-
8th April 2015, 04:12 PM
#11

........................ஒரு சகாப்தம் நிசப்தமாய்!!...........................
ஒரு நடிகன் இறக்கவில்லை
“நடிப்பு” இறந்து விட்டது!!
மூன்று பக்க வசனத்தை
மூச்சு விடாமல் பேசும் நீ
இன்று
மூச்சு விடாமல்....
உன் புகழை எழுதுவதற்கு
சுவர்கள் தேடிப் போனால்
சீனச் சுவரும்
சின்னதாகத்தான் இருக்கும்
சிங்கமே!!
காலை ஒன்பது மணிக்கு
படப்பிடிப்பு என்றால்
8.30க்கே காத்திருக்கும்
கண்ணியம் உனக்கு!
மரணநிமிஷம் கூட உனக்கு
8.00க்குத்தான் குறிக்கப்பட்டிருக்கும்
நீதான் 7.30க்கே போய்விட்டாய்!!
மரண தண்டனையை எழுதிவிட்டு
பேனா முனையை ஒடித்து விடுவது
நீதிபதிகளின் வழக்கம்!
உன் மரணத்தை எழுதி விட்டு
காலன் தன்
விரலையே
ஒடித்துக் கொண்டிருப்பான்
என்ற சிந்தனைதான் எனக்கும்!!
நீ தூங்குவதைப் போலவே
இறந்திருக்கிறாய் என்றார்கள்.
எனக்கென்னவோ
நீ இறந்ததைப் போலவே
நடித்துக் கொண்டிருக்கிறாய்
என்றே தோன்றியது
எனக்குத் தெரிய
நீ வசனம் பேசாமல் நடித்த
ஒரே நடிப்பு
இந்த இறுதி நடிப்புத் தான்.
நடிகர் திலகமே!
உன் நினைவிடத்தில்
இப்படி எழுதி வைக்கலாம் --
“இந்தியாவின் தேசிய விருது
இங்கே உறங்குகிறது!”.
..........................வித்தகக் கவிஞர் பா.விஜய்!!.
thanks: https://www.facebook.com/photo.php?f...type=1&fref=nf
Last edited by sss; 8th April 2015 at 04:17 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
8th April 2015 04:12 PM
# ADS
Circuit advertisement
Bookmarks