Originally Posted by
Gopal,S.
உயர்ந்த மனிதன்- 1968 தெய்வத்தின் 125 ஆவது சித்திரம்.(29th Nov- 45 Years completed)
சிலருக்கு மட்டும் வாழ்க்கை வச படுவதில்லை. ஆணாக(பணக்கார??) பிறந்தாலும் ,பலன் பூரணமாய் அனுபவிக்க படுவதில்லை.சூழ்நிலை கைதி -அதுவும் ராஜலிங்கம் போல் எல்லோருக்கும் நல்லவனாக வாழ விரும்பும் உயர்ந்த மனிதனுக்கு....
எல்லோருக்கும் எதிர்காலம் குறித்து குழப்பம் உண்டு.நிகழ் காலம் குறித்து அதிருப்தி உண்டு. ஆனால் ராஜுவுக்கோ எதிர்காலம் சூன்யம்.நிகழ்காலம் தண்டனை.கடந்த காலமோ குழப்பம். அவன் அறிவு,விருப்பம் எதுவும் பயன் படாமல் அவன் நாட்கள்.... பாரம்பரியம்,கெளரவம்,மனசாட்சி எல்லாவற்றையும் கேள்வி குறியாக்கி கேலி செய்கிறது.அவன் சுதந்திரம் பெற்ற மனிதனாக வாழவே இல்லை.
பார் மகளே பார் படத்தில் NT கதாபாத்திரம்தான் உயர்ந்த மனிதனில் NT தந்தை பாத்திரம் -சங்கரலிங்கம்.தன் அந்தஸ்துக்கு குறைந்த எதுவுமே துச்சம்.அடுத்தவர் சுதந்திரத்தை பிடுங்கி (மகன் ஆனாலும்) அடிமை படுத்தும் சுயநல மூர்க்கன்.எல்லாவற்றையும் வாய் மூடி மௌனியாய் சகித்து வாழும் ராஜு தான் விரும்பிய ஏழை பெண்ணை மணந்து சில காலம் வாழ்கிறான். ஆனால் கண்ணெதிரே தந்தையால் அவள் எரிக்க பட்டு, ஒரே மாதத்துக்குள் மருமணம் புரிய நிர்பந்திக்க பட்டு, ஒட்டாமல் அமைதி வாழ்க்கை வாழும் அவன் வாழ்க்கையில், சத்யா என்ற அநாதை ஒருவன் வேலையாளாய் நுழைந்து ,அன்பிற்கு பாத்திரமாகி,சோதனை கடந்து ,இறுதியில் சத்யா தன் மகனே என்ற உண்மை தெரிந்து சுபம்.
உருவம்,உள்ளடக்கம் எதிலும் சோதனை முயற்சி செய்யாமல் , சில பாத்திர வார்ப்புகள்,சில பாத்திர திரிபுகள், நேர்மையான ஆற்றோட்டமாய் திரைகதை. அற்புதமான வசனங்கள். மிக மிக நேர்த்தியான நடிப்பு, இவற்றை வைத்து அற்புதமான படத்தை கொடுத்தனர் கிருஷ்ணன்-பஞ்சு,மற்றும் ஏ.வீ.எம்.(உபயம்-உதர் புருஷ்-பெங்காலி)
காட்டாற்று வெள்ளமாய் ஓடிய சிவாஜியின் 68 ஆம் வருடத்திய நடிப்பில் அணை போட்டு வரம்பில் நிறுத்திய இரு படங்கள் தில்லானாவும்,உயர்ந்த மனிதனும்தான். இதில் அவர் பங்கு தில்லானாவை விட காம்ப்ளெக்ஸ் ஆனது. அவர் விரும்பாத பாத்திரம்.(விரும்பியது டாக்டர் பாத்திரம்).வேறு எந்த படத்திலாவது அவர் பாத்திரம் படத்திலேயே இந்த அளவு சுய விமரிசனத்திற்கும் ,பிறர்(முக்கியமாய் நெருங்கிய நண்பன்) விமர்சனத்திற்கும் ஆளாகி இருக்குமா என்பது சந்தேகம்.
கோழை,சில உயர்ந்த மனிதர்கள்,சூன்யமாய் பொய் வாழ்க்கை, சுமைதாங்கி,தியாகி,தனது சுய துக்கம் சுகம் நினையாத பொதிமாடு,என்று சுயமாகவும்,
கோழை,சுயநலக்காரன்,அப்பனை சமாளிக்க முடியாதவன்,தன்னை நம்பியவர்களை காப்பாற்ற முடியாதவன்,என்று டாக்டரும்,
ஜென்டில்மன்,பொய்யன்,காட்டுமிராண்டி என்று மனைவியும்,
உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என்று சுந்தரம் மகள் கவுரியாலும்
விமரிசிக்க படும் இந்த ராஜு யார்?
சுருக்கமாக சொன்னால் ,தன சுயத்தை இழந்து வாழ்பவன். அதனால்,பிறரால்,அவரவர் சௌகரியத்திற்கு விமரிசிக்க படுபவன். இப்போது புரிந்திற்குமே சிங்கத்திற்கு சற்றே தீனி கிடைத்திருக்கும் என்று?
உ.ம வை வித்தியாசமான படமாக்குவது டாக்டர் பாத்திரம். நண்பன் என்றாலே,பின்னால் விரோதியாக போகும் இந்நாள் alter -ego என்ற சம்பிரதாயத்தை முறியடித்து, ஒரு தாட்சண்யம் இல்லாத மனசாட்சி,இங்கிதமற்ற இரக்கமற்ற உறுத்தி கொண்டே இருக்கும் அனுகூல சத்ரு, சங்கீதத்தில் கவுன்ட்டர்-பாயிண்ட் என்று சொல்லும் படியான அபஸ்வர இசைவு . தனக்கு சொந்தமில்லாத பொருளை ,விட்டு கொடுத்து விட்ட பாவனையில்,தானும் அந்த அசம்பாவித சம்பவத்தில் கூட இருந்தும் தன்னாலும் தான் ஆசை பட்டவளை காப்பாற்ற முடியாத உண்மையை வசதியாக மறந்து,கல்யாணமும் செய்து கொள்ளாமல் எல்லா சந்தர்பங்களிலும் ராஜுவை இடித்து கொண்டே இருக்கும் ஒரு பாத்திரம்.ஆனால் மக்களின் மனதில் ராஜுவை விட அதிக இடம் பிடிக்கும் வாய்ப்பு. ராஜு அபார சுய இரக்கம்,சுய வெறுப்புக்கு ஆளாகி ஒருவித துறவு நிலை குற்ற உணர்வுடன் இந்த சித்ரவதை நண்பனை விரும்பி ஏற்கும் மேசொகிஸ்ட்(Masochist) ஆன மனநிலையை வெளிபடுத்துவான் நட்பின் உயர்வை காட்ட ஒரு காட்சியும் வலிந்து இருக்காது.
இதன் protoganist ஆக வந்த நடிப்பு கடவுளின் படம் நெடுக மிளிரும் நடிப்பை விவரிக்க இந்த பகுதி சமர்ப்பணம்.
இந்த படத்தின் அழகே,அவர் வசனம் பேசும் காட்சிகளை விட reaction காட்டும் காட்சிகள் அதிகம். சிவாஜியின் மேதைமை ஜொலிக்கும்.
முதல் காட்சியிலேயே அந்தந்த பத்திர வார்ப்புகள் சித்திரிக்க படும்.நாடகத்தனம் கொஞ்சம் இருந்தாலும் சிவாஜியின் magic அதனை சமன் செய்யும்.
ரொம்ப uneasy restraint என்று சொல்லப்படும் பாணியில் தந்தை எதிரே நடப்பதில் ஒட்டாமல், நடப்பதை மனதளவில் அங்கீகரிக்காமல் ஆனால் எந்த வெளிப்படையான எதிர்ப்பும் காட்டாமல் கடந்து செல்வார். தனது சம நண்பன் கோபாலுடன் சமமில்லாத பால்ய நண்பன் சுந்தரத்திற்கு நேர்ந்த ஒரு அநீதியை கூட ஒட்டாமல் துறவு நிலையாய் விளக்குவார். பிறகு சிறிது குற்ற உணர்வு உறுத்த நான் உன்னை சம நிலையில் அங்கீகரிக்கிறேன் என்ற தேற்றலோடு, சிகரெட் கொடுத்து சமாளிப்பார். அனால் ராஜு ,கோபால்,சுந்தரம் உடன் பழகும் விதம் சமூக நிர்பந்த நியதிற்குட்பட்டே (சமம், சமமின்மை )இருக்கும்.பின்னால் ராஜுவின் எந்த act of commission ,omission எல்லாவற்றுக்கும் இந்த ஒரு காட்சியே நம் மனநிலையை தயார் செய்து விடும்.
கதையின் நாயகி,பார்வதியிடம் பழகும் போது inhibition துறந்து உரக்க பேசுவார்,நையாண்டி செய்வார்,இயல்பை மீறி நடப்பார்.பார்வதி அந்தஸ்தில் குறைந்திருப்பதும்,சுந்தரத்திற்கு கொடுக்க இயலாத முக்கியத்துவத்தை இந்த உறவிற்கு கொடுக்க முடிவதும், ஒரு அசட்டு தைரியத்தையும் அவருக்கு அளிக்கும்.(தந்தையை மீறியும் ,சமாளிக்கலாம் என்று) ஒரு liberated மனநிலையில் இருப்பார். இந்த மனநிலை பின்னால் ஒரே ஒரு காட்சியில் வெளிப்படும்.அதை பிறகு பார்க்கலாம்.
ஆனால் மனைவி எரிபடும் காட்சியில், ஒரு ஊமை புலம்பலோடு,ஒரு குழந்தையின் இயலாமை கதறலோடு முடிப்பார். பிறகு தந்தை தன்னை மறுமணத்திற்கு ,துப்பாக்கியை வைத்து தற்கொலை மிரட்டலோடு ,மன்றாடும் போது, கோபம்,அதிர்ச்சி,இயலாமை,சுய-வெறுப்பு,விரக்தி அத்தனையையும் ஒரு பத்து நொடி close -up ஷாட்டில் காட்டி விடுவார்.(சிவாஜிக்கு இது புதிதல்ல).அரை மனதோடு சம்மதிக்கும் காட்சியில் அடுத்த பத்தொன்பது வருட வாழ்கை சித்திரம் நமக்கு கோடி காட்ட பட்டு விடும்.
வயதான பிறகு,வரும் காட்சிகளின் அழகு மனைவி விமலாவுடன் பாந்தமான ,இதமான ஆனால் ஒட்டாத ஒரு உறவு.(விமலாவின் இயல்பே அதற்கு ஒரு காரணம் என்றாலும்). நண்பன் கோபாலுடன் வரும் அனைத்து காட்சிகளிலும்,இதமோ,இங்கிதமோ இல்லாத கோபாலின் பேச்சுகளுக்கு, ஒரு தந்தை,ஒரு ரெண்டுங்கெட்டான் நண்பன்,குத்தும் தன மனசாட்சி மூன்று நிலையிலும் கோபாலை வரித்து ,மிக அழகாக கையாள்வார்.அவருக்கு ஒருவேளை உறுத்தல் குறைய ,ஈகோவை கோட் ஸ்டாண்டில் மாட்ட,தந்தையின் இழப்பை சரி செய்ய , இந்த நண்பன் அவசிய தேவை போலும்!
கோபாலுடன் நண்பன் என்ற உரிமையில் பேசும் கணங்கள்,கோபாலின் உடல்நிலை சம்பந்தமான இடங்கள்.கோபால் நிதானம் தவறும் இடங்கள்.குழந்தையை போல் நடத்துவார். இந்த இடங்களை கையாள இனி ஒரு நடிகன் பிறப்பது இயலாது.(பாத்திரத்தை அதன் குணாதிசயம்,கதையியல்பு,மனோதத்துவ பின்னணியில் புரிந்து,அதை நேர்த்தியுடன் செயல் படுத்தும் நடிப்பு வெளிப்பாடு.)
சோர்ந்து இருக்கும் போது ,உடல் கோளாறு என்று டாக்டரை கூப்பிடும் இடத்தில், விமலா,கோபால் இருவருக்குமான இடம் ,ராஜுவின் உடல் மொழியில்,பொய் அனுசரணையுடன் பிசைதலுக்கு இசையும் காட்சியில் ஒரு revelation போல பரவச படுத்தும்.
NT யின் நடிப்பு பரிமாணங்களை அலசும் போது ,இந்த படத்தில் மறக்க முடியாத இன்னொரு புது பரிமாணம், சத்யாவுடன் அவருக்கு develop ஆகும் உறவு. பல படங்களில் இந்த மாதிரி உறவுகள் வரும் போது pre -Emptive & Prevailing mood பாணியிலோ அல்லது விரோத அடிப்படையிலோ தான் பிளாட் development premise ஆக இருக்கும். இந்த படத்திலோ முற்றும் புது பரிமாணம். அதை சிவாஜி ஆண்டிருக்கும் விதம் ஒரு தனி சுவை. ஒரு வெகுளி தனமான ,rawness கொண்ட படிப்பறிவில்லா ஒரு பையன் மேல் ஒரு soft -corner என்பதற்கு மேல் செல்ல மாட்டார். முதல் முறை பார்க்கும் போது சாதா அறிமுகம், டாக்டர் சிபாரிசில் வேலை என்பதுடன் , மற்ற படி எந்த ஒரு கவனிப்பும் காட்ட மாட்டார். சத்யன் ஆங்கிலம் தெரியாமல் ,விமலாவுடன் மாட்டி கொண்டு முழிக்கும் காட்சியில் ஆகட்டும், பிறகு சம்பளத்தை கொடுத்து ஆசிர்வாதம் வழங்கும் காட்சியில் ஆகட்டும்(முதலில் அம்மாவிடம் என்பார்) ,ஒரு செல்லமான தோரணையில் ஒரு நல்ல ரெண்டுங்கெட்டான் வேலைகார பையன் என்ற அளவிலேயே நிற்கும். அம்மா படத்திற்கு நேர்ந்த அவமானத்தை சகிக்காமல்,சத்யம் விலக விரும்பும் காட்சியில் கூட டாக்டரிடம் ,முதல்லே அவனுக்கு புத்தி சொல்லு என்று பொறுப்பை டாக்டரிடம் கொடுப்பார். டாக்டர் குடித்து விட்டு நிதானம் இழக்கும் காட்சியிலும் ,வேலையாளாகவே நடத்தி வெளியேற சொல்வார். ஆனால் டாக்டரின் மரணத்திற்கு பிறகான வெற்றிடத்தில்,சத்யனின் பிரத்யேக அக்கறை தன்மையிலும்,retire ஆன மாணிக்கம் என்ற முதிய வேலையாளின் வேண்டுகோள் படியும் துளி அக்கறையும் , நெருக்கமும் கூடும் வெகு இயல்பாக. அந்த சாப்பிடும் காட்சி ஒரு கவிதை. பிறகு கூட மனைவியின் தலையீட்டில் சத்யன் பாதிக்க படும் போது ஓவர்-ரியாக்ட் செய்யாமலே அன்பை விளக்குவார்.
விமலாவுடன் வரும் வெடிக்கும் காட்சியில்(வசனப்படியே கட்டுபடுத்தி வைத்திருந்த எரிமலை) முத்திரைகளுடன் கூடிய சீற்றமாய் வெளிப்படும். நெருப்பில் தன மனைவியை காப்பாற்ற தவறி ,பொய் வாழ்கை வாழும் ஒருவனின் ,inhibition துறந்த சீற்றம்.Incoherent ஆய் துவங்கி,கோபமாய் வெடித்து,நிலை உணர்ந்து படி படியாய் அடங்க வேண்டிய காட்சி. ஆனால் follow thru காட்சியில் நடிப்பு தெய்வம் நிலைமையை சீர் செய்யும். கோபம் சிறிதே அடங்கி,சோபாவில் கால் போட்டிருக்கும் போது ,சமாதானமாய் shoe அவிழ்க்க வரும் வரும் மனைவியிடம் பிணக்கமுற்ற சமாதான கோடி காட்டும் அந்த சிறிய கால் மாற்றும் gesture கோடானு கோடி கதை பேசி விடும்.
விமலாவிடம் வெடித்த பின் ,planter 's conference செல்ல ,புறப்படும் போது, விமலா சத்யனை கூப்பிட்டு போக சொல்லும் போது ,ஒரு அன்னியோன்யமான ,ஆச்சர்யத்தை வார்த்தையின்றி வெளிப்படுத்துவார். அந்த வெடிப்புக்கு பின், விமலாவும் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில்,டிரைவர் சுந்தரத்தை பழைய சிறு வயது நண்பராக்கி, பார்வதியுடன் இருந்த போது அடைந்த சுதந்திரத்தை உணர்வார்.
அந்த நாள் ஞாபகம் பாடல்,தமிழ் பட சரித்திரத்தில் மைல் கல். Dancing இல் ஒரு பகுதி usage of property for effective rendering . என்று ஒன்று உண்டு. இந்த பாடலில், வாக்கிங் ஸ்டிக்கை ஒரு துணை பாத்திரம் ஆகவே உபயோக படுத்தி இருப்பார். அவர் சிறு வயது சந்தோஷங்களை விவரிக்கும் போது ,ஒரு விளையாட்டு பொருளாய் கையில் சுழலும். உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற வரிகளில் அவர் உயர்ந்திருக்கும்.வாக்கிங் ஸ்டிக்கை, கீழே விடும் அழகே தனி.(வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள் உரையில் போடும் அழகை ஒத்தது ) டென்ஷன் ஆன வரிகளில் வாக்கிங் stick கழுத்திலும், மிக மிக மன அழுத்தத்திற்கு ஆட்படும் வரிகளில் ,நடக்கவே ஒரு சப்போர்ட் போலவும் பயன்படுத்துவார்.நண்பனுடன் சம நிலையில் பழ குவதாய் பாவனை செய்தாலும்,அலட்சியமாய் கழுத்தில் மாட்டி இழுப்பார். ராஜுவின் குணாதிசயம் வன்மைக்கு பணிதல்(தந்தை,விமலா, கோபால்),கீழோரிடம் empathy இருந்தாலும், ஒரு அந்தஸ்து தோரணை ஒட்டி பிறந்த குணம் போலும்!!
அடுத்த காட்சியில் அவர் வாக்கிங்கிற்கு சுந்தரத்தை அழைக்கும் போது தொப்பியை கழற்ற சொல்லும் gesture . கவுரி-சத்யா காதலை உணர்ந்து அவர் அதை அணுகும் பிரச்சனைக்குரிய காட்சி, NT யின் மேதைமைக்கு ஒரு சான்று. conference போய் வந்த தோரணையில் பிரச்சனையை அணுகுவார். தள்ளி நிற்பார், மிரட்டுவார், ஆழம் பார்ப்பார், ஒரு உயர்ந்த ,வறண்ட,flat வாய்ஸ் இல் பேசுவார்.இறுதியாய் உறுதியை உணர்ந்து சிறிதே உணர்ச்சி வச பட்டு ஒபபுவார். எனக்கு தெரிந்து இவ்வளவு காம்ப்ளெக்ஸ் ஆக ஒரு காட்சியை யாரும் அணுகியதில்லை.
கடைசி காட்சி (நாகேஷ் அவர்களை ஒரு விமான பயணத்தில் சந்தித்த போது இக்காட்சியை சிலாகித்தார்).Acting is not about discipline ,Technic , Perfection ,control and execution alone .Some times you loose your control and self to surprise yourself to surprise the audience .இதற்கு நல்ல உதாரணம் அவர் திருட்டு பழி விழுந்து தன நம்பிக்கையை குலைத்த சத்யாவை manhandle செய்யும் விதம்.(தில்லானா காட்சியில் அடிக்காமல் பாய்வார்) தன்னிடம் பேசும் கவுரி
விமலாவிடம் பேசாதே என்ற விஷயத்தை பேச முயலும் போது ,விமலா இருக்கும் போது இந்த விஷயத்தை என் பேசுகிறாய் என்பது போல் உடல் மொழி ,முகபாவத்தில் சொல்லும் அழகில்....
இந்த படத்தின் தனி சிறப்பு ஆற்றோட்டமான திரைகதை. Flashback அது இது என்று போட்டு (நிறைய சந்தர்பங்கள் இருந்தும் ) கதையின் மெல்லிய ஓட்டத்தை சிதைக்காமல், நேரடியாக கொண்டு சென்றிருப்பார்கள். ஜாவர் சீதாராமனின் வசனங்கள் (அந்த நாள்,ஆண்டவன் கட்டளை) தமிழ் பட நியதிகளை மீறாமல் , பாத்திர இயல்புகளை முன்னிறுத்தி ,மிக polish ஆக இருக்கும். கோபால்-ராஜூ உரையாடல்கள்,விமலா-ராஜூ, தொழிலாளி-முதலாளி உறவு சார்ந்தவை,கோபால் மரண காட்சி, கொடைக்கானல் காட்சிகள் குறிப்பிட வேண்டியவை.(ஒருவேளை உதர் புருஷ் வசனங்களை மொழி மாற்று செய்திருப்பார்களோ என்ற அளவு வித்யாசமாக இருக்கும்.) Hats off ஜாவர்.மற்ற படி ரொம்ப Technical விஷயங்கள் தேவை படாத கதை.
கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியுடன் பிணங்கி (குங்குமம்)இந்த படத்தில் இணைந்தார். அமைதியான துருத்தாத இயக்கம்.
அடுத்த படி சரியான பாத்திர தேர்வு. சுந்தர் ராஜன் ,டாக்டர் வேஷத்திற்கு தேர்வு செய்ய பட்டிறிந்தாலும் ,அவரால் நேர் அல்லது எதிர் நிலைகளில் இயங்கியிருக்க முடியுமே தவிர நேர்-எதிர்,எதிர்-நேர் என்ற கோபாலின் புதிர் நிலை மனபான்மைகளுக்கு அசோகனின் கோமாளி தனம் கலந்த mystic ஆன நடிப்பு ஒரு புதிர் தன்மையை நிலை நிறுத்துகிறது.(Dark knight Heath Ledger போல்) .அசோகன் நல்ல தேர்வு.
வாணிஸ்ரீ ஒரு அற்புதம்.அறிமுகமாகி இரண்டாம் வருடத்தில் ஒரு rawness , Passion ridden poor teenager , பாத்திரத்துக்கு பொருத்தம். சௌகார், sophisticated ,obsessive -compulsive குணங்கள் நிறைத்த இந்த பாத்திரத்திற்கு இரண்டாவது nomination கூட இருக்க முடியாது. சிவகுமார் இதே குணாதிசயம் கொண்ட மனிதர்.கேட்கவா வேண்டும்?
நாகையா,சுந்தர ராஜன்,ராமதாஸ் அத்தனை பெரும் நல்ல பங்களிப்பை செய்திருப்பார்கள்.
இசை புரட்சி நிகழ்த்தியிருப்பார் விஸ்வநாதன்.(ராமமூர்த்தியை பிரிந்த பின் தனியாய் போட்ட படங்களிலேயே மிக சிறந்த படம்) பால் போலவே,வெள்ளிக்கிண்ணம்தான்,என்-கேள்விக்கென்ன பதில்,அந்த நாள் என்ற பாடல்கள் வாலி கூட்டணியில்.உறுத்தாத பின்னணி இசை.
ஏ.வீ.எம்.செட்டியார் சிவாஜியை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி இந்த படத்தை re-make செய்ய முடியாது என்று சொன்னார்.
கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியை best perfectionist என்று பாராட்டினார்கள்.
ரசிகர்களின் பார்வையில் இன்றளவும் மறக்க முடியாத படம்.
Bookmarks