அந்த ஒருவர் கூட்டத்தில் நானும் இருக்கேன்யாருமே நினைத்துப் பார்க்காத முற்றிலும் வேறுபட்ட இசைவடிவத்தில் அதே வேளையில் பாடல் சூழ்நிலைக்கு மிகவும் பொருந்திவருவது போல.. எல்லோருமே அவரவர் இசைக் கேட்கும் அனுபவத்தை வைத்துதான் இதுபோன்ற முடிவுக்கு வரமுடியும். இதிலென்ன தவறு இருந்துவிடப் போகிறது? அதுபோல வேறொரு இசையமைப்பாளர் முயற்சித்த இடங்கள் எத்தனை, அப்படியே முயற்சித்தாலும் அதில் ராஜாவின் ஆக்கத்தைப் போன்ற ஒரு முழுமை வந்ததா என்ற தன்னளவில் ஒரு பகுப்பாய்வு செய்தாலே போதும் அதுபோன்ற ஒரு முடிவுக்கு வர. Out of the box thinking / Pushing the envelope ன்னு சொல்வாங்களே! மரபை உடைத்தல்.. அதையும் இலக்கண முறையோடு.. அதுதான் ராஜாவின் தனித்துவம் என நினைக்கிறென்.
இதே வரிசையில் இன்னொரு பாடல் உங்கள் செவிக்கு.. "அம்மையப்பா அடிவாங்கிடப் பிறந்தேன் உண்மையப்பா உதைவாங்கியே இளைத்தேன்" - எனக்குநானேநீதிபதி என்ற படத்திலிருந்து மலேசியாவாசுதேவன் குரலில் அமைந்த பாடல்.
http://ilayaraja.in/tamil-songs/play...ne-neethipathi
உங்களுக்கு அப்படிப்பட்ட வகையில் ரஹ்மானின் பாடலாக்கங்கள் இருந்தால் எடுத்துப் போட்டு சிலாகியுங்கள். வாசித்து தெரிந்து கொள்கிறோம்.
Bookmarks