
Originally Posted by
kalnayak
நிலாப் பாடல்களைப் பற்றி படிக்கும்போது, சூரிய மண்டலத்தில் உள்ள எல்லா கோள்களின் நிலவுகளைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே!!!
எல்லோருக்கும் தெரியும் சூரியனை மண்டலத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் சுற்றி வருகின்றன. முதல் இரண்டு கோள்களான புதனுக்கும், வெள்ளிக்கும் நிலாக்கள் இல்லை. பூமியை சுற்றிவரும் நிலாவைத்தான் நாம் பார்க்கிறோம். பாடல்களில் எல்லா கவிஞர்களும் பாடுவது இந்த நிலாவை வைத்துத்தான்.* இந்த நிலாவின் பெயர்தான் சந்திரன்(!!!) ஆங்கிலத்தில் Luna என்பார்கள்.
செவ்வாய் கிரகத்திற்கு 2 நிலாக்கள் உள்ளன. அவைகளின் பெயர்கள்: Deimos மற்றும் Phobos. செவ்வாயில் குடியேறுபவர்கள் இந்த இரண்டு நிலாக்களையும் கண்ணால் கண்டு கழிக்கலாம். ஒரு நிலாவை ஆணாகவும், மற்றொன்றை பெண்ணாகவும் கருதி கவி பாடலாம். எந்த பிரச்சினையும் வராது. வந்தால் அடுத்த கிரகங்களில் குடியேறலாம். காரணம்? தொடர்ந்து படியுங்கள்.
வியாழன் சூரிய மண்டலத்தின் பெரிய கிரகம். அதற்கு 67 நிலாக்கள் உள்ளன. அதன் பெயர்கள் எல்லாவற்றையும் இங்கே கொடுத்தால் நீங்கள் படிக்க மாட்டீர்கள். இருந்தாலும் சிலவற்றை சொல்கிறேன். அந்த பெயர்களை உங்களில் யாராவது கேள்விப் பட்டிருக்கலாம்: Ganymede, callisto, Io, Europa, Himalia, Elara, Metis, Hegomone, Arche, Kallichore மற்றும் S2003/J16 இருந்து S2010/J2 வரை.
சனி சூரிய மண்டலத்தின் இரண்டாவது பெரிய கிரகம். அதற்கு 62 நிலாக்கள் உள்ளன. அவைகளில் குறிப்பிடத்தக்கவைகள்: Titan, Rhea, Lapetus, Dione, Tethys, Enceladus, Mimas, Hiperion, Phoebe, Janus, Pandora, Helene, Albiorix, Atlas, Pan, Telesto, Calypso, YMir.
யுரேனஸ்க்கு 27 நிலாக்கள் உள்ளன. அவைகளில் சில: Titania, Oberon, Umbriel, Ariel, Miranda, Sicorax, Puck, Portia, Juliet, Caliban, Belinda, Cressida, Rosalind
நெப்டியூன் 14 நிலாக்களை கொண்டுள்ள கிரகம். Triton, Proteus, Nereid, Larissa, Galatea, Naiad, Neso போன்றவைகள் அவைகளில் சில.
பொய் கிரகமான ப்ளூட்டோவிற்கும் Hydra, Nyx, Charon, Kerboros, Styx என்று 5 நிலாக்கள் உள்ளன.
மனிதன் இந்த கிரகங்களில் குடியேறினால் நிலவுகளுக்கு பஞ்சமே இருக்காது. அதனால் எழுதும் கவிதைகளுக்கும் வெரைட்டி கிடைக்கும். உற்சாகமாக இருக்கும்.
மற்றும் சில பொய் கிரகங்களுக்கு 4 நிலாக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அதையும் சேர்த்தால் 182 நிலாக்கள் உள்ளன. அறிவியல் ஆய்வாளர்கள் இன்னும் பல நிலவுகளை கண்டு பிடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். எல்லாவற்றையும் இங்கிருந்தே பார்க்கும்படி செய்திருந்தால் கவிஞர்களுக்கு நிலாப் பஞ்சமே வந்திருக்காது. பார்க்கலாம்.
Bookmarks