Page 221 of 400 FirstFirst ... 121171211219220221222223231271321 ... LastLast
Results 2,201 to 2,210 of 3997

Thread: Makkal thilagm mgr-part -12

  1. #2201
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalaiventhan View Post
    ஊழலுக்கு வக்காலத்து

    அப்போது, தேர்தல் பிரசாரத்தில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள், ‘திமுக அரசை நாயை அடித்து தூக்கிப் போட்டது போல போட்டுவிட்டார்கள்’ என்று கூறினார். அதற்கு பதிலளித்த கருணாநிதி அவர்கள், ‘‘நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்ததே நான்தான். எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்’’ என்று கடுமையாக தாக்கினார். இதை இங்கே பதிவு செய்வதற்காக வருந்துகிறேன். இருந்தாலும் கூறக் காரணம் உண்டு. ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கருணாநிதி எந்த அளவுக்கு மோசமாக விமர்சனம் செய்வார் என்பதற்குத்தான்.

    பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் இந்திரா காந்தி அம்மையார் பிரதமர் பதவி இழந்து, தமிழகம் வந்தபோது மதுரையில் அவர் மீது கொலைவெறி தாக்குதலை திமுகவினர் நடத்தினர். ஆனால், மூன்றே ஆண்டுகளில் அரசியல் நிலைமைகள் மாறின. புரட்சித் தலைவரின் அரசை இந்திரா காந்தி அம்மையார் டிஸ்மிஸ் செய்தார். திமுகவோடு கூட்டணி என்ற தவறான முடிவெடுத்தார். அப்போது, தமிழன் தமிழனாக வாழ திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று முரசொலியில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் விளம்பரம் கொடுத்தார். அவர் மீது தவறில்லை. காங்கிரஸ் மேலிடம் எடுத்த தவறான முடிவால் யாரை ஊழல்வாதி என்று சொன்னாரோ அதே கருணாநிதியின் ஊழலுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய நிலைமைக்கு அவர் ஆளானார். இந்திரா காந்தி அம்மையார் எடுத்த முடிவு தவறானது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியது. கருணாநிதியின் சூழ்ச்சிகளை முறியடித்து புரட்சித் தலைவர் மீண்டும் முதல்வரானார்.

    ஊழலுக்கு வக்காலத்து வாங்குவதை அரசியல் வரலாறு கண்டிருக்கிறது என்றாலும் மம்தாவின் வக்காலத்து ஆபத்தானது.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    திரு கருணாநிதி அவர்கள் யாரை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தார் ?

    முதலில் கருணாநிதியை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தார் திரு அண்ணா ! இதை அவர் எந்த காலத்திலும் மறக்காதிருந்தால் நல்லது.

    திமுக என்பது அண்ணா தொடங்கிய காலத்தில் "திராவிட முன்னேற்ற கழகம்".

    பிறகு திரு கருணாநிதி வசம் ஆன பிறகு இரண்டு அர்த்தங்கள். "திராவிடர்களை முட்டாளாக்கும் கழகம்" அல்லது "திரு மு கருணாநிதி" என்பதாகும்.

    இன்றுவரை அது பின்னதாகவே செயல்படுகிறது.

    தன்னை தவிர இன்னொரு "செகண்ட் லைன்" உருவாவதை என்றுமே விரும்பாதவர் கருணாநிதி. அதற்க்கு ஒத்துபோனவர்கள் ஜால்ராக்களாக இன்றும் உள்ளனர், அல்லாதவர் அவர்களாகவே வெளிவந்துவிடுவார்கள் அல்லது வெளிஎற்றபடுவார்கள் . இதுதான் இன்றளவும் திமுக வை பொருத்தவரை நடைபெற்றுகொண்டிருக்கிறது.

    மாறன், மற்றும் கருணாநிதிக்கு வேண்டியவர்களை குளிப்பாட்டி பலகாலம் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தார்..! திரு சிவாஜி அவர்கள் திமுக வில் இருந்த காலங்கள் எத்தனை ? மற்றவர்கள் இருந்த இருக்கின்ற காலங்கள் எத்தனை ?

    திமுக என்ற பிச்சைகாரர்கள் கும்பல் வயிறு புடைக்க தின்பதற்கும் ரௌடித்தனம் தமிழகத்திலே தழைத்து வளர அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது.

    அதற்க்கு நடிகர் திலகத்தை தங்களுடய நாடகம், திரைப்பட வசனம் மூலமாக எல்லா மூலை முடுக்கிலிரிந்தும் பணம் வசூல் செய்ய சிவாஜி கணேசன் இந்த கொள்ளைகும்பலுக்கு தேவைபட்டார்.

    நடிகர் திலகம் அவர்களது திரை உலக அசுர வளர்ச்சி இந்த கும்பலுக்கு பெரும் கிலியாக மாற கெதி கலங்கிப்போன கொள்ளைகூட்ட தலைவர்கள், எங்கே தி மு க, சிவாஜி கையகபடுத்திவிடுவாரோ என்ற பயத்தில் அவரை அவமானபடுத்தினர். கட்சி பணிகளில் இருந்து அவராகவே விலக வழி வகை செய்தனர்.

    அடிப்படை உறுப்பினர் அல்லாத ஒருவர் நடிகர் திலகம் அவர்கள். பெரியார் மற்றும் அண்ணா கொள்கைகள் சிலவற்றில் பற்றுகொன்டதன்பால் அந்த நன்றிக்கடனை தன்னுடைய நாடகம், நடிப்பு மூலம் வசூல் செய்து கட்சிக்கு கொடுத்தார். இது தானே உண்மை !

    ஆனால் கருணாநிதி செய்த உபகாரம் என்ன ?

    அப்போது தி மு க கட்சிக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத காங்கிரஸ் அனுதாபியாக இருந்த மக்கள் திலகம் அவர்களை முதல் முதலாக திமுக மாநாட்டில் மேடையேற செய்து கட்சிக்கு அதிகம் நிதி வசூலித்து கொடுத்தவர் என்று பொய்யுரைத்து அறிமுகம் செய்துவைத்தார் என்பது அரசியல் உலகம் அறிந்த உண்மை.

    ஆக எந்த காலத்திலும் திமுக கட்சியாக இருந்தாலும் சரி அதன் தலைவர்களாக இருந்தாலும் சரி...என்றுமே அவர்கள், மற்றவர்களுடைய பெருமையை திருடி இவர்களுடைய பெருமை என்று புளுகுவதும், இவர்களுடைய சிறுமையை மற்றவர்கள் சிறுமை என்று விளம்பரபடுத்தி மக்களை ஏமாற்றுவதை குல தொழிலாக செய்தவர்கள், செய்துகொண்டிருப்பவர்கள்தான்

    சிவாஜிக்கு 1953 இல் நடந்த கொடுமை 1971, 1972, 1973 ல் மக்கள் திலகம் அவர்களுக்கு நேர்ந்தது இதே கருணாநிதியால். என்ன ...19 வருடம் திமுக வில் இருந்து நல்லதொரு அஸ்திவாரத்தோடு, மக்கள் மத்தியில் நல்லதொரு மதிப்போடு திரு MGR வளர்ந்ததால் திரு MGR அவர்களை திரு கருணாநிதியால் திரு சிவாஜிக்கு நேர்ந்ததுபோல நேரசெய்ய முடியவில்லை.

    மேலும் மக்களும் திமுக வை அதன் தலைவர்களின் செய்கையால் மிகவும் வெறுத்த மாற்றத்தை எதிர்பார்த்த காலங்கள் அப்போது வெகு விரைவில் வந்தும் சேர்ந்தது !

    முரசொலியில் விளம்பரம் கொடுத்தது திரு சிவாஜி அல்ல. திமுக என்ற கட்சிதான்.

    அதே போல திரு MGR அவர்களுடன் காங்கிரஸ் நல்ல உறவு கொண்டபோது, திரு சிவாஜி அவர்கள் பசுவை தேடி கன்று வந்துவிட்டது என்றும். திரு mgr அவர்கள் பசு, தான் கன்று என்றும் கூறினார். இதே கருணாநிதி "இந்த ஒன்று சேரும் சம்பவத்தால் சிவாஜி படங்களின் வசூல் இனி இன்னமும் கூடும்" என்று கூட கூறினார். அதை நீங்களும் அறிந்தவர்தானே ! !

    அதே சிவாஜி, Thiru MGR மறைவுக்கு பிறகு, அவரை அனைத்து கட்சிகள் அழைத்தும் அந்த ஈன, சுலபமான சந்தர்ப்பவாத அரசியல் செய்யாமல், மக்கள் திலகம் அவர்கள் மீது கொண்ட அதீத அன்பின் காரணத்தால், திருமதி ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்து களம் இறங்கி, அதனால் சம்பாதித்தது அவமானம் மட்டுமே என்பதை நீங்களும் அறிவீர்களே !

    அப்படி அவர் ஈன, சந்தர்ப்பவாத அரசியல் செய்திருந்தால் அரசியல் வரலாற்றில் நடிகர் திலகம் அவர்களுக்கு நிகழ்ந்த ஒரே ஒரு கரும்புள்ளி இல்லாமல் போயிருக்கும்..!

    ஆக எந்த காலத்திலும் மற்றவர்களுக்காக நல்லது செய்யபோய் அதனால் இன்னல் பட்டு, அவமானம் சந்தித்த ஒரே ஒருவர் இருக்கிறார் என்றால் அது நடிகர் திலகம் ஒருவர்தான் !!!

    கலைவேந்தன் சார் தாங்கள் முன்னதை பதிவிட்டபோது...இனி ..அதே போல நடந்த பின்னதையும் தாங்கள் பதிவிடவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

    பராசக்தி படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதியதால் சிவாஜி புகழ் அடையவில்லை. காரணம், கருணாநிதி அதற்க்கு முன்னர் பல படங்களுக்கு வசனம் எழுதியவர். அந்த வசனத்தில் எந்த வசனம் மக்கள் மனதில் இன்றளவிலும் நிலைத்து நின்றது என்று நாம் சிந்தித்தால் ஒரு படம் கூட கிடையாது.

    ஆனால் கருணாநிதி வசனம் நடிகர் திலகம் அவர்கள் வாயிலிரிந்து மக்கள் காதுகளுக்கு சென்றடைந்தபோதுதான் அது மக்கள் மனதில் பதிந்தது என்பதை கருணாநிதி மட்டும் அல்ல, வேறு எவரும் மறுக்க முடியாது.

    ஓடினாள்..ஓடினாள் ..வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்பதாகட்டும்... புருசோத்தமரே...மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே என்பதாகட்டும்...நடிகர் திலகத்தால் தான் கருணாநிதி பிரசித்தம் அடைந்தார் ...அந்த நன்றியை மறந்து கருணாநிதி பேசினார் என்றால் அவர் வந்த வழி அப்படி..! கருணாநிதியின் குணம் ...அது தமிழகமே அறிந்த ஒன்றுதானே...!

    எல்லா அரசியல் கட்சிகள் ஆட்சி செலுத்தியபோதும் ஊழல் நடந்துதான் இருக்கிறது. இம்மியளவும் ஊழல் இல்லாத ஆட்சி என்று எவருடைய ஆட்சியையும் குறிப்பிடமுடியாது இந்த நாட்டில் கலைவேந்தன் சார் !

    என்ன.. ஒருசிலர் ஆட்சி நடத்தியபோது மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி எதிர் அணியினருக்கு வேண்டிய அளவு பணம் கொடுத்து அவர்களையும் செல்வந்தராகி ஊழல் வெளியில் அதிக அளவில் வெளிவராமல் பெயரளவில் அரசால் புரசலாக பேசும் வகையில் பார்த்துகொண்டனர்...இவ்வளவுதான் வித்தியாசம் சார் !
    Last edited by RavikiranSurya; 14th December 2014 at 10:45 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2202
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    s. கோபாலகிருஷ்ணன்
    தஞ்சாவூர்


    எம்ஜிஆர் என்ன சாதித்தார் ?

    தம்பி கோபாலகிருஷ்ணன் - நீங்கள் தமிழ் நாட்டில் இருந்து இந்த கேள்வி கேட்டு இருப்பது வியப்பாக உள்ளது
    என்ன சாதிக்க வில்லை என்று கேட்டு இருக்கலாம் . சரி விடுங்கள் . நீங்கள் கேட்டதற்காக இந்த பதில் .
    வறுமையின் பிடியில் , நாடக வாழ்க்கையில் துவங்கி , பல எதிர்ப்புகளை எதிர்கொண்டு , எதிர்நீச்சல் போட்டு 1947ல்
    ''ராஜகுமாரி '' -வெற்றி படிக்கட்டில் தன்னுடைய கணக்கை துவக்கினார் .1953ல் திமுகவில் சேர்ந்தார் . தன்னுடைய உடல் -பொருள் ஆவி அனைத்தையும் திமுக இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ,ஏழைகளுக்கு பல நல திட்டங்களையும் வாரி வாரி வழங்கி தமிழக மக்களின் அன்புக்கு பாத்திரமானார் .

    1947-1977 முப்பது ஆண்டு காலம் அவர் திரை உலகில் வசூல் சக்ரவர்த்தியாக இருந்தார் . இன்றும் இருக்கிறார் . நாளையும் இருப்பார் .உலக அரங்கில் எம்ஜிஆர் என்ற புகழ் மந்திர சொல் தனி இடம் பெற்று உள்ளது .''அரசியல் - சினிமா - மனித நேயம் '' -மூன்றிலும் என்றென்றும் மக்கள் முதல்வர் - எம்ஜிஆர் . கோடிக்கணக்கான மக்கள் உள்ளங்களில் எங்க வீட்டு பிள்ளையாக என்றென்றும் வாழ்கிறார் .

    உண்மையான தமிழர்கள் என்றுமே அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் .நன்றி மறவாதவர்கள் .2016 தேர்தல் முடிவை நீ பார்க்கத்தான் போகிறாய் ..உன்னுடைய மன உளைச்சல் புரிகிறது தம்பி .பாவம் நீ என்ன செய்வாய் ? வார்த்தைகளால் வசை மாரி பொழிவதை தவிர உன்னால் என்ன செய்ய முடியும் கோபால கிருஷ்ணா ?

    இந்த பதில் உனக்கு மன மாற்றத்தை தரும் என்றால் இன்னும் நிறைய சொல்வேன் ..




    .

  4. #2203
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை delite திரை அரங்கில் வெள்ளிமுதல் தினசரி 2 காட்சிகள் -

    மக்கள் திலகம் மற்றும் அபிநய சரஸ்வதி நடித்த "என் கடமை"

  5. #2204
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நடிக பேரரசர் எம்.ஜி.ஆர்.அவர்களின் "ரத்னகுமார் " ;வெளியான தேதி :15/12/1949.
    65 ஆண்டுகள் நிறைவு பெற்றது



  6. #2205
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    விசு அவர்களது இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் வெள்ளி விழா கண்ட சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்திற்காக அதில் இடம்பெற்ற அத்தனை கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கும் தனது பொற்கரங்களாலேயே பரிசளித்து மகிழ்கிறார் மக்கள் திலகம். ஷீல்டு கனமாக இருப்பதால் அதைத் தொட்டுக் கொடுத்தால் போதும் எனச் சொல்லி தடுக்கிறார் ஏவிஎம் சரவணன் . அதை மறுத்து பிள்ளைச் சிரிப்புடன் தலைவர் தானே அனைவருக்கும் பரிசளிக்கிறார். அப்போது ஒரு ஷீல்டு கிழித்து அவரது கையில் ரத்தம் வழிகிறது. அதையும் மீறி ஒரு கைக்குட்டையை சுற்றிக் கொண்டும் மீண்டும் பரிசளித்து மகிழ்ந்தார் என சொல்லிச் சொல்லி மகிழ்வார் ஏவிஎம். சரவணன். அந்த நிகழ்ச்சியின் ஒரு சிறு துளி இதோ.

  7. Likes ujeetotei liked this post
  8. #2206
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    அருமை இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் சார்

    மக்கள் திலகம் சிரித்த முகத்துடன் ஷீல்ட் வழங்கும் காட்சி .மிகவும் அருமை நன்றி .

    திரு லோகநாதன் / திரு ரவிச்சந்திரன்

    மக்கள் திலகத்தின் திரை உலக வெற்றிகளை ஜீரணிக்க முடியாதவர்கள் ஒரு சிலர் இன்னமும் எம்ஜிஆரை ஒரு எதிர்மறையாக எண்ணிக்கொண்டும் , தரமின்றி தாழ்த்தி கொண்டும் , மனம் போன போக்கில் எழுதி கொண்டு வருவது அவர்களுடைய மனதின் பலவீனத்தையும் அச்சத்தையும் காட்டுகிறது . எம்ஜிஆர் படங்கள் பிடிக்கும் .எம்ஜிஆர் பாடல்கள் பிடிக்கும் . ஆனால எம்ஜிஆரை பிடிக்காது . என்ன விந்தையான மனிதர்கள் ?

  9. Likes ujeetotei liked this post
  10. #2207
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் நல்லாசியுடன் -

    கடந்த 11-12-2014 அன்று 59 வது பிறந்த தினம் கண்ட எனக்கு, இத்திரி யின் மூலமும், அலைபேசி மற்றும் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்கள் கூறிய நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமாந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அனைத்து புகழும் நான் போற்றும் அற்புத தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கே !




  11. Likes ujeetotei liked this post
  12. #2208
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    மக்கள் திலகத்தின் நல்லாசியுடன் -

    கடந்த 11-12-2014 அன்று 59 வது பிறந்த தினம் கண்ட எனக்கு, இத்திரி யின் மூலமும், அலைபேசி மற்றும் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்கள் கூறிய நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமாந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அனைத்து புகழும் நான் போற்றும் அற்புத தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கே !



    Happy birthday Selvakumar Sir.

  13. #2209
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Vinod Sir congratulations on completing 11,000 posts.

  14. #2210
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •