-
17th December 2014, 09:41 PM
#2201
Junior Member
Seasoned Hubber
பொய் கோபம்
திரு.வாசு சார், திரு. கிருஷ்ணா சார், திரு. சின்னக்கண்ணன் சார் , எல்லாருக்கும் வணக்கம்.
எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் ஒருவரான திரு.டி.ஆர். மகாலிங்கம் அவர்களின் அருமையான பாடலோடு விரைவில் வருகிறேன் என்று கூறியிருந்தேன். அதன்படி, அருமையான இந்த பாடலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் திரையுலகில் உச்சத்தில் இருந்து பின்னர், சொந்தப் படங்கள் எடுத்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு மறுவாழ்வு தந்த படம் கவியரசரின் மாலையிட்ட மங்கை. இப்படத்தில் சூப்பர் ஹிட் பாடல் செந்தமிழ் தேன் மொழியாள் என்றாலும் கூட,
எனக்கு மிகவும் பிடித்தது ‘நானன்றி யார் வருவார்...’ பாடல். அதிகபட்ச உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர் திரு.டி.ஆர்.மகாலிங்கம். ஆனால், இந்தப் பாடல் அவர் கீழ் ஸ்தாயியில் பாடியிருக்கும் வித்தியாசமான பாடல். எனது கேள்வி ஞான இசையறிவுக்கு எட்டிய வரை இந்தப் பாடல் ஆபோகி ராகம் என்று கருதுகிறேன். திரு.ஜி.கிருஷ்ணா சார் போன்ற கர்நாடக இசையில் பாண்டித்யம் உள்ளவர்கள்கள்தான் சரியா என்று கூற வேண்டும். இந்த இனிமையான ராகத்தில் திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்களோடு ஏ.பி.கோமளா அவர்களின் குரலும் சேர பாடல் முழுவதும் கூடுதல் ஜிலுஜிலுப்பு.
புராண, சரித்திர படங்களில் முருகனாக ,இளவரசராக,நாரதராக, கருவூர் தேவராக பார்த்த திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் மைனாவதியுடன் பூங்காவில் ஓடியாடி டூயட் பாடும் வகையிலும் இது வித்தியாசமான பாடலே.
அதிலும், காதலனும் காதலியும் ஒருவரையொருவர் செல்லமாக பொய் கோபத்துடன் சீண்டிக் கொள்வது போல கவியரசரின் கற்பனை வளமிக்க பாடல் வரிகள்.
‘நானன்றி யார் வருவார்?
இளநங்கை உனை வேறு யார் தொடுவார்?
நானன்றி யார் வருவார்? அன்பே
நானன்றி யார் வருவார்?’
------ இந்தக் கேள்விக்கு அவருக்கு வெறுப்பேற்றும் வகையில் பதில்.
‘ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார்
முத்தம் எனக்கே என்றார், சொன்னார், தந்தார்
பேசாமல் பேசுகின்றார், வண்ணம் பாடாமல் பாடுகின்றார்’
------ இந்த வரிகளால் செல்லக் கோபத்துடன் இதழில் காயம் என்ன? என்று கேட்கிறார்.
‘வண்ணப் பாவை உந்தன் இதழ் கோவை தன்னில்
இந்த காயம் என்ன? வந்த மாயம் என்ன?’
----- நானில்லாமல் இந்தக் காயம் வந்திருக்க முடியாது. ஆனாலும் வந்திருக்கிறதென்றால் (வேறு யாரையும் காதலி அனுமதிக்க மாட்டாள் என்ற நம்பிக்கையால்) அது மாயமாகத்தான் இருக்க வேண்டும். அது என்ன? என்கிறார்.
இதற்கு மேல் விளையாடினால் வினையாகி விடுமே.. காதலி உண்மையை சொல்கிறாள்.
‘கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்’
----- அதற்கு காதலனின் பதில் கேள்வி,
‘அது கோவை என நினைத்துக் கொண்டதோ?
முத்தம் தந்ததோ? சொந்தம் கொண்டதோ?’
----இதழை கோவைப் பழம் என்று நினைத்து, முத்தம் கொடுத்ததுடன் சொந்தம் கொண்டதோ? என்று கேட்டு காதலனின் பொய்க் கோபம்.
அவரை சமாதானப்படுத்தும் வகையில், காதலி,
‘இன்னும் சந்தேகமா?’
என்ற வார்த்தைகளில் பதில் கேள்வி.
சந்தேகமில்லை என்பதை
‘கண்ணே...’ என்று அன்பு காட்டி ஒரே வார்த்தை பதில்.
அதை ஏற்றுக் கொள்ளும் வகையில், பதிலுக்கு காதலி
‘கண்ணா...’ என்று அழைத்து முழுமையாக சந்தேகத்தை போக்கும் வகையில்,
‘மாதென்னை யார் தொடுவார்?
எந்தன் மன்னன் உமையன்றி யார் வருவார்?
மாதென்னை யார் தொடுவார்?’
அடுத்த பாராவின் வரிகள் இன்னும் தூக்கும்.
‘‘காதல் கரை கடந்த உள்ளமே
அது ஆசை மடை கடந்த வெள்ளமே
இந்த நெஞ்சமே எந்தன் சொந்தமே..’’
---- கவியரசர் புல் பார்மில் இருந்திருப்பார் போலிருக்கிறது. ராகம், மெல்லிசை மன்னர்களின் அருமையான இசை, பாடகர்களின் இனிய குரல் வளம், கற்பனையைத் தூண்டும் வரிகள். பிரம்மானந்தம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th December 2014 09:41 PM
# ADS
Circuit advertisement
-
17th December 2014, 10:34 PM
#2202
Senior Member
Senior Hubber
//கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்’
----- அதற்கு காதலனின் பதில் கேள்வி,
‘அது கோவை என நினைத்துக் கொண்டதோ?
முத்தம் தந்ததோ? சொந்தம் கொண்டதோ?’// கலைவேந்தன் சார்..வாங்க வாங்க.. நல்ல பாட்டு தேன்.. ஆமா மேற்கண்ட வரிகள்ள அந்த இழுவை..இதில் சந்தேகமா..கண்ணேஏஎ கண்ணாஆஆ.. ரொம்ப அழகாக இருக்கும்..நன்றி..
http://www.youtube.com/watch?feature...&v=A9L7XgQkgzA
-
17th December 2014, 10:56 PM
#2203
Senior Member
Diamond Hubber
கலைவேந்தன் சார்,
சொன்னபடி அருமையான பாடலை அழகான விளக்கங்களுடன் தந்து தங்களின் இன்னொரு பக்கத் திறமையைத் தெள்ளத் தெளிவாகக் காட்டி விட்டீர்கள்.
மதுர கீதத்தில் இதுவரை தொடாத பாடல் வேறு ஆதலால் பிரெஷ் ஆகவும் இருக்கிறது. எனக்கும் மிகவும் பிடித்த பாடல் ஆகும் இது.
-
17th December 2014, 11:15 PM
#2204
Senior Member
Diamond Hubber
கலைவேந்தன் சார்!
பொய் கோபம். என் பங்கிற்கு
காதலி காதலனை வெறுப்பேற்ற சில வழிமுறைகளைக் கையாள்வது உண்டு. அதாவது காதலன் செய்யும் குறும்புகளை வேறு எவரோ அல்லது எதுவோ
இவளிடம் முன்னமேயே செய்து விட்டது போல அவனிடமே கூறி காதலனை நொந்து போகச் செய்து, அவனை சீண்டிப் பார்த்து ரசிக்கும் முறை. காதலன் அதை நம்பி நரம்புகள் புடைக்க கோபப்பட, பின் காதலி உண்மையை அவனிடம் சொல்ல, உண்மையறிந்து காதலன் 'அப்பாடா' என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவான்.
நீங்கள் குறிப்பிட்ட பாடலில் அம்முறையைக் காணலாம். 'கூண்டுக்கிளி எடுத்துக் கொஞ்சினேன்' என்று அவள் உண்மையைச் சொல்லி விட்டாள். ஆனாலும் காதலன் ரொம்ப பொஸசிவ் ஆனவன். கிளி 'கோவைப பழம் என நினைத்துக் கொண்டதோ? முத்தம் தந்ததோ? சொந்தம் கொண்டதோ?’ என்று அப்போது கூட தாங்க முடியாத ஆத்திரத்தில் கேட்கிறான்.
இப்போது எனக்கு உங்கள் அபிமானத் தலைவரின் நடிப்பில் வெளிவந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.
'ஏய் மச்சான்... என் பொன்னு மச்சான்... என்னைத் தொடாதே'
'பட்டிகாட்டுப் பொன்னையா' படப் பாடல்.
இந்தப் பாடலிலும் அதே கதைதான். முதலில் காதலி தன்னைத் தொட வரும் காதலனை வேண்டுமென்றே,
'தொடாதே' என்று பாசாங்கு செய்தபடி பாடத் தொடங்குகிறாள்
'ஏய் மச்சான்... என் பொன்னு மச்சான் என்னைத் தொடாதே'
என்று காதலனுக்கு செம தண்ணீர் காட்டுகிறாள். சக்கையாக வெறுப்பேற்றுகிறாள். காதலன் கோபத்தின் உச்சிக்குப் போகும் அளவிற்கு.
'கையைப் புடிச்சானே... அய்யா கையைப் புடிச்சானே
காலையிலே ஒருத்தன் வந்து கையைப் புடிச்சானே'
இது காதலி.
காதலன் கோபமாகக் கேட்கிறான் அவளிடம்.
'கையைக் கொடுத்தாயா.... அடி நீ கையைக் கொடுத்தாயா?
காதலிலே கண் மயங்கி கட்டிப் புடிச்சாயா?
அவன் எண்ணம் எங்கெல்லாமோ போய் விட்டது. காதலியை இனிமேல் நம்புவதா? ம்ஹூம்.
உடன் அவள் இன்னும் உசுப்பேற்றுகிறாள்.
'காலைப் புடிச்சானே... மெதுவா... மெதுவா
ஏதோ கணக்கு வச்சி காரியத்தோட காலைப் புடிச்சானே'
(காதலன் தலையில் அடித்துக் கொண்டு தலையைக் கவிழ்த்துக் கொள்கிறான்)
கையை தொட்டதாக முதலில் சொல்லி, பின் காலைத் தொட்டதாக சொல்லி, இப்போது காதலி உச்ச கட்டத்திற்கு வந்து விட்டாளே!
'நெஞ்சைத் தொட்டானே...மெதுவா... மெதுவா...
நான் நீண்ட மூச்சு வாங்க வாங்க நெருங்கித் தொட்டானே!
காதலன் ஆத்திரமுற்று கத்துகிறான்.
'காலைக் கொடுத்தாயா? அடி நீ காலைக் கொடுத்தாயா?
காத்திருக்க மனமில்லாமல் கையில் விழுந்தாயா?
நெஞ்சைத் தொட்டானா? அடி உன் நெஞ்சைத் தொட்டானா?
நெனச்சுப் பார்க்க முடியல்லியே... நெருங்கித் தொட்டானா?'
காதலனைப் பாருங்கள். 'அதை' நினைத்துக் கூடப் பார்க்க முடிய வில்லையாம்.
இப்போது காதலி இன்னும் மலை ஏறுகிறாள்.
'சேலை எடுத்தானே... பாவி சேலை எடுத்தானே
சேலையோடு ரவிக்கையையும் சேர்த்தெடுத்தானே'
கேட்கும் போதே நமக்கு 'பக்' கென்று இல்லை? காதலன் நிலைமை எப்படி இருக்கும்?
இனிமேல் காதலன் பொறுப்பதாவது? எங்க தலைவர் பாணியில் 'நெவர்'.
அவள் மீது பாய்கிறான்.
'நாணங் கெட்டவளே... அடியே நடத்தை கெட்டவளே...
உன்னால் நானுங் கெட்டுப் போகும் முன்னால் திருத்தி விட்டவளே..
அடி போதுமடி! போதும்.. ஒரு தலைமுறைக்கே புத்தி வந்ததடி'
ஒரு பெரிய கும்பிடாக அவள் பக்கம் போட்டு விட்டு ஓடியே போய்விடப் பார்க்கிறான். அவள் பண்ணின கூத்தில் அவன் அழுதே கூடப் போய் விட்டான். அவன் புலம்பலின் உச்சத்தைக் கவனியுங்கள். தலைமுறைக்கே புத்தி வந்ததாம்.
இப்போதுதான் காதலிக்கு அவன் மேல் அனுதாபம் பிறக்கிறது. 'இனி தாங்க மாட்டான்' என்று விளையாட்டை நிறுத்தி, தான் சொன்னதன் இன்னொரு அர்த்தங்களை அவனுக்கு ஒவ்வொன்றாகப் புரிய வைக்கிறாள்.
'மச்சான்... மச்சான்' என்று செல்லமாக சிரித்துக் கொண்டே அவனைக் கூப்பிட்டு விளக்கமளிக்கிறாள்.
'கையைப் புடிச்சான் வளையல் போட'
வளையலை குலுக்கிக் காட்டுகிறாள். இப்போது கொஞ்சம் புரிகிறது காதலனுக்கு. 'ஓஹோ! கையைப் பிடித்தவன் வளையல்காரனா? அப்பாடா! பொழச்சேன்'
வாயெல்லாம் அவனுக்குப் பல்.
'காலைப் புடிச்சான் சலங்கை கட்ட'
காலுக்கான விளக்கம் அளிக்கிறாள் காதலி.
'அடடா! ஆமாம்...நகைக் கடைக்குப் போய் சலங்கை கட்டி வந்திருக்காள்'
காதலன் உற்சாகமாகிறான்.
சரி! இரண்டு விளக்கங்களும் சரி! அடுத்து நெஞ்சுக்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறாள் பார்ப்போமே! அவன் கண்களிலும், மனதிலும் ஆர்வம்.
அவள்,
'நெஞ்சைத் தொட்டான் நோயைப் பார்க்க' என்கிறாள்.
ஆமாம்! உண்மைதான்! டாக்டர் ஸ்டெதஸ்கோப் வைத்துப் பார்க்கும் போது நெஞ்சைத் தொட்டுதானே ஆகவேண்டும்? அப்பாடா! வயிற்றில் பால் வார்த்தாள் மகராசி .
இப்போது முடிவுக்கு வருகிறாள்.
'சேலை எடுத்தான் சலவை செய்ய'
காதலனுக்கு இப்போது பரம திருப்தி! சலவைத் தொழிலாளி சலவை செய்ய சேலை எடுத்து இருக்கிறான். கூடவே ரவிக்கையயும்தானே எடுப்பான்? சந்தேகம் தீர்ந்தது. இனி நிம்மதி!
இப்பதான் கதையே ஆரம்பம்.
இந்தக் காதலன் எம்.ஜி.ஆர் ஆச்சே! அவ்வளவு சீக்கிரம் காதலியிடம் ஏமாந்து விடுவாரா? கதையையே மாத்திபுட்டார்.
காதலியைப் பார்த்து,
'ஏமாந்துட்ட... ஏமாந்துட்ட... நல்லா ஏமாத்திபுட்டேன்'
என்று எகத்தாளம் செய்ய,
காதலி இப்போது முழிக்கிறாள் முகத்தில் ஆச்சரியக் குறிகளோடு.
'அடி போடிக்கண்ணு... எல்லாம் தெரியுமடி... எனக்கு முன்னாலே
சும்மா போக விட்டு நடிச்சேன்டி கோபத்தைப் போலே'
என்று காதலன் எம்.ஜி.ஆர் காதலி ஜெயலலிதாவிடம் போட்டாரே ஒரு போடு. அதான் எம்.ஜி.ஆர்.
நான் ரொம்ப ரசித்த குறும்புப் பாடல்.
கலைவேந்தன் சார் ஓ.கேவா?
இதே வகையைச் சேர்ந்த இன்னொரு பாடலும் இருக்கிறது. நீங்கள் விருப்பப்பட்டால் பதிகிறேன்.
நன்றி கலை சார். இந்தப் பாடலைப் பற்றிய இந்தப் பதிவை நான் எழுதும் இந்த நேரத்தில் என்னையுமறியாமல் எழும் சிரிப்பை அடக்கிக் கொண்டுதான் எழுதுகிறேன்.
அவ்வளவு ஜாலியாக இருந்தது சார்.
Last edited by vasudevan31355; 17th December 2014 at 11:29 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
17th December 2014, 11:26 PM
#2205
Senior Member
Seasoned Hubber
-
17th December 2014, 11:39 PM
#2206
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
திரு வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு முதற்கண் நன்றியுடன் இப்பாடல் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
மிக மிக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் உன்னைச் சேர்ந்த செல்வம் என நம்மிடம் திரும்ப வந்து விட்டது கலைக்கோயில்..
மணிவண்ணன் சார் மிக மிக மிக நன்றி.
Last edited by RAGHAVENDRA; 17th December 2014 at 11:43 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th December 2014, 11:59 PM
#2207
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
பொங்கும் பூம்புனல்
திரு வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு முதற்கண் நன்றியுடன் இப்பாடல் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
மிக மிக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் உன்னைச் சேர்ந்த செல்வம் என நம்மிடம் திரும்ப வந்து விட்டது கலைக்கோயில்..
மணிவண்ணன் சார் மிக மிக மிக நன்றி.
ungalai serndha selvam ungalidame vandhu vittathu
-
18th December 2014, 03:26 AM
#2208
Junior Member
Newbie Hubber
கலை,
டி.ஆர். மகாலிங்கம் நடுநாயகமான octave எடுத்து பாடும் போது அழகுதான். அவருக்கு bass அல்லது மேல் octave செல்ல செல்லும் போதும் பாடும் முறையில் பிசிறு இல்லாவிட்டாலும் ,கேட்க சுமாராகவே இருக்கும். இவர் தி.மு.கவில் முக்கியஸ்தராக இருந்தது தெரியுமா?இது ஆபோகியேதான். என்ன சந்தேகம்?
எனக்கு பிடித்த மற்றவை சில்லென்று பூத்த, சொட்டு சொட்டுன்னு,ஆடை கட்டி வந்த நிலவோ, இசை தமிழ் நீ செய்த,பந்த பாச காட்டுக்குள்ளே.
கண்ணதாசன் ,கதாநாயகி தன்னை பிறர் கொஞ்சியதாக சொல்லும் போது ,நாயகன் பொய் கோபம் கொண்டதில் ,இன்னொரு சுவையான பாடல் நான் மலரோடு.மற்றது வாசு சொன்ன நகைச்சுவை ரகம்.
Last edited by Gopal.s; 18th December 2014 at 03:35 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th December 2014, 04:56 AM
#2209
Junior Member
Newbie Hubber
தொடரும் கொண்டாட்ட தோல்விகள்.
சில தொழில்களில் இருப்பவர்கள் ,அரசியலில் ஈடு பட கூடாது அல்லது அரசியலில் ஈடு படுவதற்கு குறைந்த பட்ச நிபந்தனை விதிக்க வேண்டும் என்ற கருத்தை ஆமோதிப்பவன் நான். எல்லா குடிமகன் களுக்கும் உரிமை உண்டே என்பது நகைப்புக்கிடமான கூற்று.unfair advantage உள்ள தொழில் சினிமா நடிப்பு தொழில். மக்கள் தினமும் பார்ப்பதால் recall value கொண்டது. மிகை பிம்பங்களை நிலை நாட்டும் சத்யகூருகள் கொண்டது.அத்தோடு மக்களுக்காக அரசியலில் ஈடுபட்ட காமராஜ் போன்றவர்களோ,அண்ணா போன்றவர்களோ வெற்றியோ ,தோல்வியோ அரசியலை தொழில் போலவோ ,பொழுது போக்கு போலவோ பாவித்து வேறு தொழிலுக்கு ஓட நினைக்க மாட்டார்கள்.சில திடீர் தலைவர்கள் ,தன செல்வாக்கிற்காக மட்டும் அரசியலை ஊறுகாய் மாதிரி எடுத்து,ஒரு பிரச்சினை என்றதும் ,பழைய தொழிலுக்கு ஓட நினைத்ததை பார்த்திருக்கிறோமே?தவறான முன்னுதாரணங்களுக்கு பஞ்சமா என்ன?
இந்த மாதிரி familiarity &Image based வெற்றிகள் ,அரசியலை சேத படுத்தி,இன்றைய குட்டி நடிகர்களை கூட ,நாக்கை சுழற்ற வைப்பதையும் ,படித்தவர்கள் சதவிகிதம் அதிகமாகியும் ,பெரிய மாற்றம் இல்லாததையும் யோசித்தால்,அரசியல் அமைப்பு முறையை சீர்திருத்தி, விகிதாசார பகிர்வு முறையை அமல்படுத்தி,திடீர் தலைவர்களின் வெற்றியை ஒடுக்கி ,மக்களை காத்தே ஆக வேண்டும்.
இப்போது ஒரு முக்கிய தோல்வியை கொண்டாடுவோம்.
ஏ.எம்.ராஜா.
இவர் பெயரை உச்சரிக்கும் போதே எனக்கு ஒரு வித புளகாங்கிதம் ஏற்படும். 53 முதல் பலருக்கு பாடும் குரலாகி,பிறகு பீ.பீ.எஸ் போன்றவர்களின் வருகையாலும்,பிற காரணங்களாலும் தேய்ந்து போன பாடகர்.ஆனால் நான் பேச வந்தது இசையமைப்பாளர் ராஜாவை பற்றி.
நீங்கள் இளைய ராஜாவை எடுங்கள் (இவர் இளைய ஆனதுக்கு சீனியர் தான் காரணம்),ரகுமானை எடுங்கள் ,முதல் படம் வெற்றி,அதில் அவர்கள் பங்கு ,தொடரும் திறமை நிரூபணம்,இவை அவர்களை இருபதாண்டுகளுக்கு நிலை நாட்டவில்லையா?
அப்போது கல்யாண பரிசின் பிரம்மாண்ட வெற்றி, அதில் trend -setter ஏ.எம்.ராஜாவின் அபார பங்கு ,தொடர்ந்த விடிவெள்ளி,தேனிலவு,ஆடிப்பெருக்கு போன்ற வெற்றி படங்கள் ,அதில் ஏ.எம்.ராஜாவின் தொடர்ந்த திறமை நிரூபணம் ,இவை ராஜாவை 70 கள் வரை ராஜாவாக வலம் வர வைத்திருக்க வேண்டாமா?
இவர் எல்லா பாணி இசையையும் தொட்டு ,புதிய பாணியை நிறுவினாரே ?தமிழ் பட உலகுக்கு புது பாட்டையே போட்டு கொடுத்தாரே?
கர்நாடக- ஹிந்துஸ்தானி-மேற்கத்திய இசையிணைப்பில் தேன்நிலவில் அசுர சாதனை நிகழ்த்தினாரே?
ஏன் என்ற கேள்வி மட்டுமே மிஞ்சுகிறது இந்த ஞான கிறுக்கனின் தோல்வியை நினைத்தால். நெஞ்சு குழிக்குள் ஒரு அடைப்பு ஏற்படுத்தும் சோகம். வாடிக்கை மறந்ததும் ஏனோ,ஆசையினாலே மனம்,துள்ளாத மனமும் துள்ளும், உன்னை கண்டு நானாட,காதலிலே தோல்வியுற்றான், பண்ணோடு பிறந்தது ராகம்,என்னாளும் வாழ்விலே,இடை கையிரண்டில்,கொடுத்து பார் பார் பார்,பாட்டு பாடவா,காலையும் நீயே,ஓஹோ எந்தன் பேபி,நிலவும் மலரும் பாடுது,ஊரெங்கும் தேடினேன்,தனிமையிலே இனிமை காண முடியுமா,காவேரி ஓரம் கவி சொன்ன காதல் என்ற பாடல்களை கொடுத்தவரையா படவுலகம் ஒதுக்க முடியும்?
ஏன் நேர்ந்தது? இது நமக்குமே மாபெரும் இழப்புத்தானே? மலையாளம் பக்கம் கரையொதுங்கி நூறுக்கு மேற்பட்டதை தந்தார் ராஜா.
இது அவர் முன்கோபத்தாலா?அல்லது சுய மரியாதையாலா?(ஸ்ரீதர்,விஸ்வநாதன் போன்றவர் பகைப்பு),எல்லோரையும் யார் என்று பாராமல் தூக்கி எரியும் அகந்தையாலா? வித்தை செருக்கா?அன்றைய முன்னணி நடிகர்களின் பாடும் குரலான டி.எம்.எஸ் மேல் இவருக்கு மதிப்பில்லை என்பதால் அவரை உபயோகிக்க தவறியதாலா?(ஆனால் ஸ்ரீதர் கூட ஆரம்ப நாட்களில் ஸ்ரீநிவாஸ்,ஜானகி ஆகியோரையே கொண்டாடினார்)
இது எதுவுமே காரணமில்லை. படவுலகின் வினோத புறக்கணிப்பு.தேடல் அற்ற மக்கள் கூட்டம்.இவை நமக்கு ஏற்படுத்திய இழப்பு கொஞ்சமா நஞ்சமா?
(தொடரும் தோல்விகள்)
Last edited by Gopal.s; 18th December 2014 at 05:01 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th December 2014, 07:36 AM
#2210
Senior Member
Seasoned Hubber
கலை சார்
டி.ஆர். மகாலிங்கம் அவர்களின் நானன்றி யாரறிவார் பாடலைப் பற்றிய தங்களின் அருமையான தொகுப்புரை இது வரை இப்பாடலை யாரேனும் கேட்காமலிருந்தார்களானால் அவர்களை நிச்சயம் கேட்கத் தூண்டியிருக்கும். மற்றவர்களுக்கு மீண்டும் புதிய அணுகுமுறையில் அதைக் கேட்க வைத்திருக்கும்.
தொடர்ந்து அபூர்வமான பழைய பாடல்களைப் பற்றிய தங்கள் பதிவுகளைத் தரவேண்டும்.
பாராட்டுக்கள்.
Last edited by RAGHAVENDRA; 18th December 2014 at 08:07 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks