Page 168 of 400 FirstFirst ... 68118158166167168169170178218268 ... LastLast
Results 1,671 to 1,680 of 3997

Thread: Makkal thilagm mgr-part -12

  1. #1671
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    தித்திக்கும் பாடல்கள் - பதிவு 3

    எல்லோருக்கும் என் இனிய வணக்கங்கள்

    "ஆயிரம் தான் வாழ்வில் வரும் , நிம்மதி வருவதில்லை ----"

    எவ்வளவு உண்மையான வரிகள் - பிறந்தது முதல் நிம்மதியை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டே இருக்கிறோம் - கிடைப்பதற்குள் நம் வாழ்க்கை முடிவடைந்து விடுகின்றது -- இதற்குள் எத்தனை வேற்றுமைகள் நம்மிடம் ! எவ்வளவு முரண்பாடுகள் - நம்மில் சிலரே உண்மையில் வாழ்கிறார்கள் - பலர் வாழும் போதே இறந்து விடுகிறார்கள் . ஒருவர் பல இலட்சங்களுக்கு தன்னை இன்சூர் பண்ணி இருந்தார் - அவர் ஒரு நாள் இறந்து விடுகின்றார் - இன்சூரன்ஸ் கம்பெனி அவர் சுற்றதார்களுக்கு பணம் கொடுக்க மறுக்கின்றது - காரணம் அவர் வாழும்போதே இறந்து விட்டாராம் - நடை பிணமாக இருந்த ஒருவர் மீண்டும் எப்படி இறக்க முடியும் ?? வாழ்க்கையில் அன்பு தேவை , பிறரிடம் பரிவு தேவை - பிறரை நம்மை போல எண்ணும் இயல்பு தேவை .

    Between DOB ( date of birth ) and DOD ( date of death) there is only one letter that remains untouched - that is "C" - see your life , enjoy the life and let your life be useful to others - you have made meaning to your existence .

    ஒரு சாதுவிடம் ஒருவர் சென்றார் - " சுவாமி , வாழ்க்கையின் அர்த்தம் என்ன ? " என்று கேட்டார் - அந்த சாது சிரித்துக்கொண்டே கூறினாராம் - வாழ்க்கை என்பது அர்த்தமே இல்லாத ஒன்று - நீதான் அதற்க்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்தவேண்டும் --- எப்படி பட்ட அறிவுரை !!

    இதோ இந்த பாடலை கேளுங்கள் - அன்பே வா , அன்பே வா என்று உயிர் உருக , மனம் உருக பாடுகிறான் நம் கதாநாயகன் - ஆயிரம் தான் வாழ்வில் வரும் , நிம்மதி வருவதில்லை ---- என்றும் சொல்கிறான் - வான் பறவையை கெஞ்சுகிறான் , அதன் சிறகை தனக்கு தர வேண்டி , பூங் காற்றை உதவிக்கு வர வேண்டுகிறான் - இவைகள் இருந்தால் , வனத்தில் பறந்து சென்று , போனவளை அழைத்து வர முடியுமாம் ---- அன்பு தான் , உள்ளம் என்ற கோயிலிலே என்றும் இருக்கும் தெய்வம் என்பதை உணர்கிறான் - வாழ்க்கை மீண்டும் அவனை வரவேற்க்கின்றது !! அவனால் ஒரு புது அர்த்தத்தை அவனுடைய வாழ்க்கைக்கு தர முடிகின்றது

    இந்த பாடல் காதலின் மகத்துவத்தை மட்டும் சொல்ல வில்லை - அன்பின் பெருமையையும் , நிம்மதியின் அவசியத்தையும் வெகு அழகாக மக்கள் திலகம் மூலம் நமக்கெல்லாம் சொல்லிக்கொண்டுருக்கின்றது - வாழ்க்கைக்கு அடிப்படை அவசியம் பணம் மட்டும் அல்ல - மனித நேயம் , தவறுகளை மன்னிக்கும் பெருந்தன்மை , அன்பை தொலைத்து விடாமல் இருக்கும் கொள்கை இவைகள் தான் - இதை பல பாடல்களில் மக்கள் திலகம் சொல்லியிருந்தாலும் , இந்த பாடலில் அவர் நடித்த விதம், சொன்ன விதம் , மனதில் ஆழமாக பதிந்து விட்டது . இதோ உங்களுக்காக மீண்டும் அந்த அன்பை வரவழைக்கும் பாடல் -----

  2. Thanks Russellzlc thanked for this post
    Likes Russellzlc, ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  4. #1672
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் ஒரு முறை நான் படித்துகொண்டிருந்த கல்லூரியின் பக்கம் நடந்து கொண்டிருந்த மாநாட்டில் பேச வந்திருந்தார் - அதிகமான கூட்டத்தாலும் , கூட்டம் எழுப்பிய கோஷத்தினாலும் , அவர் பேசுவதை முழுவதும் கேட்க்க முடியவில்லை - அவர் பேசினதில் இந்த வரிகள் என் நெஞ்சில் ஆழமாக பதிந்து விட்டன

    " I learned to give not because I have much . But because I know exactly how it feels to have Nothing "

    Great people only can deliver greater wisdom - how true it is !!

    அன்புடன்
    ரவி

  5. Likes ainefal liked this post
  6. #1673
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    மக்கள் திலகம் ஒரு முறை நான் படித்துகொண்டிருந்த கல்லூரியின் பக்கம் நடந்து கொண்டிருந்த மாநாட்டில் பேச வந்திருந்தார் - அதிகமான கூட்டத்தாலும் , கூட்டம் எழுப்பிய கோஷத்தினாலும் , அவர் பேசுவதை முழுவதும் கேட்க்க முடியவில்லை - அவர் பேசினதில் இந்த வரிகள் என் நெஞ்சில் ஆழமாக பதிந்து விட்டன

    " I learned to give not because I have much . But because I know exactly how it feels to have Nothing "

    Great people only can deliver greater wisdom - how true it is !!

    அன்புடன்
    ரவி
    Excellent Post Sir. Thanks very much.

  7. #1674
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021

    அனைவரும் நெஞ்சில் ஆழமாக பதித்துக் கொள்ள வேண்டிய வரிகள். தொடர்ந்து அசத்துங்கள் ரவி சார். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  8. #1675
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post

    கலையழகை ரசிப்பதிலே புதியவன்
    உடல் கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 9th December 2014 at 08:00 PM.

  9. #1676
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    ‘பெற்றால்தான் பிள்ளையா?’..... ‘ஒருதாய் மக்கள்’

    தலைவரின் இரண்டு படங்களும் வெளியான தினம் இன்று. இரண்டு படங்களுமே வெற்றிப் படங்கள்தான். பெற்றால்தான் பிள்ளையா? 100 நாட்கள் ஓடியது. ஒருதாய் மக்கள் 50 நாட்களை கடந்து வெற்றி பெற்றது. இதில் பெற்றால்தான் பிள்ளையா? என்னை மிகவும் கவர்ந்த படம். கிணற்றில் தூர்வாரும் தொழிலாளியாக, இரண்டு பக்கமும் லேசாக சாய்ந்து ஸ்டைலாக நடக்கும் நடையில் மட்டுமல்ல, நடிப்பிலும் தலைவர் வித்தியாசமாய் அசத்திய படம். தலைவரின் அதிரடி ஆக்க்ஷன் படங்களுக்கு மத்தியில் பிள்ளை பாசத்தை விளக்கும் வித்தியாசமான கதையமைப்பு கொண்ட படம். (மேலே உள்ள புகைப்படம் திரு.லோகநாதன் சார் பதிவிட்டது.)

    பாத்திரத்துக்கேற்ற எளிய ஆடைகள். கனவுக் காட்சி பாடலான ‘சக்கரக் கட்டி ராசாத்தி’ யிலும் கூட சாதாரண உடைதான். தலைவர் படம் என்றாலே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சண்டைக் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் இல்லை. கிளைமாக்ஸ் சண்டை மட்டுமே. அதிலும் நம்பியாரின் தாக்குதல்களால் ஒரு கட்டத்தில் அயர்ந்து விடுவதுபோல இயற்கையாக இருக்கும்.

    கண்டெடுத்த பிள்ளையை தொட்டிலில் போட்டு விட்டு வெளியே வேலைக்கு செல்லும்போது அந்தக் குழந்தைக்கு பசி எடுத்தால் குடிக்க, கயிறை இழுத்தால் பாட்டில் இறங்கி பால் குழந்தைக்கு அருகே வருவது போல வைத்து, விட்டு, யாரையும் எதிர்பார்க்காமல் நீயே உனக்கு தேவையானதை பெற்றுக் கொள் என்று குழந்தையிடம் தலைவர் கூறுவது போல ஒரு காட்சி. இது கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் ஒவ்வொருவரும் தன் முயற்சியால் உழைப்பால் உணவை தேடிக் கொள்ள வேண்டும் என்பதையும், குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்பதைப் போலவும் இந்தக் காட்சி அமைந்திருக்கும்.

    இப்போது, வகுப்பறைகளில் மாணவர்களே சக மாணவர்களை கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. கொலைக்கான காரணங்களை சொல்லக் கூசுகிறது. இதற்கு, வன்முறை, வக்கிரத்தை வளர்க்கும் இப்போதைய சினிமாக்களுககும் பெரும் பங்கு உண்டு. தினமும் காலையில், பள்ளிகள் கூடும்போது பிரார்த்தனை நடக்கும் அப்போது, இந்தப் படத்தில் வரும் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி’ பாடலைப் போடலாம். பள்ளிப் பிள்ளைகளின் உள்ளங்களில் நல்ல கருத்துக்கள் உருவாக இதுபோன்ற தலைவரின் பாடல்கள், படங்களை காட்டலாம்.

    இந்தப் பாடலில் கடைசியில் ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்...’ என்று வரிகள் உண்டு. ரெக்கார்டில் அப்படித்தான் இருக்கும். ஆனால், ‘அண்ணா’ என்ற பெயரைக் கேட்டாலே இடியோசை கேட்ட நாகமாய் நடுங்குபவர்கள் படத்தில் அவரது பெயருக்கு தடை போட்டுவிட்டனர். அதனால், படத்தில் மேடையில் முழங்கு திரு.வி.க. போல் என்று வரும். சென்சார் கெடுபிடி காரணமாக கடைசி நேரத்தில் செய்யப்பட்ட மாறுதல் என்பதால், படத்தில் ஒலி மட்டும்தான் ‘திரு.வி.க. போல்’ என்று கேட்குமே தவிர, தலைவரின் வாயசைப்பு ‘அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் இருக்கும். அதைப் புரிந்து கொண்ட தொண்டர்களின் கரவொலி தியேட்டர் கூரையை பெயர்க்கும். எவ்வளவு கெடுபிடிகளைத் தாண்டி அண்ணாவும் தலைவரும் வளர்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்தக் காட்சி ஒரு சாட்சி. அண்ணா பெயருக்கு தடை போட்ட ‘புண்ணியவான்கள்’ வீட்டில் தனது மூத்த சகோதரரைக் கூட அந்தப் பெயரில் அழைத்திருக்க மாட்டார்கள் போல. பஞ்சைப் போட்டு நெருப்பை அணைக்க நினைத்தவர்களை என்னவென்று சொல்ல?

    ‘ஒருதாய் மக்கள்’ சிறந்த பொழுதுபோக்குப் படம். பாடல்கள் அருமை. கூட்டுப் பண்ணை விவசாயம் மூலம் கிடைத்த வெற்றியையும் லாபத்தையும் விளக்கி அதற்கு காரணமான தலைவரைப் பற்றி அசோகன் மேடையில் புகழும்போது, அந்தப் புகழ்ச்சியால் ஏற்படும் வெட்கத்தால் தலைவர் தர்மசங்கடப் புன்னகையுடன் லேசாக தலைகவிழ்ந்து கொள்ளும் அழகு.... பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    பொங்கல் விழாவையொட்டி, ‘இங்கு நல்லா இருக்கணும் எல்லாரும்..’ எனக்கு மிகவும் பிடித்த, பொதுவுடமை கருத்துக்களை கொண்ட அற்புதமான பாடல். அரைக்கை பட்டு ஜிப்பாவிலும், தார் பாய்ச்சி கட்டிய ஜரிகை வேட்டியிலும் கொள்ளை அழகுடன் தலைவர் போடும் ஸ்டெப்ஸ் அட்டகாசம். பாடலில் ஒரு காட்சியில், 5,6 பேரை அமர வைத்து தலைவர் ஒவ்வொருவராக துள்ளிக் குதித்து தாண்டி வருவார் பாருங்கள். பள்ளிப் பிள்ளைகள் பச்சைக்குதிரை விளையாட்டில் தாண்டுவார்களே, அதைப் போல. பிள்ளைகளாவது குனிந்து நிற்கும் பையனின் முதுகில் கையை ஊன்றி தாண்டுவார்கள். தலைவர் எந்த கிரிப்பும் இல்லாமல் ஒவ்வொருவராக தாண்டுவார். என்ன ஒரு சுறுசுறுப்பு அதை செயலாக்கும் எனர்ஜி.

    பெற்றால்தான் பிள்ளையா? பாடலில் அண்ணா பெயருக்கு தடை போட்டார்கள் என்று கூறினேனே. அதற்கு பதிலடி கொடுப்பதுபோல இந்த பாடலில் வரிகள்.

    ‘உச்சி வெயில் சூடு பட்டு உடம்பு கறுத்தது
    இந்த ஊருக்காக உழைச்சு உழைச்சு கண்கள் சிவந்தது
    கறுப்பும் சிவப்பும் கலந்திருக்கிற மேனியப் பாரு
    நம்ம காலம் இப்போ நடக்குதுன்னு கூறடி கூறு’

    அண்ணா மறைந்து விட்டாலும் அவர் கண்ட திமுகவில் அப்போது தலைவர் இருந்தார்.

    பெற்றால்தான் பிள்ளையா? படத்தில் குழந்தையிடம், ‘நீ பெரியவனானதும் விமானத்தில் இருந்து வந்து இறங்கும்போது நான் கூட்டத்தில் ஒருவனாக நின்று கொண்டிருப்பேன்......’ என்று தலைவர் ஏக்கமாக சொல்லும்போது பதிலுக்கு அந்தக் குழந்தை, ‘அவரைப் பிடித்து கொண்டு வா, என்று சொல்லி, இவர்தான் என் அப்பா என எல்லாரிடமும் சொல்லுவேன்...’ என்று கூறும்போது, குழந்தையை தலைவர் அள்ளி அணைத்துக் கொஞ்சும் காட்சியும், குழந்தையை பிரிந்து படத்தை கையில் வைத்துக் கொண்டு தலைவர் புலம்பி, அழுது மோனோ ஆக்டிக் செய்யும் காட்சியும் இப்போது பார்த்தாலும் கண்கள் அருவியாகும்.

    எனக்குக் கூட தலைவருக்கு குழந்தைகள் இல்லையே? என்ற ஏக்கம் பல ஆண்டுகளுக்கு முன் இருந்தது. தலைவர் மறைந்த பிறகு அந்த ஏக்கம் அதிகமானது. பிறகுதான் உண்மை புரிந்து எனக்கு நானே தேற்றிக் கொண்டதோடு மகிழ்ச்சியும் அடைந்தேன். அவருக்கு குழந்தைகள் இருந்திருந்தால், அவரது வாரிசுகள் யார் என்று கேட்டால், ஓரிருவரை அல்லது மூன்று நான்கு பேரை சொல்வார்கள். ஆனால், இப்போது....

    ‘பெற்றால்தான் பிள்ளையா?’ எனக் கேட்டு தனது வாரிசுகள் என்ற பெருமையை நம் எல்லாருக்குமே வழங்கி விட்டார் அந்த வள்ளல். நாம் எல்லாருமே தலைவரின் வாரிசுகள். அந்த வகையில், நாம் அனைவரும், தாயினும் சாலப் பரிந்து தயாபரனாய் நின்ற அந்த கருணை தெய்வத்தின் ‘ஒருதாய் மக்கள்’.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 9th December 2014 at 02:34 PM.

  10. Thanks uvausan, Richardsof thanked for this post
    Likes Richardsof liked this post
  11. #1677
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் போல் வந்துவிடுவார் என்று, இப்போதுள்ள சுயநல நடிகர்களை பார்த்து ரசிகர்கள்,கனவு காண்கிறார்கள்..

    அந்த பரிதாப ரசிகர்களுக்கும் திரையில் மட்டும் பன்ச் பேசும் நடிகர்களும் எம்ஜிஆர் கடந்த பாதையை மறந்துவிடுகிறார்கள்.

    எம்ஜிஆர். திமுகவில் இணைந்து பெரிய பெரிய தலைவர்கள் மத்தியில் சாதாரணமாக இருந்து முன்னேறியவர்..

    9 ஆண்டுகள் கழித்துதான் எம்எல்சி பதவி கிடைத்தது
    13 ஆண்டுகள் கழித்துதான் சட்டசபைக்கே நின்றார்...

    திமுக என்கிற மாபெரும் இயக்கத்தில் மூன்றாவது பெரிய பதவியான பொருளாளர் என்ற நிலையை எட்டிப்பிடித்தவர்..

    19 ஆண்டு காலம் ஒரு இயக்கத்தில் பாடுபட்டு அதன்பிறகே தனி இயக்கம் கண்டார்.

    கட்சி ஆரம்பித்து இரவும் பகலும் ஊர்ஊராய் போய் பேசி, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகுதான் ஆட்சியை பிடித்தார்..

    இந்த தகுதி இப்போது முதலமைச்சர் கனவில் மிதக்கும் நடிகன் எவனுக்காவது உண்டா?

    படத்தை பார்த்தாமா, கைதட்டினோமா, என்று அத்தோடு விட்டுவிட்டுபோங்கள். நிஜவாழ்வில் காமெடி பீசாக உள்ளவர்களை நம்பி ஏமாறாதீர்கள்

  12. Likes Russellzlc liked this post
  13. #1678
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் . அன்பே வா படத்தில் இடம் பெற்ற பாடலில்
    வரும் வரிகளை கொண்டு , வாழ்க்கையின் யதார்த்தங்களை ஒப்பிட்டு அருமையான பதிவையும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் பேசிய வைர வரிகளையும் நினைவு கூர்ந்த இனிய நண்பர் திரு.ரவிக்குமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் . தித்திக்கும் பாடலை தொடர்ந்து நமக்கு வழங்க திரு ரவிக்குமாரை அன்புடன் கேட்டு கொள்கிறோம் .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம்-12ன் முதல்வர் திரு கலைவேந்தனின் பெற்றால்தான் பிள்ளையா மற்றும் ஒரு தாய் மக்கள் பட விமர்சனங்கள் மிகவும் அருமை .

    2015ல் நாம் சந்திக்க உள்ள நிகழ்வுகள் .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் வண்ண காலண்டர் - திரு பம்மலாரின் மலர் மாலை வெளியீடு .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் மலர் மாலை - 2 - மக்கள் திலகம் பிறந்த நாள் அன்று வெளியீடு .

    டிஜிடல் - உலகம் சுற்றும் வாலிபன் - வெளியீடு .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -12 நிறைவு பெற்று மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -13 விரைவில் துவக்கம் .

    இன்னும் எராளமான இனிய தகவல்கள் கிடைக்க உள்ளது .

    நன்றி நண்பர்களே .

  14. #1679
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    NEWS HOUR என்ற பிரபல பத்திரிக்கையால் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு விபரங்கைளை வெளியிட்டுள்ளது....
    அவர்களிடம் இக்கருத்து கணிப்பு எவ்வாறு எடுக்கப்பட்டது என்று கேட்டதற்கு ,
    அவர்கள் தின தொகுதி நிலவரங்களை அன்றைய அரசியல் சூழல் வைத்து வெளியிடுகிறோம் என்று பதில் அளித்தனர்...
    கருத்து கணிப்பு விபரம் இதோ:
    இன்றைய கட்சி தொகுதி மக்கள் ஆதரவு நிலவரம்
    திமுக - 36 தொகுதிகள்
    ‪#‎அதிமுக‬ - 178 தொகுதிகள்
    பாஜக - 12 தொகுதிகள்
    மதிமுக - 3 தொகுதிகள்
    காங்கிரஸ் - 5 தொகுதிகள்
    இக்கருத்து கணிப்பை வைத்து பார்க்கும் பொழுது அஇஅதிமுக #2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை....
    2016அஇஅதிமுக ஆட்சி

  15. #1680
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    தித்திக்கும் பாடல்கள் - பதிவு 3

    எல்லோருக்கும் என் இனிய வணக்கங்கள்

    "ஆயிரம் தான் வாழ்வில் வரும் , நிம்மதி வருவதில்லை ----"

    எவ்வளவு உண்மையான வரிகள் - பிறந்தது முதல் நிம்மதியை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டே இருக்கிறோம் - கிடைப்பதற்குள் நம் வாழ்க்கை முடிவடைந்து விடுகின்றது -- இதற்குள் எத்தனை வேற்றுமைகள் நம்மிடம் ! எவ்வளவு முரண்பாடுகள் - நம்மில் சிலரே உண்மையில் வாழ்கிறார்கள் - பலர் வாழும் போதே இறந்து விடுகிறார்கள் . ஒருவர் பல இலட்சங்களுக்கு தன்னை இன்சூர் பண்ணி இருந்தார் - அவர் ஒரு நாள் இறந்து விடுகின்றார் - இன்சூரன்ஸ் கம்பெனி அவர் சுற்றதார்களுக்கு பணம் கொடுக்க மறுக்கின்றது - காரணம் அவர் வாழும்போதே இறந்து விட்டாராம் - நடை பிணமாக இருந்த ஒருவர் மீண்டும் எப்படி இறக்க முடியும் ?? வாழ்க்கையில் அன்பு தேவை , பிறரிடம் பரிவு தேவை - பிறரை நம்மை போல எண்ணும் இயல்பு தேவை .

    Between DOB ( date of birth ) and DOD ( date of death) there is only one letter that remains untouched - that is "C" - see your life , enjoy the life and let your life be useful to others - you have made meaning to your existence .

    ஒரு சாதுவிடம் ஒருவர் சென்றார் - " சுவாமி , வாழ்க்கையின் அர்த்தம் என்ன ? " என்று கேட்டார் - அந்த சாது சிரித்துக்கொண்டே கூறினாராம் - வாழ்க்கை என்பது அர்த்தமே இல்லாத ஒன்று - நீதான் அதற்க்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்தவேண்டும் --- எப்படி பட்ட அறிவுரை !!

    இதோ இந்த பாடலை கேளுங்கள் - அன்பே வா , அன்பே வா என்று உயிர் உருக , மனம் உருக பாடுகிறான் நம் கதாநாயகன் - ஆயிரம் தான் வாழ்வில் வரும் , நிம்மதி வருவதில்லை ---- என்றும் சொல்கிறான் - வான் பறவையை கெஞ்சுகிறான் , அதன் சிறகை தனக்கு தர வேண்டி , பூங் காற்றை உதவிக்கு வர வேண்டுகிறான் - இவைகள் இருந்தால் , வனத்தில் பறந்து சென்று , போனவளை அழைத்து வர முடியுமாம் ---- அன்பு தான் , உள்ளம் என்ற கோயிலிலே என்றும் இருக்கும் தெய்வம் என்பதை உணர்கிறான் - வாழ்க்கை மீண்டும் அவனை வரவேற்க்கின்றது !! அவனால் ஒரு புது அர்த்தத்தை அவனுடைய வாழ்க்கைக்கு தர முடிகின்றது

    இந்த பாடல் காதலின் மகத்துவத்தை மட்டும் சொல்ல வில்லை - அன்பின் பெருமையையும் , நிம்மதியின் அவசியத்தையும் வெகு அழகாக மக்கள் திலகம் மூலம் நமக்கெல்லாம் சொல்லிக்கொண்டுருக்கின்றது - வாழ்க்கைக்கு அடிப்படை அவசியம் பணம் மட்டும் அல்ல - மனித நேயம் , தவறுகளை மன்னிக்கும் பெருந்தன்மை , அன்பை தொலைத்து விடாமல் இருக்கும் கொள்கை இவைகள் தான் - இதை பல பாடல்களில் மக்கள் திலகம் சொல்லியிருந்தாலும் , இந்த பாடலில் அவர் நடித்த விதம், சொன்ன விதம் , மனதில் ஆழமாக பதிந்து விட்டது . இதோ உங்களுக்காக மீண்டும் அந்த அன்பை வரவழைக்கும் பாடல் -----

    தங்களின் பதிவிற்கு நன்றி திரு. ரவிக்குமார் சார். வாழ்வியல் தத்துவத்தையும் அதற்கு பொருத்தமான பாடலையும் அழகாய்ப் பதிவு செய்து, ஒவ்வொரு மனிதனின் சிந்தையையும் தூண்டும் வண்ணம் செய்தீர்கள். நான் அடிக்கடி என் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் சிந்தனை இது...மீண்டும் ஒருமுறை நன்றி.

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •