-
14th March 2015, 12:58 AM
#11

Originally Posted by
puratchi nadigar mgr
சத்யம் சினிமாஸ் அரங்கில் , மறு வெளியீட்டில் 160 நாட்கள்
(அதிக பட்சம் ) ஓடிய ஒரே திரைப்படம்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன்.".

நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,
நாங்கள் என்றுமே எந்த விஷயத்தையும் காழ்புணர்ச்சியோடு அணுகியதில்லை. அது போல் உங்கள் படங்களோடும் சரி, அது ஓடும் நாட்களுடனும் சரி எங்களுக்கு எந்தவித எதிர்ப்புமில்லை. ஆனால் உண்மையை கூறுங்கள் என்று மட்டும்தான் சொல்லுகிறோம். உண்மையல்லாத ஒன்றை திரும்ப திரும்ப சொல்லி அதை உண்மையாக்க முயற்சிக்கும் போதுதான் அதையும் சொல்லுகிறோம். சத்யம் திரையரங்கில் வெள்ளி விழா ஓடவில்லை என்ற உண்மையை நாங்கள் சொல்லவில்லை.
பாருங்கள் எம்ஜிஆர் திரியில் பாகம் 10-ல் அருமை சகோதரர் லோகநாதன் அவர்களே இந்த உண்மையை பதிவிட்டிருக்கிறார் அதன் கிழே எம்ஜிஆர் மன்ற அமைப்பின் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டியிலும் ஆல்பட் வளாகத்தில் மட்டும் ஓடும் செய்தியையும் அச்சடித்திருக்கிறார்கள்.
வினோத் சார் அவர்களுக்கே இந்த உண்மை நன்கு தெரிந்திருந்தும் அதையும் மீறி அவர் மீண்டும் மீண்டும் பதிவிடுவதைத்தான் வேதனையோடு சுட்டிக் காட்டினோம்.
உங்களுக்கும் உண்மை இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்! நன்றி!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th March 2015 12:58 AM
# ADS
Circuit advertisement
Bookmarks