-
10th April 2015, 03:16 AM
#911
Junior Member
Newbie Hubber
சமீபத்தில் எனது மாமா (அத்திம்பேர்) பாலன் மறைந்த போது அவரது நண்பர் எழுதியது."வீட்டுக்கு வாங்கோ என்றார்.மீண்டும் சந்திப்போம் என்றார். அடடா ,ஓர் அழைப்பை ஆயுள் முழுதும் அலட்சிய படுத்தி விட்டோமே என்று இருக்கிறது இப்போது. எல்லோரும் இங்கேதானே இருக்க போறோம் என நினைத்து விட்டேன். அதுதான் வருத்தமாக இருக்கிறது பாலு".
அந்த உயிர் நண்பர் தன,தன்னுடைய எழுத்துக்கள் பட்டி தொட்டியெல்லாம் சேர உதவிய தன நண்பனை காண மறு உலகம் கண்டு விட்டாரோ.??
எனக்கு ஏழு வயதில் பரிச்சயமானவர் ஜெயகாந்தன் ஆனந்த விகடன் மூலம். எனக்கு என்னவோ மொண்ணையான வெகுஜன தமிழ் எழுத்தாளர்களை பிடிக்கவே பிடிக்காது. கல்கி,நா.பார்த்தசாரதி,மு.வ ,ஜெகசிற்பியன்,அகிலன் இவர்கள் ஆகவே ஆகாது. புதுமை பித்தன், லா.ச.ரா,கு.ப.ரா, கு.அழகிரி சாமி, தி.ஜானகிராமன்,கரிச்சான் குஞ்சு,ரா.கி.ரங்கராஜன்,பாக்கியம் ராமசாமி,தேவன்,சாண்டில்யன் ,,இவர்களே என் சிறு வயது முதலான ஆதர்ஷங்கள். (பிஞ்சிலே பழுத்தாயிற்றா என சி.க முறுவலிப்பது புரிகிறது)ஜெயகாந்தன் எழுத்துக்கள் நான் பார்த்த அடிப்படை மனிதர்களோடு பரிச்சயம் தந்ததோடு மட்டுமின்றி ,எனது எழுத்து வேள்விகளுக்கு அஸ்திவாரம் இட்டது. இந்த வகையில் ஜெயகாந்தன் எனக்கொரு ஞான தந்தை.பிறகு அசோக மித்திரன்,நீல.பத்மநாபன்,அம்பை,ஆதவன்,இந்திரா பார்த்தசாரதி,பிரபஞ்சன்,என வேறு திசை கண்டது.
எப்போதுமே எனக்கு பிடித்த முதல் ஐந்து கதைகளாக நான் பட்டியலிடுபவை அசோக மித்திரனின் தண்ணீர், ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம்,தி.ஜா வின் மோகமுள், இந்திரா பார்த்தசாரதியின் திரைகளுக்கு அப்பால்.
அவருடைய ஓடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்ற ப்ராயிட் சித்தாந்தத்தை மூலமாக வைத்த ரிஷி மூலம் அந்த வயதில் என்னை பொட்டில் அறைந்த மனோதத்துவ கதையாகும்.அவருடைய முன்னுரைகள் என்னை மிக பாதித்தவை.
இவர் சிவப்பு சாயத்தில் நின்று அண்ணா,கருணாநிதி முதல், அப்போது படவுலகை சீரழித்து கொண்டிருந்த ,ஏழை மக்களை பொழுது போக்கு என்ற அபினில் ஆழ்த்தி ,அவர்களை தன் நிலையில் இருந்து சுய முனைப்பில் முன்னேற்றி கொள்ள பிரயத்தனம் செய்ய விடாமல், என்னை ஆதரியுங்கள் ,எல்லார் வீட்டிலும் பாலும் தேனும் ஓடும் என்ற ரீதியில் பொய் பிராச்சாரம் நிகழ்த்தி கொண்டிருந்த சில நடிகர்களை மூர்க்கமாக எதிர்த்தார்.
நடிகர்திலகத்தின் மீது நல்ல மதிப்பு கொண்டவர். எந்தவொரு மனிதனும் வாழ்வின் ஏதாவது கணத்தில் சிவாஜி ரசிகனாக இருந்தே தீருவான். அவர் எனது எழுத்துக்களை படித்தால் எனக்கு பெருமை என்று சொன்னார். அதே போல அப்போது மாறி கொண்டிருந்த சிவாஜி நடிப்பு முறையை ,இப்படி வேண்டாமே ,மிதமாக இருக்கலாமே என்று விமர்சனமும் செய்தார்.
இவருடைய மடம் என்று அழைக்க படும் இடத்திற்கு இரு முறை சென்றிருந்தேன் பரீக்ஷா உறுப்பினராக உள்ள போது . அப்போது என் ரசனை அசோக மித்திரனை ஞான தந்தையாக வரித்திருந்த நேரம். கணையாழி,கசட தபற என்று பரிச்சயம் கண்டவுடன் ,ஜெயகாந்தன் இலக்கியத்தில் ரொம்ப ஓவர் ஆக எழுதி ரொம்ப பந்தா பண்ணுகிறார். ஒரு கீழ் ரசனைக்கும், உயர் ரசனைக்கும் கண்ணியாக மட்டுமே இருப்பவர் என கண்டு தெளிந்து விட்டிருந்தேன். 1977 முதலே பெருங்காய டப்பா .பிறகு இரண்டாயிரமாவது ஆரம்பங்களில் ஞான பீடம் பெற்றதும், அகிலன் என்பவருக்கு கொடுத்து அசிங்க பட்ட விருது சிறிதே களங்கம் துடைத்தது. ஆனால் அசோக மித்திரனுக்கு ஞான பீடம் மட்டுமல்ல ,நோபெல் விருதும் கிடைக்க வேண்டும் என்பது எனது அவா.(சிவாஜிக்கு வாழ்நாள் ஆஸ்கர் போல ). உண்மையாகவே சொல்கிறேன். ஆரம்ப காலம் முதல் இன்று வரை நோபெல் பரிசு பெற்ற அத்தனை இலக்கியங்களையும் மூல வடிவில் அல்லது மொழி பெயர்ப்புகளில் படித்தவன் என்ற வகையில் நோபெல் பரிசு பெற தகுதியான ஒரே இந்திய எழுத்தாளர் அசோக மித்திரனே.
இவர் தான் பரிசு பெற்றதற்கு தன்னை கண்டு வாழ்த்த விரும்பிய கலைஞரை அவமான படுத்திய விதமும், பின்னானில் தன வாரிசுகளின் நலனுக்காக வளைந்து கொடுத்து தன் நிலை தாழ்ந்து எல்லோரையும் சங்கட படுத்தியதும் மறக்க விரும்பும் நிகழ்வுகள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எனது மனபூர்வமான கண்ணீர் அஞ்சலி.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th April 2015 03:16 AM
# ADS
Circuit advertisement
-
10th April 2015, 07:48 AM
#912
Senior Member
Devoted Hubber

Originally Posted by
goldstar
அண்ணனின் மிகவும் அழகான படங்களை பதிவிட்டுள்ளீர்கள் சதீஷ் நன்றி நன்றி
தொடருங்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
10th April 2015, 07:50 AM
#913
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Murali Srinivas
ஜேகே என்ற ஜெயகாந்தன்
ஜேகே என்ற ஜெயகாந்தன். தமிழ் இலக்கிய உலகம் என்றுமே மறக்க முடியாத நபர். தமிழ் இலக்கிய செழுமைக்கு அவரது பங்களிப்பு அபாரமானது. யாரும் தொட முடியாத உயரங்களை வெகு இலகுவாக அடைந்தவர். தன்னுடைய அக்கினிப் பிரவேசம் என்ற ஒரே கதையின் மூலம் தமிழ் சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கியவர். 60-களிலும் 70-களிலும் ஒரு மிகப் பெரிய ஆளுமையாக வலம் வந்தவர். ஒரு சிவப்பு சிந்தனையாளனாக தொடக்கத்தில் இருந்தவர் பிறகு காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பெருந்தலைவர் மீதும் அன்னை இந்திரா அவர்களின் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சின் மீதும் நேசம் கொண்டவராகவே வாழ்ந்தார். சோவியத் யூனியன் உடைவதற்கு முன் இந்தியாவில் அதன் கலாச்சார தூதுவராகவே விளங்கிய ஜேகே ரஷ்யாவில் பெரிதும் மதிக்கப்பட்ட இந்திய எழுத்தாளர்களில் ஒருவர். அதன் காரணமாகவே சென்னையில் இயங்கும் ரஷ்ய கலாச்சார மய்யத்தோடு இறுதிவரை நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
60-களில் உன்னைப் போல் ஒருவன் மற்றும் யாருக்காக அழுதான் போன்ற தன் நாவல்களை திரைப்படமாக்கினார். ஆனால் அவை வெற்றி பெறாமல் போனபோது திரையுலகை விட்டு விலகி இருந்த அவர் 1977-ல் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் மூலமாக மீண்டும் உள்ளே நுழைந்தார். பிறகு 1978-ல் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படமும் வெளி வந்தது. நடிகர் திலகத்தின் நடிப்பின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவர் ஒரு காலகட்டத்தில் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தார். ஒரு படைப்பாளிக்கே உரிய ஈகோவினால் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடிகர் திலகம் நடிக்க வேண்டிய வேடத்தில் பிடிவாதமாக ஸ்ரீகாந்தை நடிக்க வைத்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை பின்னாட்களில் அவர் வருத்ததுடன் நினைவு கூர்ந்தார்.
என்னவென்றால், படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இயக்குனருக்கு தெரிந்த ஒரு குடும்பம் ஷூட்டிங் பார்க்க வந்திருக்கிறார்கள். ஜேகேயும் அங்கே இருந்திருக்கிறார். ஸ்ரீகாந்த் லட்சுமி சம்மந்தப்பட்ட ஒரு உணர்ச்சிமயமான காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது. இயக்குனர் பீம்சிங் எதிர்பார்க்கும் output கொடுக்க ஸ்ரீகாந்த் சிரமப்பட [அதே நேரத்தில் லட்சுமி அனாயாசமாக செய்கிறார்] ஷூட்டிங் பார்க்க வந்த குடுமபத்தில் ஒருவர் இதே இடத்தில சிவாஜியாக இருந்திருந்தால் பிச்சு உதறியிருப்பார் என்று கமண்ட் அடிக்க சற்று தள்ளி உட்கார்ந்திருந்த ஜேகேயின் காதுகளில் அது விழுந்து விடுகிறது. அவரின் ஈகோ துள்ளி எழ அந்த குடும்பத்தினரைப் பார்த்து சத்தம் போட்டு கத்தி விடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் செட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர்.
பல வருடங்களுக்கு பிறகு இதை நினைவு கூர்ந்த ஜேகே அன்று தான் நடந்துக் கொண்டது முற்றிலும் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறார். அந்த நபர் சொன்னது உண்மைதான் என்றும் அந்த வேடத்தில் சிவாஜி நடித்திருந்தால் படம் இன்னும் பல உயரங்களை தொட்டிருக்கும் என்ற உண்மையை பதிவு செய்கிறார். இப்போது அந்தப் படத்தை பார்க்கும்போது அந்த உண்மை பளிச்சென்று தெரிகிறது என்பதையும் மறைக்காமல் சொன்னார். பீம்சிங் என்ற இயக்குனர் எத்தகைய திறமை வாய்ந்தவர் என்பதை அடுத்த தலைமுறைக்கு சொன்ன படம் என்ற முறையிலும் லட்சுமி என்ற நடிகையின் அபார திறமைக்கு தீனி போட்ட முறையிலும் அதன் காரணமாக அவருக்கு சிறந்த நடிக்கைக்கான தேசிய விருது பெற்று தந்த படம் என்ற முறையிலும் தமிழ் சினிமாவில் ஒரு யதார்த்த படத்தை கொடுத்து வெற்றி பெற வைக்க முடியம் என்பதை நிரூபித்த வகையிலும் சில நேரங்களில் சில மனிதர்கள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது.
என்னைப் பொறுத்தவரை சமூகத்தில் அடிமட்ட நிலையில் வாழும் மனிதர்களின் மன ஓட்டத்தை சினிமா என்ற ஊடகம் அவர்களை எப்படி பாதிக்கிறது குறிப்பாக பெண்களின் மனதை குறிப்பாக ஆண்களோடு ஏற்படும் உறவை எப்படி பார்க்கிறார்கள் என்பதை மனோதத்துவ முறையில் அலசிய வகையில் சினிமாவிற்கு போன சித்தாளு மிக முக்கியமான ஒன்று. அதே போல் 1976-ல் வந்த ஜய ஜய சங்கரா குறு நாவல் ஆன்மிகத்தை குறிப்பாக சங்கர மடத்தின் செயல்பாடுகளை உள்ளடக்கிய கவனம் ஈர்த்த ஒன்று. ஆனால் இரண்டாவது சராசரி வாசகனுக்கு சற்றே அன்னியப்பட்ட நடையில் அமைந்திருந்து என்றே சொல்ல வேண்டும்.
சிவப்பு சிந்தனையாளர்களுக்கு அவர்கள் மறைந்து விட்டால் கூட ஆன்மா சாந்தியடையட்டும் என்ற சம்பிரதாய வார்த்தை ஒரு ஒவ்வாமையாகவே தோன்றும். ஆகையால் தமிழ் இலக்கிய தலையாய முன்னோடிகளில் ஒருவரான ஜேகே என்ற ஜெயகாந்தனுக்கு லால் சலாம்!
அன்புடன்
வாதத்திற்கோ தர்க்கத்துக்காகவோ அல்ல
ஜெயகாந்தன் பெண்களின் கற்பு விடயத்தில்
இழிவான கருத்து எழுதியதாக ஞாபகம்
அன்னாரின் மறைவுக்கு எனது இரங்கல்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
10th April 2015, 07:52 AM
#914
Senior Member
Devoted Hubber

Originally Posted by
senthilvel
பறவைகள் பலவிதம
ஒவ்வொன்றும் ஒருவிதம்
(மன்னனின்)
தோற்றங்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
காணக் கண் கோடி வேணும்
நண்பர் செந்தில்வேல் அண்ணனின்
அழகான தோற்றங்களை பதித்த தங்களுக்கு
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
தொடருங்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th April 2015, 10:49 AM
#915
Junior Member
Newbie Hubber
சிலருக்கு ரசனை குறைவு, மந்த தன்மை இருக்கும் என எதிர்பார்த்ததே. ஆனால் தமிழ் திறமையாளர்களை கண்டாலே அலர்ஜி. ஏனென்று தெரிவதில்லை.ஜெயகாந்தனை பற்றி சொல்ல விஷயமா இல்லை?
தன் புகழ் ஒன்றுக்காக , சங்கத்தமிழும், திருக்குறளும் ,கம்பனும் ,பாரதியும் பிறந்த மண்ணில் திருடாதே,தூங்காதே, ஏமாற்றாதே (பண்ணியதேன்னவோ அதைத்தான்) என்று அரிச்சுவடி பாடல்களை பாடி மயக்கத்தில் ஆழ்த்தி,நானிருக்கிறேன் நீ எதுவும் செய்ய வேண்டாம் என சோம்பேறிகளாக்கி, ஓசி பழக்கத்தை கொடுத்து பிச்சை பழக்கமும் செய்து ,முன்னேற விடாமல் அடித்தவர்களையே பிடிக்கிறது.
காங்க்ரஸ் இருந்து திராவிடம் தாவி,இடையில் காமராஜருக்கு தாவ முனைந்து, பதவிக்காக திராவிட கட்சியை கூறு போட்டு ,இந்திராவிடம் தமிழகத்தை அடகு வைத்தது கொள்கை பிடிப்பா?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th April 2015, 12:08 PM
#916
Senior Member
Seasoned Hubber
ஜெயகாந்தன்

(சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு நூலில் பதிவு செய்யப்பட்டது)
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
10th April 2015, 12:23 PM
#917
ஜெயகாந்தன் பற்றிய என்னுடைய பதிவை படித்து விட்டு இரண்டு மூன்று அழைப்புகள். நடிகர் திலகம் - ஜெயகாந்தன் பற்றி சொல்லும்போது காவல் தெய்வம் பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்களே என்று கேட்டார்கள். நான் சொன்னேன். வேண்டுமென்றுதான் விட்டு விட்டேன். காரணம் அதைப் பற்றி சிறப்பாக எழுத வாசு, ராகவேந்தர் சார், கார்த்திக் போன்றவர்கள் இருக்கிறார்கள். முன்பொருமுறை வாசு படத்தின் உயிர்நாடியான காட்சியைப் பற்றி மிக அற்புதமாக எழுதியிருந்தார். ஆகவே அவர்கள் வந்து அந்தப் படத்தைப் பற்றி எழுதட்டும் என்பதற்காகவே அப்படி செய்தேன் என்று சொன்னேன். ராகவேந்தர் சார் நிச்சயம் எழுதுவார். அவரது கம்ப்யூட்டர் சற்றே பழுதுப்பட்டிருப்பதால் அவரால் கடந்த 3, 4 நாட்களாக எழுத முடியவில்லை. வாசுவும் கார்த்திக்கும் வரவேண்டும்.
அன்புடன்
கோபால்,
உங்களுக்கே உரித்தான பாணியில் ஜெயகாந்தன் பற்றிய பதிவு நன்று!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th April 2015, 12:56 PM
#918
Junior Member
Veteran Hubber

Originally Posted by
gopal,s.
சிலருக்கு ரசனை குறைவு, மந்த தன்மை இருக்கும் என எதிர்பார்த்ததே. ஆனால் தமிழ் திறமையாளர்களை கண்டாலே அலர்ஜி. ஏனென்று தெரிவதில்லை.ஜெயகாந்தனை பற்றி சொல்ல விஷயமா இல்லை?
தன் புகழ் ஒன்றுக்காக , சங்கத்தமிழும், திருக்குறளும் ,கம்பனும் ,பாரதியும் பிறந்த மண்ணில் திருடாதே,தூங்காதே, ஏமாற்றாதே (பண்ணியதேன்னவோ அதைத்தான்) என்று அரிச்சுவடி பாடல்களை பாடி மயக்கத்தில் ஆழ்த்தி,நானிருக்கிறேன் நீ எதுவும் செய்ய வேண்டாம் என சோம்பேறிகளாக்கி, ஓசி பழக்கத்தை கொடுத்து பிச்சை பழக்கமும் செய்து ,முன்னேற விடாமல் அடித்தவர்களையே பிடிக்கிறது.
காங்க்ரஸ் இருந்து திராவிடம் தாவி,இடையில் காமராஜருக்கு தாவ முனைந்து, பதவிக்காக திராவிட கட்சியை கூறு போட்டு ,இந்திராவிடம் தமிழகத்தை அடகு வைத்தது கொள்கை பிடிப்பா?
திரு. கோபால் அவர்களுக்கு.
ஜெயகாந்தன் இறந்து விட்டால் அவரை நினைவு கூர்ந்து செய்திகள் பதிவிடுவதை விட்டு விட்டு, தேவையில்லாமல், வாந்தி எடுத்துள்ளீர்கள்.
முதலில் உங்கள் வாயில் "dettol' ஊற்றி சுத்தப்படுத்தி கொள்ளுங்கள்.
எங்கள் புரட்சித்தலைவரை சீண்டும் விதத்தில் உங்கள் பதிவுகள் இனி இருக்குமாயின், இதே திரியில் ஒருவர் பின் ஒருவராக வந்து தக்க பதிலடியை கொடுப்போம் என எச்சரிக்கிறோம்.
உங்களுக்கு மட்டும்தான் எழுத தெரியும் என்று நினைத்து கொண்டு தங்கள் அதி மேதாவி தனத்தை காட்டாதீர்கள்.
எழுத்து நாகரீகம் கருதி இத்துடன் முடித்து கொள்கிறேன்.
Last edited by makkal thilagam mgr; 10th April 2015 at 12:59 PM.
-
10th April 2015, 02:49 PM
#919
Junior Member
Diamond Hubber
இன்றுமுதல்
கோவை டிலைட்டில்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th April 2015, 05:48 PM
#920
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks