-
27th January 2015, 11:12 AM
#3801
Senior Member
Seasoned Hubber
வேந்தர் தொலைக்காட்சியில், ஒவ்வொரு ஞாயிறு அன்றும் பிற்பகல் 1 மணி முதல் 1.30 வரை, நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப் பற்றி "தடம் பதித்தவர்கள்" என்ற தலைப்பில் தொடர் ஒளிபரப்பாகிறது.
25-01-2015 அன்று ஒளிபரப்பான பகுதி -3 ன் இணைப்பு:
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th January 2015 11:12 AM
# ADS
Circuit advertisement
-
27th January 2015, 12:50 PM
#3802
Junior Member
Veteran Hubber
பாடல் ஒன்றே! காட்சிகளோ இரண்டு !! மகிழ்ச்சி / சோகம்
பகுதி 5 .புனர்ஜென்மம் ....என்றும் துன்பமில்லை....
தாயை காண வீடு நோக்கி ஈட்டிய பொருளுடன் வரும்போது....என்றும் துன்பமில்லை..
சொந்தங்கள் விட்டு விலகும்போது ....தனிமைப் படும்போது
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
27th January 2015, 07:56 PM
#3803
Junior Member
Veteran Hubber
மழை பயிர்களின் உயிராதாரம். மனித வாழ்வின் உயிரிழை. மழையில் நனைவதோ பேரின்பம் நமது மனநிலை பொறுத்து! அதுவே பெருந்துன்பம் நமது
மனம் கலங்கியிருக்கும்போது.
காதலியுடன் நனைந்து மகிழ்வது ஆனந்த மழை!! காதலியை நினைந்து உணர்வுகள் மரத்துப்போய் நனைவது துயரமழை!!
நனைவதோ நடிகர்திலகம் !! மழையில்கூட அவருக்கு மட்டும் கண்கள் வேர்க்குமோ!?
காணா இன்பம் கனிந்ததேனோ ....
மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை !!
Last edited by sivajisenthil; 27th January 2015 at 08:07 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
27th January 2015, 08:48 PM
#3804
Junior Member
Diamond Hubber

Originally Posted by
sivajisenthil
காணா இன்பம் கனிந்ததேனோ ....
மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை !!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th January 2015, 11:57 PM
#3805
அன்புள்ள திரு முரளி / வீயார் அவர்களே,
தெய்வ மகன் திரை பட டைட்டில் டி எம்.எஸ். மற்றும் சுசிலா என்று தான் வருகிறது... ஆனால் படத்தில் சீர்காழி பாடிய பாடல் உள்ளது...
மேலும் மற்றொரு முறை கோரஸ் குரலில் வீரமணி சாயலில் உள்ளது...
சீர்காழி பெயர் இடம் பெறாமைக்கு ஏதாவது காரணம் உள்ளதா ?
[/URL]
-
28th January 2015, 06:49 AM
#3806
Senior Member
Seasoned Hubber
இன்று 28.01.2015 காலை 10.00 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில் நடிகர் திலகம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
காணத்தவறாதீர்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th January 2015, 06:54 AM
#3807
Senior Member
Seasoned Hubber
சுந்தரபாண்டியன் சார்
வீரமணியின் குரல் கேட்டதும் கொடுப்பவனே முதல் முறை இடம் பெறும் போது ஒலிக்கும். அந்த சிறுவனுக்காக அவருடைய குரல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி குரலும் மிகவும் அற்புதமாக டி.எம்.எஸ்.சின் குரலை ஒத்து இருக்கும்.
இந்தப் பாடலும் சீர்காழியின் பாடலும் கடைசி நேரத்தில் எடுக்கப்பட்டவை. படம் வெளியாக வேண்டிய நெருக்கமான தருணத்தில் பதிவு செய்யப்பட்டு படம் பிடிக்கப்பட்டதாகத் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இதே போல காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் பாடலை எழுதியவர் வாலி எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். சரியான தகவல் இல்லை. ஆனால் படத்தில் டைட்டில் கார்டில் கண்ணதாசன் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டது, தெய்வமே பாட்டில் வரும் அண்ணா என்ற சொல். இது அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தனியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு படமாக்கப்பட்டு சேர்க்கப்பட்டது. இசைத்தட்டில் இந்த சொல்லும் இன்று பார்த்த முகம் சரணமும் கிடையாது.
Last edited by RAGHAVENDRA; 28th January 2015 at 07:01 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
sss thanked for this post
-
28th January 2015, 01:26 PM
#3808
மிக்க நன்றி வீயார் சார்....
உங்கள் அனைத்து தகவல்களுக்கும் , தெய்வமே பாடல் தகவலுக்கும்..
எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிரித்து , ரசித்து , கவலை மறக்கடித்த தினமாக , தெய்வ மகன் திரைப்படம் அமைந்தது...
மிக்க நன்றி
சுந்தர பாண்டியன்
-
28th January 2015, 02:20 PM
#3809
சுந்தர பாண்டியன் சார்,
ராகவேந்தர் சார் நினைத்தது போல் கோவிலில் ஒலிக்கும் சீர்காழியின் அசரிரீ பாடல் இறுதியில் சேர்க்கப்பட்டதுதான். இயக்குனர் ACT அவர்களை ஒரு முறை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது [பாடல்கள் பலவிதம் தொடருக்காக] இதைப் பற்றி குறிப்பிட்டார். இந்த பாடல் இல்லாமலே அந்த கோவிலில் கண்ணன் தன் தாயை சந்திக்கும் காட்சி படமாக்கப்பட்டு விட்டது. படத்தின் எடிட்டிங் வேலைகள் முடிந்து ரீரெகார்டிங் நடக்கும் போது MSV , ACT இருவருக்குமே அந்த இடத்தில ஒரு சின்ன தொகையறா இருந்தால் நன்றாக இருக்குமே என தோன்ற உடனே கவியரசரையும் சீர்காழியையும் வரவழைத்து அந்த பாடலை பதிவு செய்து பின்னணியில் சேர்த்திருக்கிறார்கள். முன்னரே குறிப்பிட்டது போல் ரீரெகார்டிங் வரை வந்து விட்டதால் டைட்டில் கார்டு வேலைகள் எல்லாம் அதற்கு முன்பே முடிந்துவிட்டபடியால் சீர்காழியின் பெயரை சேர்க்க முடியவில்லை. விவரத்தை சீர்காழியிடம் சொல்லி வருத்தம் தெரிவித்திருக்கிறார் ACT. சீர்காழியும் அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்த தகவல்களை பாடல்கள் பலவிதம் தொடரில் தெய்வமே பாடலைப் பற்றி எழுதும்போது குறிப்பிட்டிருக்கிறேன் [ஆனால் இப்படி விரிவாக அல்ல]
ஆனால் படத்தைப் பார்க்கும்போது காட்சி படமாக்கப்பட்ட பிறகுதான் பாடல் சேர்க்கப்பட்டது என்பதே தெரியாது. நடிகர் திலகத்தின் கண்களும் முகபாவமும் உடல்மொழியும் பாடலுக்கு நடித்தது போலவே இருக்கும். அதனால்தானே என்றென்றும் அவன்தான் நடிகன் என்ற முழக்கத்திற்கு நடிகர் திலகம் மட்டுமே தேர்வு பெறுகிறார்!
நடிகர் திலகத்தின் நடிப்பு திறமையென்னும் ஆழ்கடலில் இப்படி எத்தனை எத்தனையோ முத்துக்கள்! அதில் ஒன்றை பற்றி பேச வாய்ப்பு தந்த உங்களுக்கு நன்றி! அன்றைய திரையிடலில் பார்வையாளர்களின் ரசிப்பை பற்றி சொன்னீர்கள். Mass ரசிகர்களை கூட ஒரு class படத்தைக் ரசிக்க வைக்க நமது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்!
மீண்டும் நன்றி!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
sss thanked for this post
-
28th January 2015, 04:13 PM
#3810
திரு முரளி சார்,
மிக்க நன்றி. நீங்கள் சொல்வது நிஜம் தான், குறிப்பறிந்து கண்களால், உடல் மொழியால், முக பாவத்தால் வேலை செய்யும் மாஸ் - ஓ, கிளாஸ்- ஓ.. நடிகர் திலகம் தான் டாப் கிளாஸ்.
சுந்தர பாண்டியன்
Bookmarks