-
16th February 2015, 10:00 PM
#111
Senior Member
Seasoned Hubber
சமீபத்தில் நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் திரையிடப்பட்ட அன்புக்கரங்கள் நிகழ்வு பற்றி முன்னரே பகிர்ந்து கொண்டோம்.
இத்திரைக்காவியத்தில் இடம் பெற்ற அந்த ரயில் நிலையமும் புகை வண்டியும் நம்மால் மறக்க முடியாது. அப்போது பல நண்பர்கள் இப்படத்தில் இடம் பெற்ற அந்த ரயிலின் தோற்றத்தை வியந்து பார்த்தனர். இதைப் பற்றிய ஒரு சிறு ஆய்வு செய்தால் என்ன என்று தோன்றியது. இதன் விளைவே இப்பதிவு.
அந்த குறிப்பிட்ட ரயில் நிலையத்தின் பெயர் படத்தில் பொன்னகரம் என்றிருந்தாலும் அது மேட்டுப்பாளையம் உதகமண்டலம் மலை ரயில் பாதையில் மேட்டுப்பாளையத்திற்கு அடுத்த ஓரிரு ரயில் நிலையங்களில் உள்ள கல்லார் என்பது புலனாகியது. [படத்திலும் கல்லார் ரயில் நிலையம் என்பது நன்றியுடன் கூறப்படுகிறது ] அதன் படி பார்த்தால் படத்தில் நாம் பார்த்தது அந்த மலை ரயிலே. இன்றும் கிட்டத்தட்ட அதே தோற்றத்தில் தான் அந்த ரயில் காட்சியளிக்கிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பு படத்தில் பார்த்த அந்த ரயில் நிலையம் தற்போது எப்படி உள்ளது..

அந்த ரயில் நிலைத்திலிருந்து இதோ ரயில் கிளம்பும் காணொளி..
அதே ரயில் நிலையத்தில் நடிகர் திலகம் ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் என பாடும் பாடல் காட்சி. அன்றைய நெடுந்தகட்டில் இப்பாடல் காட்சி இடம் பெறாமல் நாம் ஏமாற்றமடைந்தோம். இதோ அதைப் பார்த்து நம் மனதைத் தேற்றிக்கொள்வோம்.
கல்லார் ரயில் நிலையத்தின் அருகாமையிலுள்ள ஓர் இடத்தில் இயற்கை எழில் கொஞ்சும் தோற்றம்
Last edited by RAGHAVENDRA; 16th February 2015 at 10:03 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
16th February 2015 10:00 PM
# ADS
Circuit advertisement
-
16th February 2015, 10:31 PM
#112
Senior Member
Seasoned Hubber
டியர் கோவை செந்தில்
தங்களுடைய ஃபோட்டோ பக்கெட் அக்கௌண்ட்டில் பேண்ட் வித் அதிகமாகி விட்டதாக செய்தி வருகிறது. இதன் காரணம்..
1. தங்களுடைய நிழற்படங்களின் அளவு பெரியதாக இருந்திருக்க வேண்டும்.. அளவைக் குறைத்துப் பாருங்கள்.
2. தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கொள்ளளவினைத் தாங்கள் கடந்திருக்கலாம். இதனையும் சரி பாருங்கள்.
இல்லையெனில், தங்களுடைய வேறேதனும் மின்னஞ்சல் முகவரியின் துணை கொண்டு புதிய கணக்கைத் துவங்கலாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
16th February 2015, 11:08 PM
#113
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Senthilvel Sivaraj
எனது தனிமடல் பார்க்கவும்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th February 2015, 02:41 AM
#114
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Murali Srinivas
இரண்டு நாட்களுக்கு முன்பு தர்மம் எங்கே படத்தின் வெளியீடு பற்றி சொல்லும்போது அரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நடிகர் திலகத்தின் படங்களை திரையிடுவதனால் கிடைக்கக் கூடிய வணிக வெற்றியைப் பற்றி குறிப்பிட்டேன். எதைப் பற்ற்யும் கவலைப்படாதீர்கள், எதிர்மறையான சூழலிலும் நடிகர் திலகத்தின் படங்கள் சாதனை படைக்கும் என்று. Dooms day predictors என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதாவது நெகடிவ் செய்திகளை பரப்புபவர்கள், இது சரியாக வராது, இது சரியாக போகாது என்றெல்லாம் சிவாஜி படங்களுக்கு மட்டும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள்.
தர்மம் எங்கே முதல் நாள் அமோகமாக போனபிறகும் கூட மறுநாள் அரங்க நிர்வாகத்தினரிடம் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆரம்பித்து விட்டது. அதனால் தியேட்டருக்கு ஆள் வராது அதிலும் இன்று [ஞாயிறு] இந்தியா பாகிஸ்தான் மாட்ச். ஆகவே நார்மலாக உங்களுக்கு ஞாயிறன்று வரக்கூடிய வசூல் கூட வராது என்று சொல்லியிருக்கிறார்கள். பாவம் அவர்களுக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் 4 வருடங்களுக்கு முன்பு [சரியாக சொல்ல வேண்டுமென்றால் 2011 ஏப்ரல் 2 ஞாயிறு] கிரிகெட் உலகக்கோப்பையின் பைனல் மாட்ச் நடக்கிறது. அதில் இந்தியா இலங்கையை சந்திக்கிறது. அன்றைய தினம் இதே மதுரை சென்ட்ரலில் நடிகர் திலகத்தின் சிவகாமியின் செல்வன் ஓடிக் கொண்டிருக்கிறது. அன்றைய நாளில்ம் கூட திரளான மக்கள் மாலைக் காட்சிக்கு படம் பார்க்க வந்திருந்தனர்.
இன்று நடந்த இந்தியா பாகிஸ்தான் மாட்ச் தர்மம் எங்கே திரைப்படத்தை எந்த விததிலும் பாதிக்கவில்லை. இன்று மாலை பாலகனி அரங்கம் நிறைந்தது. கீழே ஆண்கள் டிக்கெட் அனைத்தும் நிறைந்தது. நான் இரண்டு நாட்கள் முன்பு சொல்லியிருந்தது போல் முதல் நாளைப் போலவே மூன்றாம் நாள் வசூலிலும் புதிய சாதனை படைத்திருக்கிறது. இதுவரை ஞாயிறு மாலை அதிகபட்ச வசூலாக இருந்த அண்ணன் ஒரு கோவிலின் வசூலையும் தாண்டி சாதனை படைத்திருக்கிறது தர்மம் எங்கே!
நாம் பலமுறை சொன்னது போல் இந்த கூட்டம் எல்லாம் தாங்களாகவே வரும் கூட்டம். தங்கள் சொந்த காசில் டிக்கெட் வாங்கி பார்க்கும் கூட்டம். ஒரு கலைஞனாக தமிழ் கலாச்சாரத்தின் அடையாள சின்னமாக என்றென்றும் நடிகர் திலகம் இனம் கண்டுக் கொள்ளப்படுவார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரின் படங்களுக்கு வரவேற்பு இருக்கும் என்று நாம் அடிக்கடி சொல்வதற்கு இவையெல்லாம் நடைமுறை உதாரணங்கள். அவரை உயர்த்திப் பிடிக்க வேறு prop upகள் தேவையில்லை.
இன்று மாலை நடந்த கோலாகல கொண்டாட்டங்களைஎல்லாம் நண்பர் சுந்தர் பதிவிடுவார்.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
நடிகர்திலகத்தின் படங்கள் சாதனை செய்வதை பொறுக்கமுடியாத
நபர்கள் இப்படிச் சொல்லியாவது அண்ணனின் படங்களை
சாதனை செய்யவிடாமல் தடுக்கப்பார்க்கிறார்கள்
இப்படிச் செய்பவர்களின் எண்ணம்தான் என்ன?
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th February 2015, 03:42 AM
#115
Senior Member
Devoted Hubber
சாதனையாளர்கள் பலரும் தவறி விழுவது பிள்ளைப் பாசத்தால் தான்.
ஆனால் அதிலும் நடிகர் திலகம் நடிப்பின் மீது அவருக்கிருந்த மரியாதையை நிரூபித்தார்.
தன் மகன் என்பதற்காக அவர் பிரபுவை தன் வாரிசாக மக்களிடம் திணிக்கவில்லை.
பிரபு ஒரு சமயம் ‘நான் எப்படி நடிக்கின்றேன்?” என்று கேட்டபோது “முதல்ல நீ தமிழை ஒழுங்காப் பேசு. அப்புறமா நடிக்கிறதைப் பத்திப் பார்க்கலாம்” என்று சொன்னவர் அவர். திறமையின் அடிப்படையில் கமலையே வாரிசாக ஏற்றுக்கொண்டார்.
நடிகர் திலகத்தின் நேர்மைக்கு இது ஒரு சான்றாகவும் அமைந்தது.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th February 2015, 04:17 AM
#116
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் பெரும்பாலும் படங்களில் 'கூலிங் கிளாஸ்' அணிந்து நடிக்க மாட்டார். மிக மிக அபூர்வமாகவே அவரது படங்களில் அப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெறும். அவ்வாறு சன் கிளாஸ் அணிந்த காட்சிகள் என்றால் நினைவுக்கு வருபவை.
'செல்வம்' படத்தில் விமான நிலையக்காட்சி.
'புதிய பறவை'யில் ஊட்டிக்கு வந்ததும்
'தங்கச்சுரங்கம்' படத்தில் ரேஸ்கோர்ஸ் காட்சி
'சிவந்த மண்' படத்தில் ஒருராஜாராணியிடம் பாடல் (பனிமலைக்காட்சியில்)
'வைர நெஞ்ச'த்தில் கிளைமாக்ஸுக்கு சற்று முன்.
'ராமன் எத்தனை ராமனடி' படத்தில் ரயிலிலிருந்து இறங்கி நம்பியார் வீடுவரை.
'சுமதி என் சுந்தரி'யில் அறிமுகக் காட்சி
'வசந்த மாளிகை'யில் நீச்சல் குளத்திலிருந்து வாணிஸ்ரீயை சந்திக்க வரும்போது.
'தீபம்' படத்தில் 'ராஜா யுவராஜா' பாடலில் பலவித சன் கிளாஸ்கள்
'ரோஜாவின் ராஜா' படத்தில் கிட்டத்தட்ட படம் முழுவதும்
'நான் வாழவைப்பேன்' படத்தில் திருத்தேரில் வரும் சிலையோ பாடலில் ஒன்றும்இ வாசுவை மிரட்ட வரும்போது வேறு ஒன்றும்.
'வாழ்க்கை' படத்தில் காலம் மாறலாம் பாடலின்போது.
வேறு பல படங்களிலும் இடம்பெற்றிருக்கலாம். விடுபட்டவற்றைச்சேர்க்கலாமே.
(ஊட்டிவரை உறவு எங்கமாமா ராஜா போன்ற பல படங்களில் சன் கிளாஸ் அணிய வாய்ப்பிருந்தும் ஏனோ தவிர்த்திருப்பார்)
திரு கார்த்திக் அவர்களின் பழைய பதிவொன்றில் இருந்து
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
17th February 2015, 08:45 AM
#117
Senior Member
Seasoned Hubber
Thdam PathithavargaL - Part-6
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
17th February 2015, 02:23 PM
#118
Junior Member
Junior Hubber

Originally Posted by
sivaa
சாதனையாளர்கள் பலரும் தவறி விழுவது பிள்ளைப் பாசத்தால் தான்.
ஆனால் அதிலும் நடிகர் திலகம் நடிப்பின் மீது அவருக்கிருந்த மரியாதையை நிரூபித்தார்.
தன் மகன் என்பதற்காக அவர் பிரபுவை தன் வாரிசாக மக்களிடம் திணிக்கவில்லை.
பிரபு ஒரு சமயம் ‘நான் எப்படி நடிக்கின்றேன்?” என்று கேட்டபோது “முதல்ல நீ தமிழை ஒழுங்காப் பேசு. அப்புறமா நடிக்கிறதைப் பத்திப் பார்க்கலாம்” என்று சொன்னவர் அவர். திறமையின் அடிப்படையில் கமலையே வாரிசாக ஏற்றுக்கொண்டார்.
நடிகர் திலகத்தின் நேர்மைக்கு இது ஒரு சான்றாகவும் அமைந்தது.
நடிகர் திலகம் எந்தக்காலத்திலேயும் கமலை வாரிசாக ஏற்றுக் கொண்டதே இல்லை. கமல் மட்டுமல்ல வேறு எவரையுமே சிவாஜி அவர்கள் தன் கலையுலக வாரிசாக நியமனம் செய்ததில்லை. சும்மா வாய்க்கு வந்தபடி நீங்களாகவே ஏதாவது கற்பனை செய்து எழுதிக் கொண்டு இருக்காதீர்கள்.
ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா? இப்படி நீங்களே அள்ளி விடுவதால்தான் அவனவனும் நம் தலையிலேயே மிளகாய் அரைக்கிறான்.
Last edited by Murali Srinivas; 17th February 2015 at 08:19 PM.
-
17th February 2015, 04:57 PM
#119
Senior Member
Devoted Hubber
Dear joe sir,
many many happy returns of the day
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
17th February 2015, 08:23 PM
#120
பட்டாகத்தி,
உங்கள் கருத்துகளை கூற உங்களுக்கு தாராளமாக உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் எழுதியவரையும் தவறான வார்த்தைகளினால் தாக்காமல் மற்ற நடிகர்களையும் தேவையின்றி இழுக்காமல் எழுதுங்கள். முன்னரே சொன்னதுதான். சொன்ன கருத்தோடு முரண்படலாம். அதற்காக புண்படுத்த வேண்டாமே!
புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks