-
15th March 2015, 06:36 PM
#11
Senior Member
Seasoned Hubber
நடிகர் தயாரிப்பாளர் - என்ன மேனேஜர் , இன்னைக்கு ரிலீஸுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சா..
தயாரிப்பு நிர்வாகி - எல்லாம் சரியாயிருக்குண்ணே.. அத்தனை தியேட்டருக்கும் ஃபோன் போட்டு பேசிட்டேன்... ஒண்ணும் பிரச்சினையில்லை..
ந..த.. - ப்ரிண்ட் எல்லாம் போய் சேந்துடுச்சா..
த.நி. - எல்லா ப்ரிண்டும் போய் சேந்துடுச்சு அண்ணே..
ந.த. - ஃபைனான்ஸியர் ப்ராப்ளம் எதுவுமில்லையே..
த.நி.. அதெல்லாம் ஒண்ணுமே இல்லேண்ணே... தம்பி மாதிரி ஒரு பெர்ஃபெக்டான தயாரிப்பாளர் கிடைக்க அவங்க இல்லே கொடுத்து வெச்சிருக்கணும்.. உங்களுக்கு ஒரு பிரச்சனையும் அவர் வெக்கமாட்டாருண்ணே.. நான் கேக்கறத்துக்கு முன்னாடிேயே ஒவ்வொண்ணையும் பாத்து பாத்து முடிச்சுடுவாருண்ணே.. எங்கிட்டே சொல்லிட்டே இருப்பாருண்ணே... அண்ணன் பேர்ல இருக்கிற மரியாதையை கெடுக்கிற மாதிரி நாம எதுவும் மறந்து கூட செஞ்சிடக் கூடாதுன்னு சொல்லுவாரு, அதை செயல்லேயும் காட்டுவாரு.. அதனாலே நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்கண்ணே..
ட்ரிங் ..ட்ரிங் ...ஃபோன் அடிக்கிறது..
ந.த. - மேனேஜர் போயி அந்த ஃபோனை எடுப்பா...
த.நி. - அண்ணே உங்களுக்குத் தான் ஃபோன்... இந்தப் படத்திலே நடிச்சிருக்காங்களே அந்த ..... அம்மா.. அவங்க லைன்லே இருக்காங்க..
ந.த.. எடுக்கிறார்.. மறுமுனையில் அந்த .... நடிகை அழுது கொண்டே ... உங்களை இந்த நேரத்திலே தொல்லை பண்றத்துக்கு மன்னிக்கணும்... எங்க வீட்டுக்காரர் காலமாயிட்டாருங்க.. தயங்கித் தயங்கி சொல்கிறார்..
ந.த. .. மிகவும் மன வருத்தப் படுகிறார். ஆறுதல் சொல்லி விட்டு லைனை கட் பண்ணுகிறார்..
த.நி.... என்னவாம்ணே... நீங்க ஏற்கெனவே டென்ஷனாயிருக்கீங்க.. ஃபோன்லே ஏதோ ஒரு மாதிரி சேதியாட்டம் இருக்குதே...
ந.த. ... ஆமாம் மேனேஜர்.. அந்த அம்மாவோட வீட்டுக்காரர் இன்னிக்கு காலமாயிட்டாராம்.. நீ என்ன பண்றே... உடனே நான் சொல்ற அமௌண்ட்டை கேஷா தம்பிகிட்டே வாங்கிட்டு வா...
த.நி.. ஏண்ணே.. செக் வேண்டாமா..
ந.த.... சொல்றது செய்யுங்க மேனேஜர்... இந்த மாதிரி நேரத்திலே தான் நாம அவங்களுக்கு சரியான படி உதவணும்..
த.நி. .. கேஷைக் கொண்டு வந்து தருகிறார்...
ந.த. அதை அப்படியே அந்த வீட்டில் அந்த அம்மாவிடம் சேர்க்கிறார்..
.........
தன்னுடைய சொந்தப் படம் ரிலீஸாகும் அந்த டென்ஷனிலும் சற்றும் கலங்காது சக நடிகையின் துக்கத்தில் பங்கு கொண்டு அதில் சமயத்திற்கேற்றவாறு உதவியும் செய்த அந்த நடிகர் -தயாரிப்பாளர் யாரென நான் சொல்லித் தெரியவேண்டுமா...
அந்தப் படம் வியட்நாம் வீடு..
அந்த நடிகை டி.வி.குமுதினி அவர்கள்.. வியட்நாம் வீடு திரைப்படத்தில் அத்தையாக நடித்தவர்..
எல்லோருக்கும் சிவாஜியை ஒரு பத்து படத்தில் பார்த்து விட்டால் சிறந்த நடிகர் என்று கூறி விடுவர். ஆனால் அவர் உள்ளத்தில் நல்ல உள்ளம்,, உறங்காத நல்ல உள்ளம்.. என்று நடிகர் திலகத்தின் உதவியை மிகவும் சிலாகித்து சொன்ன திரு சந்திரசேகர் அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும். அவர் வேறு யாருமல்ல, அந்த டி.வி. குமுதினி அவர்களின் புதல்வர்.
நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் இன்றைய நிகழ்ச்சியினைப் பற்றி ஹிந்து நாளிதழில் படித்தறிந்து இன்று நிகழ்ச்சிக்கு வருகை புரிந்ததோடு மட்டுமின்றி இச்சம்பவத்தை நம் அனைவரிடமும் மறக்காமல் பகிர்ந்து கொண்ட அவருடைய உள்ளமும் நல்ல உள்ளம் என்பதும் உண்மையன்றோ..
மிக்க நன்றி சந்திரசேகர் சார்.. வலது கை கொடுப்பதை இடது கை அறியாது அளிக்கும் உண்மையான கர்ணனின் தயாள குணத்திற்கு மற்றுமோர் சான்று இந்நிகழ்வு.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
15th March 2015 06:36 PM
# ADS
Circuit advertisement
Bookmarks