-
26th December 2014, 11:14 PM
#11
Junior Member
Diamond Hubber
புரட்சி தலைவர் எம்ஜிஆர் மக்கள் திலகம்/ பொன்மன செம்மல் என்று அழைக்கப்படுவது ஏன்????
இதோ விளக்கமளிக்கிறார் நடிகர் .சிவக்குமார்....
அப்போது எம் ஜி ஆர் சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைந்த காலம் ..
ஒன்றிரண்டு காட்சிகளில் துணை நடிகராக நடித்த காலம் .
Mgr, சக்கரபாணி, ஆகியோர் தன் தாயாரோடு தட்டுதடுமாறிய ஜீவனம் .
Mgr சினிமா வாய்ப்புகளுக்காக அலையவும், சக்கரபாணி அவர்கள் வேற வேலைக்கும் தடுமாறுகிறார்கள் ..
ஒருநாள் mgr மண்ணடியில் இருந்து கோடம்பாக்கம் நடந்தே சென்று வாய்ப்பு தேட எங்கும் அமையல. காலையில் வீட்டில் குடித்த பழங்கஞ்சிதான். மாலை 4 மணி அளவில் ஒரு சினிமா கம்பெனில மறுநாள் துணை நடிகர் நடிப்புக்கு வரசொல்லி, ரூ 10 அட்வான்ஸ் கொடுத்தாங்க..
பெருமகிழ்ச்சியோடு அதை வாங்கிய mgr கடைத்தெரு போய் அரிசி பருப்ப வாங்க போனார் ..
அரிசிகடை வாசல்வரை போய்ட்டாரு. அப்ப "அண்ணே" என
குரல் கேட்க, திரும்பினார். தம்மோடு நடித்த துணை நடிகர் ..
அவர் "அண்ணே வீட்ல 3 குழந்தைங்க மனைவி எல்லாம் பட்டினினே. ஏதாவது வாய்ப்பு வந்தா எனக்கும் சொல்லுங்கன்னே" என அழுதார் ..
துடித்து போன எம் ஜி.ஆர் , ஏம்ப்பா உன் பிள்ளைங்க எல்லாம் சின்ன குழைந்தகளாச்சே..
ஆமாம்னே. . .
Mgr யோசிக்கவே இல்லை.. தன்னிடமிருந்த அந்த ஒத்தை பத்து ரூபாய அவர்ட்ட கொடுத்துட்டார்
"போய் அரிசி ஜாமான் வாங்கிட்டு போப்பா " என அனுப்பிட்டு மீண்டும் மன்னடிக்கு நடந்தே வந்தார். வந்து தன் தாயிடம் நடந்தத கூறினார் . .
அந்த அம்மா, "நல்ல காரியம் செஞ்சேடா, நாம பெரியவங்க.. பசிய தாங்கிக்கலாம்.
பாவம் அந்த குழைந்தைங்க. அதுங்க எப்படி தாங்கும் " என மகனை பாராட்டினார் . .
அதுதான்
mgr.
-
26th December 2014 11:14 PM
# ADS
Circuit advertisement
Bookmarks