-
26th November 2014, 01:45 PM
#1571
Senior Member
Diamond Hubber
குதிரை நாயகர்கள்
'பதிலுக்கு பதில்' தரும் நடிப்புச் சுடரைப் பாருங்கள். கௌபாய் ஸ்டைலில் 'உலக அழகி' விஜயகுமாரியை
கண்டு (அதுவும் கலரில்) மயங்கி 'அவள் ஜாதிப் பூவென சிரித்தாள்' என்று குதிரையில் அமர்ந்து மெய்மறந்து பாடிக் கொண்டு வருவதை கவனியுங்கள்.
கிருஷ்ணா 'கிண்டி' விட்டாயே மகனே! இன்னைக்கு ஷிப்ட்டுக்கு லேட் பஞ்ச்தான். பிடியுங்கள் சாபம்.
Last edited by vasudevan31355; 26th November 2014 at 02:10 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
26th November 2014 01:45 PM
# ADS
Circuit advertisement
-
26th November 2014, 01:49 PM
#1572
Senior Member
Diamond Hubber
குதிரை நாயகர்கள்
"நமக்குள் எதற்கு சண்டை வீண் சச்சரவு? சமாதானமே தேவை"என்று நம் நடிகர் திலகம் குதிரை ஏற்றம் செய்து பாடும் பாடலைப் பாருங்கள். இவனன்றோ 'மருத நாட்டு வீரன்'
Last edited by vasudevan31355; 26th November 2014 at 02:10 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th November 2014, 01:59 PM
#1573
Senior Member
Diamond Hubber
குதிரை நாயகர்கள்
இவரைப் பாருங்கள். சாவித்திரியிடம் 'உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்' என்று குதிரையுடன் கிடாரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார். இரண்டு குதிரைகளையும் நடக்க விட்டு விட்டு (சாவித்திரி ரசிகர்கள் கோபித்து கொள்ள வேண்டாம். சும்மா தமாசு... ஹி... ஹி ) இவரும் குதிரையிலிருந்து இறங்கி, ஜாலியாக நடந்து பாட ஆரம்பித்து விட்டார்.
Last edited by vasudevan31355; 26th November 2014 at 02:10 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th November 2014, 02:08 PM
#1574
Senior Member
Diamond Hubber
குதிரை நாயகர்கள்
சமீபத்தில் மறைந்த இலட்சிய நடிகர் இந்த வஞ்சிச் சிட்டுவிடம் குதிரையில் வந்து செமத்தியாக மாட்டிக் கொண்டார். 'பார் இந்தப் பக்கம்... பார்க்க முடியுமானால் பார்த்து வேறு பக்கம் போக முடியுமா" என்று மேடம் கேட்க இவர் 'மணிமகுடம்' என்ன ஆகுமோ?
Last edited by vasudevan31355; 26th November 2014 at 02:11 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th November 2014, 02:19 PM
#1575

Originally Posted by
vasudevan31355
குதிரை நாயகர்கள்
'கிண்டி' விட்டாயே மகனே! இன்னைக்கு ஷிப்ட்டுக்கு லேட் பஞ்ச்தான். பிடியுங்கள் சாபம்.
குதிரை கிண்டி அருமையான timing 
எந்த பக்கம் சென்றாலும் என் பேரு என் பேரு புயல் போன்றது குட் லக் மை குட் லக் மை குட் லக்
சுசீலா ஹம்மிங் "ஹா ஹா ல ல லா '
இதே ஹம்மிங் அவன் தான் மனிதன் திரை படத்திலும் நடிகர் திலகம் ,மஞ்சுளா இருவரும் தனிமையில் இருக்கும் போது வரும் . நடிகர் திலகம் இரவு உடை அணிந்து கொண்டு ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு புத்தகம் ஒன்றை படித்து கொண்டு இருப்பது போலவும் மஞ்சுளா அவரிடம் சரசமாடுவது போலவும், பிறகு காட்சி கலர் மீன்கள் நீந்தி கொண்டு ஒன்றை ஒன்று விரட்டி கொண்டு கொஞ்சி கொண்டு இருக்கும் நீர் தொட்டி ஒன்றில் முடியும் . இரண்டுமே இயக்கம் திருலோக் ,இசை மெல்லிசை மன்னர்,நடித்தவர்கள் நடிகர் திலகம்,மஞ்சுளா
நினைவு இருக்கிறதா வாசு ?
பாட்டு இணையத்தில் இருக்கிறதா ?
'காமதேனுவும் சோமபானமும் பூமியில் ' இருக்கிறது
Last edited by gkrishna; 26th November 2014 at 02:42 PM.
gkrishna
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th November 2014, 02:36 PM
#1576
'உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்'
கண்ணதாசனின் ஒற்றை வார்த்தை ஓராயிரம் பொருளடக்கம் தரும்
ஜீவநதியாய் வரும் சரணங்கள் நம் ஜீவனை நோக்கி
'பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகரில்லையா ?
பிறர் தேவை அறிந்து கொண்டு வாரி கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா ? '
ஒரு மேடையில் நடிகர் சத்யராஜ் சொன்னது 'இந்த பாடலை பற்றி '
இந்த பாடல் ஏழைகளின் கீதை,
வேதம்
பைபிள்
குரான்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th November 2014, 05:25 PM
#1577
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
gkrishna
ஒரு மேடையில் நடிகர் சத்யராஜ் சொன்னது 'இந்த பாடலை பற்றி '
இந்த பாடல் ஏழைகளின் கீதை,
வேதம்
பைபிள்
குரான்
கிருஷ்ணாஜி - " குரு க்ரந் சாஹிப் " யை சத்திய ராஜ் விட்டு விட்டார் !
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th November 2014, 05:50 PM
#1578

Originally Posted by
g94127302
கிருஷ்ணாஜி - " குரு க்ரந் சாஹிப் " யை சத்திய ராஜ் விட்டு விட்டார் !
ரசிக்கிறேன் ரவி சார் உங்கள் கமெண்டை . 
உங்கள் பெயரை போட்டு சேர்த்து விடுகிறேனே (கொஞ்சம் ஜாலியாக எடுத்து கொள்ளவும் )
-
26th November 2014, 05:55 PM
#1579
அந்நாளைய பிரபல துணுக்கு எழுத்தாளர் கடுகு என்ற அகஸ்தியன் அவர்கள் பதிவில் இருந்து

ஹலோ பாரதிராஜா.. எப்படி இருக்கீங்க?
அடேடே.. நீங்களா? உங்களுக்கு நான் போன் பண்ணேனே நேற்று கூட..
--- இப்படித்தான் கட்டுரையை ஆரம்பிக்க ஆசை. ஆனால் பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இருக்க வேண்டும் என்பது என் கொள்கையாதலால் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். பாரதிராஜாவை ஒரே ஒரு தரம்தான் சந்தித்து இருக்கிறேன். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசியிருக்கிறேன். (அப்படியா, இதை வைத்துக் கொண்டு பத்து பதிவு எழுதிவிட மாட்டீர்களா என்று பலர் சொல்லக்கூடும். இல்லை, ஒரு பதிவு தான் எழுதப் போகிறேன்.)
* * *
ஒரு சமயம் டில்லியிலிருந்து சென்னை வந்திருந்தபோது வழக்கம்போல் ஆசிரியர் சாவி அவர்களை\ச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது அவர் சாவி பதில்கள் எழுதி கொண்டிருந்தார்.
இந்தாங்க ஏழு, எட்டு கேள்வி கார்டுகள். பதில் என்ன எழுதலாம் என்று பாருங்கள் என்றார்.
கேள்விகளில் ஒன்று, அப்போது பாரதிராஜா எடுத்துக் கொண்டிருந்த வேதம் புதிது படத்தைப் பற்றி இருந்தது. இதுதான் கேள்வி: பாரதிராஜா, தன் வேதம் புதிது படத்தில் நமது வேதங்களைத் தாக்கி சில வசனங்களை சேர்த்திருக்கிறாராமே?
சாவியிடம் கேள்வியை படித்துவிட்டு, நான் சொன்னேன், படம் தயாரிப்பில் இருக்கிறது.. இந்த சமயத்தில் எப்படி கருத்துக் கூறமுடியும்? பாரதிராஜா நமது வேதங்களைத் தாக்ககூடியவர் அல்ல. அப்படியே அவர் தாக்கி இருந்தாலும் கவலை வேண்டாம். நமது வேதங்களைச் சுலபமாக யாராலும் அழித்துவிட முடியாது. என்கிற ரீதியில் சொன்னேன். நீங்கள் சொல்வது சரிதான். அப்படியே எழுதிவிடுகிறேன். என்று சொல்லியபடியே அதை எழுதிவிட்டார். இரண்டு தினங்களுக்குப் பிறகு சாவி இதழ் வெளியானவுடன், பாரதிராஜா இதைப் பார்த்திருக்கிறார். உடனே சாவி அவர்களுக்குப் போன் பண்ணி என்ன சார்,.கேள்வி பதில் பகுதியில் இப்படி எழுதி இருக்கிறீர்களே... வேதம் புதிது படத்தில் நான் தவறாக ஒன்றுமே சொல்லவில்லையே,, என்பது மாதிரி சற்று வருத்தத்துடன் கேட்டிருக்கிறார்..
அதற்குச் சாவி ஒன்று செய்கிறேன்.. உங்களைப் பேட்டிகாண ஒருத்தரை அனுப்புகிறேன். விரிவாக எல்லாவற்றையும் சொல்லுங்கள். அப்படியே போட்டுவிடுகிறேன் என்றார்.. அன்று மாலை சாவி அவர்களைப் பார்க்கப் போனபோது, விவரங்களைச் சொல்லி விட்டு நீங்கள் போய் வந்தால் எனக்கு மட்டுமல்ல. பாரதிராஜாவுக்கும் திருப்தியாக இருக்கும் என்றார்.. நான் சரி என்றேன். பாரதிராஜாவுக்குப் போன் செய்து, எப்போது பேட்டி வைத்துக் கொள்ளலாம்? என்று கேட்டார்.. மறு நாள் காலை பத்து மணிக்கு அலுவகத்தில் சந்திக்கலாம் என்று பாரதிராஜா சொன்னார்.
அவரிடம் சாவி, பத்துமணிக்குச் சரியாக ஒருவர் வருவார். அவரைக் காத்திருக்க வைக்கக்கூடாது. உடனே அவரை நீங்கள் சந்திக்க வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் வரை பேட்டி நீடிக்கலாம் என்றார்.. பாரதிராஜா சரி, சார் என்றார்.
மறுநாள் காலை 9.55க்கு பார்சன் காம்ப்ளெக்ஸிலிருந்த பாரதிராஜாவின் அலுவலகத்திற்கு நான் சென்றேன். அலுவலகத்தில் இருந்தவர்களிடம் பெயரைச் சொன்னதும் உட்காருங்கள்... இதோ சார் வந்து விடுவார்:என்றார்கள்.
சில நிமிடங்களுக்குப் பிறகு வாங்க சார்...மேலே போகலாம்.: என்று சொல்லி அழைத்துப் போனார்கள்.
பாரதிராஜாவின் அறைக்குள் நான் நுழைந்ததும் முகமலர்ச்சியுடன் வணக்கம் சொன்னார்.. வாங்க சார்... இன்று ஆயுத பூஜை. பூஜையை முடித்துவிட்டு பேட்டியைத் துவங்கலாமா.. நீங்களும் பூஜையில் கலந்துகொள்ளுங்களேன் என்றார். பூஜை முடிந்ததும் பேட்டியைத் துவக்கினேன்
தங்கு தடை இல்லாமல் ஒரு கம்பீரத்துடன் தெளிவான கருத்துகளை மளமளவென்று சொன்னார், நான் கேட்ட கேள்விகள் அவருக்குப் பிடித்திருந்தன,
பேட்டி சாவியில் வெளியானதும், அவர் சாவிக்குப் போன் பண்ணி தனது மகிழ்ச்சியையும் கட்டுரைக்குப் பாராட்டையும் தெரிவித்தார்,
இதற்கு சில வருஷங்களுக்கு முன்பு நடந்ததை இப்போது சொல்கிறேன்.
டில்லியிலிருந்து சென்னை வந்திருந்த சமயம் பாரதிராஜாவின் புதுமைப் பெண் படத்தைப் பார்க்கப் போனேன்.
படத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு லேசான வியப்பு ஏற்பட்டது. (படம் எல்லா விதத்திலும் பிரமாதமாக இருந்தது என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.) வியப்பிற்குக் காரணம், நான் எழுதிய அலை பாயுதே கண்ணா என்ற நாவலில் வரும் பல அம்சங்கள் அதில் இருந்தன. நிறைய ஒற்றுமைகள் இருந்தன. நம்முடைய நாவலைப் படித்து, அதன் பாதிப்பால் உருவான கதையாக இருக்குமோ என்று நான் எண்ணும் அளவுக்கு பல ஒற்றுமைகள் இருந்தன.
டில்லிக்குத் திரும்பியதும் பாரதிராஜாவிற்குக் கடிதம் எழுதினேன், ஒற்றுமைகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு எழுதினேன்,. முடிவுரையாக என்னுடைய நாவலைப் பார்த்துக் காபி அடித்து இருக்கிறீர்கள் என்று நான் கூறவில்லை., வழக்குத் தொடரப் போகிறேன் என்றும் நினைத்துவிடாதீர்கள் .... சிற்சில சமயம் இரண்டு பேருடைய கற்பனையில் சில அம்சங்களில் ஒற்றுமைகள் ஏற்படக்கூடும். ஒருக்கால் உங்கள் உதவியாளர்கள் யாராவது என் நாவலைப் படித்து அதிலிருந்து சில சம்பவங்களை சொல்லியிருக்கலாம் என்று எழுதினேன். இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகு பாரதிராஜாவிடமிருந்து கடிதம் வந்தது. உங்கள் நாவலை நான் படிக்கவில்லை. அதை வாங்கிப் படித்துவிட்டு எழுதுகிறேன். சில சமயம் இரண்டு பேருடைய கற்பனையில் ஒரே மாதிரியான அம்சங்கள் வரக்கூடும் என்று தாங்கள் பெருந்தன்மையுடன் எழுதி இருந்தீர்கள். அதைப் பாராட்டுகிறேன் என்கிற ரீதியில் சற்று நீளமான கடிதம் எழுதி இருந்தார்,
அதன் பிறகு அவருக்கு நானும் கடிதம் எழுதவில்லை. அவரும் எனக்கு எழுதவில்லை. . இதனால் எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th November 2014, 06:07 PM
#1580
Junior Member
Seasoned Hubber
" சாது மிரண்டால்-----" - இந்த பாடல் நெஞ்சை வருடும் பல பாடல்களில் ஒன்று - பால முரளியின் குரலில் மிகவும் அழகாக வெளி வந்த பாடல் - இசையும் மிகவும் இனிமையாக இருக்கும் - , , தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்றிருக்கும் ஒரு சாதுவான நடுத்தர மனிதனை சீண்டி விடுகின்றது இந்த சமுதாயம் - அதன் விளைவுகளை எப்படி கையாளுகிறான் என்பதுதான் கதையின் சாரம் - TRR தன் பின் பாதியில் கதாநாயகனாக நடித்து வெற்றி கண்ட படம் - நாகேஷ் இருந்தும் அவாரால் TRR இன் இடத்தை பிடிக்க முடியவில்லை .T.R. ராமச்சந்திரன் இப்படியொரு நடிப்பிலா?! என வியப்படையும் வண்ணம் அற்புதமான பாத்திரம் அவருக்கு, இப்படத்தில்!
இனி இந்த பாடலை ரசிப்போம்
அருள்வாயே நீ அருள்வாயே - திருவாய் மலர்ந்து
அருள்வாயே ------
உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா - உன் பக்கம் என்னை
அழைத்தாயே தேவா - உண்மையின் உருவே , நன்மைகள் தரவே
ஊர்வலம் நீ வருவாயே -----
தூய நினைவுகள் தாலாட்டு பாடவும் , - தீய பழக்கங்கள் தானாக
ஓடவும் - பாயும் புலியையும் பரிவோடு பார்க்கவும் -பாரில் உள்ளவர் பாராட்ட வாழவும் - அருள்வாயே --------
அம்பலத்து அரசே , அருமருந்தே , ஆனந்த தேனே , அருள் விருந்தே
நீதி பாதையில் நேராக போகவும் , நேற்று பாவங்கள் நீராகி போகவும்
ஜோதி கடலில் எந்நாளும் நீந்தவும் , சோதனை மடியில் வீழாமல் காக்கவும் - அருள்வாயே ------
எப்படிபட்ட வரிகள் - என்ன அருமையான வேண்டுதல் - "பாயும் புலியையும் பரிவுடன் பார்க்கும் தன்மை நமக்கு இருந்தால்" , இந்த புவியில் எந்த தெய்வத்திற்கும் வேலை இல்லை - சோதனையின் மடியில் யாருமே விழ மாட்டார்கள்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks