-
28th January 2015, 03:19 PM
#2761
Junior Member
Seasoned Hubber
நன்றி திரு.லோகநாதன் சார். தலைவர் வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அதையெல்லாம் தாண்டிய மனிதப் புனிதர் என்பதற்கு இந்தத் தகவல்களே சாட்சி. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
28th January 2015 03:19 PM
# ADS
Circuit advertisement
-
28th January 2015, 03:21 PM
#2762
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
நேற்று பிறந்த நாள் கண்ட சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கும்,
இன்று பிறந்த நாள் காணும் சகோதரர் திரு லோகநாதன் அவர்களுக்கும்,
நாளை மறுநாள் பிறந்த நாள் காணப்போகும் சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கும்
எனது சார்பிலும், அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பிலும் உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள் !
மக்கள் திலகம் பிறந்த மாதத்தில் பிறந்த அவரின் அன்பர்களாகிய பாக்கியசாலிகள் - திருவாளர்கள் கலியபெருமாள், லோகநாதன், சைலேஷ் பாசு, எல்லா வளமும் பெற்று நலமுடன் நீடூழி வாழ்க !
ஸ்டைல் சக்கரவர்த்தியின் அட்டகாசமான ஸ்டில்லை பதிவிட்ட திரு.செல்வகுமார் சாருக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
28th January 2015, 03:43 PM
#2763
Junior Member
Diamond Hubber
மனிதாபிமானத்தின் "மகாத்மா" எம்.ஜி.ஆர்.
மாற்றம் செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 23, 9:58 PM IST பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, டிசம்பர் 23, 7:50 PM IST கருத்துக்கள்9வாசிக்கப்பட்டது896 Share/Bookmark printபிரதி
மனிதாபிமானத்தின் "மகாத்மா" எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் 26வது நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் அவரின் நினைவுகளை நாம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம்.
1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு இப்பூவுலகில் பிறந்த எம்.ஜி.ஆர் தனது தாய் சத்யபாமா மீது அளவற்ற அன்பு கொண்டவர். தனது தந்தையின் மரணத்திற்கு பின் மதுரையில் உள்ள நாடக கம்பெனி ஒன்றில் நாடக நடிகராக கலைத்துறையுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
நாடகங்களில் நடித்து வந்த அவர், 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த அவர் சினிமாவில் தனக்கெனி தனி பாணியை வகுத்துக்கொண்டார்.
மக்கள் திலகத்தின் திரைத்துறை வெற்றிக்கு பிரபல தயாரிப்பாளர் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரும் வசனர்த்தா ஆரூர்தாசும் முக்கிய காரணம் ஆவார்கள். அவரது உடன் பிறந்த சகோதரர் எம்.ஜி சக்கரபாணி என்றாலும், தேவர் அவர்களுக்கு உடன் பிறவா சகோதரர் என்ற அந்தஸ்தை கொடுத்திருந்தார் என்று கூறிப்படுகிறது.
குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தேவரண்ணன் வந்தால் மட்டும் உள்ளே அனுப்புங்கள் என்று எம்.ஜி.ஆர் கூறியதாக அண்ணன் ஆரூர்தாஸ் அவர்கள் தனது தினத்தந்தி கட்டுரையில் கூறியிருப்பதன் மூலம் தேவரின் மீது எம்.ஜி.ஆர் விலை உயர்ந்த பற்று கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது.
சக கலைஞர்கள் நலனிலும் மக்கள் திலகம் பெருமளவு அக்கறை கொண்டிருந்தார் என்பதற்கு ஆரூர்தாஸ் அவர்களே முக்கிய சாட்சி. எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பின் இடைவேளையின் போது அவருக்கருகே உட்கார்ந்திருந்த ஆரூர்தாஸ், பெருமளவு வேலைப்பளு காரணமாக, அப்படியே எம்.ஜி.ஆரின் மடியில் சாய்ந்து உறங்கிய போது அவர் கண்விழிக்கும் வரை அவரை எழுப்பாமல் அன்போடு பார்த்துக்கொண்டது அவரின் உயர்வான குணத்தை காட்டுகிறது.
நாடக குழுவிலிருந்து திரைத்துறைக்கு வந்த பின் அவருக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்துக்கொண்டேயிருந்தது. இந்நிலையில் அண்ணாவின் எழுத்தால் கவரப்பட்ட மக்கள் திலகம் அவர்கள் திராவிட முன்னேற்ற கட்சியில் இணைந்தார்.
அண்ணாவின் மறைவிற்கு பின் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின் 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவக்கினார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் 1973 ஆம் ஆண்டு நடந்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து அரசியலில் தனது சாதனை ஓட்டத்தை துவக்கினார்.
1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க 130 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் அவர்கள் 43065 வாக்குகள் பெற்று அமோக வெற்றியடைந்தார்.
இத்தேர்தலில் கிட்டத்தட்ட 52 லட்சம் வாக்குகளை அ.தி.மு.க அறுவடை செய்தது அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய சாதனை. அக்கட்சியை சேர்ந்த ஆனூர் ஜெகதீசன், பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ்.செம்மலை, பி.தனபால், சி. பொன்னையன், கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் கா.காளிமுத்து ஆகியோர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டினர்.
1980ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிமுக-ஜனதா கூட்டணியை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றிபெற்றதையடுத்து புரட்சித்தலைவரின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் ஆட்சியை கலைத்த பின் நடந்த தேர்தலில் முன்னை காட்டிலும் அதிக வெற்றியை எம்.ஜி.ஆர் பெற்றார். அப்போது 177 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 129 இடங்களில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தது. இத்தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் 21066 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் பொன்.முத்துராமலிங்கத்தை தோற்கடித்தார்.
தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜருக்கு பிறகு தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.
1983 ஆம் ஆண்டு அதிமுக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ஜெயலலிதா அவர்கள் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதாவின் தீவிர பிரச்சாரத்தால் அதிமுக அமோக வெற்றி பெற்றது.
இத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர்., 60510 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து 3வது முறையாக முதலமைச்சரான பெருமை புரட்சித்தலைவருக்கு கிடைத்தது.
தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றுவதற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருந்தங்களை கொண்டு வந்தார். 1982 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். மகளிருக்கு சிறப்பு பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
தமிழக அரசியல் வரலாற்றில் மது விற்பனையை தடை செய்த மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் ஆவார். பழமையான கோவில்களுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றை புனரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தார். சுற்றுலாத் துறையில் தமிழகம் வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுத்தார்.
குறிப்பாக ஈழத்தமிழர் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார். பல்வேறு வகைளில் அவர்களுக்கு நிதியுதவியும், பொருளுதவியும் தந்த "வள்ளல்" அவர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ந்தேதி இப்பூவுலகை விட்டு மறையும் வரை ஏழைகளின் நலனுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்த இந்த பொன்மனச் செம்மலை மனிதாபிமானத்தின் மகாத்மா என்று குறிப்பிடுவது சாலச்சிறந்தது.
COURTESY MALAIMALAR KALASUVADUGAL EDITION
-
28th January 2015, 03:47 PM
#2764
Junior Member
Seasoned Hubber
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய இனிய நண்பர் திரு கலியபெருமாள் அவர்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் .
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனிய நண்பர் திரு லோகநாதனுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்
நாளை பிறந்த நாள் கொண்டாடும் இனிய நண்பர் திரு சைலேஷ் அவர்களுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th January 2015, 03:59 PM
#2765
Junior Member
Seasoned Hubber
MAKKAL THILAGAM MGR IN MAJESTIC LOOK- EYE FEAST
Last edited by Varadakumar Sundaraman; 28th January 2015 at 04:06 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th January 2015, 04:00 PM
#2766
Junior Member
Seasoned Hubber
REAL FASHION HERO
Last edited by Varadakumar Sundaraman; 28th January 2015 at 04:05 PM.
-
28th January 2015, 04:04 PM
#2767
Junior Member
Seasoned Hubber
100/100 PERFECT LOOK MGR IN HIS 100TH MOVIE IN 1968 AT THE AGE OF 51.
-
28th January 2015, 04:13 PM
#2768
Junior Member
Seasoned Hubber
OH MY GOD...
-
28th January 2015, 04:13 PM
#2769
Junior Member
Veteran Hubber

Originally Posted by
KALAIVENTHAN
சாதனை மன்னன்
பெளராணிகர்கள் கூறுவார்கள். எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் பக்தியுடன் கண்ணீர் பெருக்கெடுக்க அனுமார் இருப்பார் என்று கூறுவார்கள். அதுபோல, இந்த ‘ராமச்சந்திரன்’ பெயரைக் கேட்டால் தமிழகமே நன்றிக் கண்ணீரை காணிக்கையாக்கி பக்தியோடு மயங்கிக் கிடக்கிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம் விஜய் டி.வி. நிகழ்ச்சி.
மன்னாதி மன்னன்...... ‘சாதனை மன்னன்’.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
முழுக்க முழுக்க உண்மைதான் திரு. கலைவேந்தன் அவர்களே ! கோடானு கோடி வார்த்தைகளில் ஒன்று. தங்களின் உவமை போற்றத்தக்கது, பாராட்டத்தக்கது.
-
28th January 2015, 06:04 PM
#2770
Junior Member
Diamond Hubber
this movie also thalaivar age 51

Originally Posted by
varadakumar sundaraman
makkal thilagam mgr in majestic look- eye feast

Bookmarks