.கருணாநிதி என்று நீதிபதி சர்க்காரியாவிடம் அறிமுகம் செய்து வைப்பது போன்ற அசட்டுத்தனத்தை செய்ய நான் தயாரில்லை. அவரது எழுத்தாற்றலையும் தாண்டி அவரிடம் என்னைக் கவர்ந்த அம்சம்.... செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத அவரது குழந்தை உள்ளம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இந்த வித்யாசம்,இவற்றை கண்டால் காலை தூக்கும் கலைக்கு உதவலாம்.
நமக்கு அள்ள வேண்டியது,புறம் தள்ள வேண்டியது, உயர் கலை,தாழ் கலை வித்யாசம் புரியும். போதும் நண்பரே.
-
19th November 2014, 07:18 PM
#1428
Junior Member
Platinum Hubber
வாசு சார்
நடிகர்கள் - நடிகைகள் - பொருத்தமான பாடகர்கள் பட்டியல் மிகவும் அருமை .
நான் பவுலரும் இல்லை . நல்ல பாட்ஸ் மேனும் இல்லை.
சனிக்கிழமை- அன்று ஈக்கு கொண்டாட்டம் .
பார்க்கத்தானே போகிறீர்கள் ... நம் சுதீப் படப்போகும் பாட்டை .
-
19th November 2014, 08:25 PM
#1429
Junior Member
Newbie Hubber
சிறு வயதில் சால் பெல்லொவ் எழுதிய ஹெர்சாக் என்னை கவர்ந்த படைப்புக்களில் ஒன்று.(நோபெல் பரிசு பெற்றது). தமிழில் psycho -analytic நாவல்களில் தடம் பதித்தவர்கள் , புதுமை பித்தன்,கரிச்சான் குஞ்சு,ஜெய காந்தன்,இந்திரா பார்த்தசாரதி,ஆதவன் முதலியோர். இதில் குறிப்பிட வேண்டியவை காஞ்சனை, பசித்த மானுடம்,ரிஷிமூலம், போர்வை போர்த்திய உடல்கள்,திரைகளுக்கு அப்பால்,காகித மலர்கள் ,என் பெயர் ராமசேஷன் என்ற கதைகள் .இதில் எனக்கு பிடித்தம் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் போர்வை போர்த்திய உடல்களும் (இந்த நாடகத்தில் பங்கு பெற்றுள்ளேன்),திரைகளுக்கு அப்பாலும்.ஒரு இளைஞரின் அறிமுகம் தெரிந்தவர் மூலம். அப்போது நான் சிறுவன். அந்த இளைஞர் நிறைய இலக்கியம் பற்றி ஆர்வம் காட்டும் போது ,சரளமாக நான் நிறைய உலக இலக்கியம்,தமிழ் இலக்கியம் பற்றி பேசும் போது ,இந்த வயசிலே இவ்வளவு ஆர்வமா என்று பாராட்டினார்.(சுமார் 8 வயது வித்யாசமல்லவா).பிறகு நான் அவரிடம் சில வகை முயற்சிகள் தமிழில் செய்ய படவே இல்லை ,என்று என்னுடைய பிடித்தங்களை குறிப்பிட்டு, ஒரு மனதளவில் பாதிக்க பட்டு, வாழ்க்கையை பற்றிய பார்வையில் ஒரு அலட்சியம் கலந்த சுய பரிதாபம் கொண்ட பெண்ணை மையமாக கொண்டு முழு படம் எடுக்கலாமே என்ற போது ,ஒன்றும் சொல்லாமல் கேட்டு கொண்டார்.
விளைவு? இந்திரா பார்த்தசாரதியின் பெயரை கூட போடாமல் வண்ணநிலவன், சோமசுந்தரேச்வர் ,ருத்ரையா இணைந்து தந்த ,தமிழின் மைல் கல் படைப்பு அவள் அப்படித்தான்.
இந்த மாதிரி ஒரு பிரத்யேக ரசனை பாற்பட்ட படங்களில்(ஐரோப்பிய இயக்குனர்களின் தாக்கம்) கீழ் கண்ட அம்சங்கள் இருக்கும்.
1) படங்களுக்கு கிடைக்கும் வேகம் ,அந்த பாத்திரங்களின் மனநிலை பாற்பட்டே அமையும்.
2)எல்லா பாத்திரங்களுக்கும் உரிய பங்கு இருந்தாலும்,மைய பாத்திரத்தின் தூண்டுதல் பாற்பட்டு இயங்கு தன்மை இருக்கும்.
3)கதையில் ஒரு எதிர்பார்த்த தன்மை,திசை இல்லாவிட்டாலும்,பாத்திரங்களின் தன்மையில் ஒரு அன்னியம்,ஆச்சரிய முரண்கள்,சார்பு-சார்பின்மை இவை படத்திற்கு வேண்டிய திசையை,விசையை முடிவு செய்து செலுத்தும்.
4)அதில் ஒரு pretentious என படும் ஒரு போலி தன்மை வராமலிருக்க, ஒரு பாத்திரமாவது நம் உணர்வுகளை,கேலிகளை பதிவு செய்து படத்தை நடைமுறை வாழ்க்கையில் இணைத்து ,பார்வையாளர்களுடன் இணைப்பை வழங்கும்.
5)பெரும்பாலும் gloomy mood கொண்ட low key lighting , expressive seperation lighting கொண்டு panning,point of discussion கொண்ட subjective suggestion கொண்டு ,திரை படமாக்கம் அமையும்.
6)வசனங்களில் உயிர்ப்பு,அமானுஷ்யம்,shock value ,எள்ளல் ,வெட்டி பேசுதல்,எதிர்ப் பாரா கருத்து கோணங்கள்,கோணல்கள் இருக்கும்.
7)முடிவை நோக்கிய செலுத்தல் இன்றி ,கதையின் பாத்திரங்களே முடிவை முடிவு செய்யும். திட்டமிடல் என்ற தன்மை தவிர்க்க படும்.
8)ஒரு எதிர்பாரா, சஞ்சல நிறைவற்ற மனநிலையில் பார்வையாளர்கள் ,அரங்கத்தை விட்டு வெளிவருவார்கள்.
9)நமது படங்களில் மட்டுமே புரிதல் அற்ற பாடல்களின் இடைஞ்சல்.இது இந்திய படங்களின் தலைவிதி.
10)எதிர்-கலாச்சார ,சமுதாய எதிர்வினை, சுய-புற கேள்விகள், சிறிதே முரண்டும் எதிர்ப்பு குரல்கள் இருக்கும்.இதற்கு moderation ,confirmist வகை பாத்திரங்களின் வினையினால் புற தூண்டுதல்கள் அமையும்.
இவை அனைத்தும் கொண்ட ,ஒரு நல்ல படங்களுக்குரிய அம்சங்களுடன், சுவாரஸ்யமாகவும் அமைந்த படம் அவள் அப்படித்தான்.
இதில் மஞ்சுதான் கேள்வி பொருள். அருண் என்ற புரிந்து கொள்ள முயலும் முக்கிய பாத்திரம் ஒரு சுயம் காட்ட முயன்று தோற்கும் கண்ணாடி. தியாகு என்ற தன்னிலை புரிந்த சுயநலவாதி பொது பார்வையின் பிரதிநிதி.படத்தின் வேர்களை மண்ணிற்கு இழுப்பவன்.
மற்றவர்களுடன் நம் உறவுகள் எப்போதும் நச்சு படுத்த பட்டிருக்கின்றன ,தகாத உறவுகளின் இடையீற்றினால்.
உறவுகள் சிக்கலாகி,முறுக்கி கொண்டு,கெட்டு விடும் போது , அது என்ன வித மனநிலையை உருவாக்கும்? அது சிறு வயது வாழ்வின் விதியை எழுதும் அன்னை-தந்தை, ஆதரவு நாடி போகும் மற்றவர்களின் நடத்தையினால் சிக்கலாகி ,உறவுகளின் மேல் நம்பிக்கையிழப்பை விதைத்து ,ஒரு மேற்பூச்சான அகந்தை,சுயம் இவற்றை கீறும் போது தெரியும் மனகாயங்கள்,மனநிலை பாதிப்புகள் ,சுய பச்சாதாபங்கள் ஏற்படுத்தும் ஒரு பரிதாப பாத்திரம்.என்ன சொன்னாலும் ,நமக்கு நம்மை நாமே புரிந்து கொள்ள இருப்பதிலேயே முக்கியமானது மற்றவர்கள்.அவர்கள் மதிப்பீடுகள்.நியாய முரண்கள்.சுயநல பார்வை மீது போர்வைகள். அதையும் மீறி நம்மை பற்றி நமக்கிருக்கும் சில மாயைகளை தகர்க்க மற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக ,வசதியாக நம்முடைய கருத்து-குண -இயல்பு- முரண்பாடுகள்.ஆகவே மற்றவர்கள் பார்வையில் முக்கியத்துவம் தேடி ,நமது மனசாட்சியிடம் நாமே பெற முயலும் அங்கீகாரம். அவள் அமைதி கலைய ,பாதுகாப்பு கவசமாக தன்னை பற்றி அவள் கொண்டிருக்கும் போலி கருத்துக்கள் கலைக்க படுகின்றன.அவளை ஆக்ரமிக்கவோ,அரவணைக்கவோ இயலாமல் அவளின் பழைய நினைவுகளின் ,அனுபவங்களின் எச்ச சுவடுகள் ,நெருப்பு சுவர் எழுப்பி நிற்கின்றன.
மஞ்சுவின் குணங்கள்,குறைகள் ,எண்ணங்கள்,முரண்கள்,மூர்க்கங்கள்,நெகிழ்வுகள்,வெளிப ்பாடுகள் எல்லாமே ஒரு இள மனதை மீண்டும் மீண்டும் காயப் படுத்தி ,துவள வைத்து ,உறவுகளில் சந்தேகத்தை,நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி,மனதை ஊன படுத்திய ரணங்களின் குருதி கசிவுகளே.ஒரு நம்பிக்கைவாதி பெண்ணியம் பேசும் அருண்,யதார்த்த சுய காரியவாதி தியாகு எல்லாமே மஞ்சுவின் அந்தந்த மனநிலைக்கு வினை புரிந்து ஆசுவாசம் தரும் துணை பாத்திரங்களே. மஞ்சுவை மீட்க இருவருக்குமே திராணியோ ,திடமோ இல்லை.மஞ்சு சிசிபஸ் புராணம் போல கல்லை உருட்டி மலையுச்சிக்கு சென்று ,அது உருண்டதும் ,மீண்டும் உச்சி தேடும் போராட்ட மனநிலையிலேயே ,வழியில் இறங்கி விடுகிறாள்.
ருத்ரைய்யா ,சிறிதும் நீர்க்காமல் இந்த படத்தை இயக்கியுள்ளதற்கு பாரதிராஜாவின் விமர்சனமே சான்று.(பாரதிராஜா தங்களை கோழைகள் என்று விமரிசித்து கொண்டார்). பாலச்சந்தர்,பீம்சிங் அடைய விரும்பி தவறிய முழுமை, புரிதல் இந்த படத்தில் உண்டு.
ஹிஸ்டீரியா காட்சி , candid காட்சிகள் (டாகுமெண்டரி படப் பிடிப்பு) ,தியாகு பாத்திர வெளிப்பாடுகள் என்று படத்தை உயிர்க்க வைக்கும் பல காட்சிகள் படத்தில் ரசிகர்களை ஒன்ற ,ஈடுபட வைக்கும். (மேம்போக்கான ரசிகர்களை கூட ஈர்த்தது தியாகு பாத்திர வசனங்கள்)
எனக்கும் ,மகேந்திரனுக்கும் நடக்கும் உரையாடலில் வெளியாகும் ஒரு கருத்து intrinsic histrionic potential &content என்று பார்த்தால் கமலை விட ரஜினியே மேலோங்குவார். ஆனால் கமலின் பன்-முக புத்திசாலித்தனம்,லட்சியத்தை நோக்கிய தியாகங்கள் ,மற்றும் தேடுதல் இவையே இந்த உண்மையை புறம் தள்ளி அவரை வெல்ல வைத்துள்ளது. இந்த படத்தில் ,இயல்புத்தன்மையை கொண்டு வர அவர் காமிராவை கண்டு விறைக்கும் விறைப்பு ,pretentious குழியில் தள்ளி, ரஜினியின் அற்புதமான சரளமான வெளிப்பாட்டை ரசிக்க வைத்து விடுகிறது.(Gloomy பாத்திரத்தை கமல் மேலும் இருள வைத்து விடுவார்).ஸ்ரீப்ரியாவின் பாத்திர புரிதல் ,இயக்குனருக்கு பாதி வெற்றி கொடுத்து விடும் .
இளையராஜா பாடல்கள் படத்திற்கு தேவையற்ற இடையூறு. அவ்வப்போது பின்னணி இசை கதைக்கு,மௌனத்திற்கு வழக்கம் போல துணை நிற்கும். நல்லுசாமி ,ருத்ரையாவின் scheme படியே படமாக்கி துணை நின்றார்.
இது வெளியான நாளில் வெளியான பிற கமல் படங்கள் மனிதரில் இத்தனை நிறங்களா,சிவப்பு ரோஜாக்கள். ஜெயிக்க வேண்டிய அவள் அப்படித்தான் தோற்று, என் நண்பனின் மேல் பட வேண்டிய வெளிச்சத்தை பட வைத்தாலும்,பிற்கால வாழ்வை முழுமையற்ற இருளில் தள்ளியது. நான் சந்திக்க விரும்பி, சந்திக்காமலே (35 ஆண்டுகள்) அவன் வாழ்வும் முடிந்தது. இந்த விமர்சனம் ,அவன் ஆத்மாவுக்காக.
Last edited by Gopal.s; 20th November 2014 at 07:45 AM.
-
19th November 2014, 08:53 PM
#1430
Senior Member
Seasoned Hubber
80களில் ஒரு முறை ஒரு ஃபிலிம் சொஸைட்டி ஸ்க்ரீனிங்கில் ருத்ரையாவிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது, மிகவும் அபூர்வமாக. பன்னீ்ர் புஷ்பங்களே பாடலை மிகவும் வலுக்கட்டாயப்படுத்தி கமலைப் பாட வைத்ததாக சொன்னார். அந்தப் பாடலை முதலில் இளையராஜா அவர்களே பாடுவதாக இருந்ததாகவும் ருத்ரையா அவர்கள் தான் கமல் பாடவேண்டும் என விரும்பியதாகவும் ஒலிப்பதிவு முடிந்த பிறகு இளையராஜா ருத்ரையாவையும் கமலையும் வெகுவாக பாராட்டியதாகவும் சொன்னார்.
இன்னும் சொல்லப்போனால் மகேந்திரனை விட இன்னும் அதிகமாக உலக அளவில் பேசப்பட்டிருக்க வேண்டிய இயக்குநர்.
Roman Polanski அவர்களின் ஒரு படம், பெயர் நினைவில் இல்லை, அதிலிருந்து ஒரு காட்சியமைப்பை அவள் அப்படிததான் படத்தில் தமிழுக்கேற்றவாறு பயன் படுத்தியிருப்பார். மிக அற்புதமாக இருக்கும். கோபால் சார் அந்தப் படம் நினைவிருக்குமோ என்னவோ..
மறக்கமுடியாத இயக்குநர் ருத்ரையா அவர்களின் மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks