-
29th December 2014, 09:46 PM
#11
Junior Member
Seasoned Hubber

நன்றி! நன்றி!! நன்றி!!!
மக்கள் திலகம் திரி பாகம் 12 நவம்பர் 26ம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கிய 35 நாட்களில் இந்த பாகம் நிறைவடைகிறது. இந்த அளவு குறுகிய காலத்தில் மையம் இணையதளத்தில் ஒரு திரியின் பாகம் நிறைவடைவது இதுவே முதல்முறை. இதுவும் ஒரு சாதனை. 46,000க்கும் அதிகமான நல்ல உள்ளங்கள் இத்திரியை பார்வையிட்டு நமக்கு ஊக்கம் அளித்துள்ளனர்.
‘ஆஹா.... இந்த பாகத்தை தொடங்கி வைத்து குறுகிய காலத்தில் இந்த திரியை நிறைவு செய்து விட்டேன்’ என்று நான் சொன்னால், என்னை விட ஒரு பொய்யன் இருக்க முடியாது. உண்மையைச் சொன்னால் நான் தொடங்கித்தான் வைத்தேன். சகோதரர்களான நீங்கள் அனைவரும் நிறைவு செய்திருக்கிறீர்கள். இந்த சாதனையும் பெருமையும் உங்களையே சேரும். முக்கியமாக, சாதனைகளுக்கு சொந்தக்காரரான தலைவரின் பெயரால் இயங்கும் திரி சாதனை படைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
நமது திரியின் 12-வது பாகத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் கரம் குவிந்த, சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 13ம் பாகத்திலும் அனைவரும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று நண்பர்களையும் சகோதரர்களையும் மெத்தப் பணிவுடன் கோருகிறேன். ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி. 13ம் பாகத்தில் தலைவரின் புகழ் பரணியை தொடர்ந்து பாடுவோம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th December 2014 09:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks