-
15th April 2015, 07:56 AM
#11
Junior Member
Newbie Hubber

Originally Posted by
joe
முரளி சார்,
இது உலக மகா சப்பைக்கட்டு ..rks என்னும் நபர் இங்கு செய்யும் வீம்புக்கான திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சாரம் உங்களுக்கு எந்த வகையிலும் உறுத்தவில்லை என்றே தெரிகிறது .. யாரும் தங்கள் தனிப்பட்ட திராவிட இயக்க வன்மத்தை கொட்ட இது இடமல்ல என திரும்பத் திரும்ப நான் சொல்லுவதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாதது போலவே உங்கள் சப்பைக்கட்டுகள் இருக்கின்றன.
திராவிட இயக்கத்தை விமர்சிப்பது வேறு , நடிகர் திலகம் திரியை திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சார மேடையாக உபயோகிபது வேறு .. இதை சுட்டிக்காட்டினால் மிக வசதியாக கடந்து போய் விட்டு நீங்கள் என்ன நியாயம் பேசினாலும் அது உங்கள் தகுதிக்கு குறைவே என வருத்ததோடு சொல்லிக்கொள்கிறேன்.
Rks போன்ற கொஞ்சம் கூட தகுதியற்ற நபருக்கு நீங்கள் அதிகமாக இடம் கொடுக்கிறீர்கள் . அவர் இங்கே தன் சொந்த அரசியல் பிரச்சாரத்தை செய்வதாகவே நான் உறுதியாக நம்புகிறேன் .. அது குறித்து சுட்டிக்காட்டப்பட்டாலும் நீங்கள் கண்டுகொள்ள மறுப்பதாகவே நான் நினைக்கிறேன்.
சிவாஜிக்கு சம்பந்தமே இல்லாத நிகழ்வுகளை பதிந்து திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய இந்த திரியில் இடமுண்டு என்றால் , மன்னிக்கவும் ..இது அநியாயம் .
ஜோ,
உங்களுக்கு தெரியும்.என்று நம்புகிறேன். எனக்கு பெரியார்,அண்ணா, கலைஞர் இவர்களின் மீது மட்டற்ற பற்றும் அபிமானமும் உண்டு. எனது தனிப்பட்ட கருத்துக்கள் என்பது வேறு.
சிவாஜி திரியில் அரசியல் என்பது பொதுவான அரசியல் நடப்பும், அதன் தாக்கமும் குறித்த விமரிசனங்கள் அல்ல.
எல்லா அரசியல் கட்சிகளும் அவர் உழைப்பையும் ,நேரத்தையும் (சில நேரம் பணத்தையும் )உறிஞ்சி, எதையும் எதிர்பாராமல் பணியாற்றிய அந்த நேர்மையான ,கபடம் அறியாத வெகுளி தொண்டர்களின் இதய தலைவனை,அவர்கள் நடத்திய விதம் குறித்த பார்வை. 60 களில் ,திராவிட இயக்கம் அவருக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட வன்முறை,துர்பிரசாரம்,பதவிக்கு வந்த பின் அவருக்கெதிரான அரசு முறைகேடான மலின போக்கு இவற்றை நாங்கள் விமரிசிக்காமல் இருக்க முடியாது.
பெருந்தலைவர் ,அவரின் மீது அளவற்ற அன்பு கொண்டிருப்பினும் ,தனது வாரிசாக அவரை (யாரையுமே குறிப்பிடவில்லை) குறிப்பிடாதது (குறியீடாக அவர் இறகு முன் சிவாஜி இல்லம் சென்று வாழ்த்தினார்)ஒரு சாபக்கேடே.
இந்திராவின் அகால மரணம், மூப்பனாரின் மித்திர பேத துரோகம், பிறகு கூட்டணி என்ற பெயரில் அவரிடம் பண மோசடி இவையெல்லாம் ஒவ்வொரு ரசிகனுக்கும் கொதிப்பேற்படுத்தும்.
மற்றபடி அரசியல் இங்கு நுழைவதில்லை.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th April 2015 07:56 AM
# ADS
Circuit advertisement
Bookmarks