-
16th December 2014, 05:40 AM
#3321
Junior Member
Newbie Hubber
Thanks to Siva, Sivaji Senthil,Yukesh Babu, Ragavendhar for their interesting informative Contributions.Thread is moving with purposeful meaningful Direction.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th December 2014 05:40 AM
# ADS
Circuit advertisement
-
16th December 2014, 06:00 AM
#3322
Junior Member
Newbie Hubber
நான் ஏற்கெனெவே குறிப்பிட்டது போல ஒரு கவனம் பெறாத அதிசய படம் எல்லாம் உனக்காக. தொழிலாளர் பிரச்சினை,உரத்த சமுதாய சிந்தனை, சீரழிவு, ஊனமுற்றோர் பிரச்சினை,குடும்ப செண்டிமெண்ட்,என்று எல்லாம் நிறைந்த அற்புத படைப்பு.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனங்கள் அவ்வளவு அழகு,இயல்பு. துருத்தாத கதாபாத்திரங்கள். நடிகர்திலகத்தின் 50 களை ஒட்டிய இயல்பான method acting ,சாவித்திரி,ரங்கராவ் நல்ல பங்களிப்பு, மலரும் கொடியும் போல கே.வீ.எம் முத்திரை இருந்தும் ,பல நல்ல படங்களின் நடுவில் மாட்டி போதிய வெற்றி வாய்ப்பை இழந்த சுமார் வெற்றி படங்களில் ஒன்று.
அரைகுறை விமர்சகர்கள் சொல்வது போல சிவாஜி-சாவித்திரி அண்ணன்-தங்கை இமேஜ் இந்த படத்தின் வெற்றிக்கு குறுக்காக நிற்கவில்லை.பொது மக்கள், அவர் பின்னாட்களின் கதாயாகியர் ஜெயலலிதா,காஞ்சனா ஆகியோருக்கு 1966 இல் தந்தையாக நடித்தும்,இவர்களை வெற்றி ஜோடியாகவும் ஏற்றனர். சிவாஜி வேண்டாத இமேஜ் வட்டத்தில் சிக்கியதேயில்லை.
இந்த படம் வித்யாசமான format கொண்டது. எந்த பிரச்சினையையோ,பாத்திரத்தையோ மைய படுத்தாமல், பல் முனை பட்ட தளங்களில் புள்ளிகளில் விரியும். வேறு பட்ட மனநிலை மற்றும் விருப்பு-வெறுப்புகள் கொண்ட பாத்திரங்களை இணைக்கும்,பிணக்கும். இன்றைய படங்களின் போக்கு கொண்ட காலத்தினால் முந்திய படம். ஒரு முனை பட்ட பாத்திரங்களை கொண்டு ,நாயகனை மைய படுத்திய ஒரு முனை பிரச்சினையை எதிர் பார்த்து வந்த அந்த கால அடிப்படை ரசிகர்களுக்கு புதிராக தோன்றியிருக்கும்.(1961 இல்)
இது நாயகனின் கொள்கை சார்ந்தோ, தியாகம் -குடும்ப நிலை சார்ந்தோ, உறவு-கொள்கை போராட்டம் சார்ந்தோ,பாச போராட்டம் ,சந்தேகம் சார்ந்த மன முறிவுகள் சார்ந்தோ ,ஒரு தளத்தில் இயங்காது. இன்னும் சொல்ல போனால், வில்ல தனத்துடன் இயங்கும் தந்தையின் அபார தியாகத்துடன் முடியும். அவர் சார்ந்தே எல்லாம் உனக்காக என்ற பெயரும் பெறும் .
சொல்லுங்கள்,அந்த கால அப்பாவி ரசிகர்கள் இத்தனை சோதனை முயற்சிகளை புரிந்து, எப்படி படத்தில் ஒன்றியிருக்க முடியும்?
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
16th December 2014, 06:51 AM
#3323
Junior Member
Senior Hubber
I fully agree with mr gopal's views about Ellam unankkaga review and movie has notbeen accepted nor perhaps the people that time not in a mood of accepting different formula tried here, according to the ladies meeting in our house when a film is seen, we were living in a house where 16 other tenents were living incidently the house no is also 16.
Last edited by Subramaniam Ramajayam; 16th December 2014 at 06:54 AM.
-
16th December 2014, 07:13 AM
#3324
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
16th December 2014, 08:49 AM
#3325
Junior Member
Newbie Hubber
முரளி,
எடிட் செய்தே உங்கள் கைகளை ஓய வைத்து விட்டேன்.நீங்கள் சொல்வது போல ,நீங்களே தவறு என்று நினைக்காத சரிகளை ,politically -correct என்ற ரீதியில் செய்கிறீர்கள் சரி. ஆனால் ,இந்த ஒழுங்கு முறை நம் திரிக்கு மட்டும்தானா என்ற ஆயாசமே எழுகிறது.ஆனால் டிசெம்பருக்கு பிறகு,தங்களுக்கு எந்த பணி சுமையும் என்னால் ஏற்படாது.
தற்போது,மதுர கானத்தின் தொடர்பதிவுகளே, என் கடைசி மையம் பதிவுகளாக இருக்கும்.
என் எழுத்தாள சகோதரி,என்னை பிற எழுத்துக்களை எழுத பணிக்கிறார். அவர் உச்சம் தொட்டு விருதுகளை குவித்து வரும் போது ,என் எண்ண அலைகளை நான் சுருக்கி கொண்டு,புரிதலின்மை என்ற கூட்டுக்குள் சுருங்குவது அவருக்கு உவப்பாக இல்லை.பலருக்கு ஆதர்ஷமாக இருந்த நான்,இவ்வாறு இருப்பதில் அவருக்கு உடன்பாடில்லை.(நான் வேடிக்கையாக,நான் தன்ராஜ் மாஸ்டர் மாதிரி இருந்திட்டு போறேன் என்பேன்)
ஆனால் நடிகர்திலகம் ரசிகர்களே கூட என்னை புரிந்து கொண்டு,என் எழுத்துக்களை தொடர்ந்து,புரிதலை வளர்த்து கொள்ளாமல் போனது போன்ற வெறுமை உணர்வுதான் எனக்கு. இன்னும் அழகாக,ஆழமாக பல விஷயங்களை எழுத நினைத்திருந்தேன் .
உங்களுக்கு மட்டுமல்ல ,மாற்றணி நண்பர்கள் கலை வேந்தன்,எஸ்வி,யுகேஷ் மற்றும் என்னிடம் அக்கறை செலுத்திய நண்பர்களுக்கு நன்றி. நடிகர்திலகம் திரியில் என் கடைசி பதிவே எல்லாம் உனக்காக என்று என் நடிப்பு தெய்வத்திற்கும்,அவர் ரசிகர்களுக்கும் சமர்ப்பணம் செய்தது போல முடிந்தது ,கவிதை துவமான முடிவே. என் பங்களிப்பு 21ஜூலை ,1 அக்டோபர் என்று தொடரும்.பார்வையாளனாக கண்டிப்பாக தொடருவேன்.
-
16th December 2014, 10:26 AM
#3326
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
முரளி,
ஆனால் நடிகர்திலகம் ரசிகர்களே கூட என்னை புரிந்து கொண்டு,என் எழுத்துக்களை தொடர்ந்து,புரிதலை வளர்த்து கொள்ளாமல் போனது போன்ற வெறுமை உணர்வுதான் எனக்கு. இன்னும் அழகாக,ஆழமாக பல விஷயங்களை எழுத நினைத்திருந்தேன் .
.
கோபால்
மற்றவர்கள் எப்படியோ என்னை பொறுத்தமட்டில் உங்கள எழுத்துக்களை மிகவும் ரசித்தேன்
என்ன ஒன்று அவற்றிற்கு எதிர்வினை ஆற்றத் தெரியவில்லை அல்லது முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்
இதுவரை வேறுவேறு பதிவுகளில்
நடிகர் திலகத்தை பற்றி அவரின் படங்களின் பங்களிப்புகள் பற்றி அணுஅணுவாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள்
அது தொடர வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல ஏனைய நண்பர்களின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும் என்பது என்எண்ணம்
உங்கள் முடிவு உங்கள் கையில்
அதற்காக இத்திரியில் உங்கள் பங்களிப்பை நிறுத்தநினைப்பதை என்னால் ஏற்கமுடியவில்லை
தயவு செய்துஉங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் தொடர்ந்து இத்திரியில் வந்து எழுதுங்கள்.
நன்றி.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
16th December 2014, 11:31 AM
#3327
Senior Member
Senior Hubber
கோபால்,
என்ன ஆயிற்று உங்களுக்கு? 'எல்லாம் உனக்காக' என்று சொல்லி முடித்துக்கொண்டிருக்கின்றீர்கள். 'இனிமேல் எதுவும் உனக்கில்லை' என்றும் சொல்லிவிட்டீர்கள். 'கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே' என்று நான் சொல்லி தெரிய வேண்டுமென்பதில்லை. சிந்திப்பீர்
-
16th December 2014, 01:39 PM
#3328
Junior Member
Regular Hubber
திருப்பூரில் 14.12.2014 அன்று நடைபெற்ற நடிகர்திலத்தின்
பிறந்தநாள் விழா தொகுப்பு
-
16th December 2014, 03:22 PM
#3329
Junior Member
Veteran Hubber
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 3
Theme :
NT's Energy Emission in Song Sequences!
Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :
ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !
ஆற்றல் பகிர்வு தரவரிசை 3 :
3.6 HP ( குதிரைச்சக்தி Horse Power)
Kalvanin Kaadhali Sadhaaram drama scene / Navaraththiri therukkooththu scene /.....
நடிகர்திலகம் என்றுமே தான் வந்தவழி மறந்திடாத பண்பாளர் தனது நடிப்புத்திறனுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்திட்ட தெருக்கூத்துக்கலை மற்றும் நாடகமேடையை
அவர் என்றும் மறந்ததில்லை சினிமாவில் உச்சநட்சத்திரமாக கொடிகட்டிப் பறந்தபோதும் கட்டபொம்மன் வியட்னாம்வீடு தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல நாடகங்களை நடத்தி நடித்து தனது நன்றியறிதலை வெளிப்படுத்தினார் அந்தக்கால தெருக்கூத்து மற்றும் நாடகமேடை நடிப்பினை ஆடல்பாடலோடு கச்சிதமாக வெளிக்கொணர்வதில் அவருக்கு இணையாக யாருமே இல்லை
Concept 1 Dynamics / நகர்வாற்றல் 1 HP
படத்துக்குப் படம் நடிகர்திலகத்தின் ஆற்றல் நிறைந்த ஆடல்பாடல் திறமைகள் மெருகேறிக்கொண்டே வந்த காலகட்டம். கள்வனின் காதலி சதாரம் தெருக்கூத்து காட்சி அவரது மிகவேகமான நளினமான நடன நகர்வுக்கு என்றும் நிலையான சாட்சி!
Concept 2 Statics / அமர்வாற்றல் 0.5 HP
பலே பாண்டியா படத்தில் ராதாவை திருப்திப்படுத்த பல்வேறு முகபாவனைகளுடன் அவர் படும் பாடு .....நீயே உனக்கு என்றும் நிகரானவன் தலைவா
Concept 3 Mechanics / உறைவாற்றல் 0.1 HP
ராஜபார்ட் ரங்கதுரை : வெறும் சப்பளாக்கட்டைகளை வைத்துக்கொண்டு அவர் உறைந்த உணர்வுகளுடன் அமர்ந்து பாவனைகளுடன் பாடும் அம்மம்மா தம்பி என்று ....அம்மம்மா!
Concept 4 Histrionics உடல்மொழியாற்றல் 2 HP
நவராத்திரி திரைப்படத்தில் சாவித்திரியுடன் பாடி ஆடும் தெருக்கூத்து அவரது நிகரற்ற உடல்மொழி நடன ஆற்றலுக்கு சிறந்த உதாரணம் (En Thambi too..but not available for uploading)
நவராத்திரி திரைப்படம் நவரச பாவங்களை வெளிப்படுத்தி ஒன்பது வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை நம் கண்ணே நாம் நம்பமுடியா வண்ணம்
உருவகப்படுத்தி இதுதான் உலகநடிப்பின் உச்சம் என்பதை மிச்ச சொச்சமில்லாமல் நடிகர்திலகம் நிலைநாட்டிய படம். அதில் ஒரு பாத்திரமாக நாடக தெருக்கூத்து கலைஞராக மீசையில்லாமல் பயந்த சுபாவத்துடன் வரும் அவர் மேடையில் ராஜபார்டாக மாறியதும் உடல்மொழி மாற்றத்தில் காண்பிக்கும் கம்பீர அலட்சியம் மிடுக்கு நடை....நடிகர்திலகத்தின் ஒட்டாத ஒட்டுமீசை (ஒருவேளை நெற்றிக்கண் ரஜினி மீசைக்கு இதுதான் இன்ஸ்பிரேஷனோ!?) ஒட்டுமொத்த சிரிப்பை அள்ளுகிறது! really tickling our funny bone!!..... கூத்தடிக்கும் நடனநகர்வுகள்.....அடங்கா ஆற்றலின் வெளிப்பாட்டைக் காணக் கண் கோடி வேண்டுமே!
The End of Part 3. But NT comes back with a bang of his famous song/dance sequences in Uththama Puththiran!
Last edited by sivajisenthil; 16th December 2014 at 10:01 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th December 2014, 07:53 PM
#3330
Junior Member
Veteran Hubber
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 4
Theme :
NT's Energy Emission in Song Sequences!
Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :
ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !
ஆற்றல் பகிர்வு தரவரிசை 4 : உத்தம புத்திரன்
5 HP ( குதிரைச்சக்தி Horse Power)
உத்தம புத்திரன் ஊரறிந்த புத்திரன்! நாணயத்தின் இரு பக்கங்கள் போல நற்குணங்கள் நிரம்பிய உத்தமன் பார்த்திபனாகவும் தீய குணங்களுக்கு பலியாக்கப்பட்ட உன்மத்தன் விக்கிரமனாகவும் இரட்டை வேட நடிப்புக்கு நடிகர்திலகம் இலக்கணம் வகுத்த படம். அரண்மனை உல்லாசபுரியில் மதுவில் ஊறி மமதை ஏறி திசை மாறி அந்தப்புரமே கதியென்று மங்கையருடன் சல்லாபத்தில் திளைத்திடும் விக்கிரமனின் உடல்மொழியும் பாவனைகளும் நம்மை ஒருமாதிரியான பரவச நிலைக்கு உட்படுத்தியதே அவர் நடிப்புக்கு கிடைத்த அபார வெற்றி! தோற்ற வித்தியாசம் ஏதுமின்றி நல்லவனாக வளர்க்கப்படும் பார்த்திபனின் மிருதுவான உடல்மொழியும் வீரமும் காதல் நிலைப்பாடுகளும் எவ்வளவு வித்தியாசமாக உருவகப்படுத்தப் பட்டு நடிகர்திலகமாகக் காணாமல் நம்மிடையே கொண்டாடப்படும் நாயகனாகவே அவர்தம் சீர்மிகு நடிப்பாற்றலால் சிறப்புப் பெற்றன!!
இவ்வகை கதையமைப்பில் ஆடல்பாடல் கேளிக்கை கும்மாளங்களுக்குப் பஞ்சமேது .....கண்ணுற்று அனுபவித்து ரசித்து மகிழ்வோமே!
Concept 1 Dynamics/நகர்வாற்றல் 1.5 HP
யாரடி நீ மோகினி இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை நடிகர்திலகத்தின் உச்சகட்ட ஸ்டைலையும் மிடுக்கையும் நடன நகர்வாற்றலையும் பறை சாற்றிக் கொண்டே இருக்கப்போகும் மனதை அள்ளிய ஆடல்பாடல் காட்சியமைப்பு! ஐக்கியமாவோமே!!
Concept 2 Statics / அமர்வாற்றல் 1 HP
அமைதியான நதியினிலே ஓடத்திலேறி முல்லைமலர் மேலே மொய்க்கும் வண்டாக பார்த்திப திலகம் பத்மினியுடன் என்னவொரு இதமான மனதை வருடும்
தென்றலான பாடல் காட்சியமைப்பு அழுத்தமான காதல் பதிவு கண்ணுற்று களிப்போமே!
Concept 3 Mechanics உறைவாற்றல் 1 HP
காத்திருப்பான் கமலக்கண்ணன் என்று பார்த்திபனை நினைத்து ஏந்திழை பாடலுடன் அபிநயிக்க வைத்த கண் வாங்காமல் கரண்ட் அடித்தது போல் உறைந்து போய் அதை ரசித்து மாமாவிடம் குறும்பாக கமெண்ட் அடிக்கும் விக்கிரமன் !
Concept 4 Histrionics / உடல்மொழியாற்றல்1.5 HP
சிந்தை நிலையில்லாத விக்கிரமனை மயக்கி பார்த்திபனின் இரும்பு முகமூடி சாவியை கவர்ந்திட ஆரணங்கு பத்மினி பாடி ஆடும் உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே காட்சியமைப்பில் குடிகார மன்னனின் கால் போகும் போக்கையும் கண் செருகும் நேர்த்தியையும் உடல் சோர்வையும் அசட்டுச் சிரிப்பையும் ஒருவிதமான ஜெர்க்குடன் கூடிய தள்ளாட்டத்தையும் எப்படிக் காண்பித்திருக்கிறார் நடிக மன்னர் !
The End of Part 4. But NT sure returns to entertain us with his enthralling dance movements in song sequences with hero running after trees with his darling women!! both black/white and in color!!
Last edited by sivajisenthil; 16th December 2014 at 10:11 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks