-
19th November 2014, 08:52 PM
#2921
Junior Member
Newbie Hubber
என்ன சொல்ல வருகிறீர்கள் ராகவேந்தர்? நான்,முரளி,ஜோ எல்லாம் சேர்ந்து அவர் புகழை மங்க வைக்கவா, இவ்வளவு கவனம்,நேரம்,உழைப்பை அளித்து கொண்டுள்ளோம்? உலக பட புரிதல், எதையும் ஆழ்ந்து நோக்கும் அனுபவம் புத்திசாலித்தனம் கொண்ட தாங்கள் ,,நாங்கள் மிக மதிக்கும் தங்களின் ,சுருங்கிய ஒருமுக பார்வையும்,மற்றவர்களும் உங்கள் இயல்பை ஒத்தே இயங்க வேண்டும் என்று மூர்க்கம் நிறைந்த எதிர்பார்ப்பும், அந்த மூர்க்கத்தில் பங்கேற்பாளர்களின் முக்கியத்துவத்தை புறம் தள்ளி அடம் பிடிக்கும் மனநிலை,புறக் கணிப்பு என்று திணற வைத்து விடுகிறீர்கள். நீங்கள் ராமர் போல. நாங்கள் அம்பு பட்ட தவளைகள்.மற்றவர்கள் எங்களை துன்புறுத்தினால் ,உங்களிடம் முறையிடும் ஆறுதல் தேட வேண்டிய எங்களை,நீங்களே வதைத்தால் எங்கு போய் சொல்ல?
-
19th November 2014 08:52 PM
# ADS
Circuit advertisement
-
19th November 2014, 08:56 PM
#2922
Junior Member
Newbie Hubber

Originally Posted by
joe
ஓ இந்த வரி தான் சிவாஜியையே பழித்ததாக சொல்லப்படும் அந்த மொழியோ ? கோபால் கூட கொஞ்சம் கடுமையா இருந்ததா சொல்லியிருந்தார் (என்ன கொடுமை சார் இது ?)
ஐயா! மன்னியுங்கள் .. அதை பின் வருமாறு திருத்தி விடுகிறேன் .
"கோபாலும் ஜோவும் தொலைபேசி தங்களுக்குள்ளே மாறி மாறி சிவாஜியை சிலாகித்துக்கொள்வதால் ஒன்றும் ஆகி விடாது "

Last edited by Murali Srinivas; 23rd November 2014 at 12:28 AM.
-
19th November 2014, 09:33 PM
#2923
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரா சார்,
உங்களிடம் பணிவான ஒரு வேண்டுகோள் . உங்களுக்கு உவப்பில்லாத வாக்கியங்களை யாராவது பதிந்தால் இன்னார் இதை பதிந்தது எனக்கு உவப்பானது இல்லை என நேரடியாக குறித்து எழுதுங்கள் .. சுற்றி வளைத்து அனுமானங்களை உருவாக்கி ஏன் அதை தேவையின்றி வளர்க்க வேண்டும் . முரளி என்னும் மனிதர் எத்தனை பக்கத்திலிருந்து இடியை தாங்குவார் ? அவர் என்னை காறி துப்பினால் வாங்கிக்கொள்வேன் ..எனென்றால் உன்னைத் தான் துப்புகிறேன் என நேரடியாக சொல்லி விட்டு தான் துப்புவார் .. அது போல உங்களுக்கும் அந்த மரியாதை உண்டு ..எதுவென்றாலும் நேரடியாக கண்டியுங்கள் .. உங்கள் வயதுக்கும் அனுபவத்துக்கும் உங்களுக்கு அந்த தகுதி உண்டு .
ஆனால் ஒரே ஒரு கருத்தை இங்கே பதிவு செய்ய விழைகிறேன் .. நீங்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை . அது அவதுறாகவோ நடிகர் திலகத்தை சிறுமைப்படுத்துவதாகவோ இல்லாத பட்சத்தில் , இந்த கருத்தை நான் ஏற்கவில்லை என நேரடியாக கண்டித்துவிட்டு நீங்கள் கடந்து போகலாம் .மாறாக நான் நினைப்பது தவிர வேறு எந்த மாற்றுக்கருத்தையும் யாரும் இங்கே சொல்லிவிட முடியாது என சொல்வது ஏற்புடைத்தன்று .
உங்களுக்கு நடிகர் திலகம் தெய்வம் ..எனக்கு நெஞ்சுக்கினிய மகா கலைஞன் . நடிகர் திலகத்தைப் பற்றிய செய்திகள் , புகழ்பாடும் கட்டுரைகள் மற்றும் செய்திகள் எந்தவித விவாதமோ , எதிர்வினையோ இன்றி அமைவதானால் அதன் பெயர் இணையத்தளம் .. அந்த புனிதப்பணியை நீங்கள் நடத்தி வருகிறீர்கள் . ஆண்டாண்டு காலமாக என் வலைத்தளத்தில் அதற்கு இணைப்பு கொடுத்தே வைத்திருக்கிறேன் ..ஆனால் இங்கே இது விவாதக்களம் .. மையம் என்னும் விவாதக்களத்தில் நடிகர்திலகத்தை பற்றி விவாதிக்க ஒரு இடம் கொடுத்திருக்கிறார்கள் . இங்கே பலர் வருவார்கள் ..நாம் சிவாஜி ரசிகர்கள் நம் கலைஞனை சிலாகிப்போம் , போற்றுவோம் .ஆனால் இது மட்டுமே இங்கு நடைபெற வேண்டும் என நிர்பந்திக்க முடியாது .. சிலர் வரலாம் .. அப்படி என்னைய்யா உங்கள் சிவாஜியின் மகத்துவம் ..கொஞ்சம் விளக்குவீரா ? என கேட்டால் அதில் உள்நோக்கம் இல்லையென்று தெரிந்தால் விளக்குவோம் ..விளங்கினால் அவருக்கும் சிவாஜி ரசிகராக ஞானஸ்நானம் கொடுப்போம் .. இல்லை இல்லை .. அப்படி கேட்க இது இடமல்ல .. எங்கு வந்து என்ன பேசுகிறாய் ..ஓடிப்போய் விடு என்றால் .. அதனால் என்ன பயன் .. எம்.ஜி.ஆர் ரசிகர்களிடம் என்ன தான் கொடி பிடித்தாலும் அவர்கள் மாறப்போகிறார்களா ? இல்லை நாம் தான் மாறப்போகிறோமா ? நம்மில் சேராத, எதிரியும் இல்லாத ஒருவனை வா வந்து தெரிந்து கொள் ..உன் சந்தேகமென்ன ? நீ கமல்ஹாசன் ரசிகனாமே ..இருக்கட்டும் .ஆனால் கமலஹாசனுக்கே அப்பன் எங்கள் சிவாஜி .. அதை தெரிந்து கொள்ள இதைப் பார் ..இதைப் படி என அவன் தோளில் கை போட்டு பேசினால் அவனும் கமல்ஹாசனோடு அவர் அப்பன் சிவாஜியையும் சிலாகிக்கக் தொடங்குவான் ..நோ ..நோ ..சிவாஜியின் பெருமை அறியாதவனுக்கு இங்கு என்ன வேலை ..கமல்ஹாசனெல்லாம் ஒரு நடிகனா ? ஓடிப்போய் விடு என்றால் யாருக்கு என்ன லாபம் ?
ஆய்வு என்கிறோம் .. ஆய்வு என்றால் நமக்கு நாமே படிப்பதற்கு அல்ல ..மூன்றாம் மனிதன் வந்து படித்தால் நிறையும் குறையும் சேர்ந்து ஒப்பீடாக விளங்கசெய்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் உள்ளிளுக்க வேண்டும் ..சிவாஜி மட்டுமே நடிகர் .. மற்றவரெல்லாம் நடிகரே கிடையாது என்றால் ..வந்தவன் வந்த வழி பார்த்து திரும்பி போய் கொண்டே இருப்பான் .. அதுவா நமது நோக்கம்? .. நீ கமல் ரசிகனா ? அஜீத் ரசிகனா ? இருக்கட்டும் .. ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடி சிவாஜியின் சிறப்பு உனக்கு தெரியுமா என நயமாக சொல்லி நம் பக்கம் திருப்பி வழிகாட்டினால் ..மெதுவாத் தான் ..அவன் மெதுவாத் தான் வருவான் .. பய வருவதற்கு முன்னே துரத்திவிடும் வழிகளில் நாம் (சரி ..நான் ..எதுக்கு வம்பு) நின்றால் அதனால் சிவாஜிக்கு பெருமையா ?
விட்டா சொல்லிட்டே போகலாம் . கொஞ்சம் நேரடியாக பேசுங்கள் ..வழிகாட்டுங்கள்
Last edited by joe; 19th November 2014 at 09:41 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
19th November 2014, 10:04 PM
#2924
Senior Member
Diamond Hubber
அப்புறம் ..நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வான் -ன்னு சொன்னா அது ஒரு பேச்சு வழக்கு . அதுல அந்த 'நாலு' என்பது நான் , அப்புறம் மீதி மூணு பேரு இன்னாரு இன்னாரு -ன்னு அர்த்தப்படுத்திக்கொண்டால் உலகத்தில் என்ன தான் செய்வது ?
கோபால் சொன்னது போல .. நான் நினைப்பது போல எல்லோரும் ஒரே கோணத்தில் பேசினால் தான் நான் இங்கிருப்பேன் ..இல்லையென்றால் முடியாது என்பதெல்லாம் முதிர்ந்த வகை நிலைப்பாடா ? (உடனே பார்..என்னை முதிர்ச்சி இல்லாதவன் என வசை பாடுறான் என அர்த்தம் கொள்ளாதீர்கள் .ஐயகோ) . உங்கள் இருப்பை கேவலம் ஜோ தீர்மானிப்பதா ? ஜோ சொல்வது பிடிக்கவில்லையா ? கண்டித்து விட்டு ஏறி மிதித்து போய்கொண்டேயிருங்கள் ஐயா !
-
19th November 2014, 11:50 PM
#2925
ராகவேந்தர் சார்,
நீங்கள் ஒரு முடிவெடுத்து செயல்படுவது போல் தோன்றுகிறது. நான் விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. விவாதங்களிருந்து விலகி நிற்கவே விரும்புகிறேன். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யுங்கள்.
நீங்கள் எழுதியவற்றில் ஒரு வரி மட்டும் ஆறவேயில்லை. மாற்றுத் திரியினில் சிவாஜி பற்றி தரக்குறைவாக எழுதினால் எனக்கு பிரச்சனையில்லை. நடிகர் திலகம் திரியில் மட்டும் யாரும் அவரை விமர்சனம் செய்யக் கூடாது என்று உங்களைப் போன்றவர்களே சொன்னால் பிறகு வேறு என்ன சொல்வது?
அன்புடன்
-
20th November 2014, 01:44 AM
#2926
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Murali Srinivas
ராகவேந்தர் சார்,
நீங்கள் ஒரு முடிவெடுத்து செயல்படுவது போல் தோன்றுகிறது. நான் விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. விவாதங்களிருந்து விலகி நிற்கவே விரும்புகிறேன். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யுங்கள்.
நீங்கள் எழுதியவற்றில் ஒரு வரி மட்டும் ஆறவேயில்லை. மாற்றுத் திரியினில் சிவாஜி பற்றி தரக்குறைவாக எழுதினால் எனக்கு பிரச்சனையில்லை. நடிகர் திலகம் திரியில் மட்டும் யாரும் அவரை விமர்சனம் செய்யக் கூடாது என்று உங்களைப் போன்றவர்களே சொன்னால் பிறகு வேறு என்ன சொல்வது?
அன்புடன்
முரளி சார்
நான் புதிதாக எடுக்க என்ன முடிவு இருக்கிறது. தொடககமே ஒரு முடிவு தானே... நடிகர் திலகத்தைப் பற்றிப் போற்றிப் பாடுவது மட்டுமே என் நோக்கம். நான் தான் சொல்ல வேண்டும் ஒரு முடிவெடுதது நீங்கள் செயல்படுகிறீர்கள் என்று. திரும்பத் திரும்ப மாற்றுத் திரி மட்டுமே தங்கள் கண்ணில் படுகிறது. என் கேள்விக்கான பதிலை தவிர்க்க தாங்கள் எடுக்கும் முயற்சியை நான் நிச்சயம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். நம்முடைய திரியில் நடிகர் திலகத்தை திறனாய்வு என்ற பெயரில் நான் குறிப்பிட்டுக் காட்டிய வார்த்தைகளோடு பதிவுகள் இடம் பெற்றது தங்களுக்குத் தெரியாதா... Convenient Ignorance அடிப்படையில் இதைத் தவிர்க்கிறீர்கள் என்பது தெரிகிறது. இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை. மாற்றுத்திரியில் நடிகர் திலகத்தைத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக கிழட்டு மூஞ்சி போன்ற வாசகங்கள் இடம் பெற்றதா..
நான் அடுத்த தலைமுறை நடிகர்களான கமல் ரஜினி பற்றி எந்த அளவிற்கு மதிப்பு வைத்திருக்கிறேன் என்பது தங்களுக்குத் தெரியாதது அல்ல. தாங்கள் மற்றும் நண்பர்கள் எழுதும் பதிவுகளில் நான் என்னவோ அவர்களை விமர்சித்தது போன்றோ அல்லது வெறுப்பது போன்றோ தொனிக்கிறது. இது எப்படி என எனக்குத் தெரியவில்லை.
பல உலகப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல நிபுணர்களுடன் கலந்து கொண்டு நடிகர் திலகத்தைப் பற்றி சிறப்புற எடுத்துரைத்தவன் என்ற மனநிறைவு எனக்கு உள்ளது. பல வெளிநாட்டுக் கலைஞர்களிடம் அவருடைய சிறப்பை எடுத்துரைத்துள்ளேன். கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளேன். ஒரு முறை மத்திய அரசின் ஒரு விளக்கப்படத்தில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு இந்திய சினிமாவைப் பற்றிய ஆய்வு இடம் பெற்றது. அநத ஆய்வில் சுமார் அரை மணி நேரத்திற்கு தமிழ்த்திரைப்படங்களைப் பற்றிய தொகுப்புரைகளும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. அந்தத் தொகுப்பில் மௌனப்படம் தொட்டு இத்திரைப்படம் தயாரான காலம் வரையிலான தமிழ்க் கலைஞர்களைப் பற்றியும் இடம் பெற்றிருந்தன. அதில் அக்கால கட்டத்தில் தமிழ்த்திரையுலகில் பங்காற்றிய பலரைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. நடிகர் திலகத்தைப் பற்றியும் இடம் பெற்றிருந்தது. மூன்று நான்கு நிமிடங்களில் அவரைப் பற்றிச் சொல்லப்பட்டது. காட்சிகளாக அவர் மேக்கப் போடுவது, ஷூட்டிங்கிற்கு கிளம்புவது போன்றவை இடம் பெற்றிருந்தன. அதில் ஒரு பகுதியாக நடிகர் திலகத்தின் பேட்டியும் இடம் பெற்றது.
ஆனால் மருந்துக்குக் கூட எம்.ஜி.ஆர் பற்றி அதில் இடம் பெறவில்லை. அப்போது அப்படத்தைத் தயாரித்த மத்திய அரசு நிறுவனத்துடன் வாக்குவாதம் செய்தவன் நான். காரணம். அதில் தமிழ்ப்படங்களைப்பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கடனுக்கு செய்தது போல் இருந்தது. நான் கேட்கும் வரை அங்கு யாரும் வாய் திறக்கவில்லை. இத்தனைக்கு அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் தமிழ்த்திரைப்படத்தில் அக்காலத்தில் பணியாற்றியவர்கள். நான் கேள்வி கேட்ட பின் ஒவ்வொருவராக உடன் குரல் கொடுத்தனர். தமிழ்ப் படங்களை எங்கு சென்றாலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதே அவர்களுக்கு நான் அன்று விடுத்த வேண்டுகோள். அன்று முழுதும் எனக்குக் கிடைத்த பாராட்டு மழைக்கு அளவேயில்லை. அவர்களில் பலர் இன்றும் திரையுலகில் பணியாற்றிக் கொண்டுள்ளனர்.
அது மட்டுமின்றி அதே விழாவில் எல்லோரிடமும் சிவாஜி ரசிகன் என்றே கூறித் தான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். காரணம் அப்போது சிவாஜி ரசிகன் என்றால் இளக்காரமாக ஒரு வட்டாரம் நடத்தி வந்ததே.
இதில் ஒரு வியப்பென்ன வென்றால், என்னிடம் உரையாடிய கலைஞர்களில் வெளிநாட்டினர் அனைவருமே நம் நடிகர் திலகத்தை வெகுவாக புகழ்ந்ததே. ஆனால் நம் நாட்டினர் குறிப்பாக தமிழர்கள் ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் போல் ஏதோ தொடக்கூடாததை தொட்டு விட்டதைப் போல சிவாஜி என்றால் தூர ஓடினார்கள். என்னிடம் பேசிய வெளிநாட்டவர்கள் ஒரு சிலர் அவர்களிடமும் நடிகர் திலகத்தைப் பற்றிக் கேட்ட போது அவர்கள் நெளிந்தது இன்றும் மன உறுத்தலாக இருந்தது.
இதன் பிறகு அவர்கள் மெல்ல மெல்ல தங்கள் தயக்கத்தைக் களைந்து நடிகர் திலகத்தைப் பற்றிப் பேச முற்பட்டார்கள்.
இந்த அளவிற்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நடிகர் திலகத்தை விட்டுக் கொடுக்காமல் இருப்பது தான் தொடக்கத்திலிருந்தே எடுத்துள்ள முடிவு. அந்த முடிவு உஙகளுக்கு தென்பட்டால் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.
உலக அளவில் ஒப்பற்ற கலைஞனை நம் திரியில் விமர்சனம் செய்ய வேண்டாம் என நான் கேட்டுக் கொண்டால் என் மீதே இங்கு விமர்சனம். மாற்றுத் திரியினர் விமர்சித்தால் மட்டுமே கோபப்பட வேண்டும் மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்று ஒரு நிலைப்பாடு இருந்தால் பிறகு வேறு என்ன சொல்வது முரளி சார்.
Last edited by RAGHAVENDRA; 20th November 2014 at 01:51 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th November 2014, 08:17 AM
#2927
Junior Member
Veteran Hubber

Originally Posted by
raghavendra
மாற்றுத்திரியில் நடிகர் திலகத்தைத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக கிழட்டு மூஞ்சி போன்ற வாசகங்கள் இடம் பெற்றதா..
சார்,
யார் அப்படி சொன்னார்கள் என்பது எனக்கு தெரியாது. அப்படி கூறியவன் எவனாக இருந்தாலும் இந்த திரியில் அதற்க்கு மேலும் வர தகுதியற்றவனாகிறான்.
அதற்க்கு பின்பும் அப்படி கூறியவன் இங்கு வருகிறான் என்றால், சுரணை சுத்தமாக இல்லை என்றுதான் பொருள்.
நடிகர் திலகத்தை அப்படி கூறியவன் எவனாக இருந்தாலும் அவனுடைய முகத்தை முதலில் கண்ணாடியில் பார்க்கட்டும்.
அப்படி கூறியவனின் இளமை கால முகத்தைவிட நடிகர் திலகம் அவர்களுடைய முதுமை கால முகமே மிக மிக பொலிவாக இருக்கும்.
Rks
Last edited by Murali Srinivas; 21st November 2014 at 01:35 PM.
-
20th November 2014, 08:21 AM
#2928
Junior Member
Newbie Hubber
ராகவேந்தர்,
ஒரு சிறிய ஆலோசனை. நிறைய வாசிப்போரை சென்றடைய, கதாநாயகனின் கதை ,மெயின் திரி 14 இலேயே பதிக்கலாமே ? இடையிடை பதிவுகளை தவிர்க்கு, அடுத்ததடுத்த பதிவுகளை புதிப்பிக்கும் போது ,பழைய தொடர் பதிவை shift செய்து, முதல் பதிவை delete பண்ணி விட்டால், வரிசை கிரகமாகவும் இருக்கும்.
-
20th November 2014, 10:16 AM
#2929
நடிகர்திலகத்தை யார் யார் தரக்குறைவாக இங்கு விமர்சித்தார்கள் என்பதை ராகவேந்தர் வெளிப்படையாக அவர்கள் பெயர்சொல்லியே பதிவிடுவது நல்லது. அப்படி செய்தால் தேவையற்ற யூகங்கலுக்கு இடமளிக்காது.
நமது திரியில் நடிகர்திலகத்தை விமர்சித்தால்தான் கோபப்படுவேன், வருத்தப்படுவேனே தவிர மாற்றுத்திரியில் நடிகர்திலகத்தை எப்படி தரக்குறைவாக எழுதினாலும் (உதாரணத்துக்கு முரளிசார் அவர்கள் சில விஷயங்களை சுட்டிக்காட்டியிருந்தார்) அதைப்பற்றி வருத்தப்படவோ கண்டுகொள்ளவோ மாட்டேன் என்ற ராகவேந்தர் அவர்களின் நிலைப்பாடு ஆச்சரியமும் திகைப்பும் அளிக்கிறது.
-
20th November 2014, 10:29 AM
#2930
Junior Member
Newbie Hubber
ராகவேந்தர்,
நடிகர்திலகத்தின் பிற்கால படங்கள் அவர் தரத்திற்கு பெருமை சேர்க்கும் அளவு இல்லை. இதே வாயால் திராவிட மன்மதன் என்று சொல்லி ,அது இங்கு சரளமாக உபயோகிக்க படுவது உங்களுக்கு தெரியவில்லையா?
அத்துடன் சமீப காலமாக உங்கள் கட்டளையை ஏற்று ,நாங்கள் ஒரு வரி கூட critical ஆக எழுதாத போது ஏன் குப்பையை கிளறி விடும் சண்டை சேவல் ஆகிறீர்கள்?
நான் எந்த திரி நண்பர்களுடன் வாக்கு வாதம் வந்தாலும் தோன்றியதை சொல்லி எழுதி எல்லோரையும் பரிச்சயம் கொண்ட கருத்தொப்பாத நண்பர்களாகவே பார்க்கிறேன்.
நாங்கள் எதையும் எதிர்பார்த்தோ, அல்லது அங்கீகாரம் வேண்டியோ அவர் பக்தர்களாக இல்லை. அது ஆத்மா சுத்தியுடன் நாங்கள் செய்யும் சத்திய பூஜை. உளமார கடவுளாக தொழும் வேள்வி. நீங்கள் அதற்கு வரம்பு விதிக்க வேண்டாம். ஒவ்வாதவை, ஓங்கி சொல்ல பட்டால், ச்சீ ,பொய்யுரைப்பதா என்று என் கடவுள் ,கர்ணன் அவதாரத்தில் கேட்டதையே கேட்க வேண்டி வரும்.
Last edited by Murali Srinivas; 21st November 2014 at 12:36 AM.
Bookmarks