-
15th April 2015, 04:09 PM
#1061
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகம் திரிக்கு வந்து வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் திரு.ஆர்.கே.எஸ்., திரு.சுந்தரராஜன், திரு.சிவா ஆகியோருக்கு நன்றி. நடிகர் திலகம் திரியில் எனக்கு வாழ்த்து தெரிவித்த திரு. சிவா, திரு.ஹரீஷ், நேற்று எனது பதிவுக்கு தேங்க்ஸ் போட்ட திரு.சிவாஜி செந்தில், திரு.விசிஎஸ்2107, மரியாதைக்குரிய பெரியவர் திரு.சுப்ரமணியம் ராமஜெயம் மற்றும் மானசீகமாக வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
15th April 2015 04:09 PM
# ADS
Circuit advertisement
-
15th April 2015, 04:11 PM
#1062
Junior Member
Seasoned Hubber
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,
தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. என்னைப் போல எழுத்துத் திறமை உங்களுக்கு இல்லாததும் காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளீர்கள். உண்மையில் உங்கள் எழுத்துக்களை ரசிப்பவன் நான். இங்குள்ள எல்லாருமே ஒவ்வொரு வகையில் தனித்திறமையுடன் இருப்பது எனக்குத் தெரியும். திரு.சிவாஜி செந்தில் அவர்களின் வித்தியாசமான கான்செப்ட்களை ரசிக்கிறேன்.
உங்களைப் போலவே நானும் நட்புறவை தொடர விரும்புகிறேன். எனவே, வளர்க்க விரும்பவில்லை. திராவிட இயக்கங்கள் தீமையே செய்தன என்று நாங்கள் நினைக்கக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது அல்லவா? என்று கூறியிருக்கிறீர்கள். நிச்சயமாக உங்கள் நம்பிக்கையையும் உணர்வுகளையும் மதிக்கிறோம்.
கரண்ட் அஃபேர்ஸ் பிரிவில் அரசியல் குறித்து ஆரோக்கியமான விவாதம் நடத்த காலமும் நேரமும் கூடி வரட்டும் என்று கூறியிருக்கிறீர்கள். அந்த காலமும் நேரமும் விரைவில் கூடி வரவேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
15th April 2015, 04:13 PM
#1063
Junior Member
Seasoned Hubber
திரு.ஆர்.கே.எஸ்.,
நேற்று எங்கள் திரிக்கு வந்து தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களும் மதுரையில் அடிமைப்பெண் படத்தில் வசூல் விவரங்களையும் தெரிவித்தீர்கள். நாங்களும் நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்தோம். இப்படி நல்ல மனமும் பரந்த மனப்பான்மையும் கொண்ட உங்களின் அறிவும் ஆற்றலும் திராவிட இயக்கத்தை தாக்கத்தானா பயன்பட வேண்டும்?
திராவிட இயக்கத்துக்கு உழைத்ததை விட காங்கிரசுக்குத்தான் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் அதிகம் உழைத்துள்ளார். ஆனால், சிவாஜி என்ற பட்டம் சூட்டியது உட்பட திராவிட இயக்கம்தான் அவருக்கு அதிகம் செய்தது. அவரது உழைப்பை வாங்கிக் கொண்ட காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லிவிடலாம்.
சிவாஜி அவர்களை விடுங்கள். காங்கிரஸ் நூற்றாண்டு விழாவையொட்டி அகில இந்திய காங்கிரஸ் சார்பில் மலர் வெளியிடப்பட்டது. இங்குள்ள பலருக்கும் நினைவிருக்கும். அதில் பெருந்தலைவர் காமராஜர் போலவே தோற்றமளிக்கும் ஆந்திர காங்கிரஸ் தலைவராக இருந்த பட்டாபி சீத்தாராமையாவின் படத்தை போட்டு இவர்தான் காமராஜர் என்று போட்டு, நாடே சிரித்ததே. இக்கட்டான நிலையில், இரண்டு பிரதமர்களை தேர்ந்தெடுத்து, காங்கிரசை காப்பாற்றி, நாட்டுக்கு வழிகாட்டி கிங் மேக்கராக திகழ்ந்த பச்சைத் தமிழனுக்கு இந்த நிலையா? என்று உண்மைத் தமிழர்கள் கொதித்தோமே? இதுதான் காங்கிரஸ் மகாத்மியம்.
நீங்களும் காங்கிரஸ்காரர் அல்ல என்று கூறியிருக்கிறீர்கள். ஏற்கிறேன். அதற்காக, காங்கிரசைத் தாக்க வேண்டும் என்று கூறவில்லை. திராவிட இயக்கங்களையும் தாக்க வேண்டாமே?
உங்களுக்கு நன்கு தெரிந்த உதாரணத்தையே சொல்கிறேனே. சவாலே சமாளி படத்தில் நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்கள் பாடும் நிலவைப் பார்த்து வானம் சொன்னது.. பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். அதில் ஆலயம் செல்வோம் அங்கே அனுமதியில்லை, நீ அந்தக் கூட்டமே இதில் அதிசயம் இல்லை........ என்று பாடுவாரே.அப்படி ஆலயம் செல்லக்கூட அனுமதி இல்லாத காலம் இருந்தது. (மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் காங்கிரஸ் தலைவராக இருந்த வைத்தியநாத அய்யர் தலைமையிலான ஹரிஜன ஆலய பிரவேசம் கூட திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் பெரியாரின் வைக்கம் போராட்டத்தால் நடந்ததுதான்)
இதை விடக் கொடுமை தென் மாவட்டங்களில் உயர்குடிப் பெண்களைத் தவிர மற்ற பெண்கள் மாராப்பு அணிய தடை விதிக்கப்பட்டு அதற்காக தோள் சீலைக் கலகம் நடந்த வரலாறெல்லாம் உண்டு.
இப்படி, மனிதனாகக் கூட மதிக்கப்படாமல் உரிமைகள் மறுக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு கிடந்த தமிழ்ச் சாதியின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட காரணமாக இருந்து தமிழர்களை தலைநிமிரச் செய்த திராவிட இயக்கத்தை, தமிழனுக்கு அறிவையும் மான உணர்வையும் ஊட்டி வளர்த்து, திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு சிவாஜி பட்டத்தையும் வழங்கி மகிழ்ந்த அய்யா பெரியாரையும் திராவிட இயக்கத் தலைவர்களையும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று நமது நட்பின் பெயரால் அன்போடு கோருகிறேன். ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th April 2015, 04:15 PM
#1064
Junior Member
Seasoned Hubber
நடிகர் திலகம் டாட்.காம் தொடங்கப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க காரணமாக விளங்கும் பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாளர் திரு.ராகவேந்திரா சாருக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 3 Thanks, 1 Likes
-
15th April 2015, 05:23 PM
#1065
Junior Member
Newbie Hubber
Ragavendhar Sir,
Every true worshipper of Shivaji,should be indebted to your great selfless service. Accept my Sashtanga Namaskaram and bless me.
-
15th April 2015, 05:43 PM
#1066
Junior Member
Diamond Hubber
GREETINGS
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th April 2015, 05:52 PM
#1067
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை, திருவொற்றியூர் தொகுதி் சார்பில், சென்னை, திருவொற்றியூரில் தண்ணீர்ப்பந்தல் திறப்பு விழா நடைபெற்றது

-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th April 2015, 05:56 PM
#1068
Junior Member
Platinum Hubber
Dear Ragavendran sir
Congratulations.
-
15th April 2015, 07:20 PM
#1069
Junior Member
Veteran Hubber
மக்கள் திலகம் திரிக்கு வந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த சகோதரர்கள் திருவாளர்கள் ரவி கிரண் சூரியா, சுந்தரராஜன், சிவா ஆகியோருக்கு நன்றி !
நடிகர் திலகம் டாட்.காம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக எட்டு ஆண்டுகள் நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க்கும் இத்தருணத்தில், அனைவரையும் ஒருங்கிணைத்து, நல்ல வழி காட்டியாக திகழும் சகோதரர் திரு.ராகவேந்திரா அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் கலந்த வாழ்த்துக்கள்.
-
15th April 2015, 09:38 PM
#1070
Junior Member
Veteran Hubber

Originally Posted by
KALAIVENTHAN
திரு.ஆர்.கே.எஸ்.,
உங்களுக்கு நன்கு தெரிந்த உதாரணத்தையே சொல்கிறேனே. சவாலே சமாளி படத்தில் நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்கள் பாடும் ‘நிலவைப் பார்த்து வானம் சொன்னது..’ பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். அதில் ‘ஆலயம் செல்வோம் அங்கே அனுமதியில்லை, நீ அந்தக் கூட்டமே இதில் அதிசயம் இல்லை........’ என்று பாடுவாரே.அப்படி ஆலயம் செல்லக்கூட அனுமதி இல்லாத காலம் இருந்தது. (மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் காங்கிரஸ் தலைவராக இருந்த வைத்தியநாத அய்யர் தலைமையிலான ஹரிஜன ஆலய பிரவேசம் கூட திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் பெரியாரின் வைக்கம் போராட்டத்தால் நடந்ததுதான்)
இதை விடக் கொடுமை தென் மாவட்டங்களில் உயர்குடிப் பெண்களைத் தவிர மற்ற பெண்கள் மாராப்பு அணிய தடை விதிக்கப்பட்டு அதற்காக தோள் சீலைக் கலகம் நடந்த வரலாறெல்லாம் உண்டு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இனிய நண்பர் திரு கலைவேந்தன்
பதிவை படித்தேன். புரிந்துகொண்டேன்.,தவறாக புரிந்துவைத்துள்ளீர்கள் என்று !
திராவிடம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அதை இரண்டு கைகளை கொண்டு வரவேற்கும் முதல் ஆள் நான் ஆகதான் இருப்பேன்.
ஆனால் திராவிடம் திராவிடமாக அல்லாமால் பார்பதற்கு தண்ணீர்போல தெரியும் திராவகமாக இருக்கும்பட்சத்தில் கட்சிகளின் திராவிடத்தில் மயங்குபவன் நானாக இருக்கமாட்டேன்.
கட்சிகள் சொன்னது செய்தது செய்வது செய்ய இருப்பது இவை அனைத்தும் திராவகமே அல்லாமல் திராவிடம் அல்ல. நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட திராவிட கலாசாரம் தான் என்னுடைய பதிவு சம்பந்தப்பட்டது. கொடுத்த உதாரணங்கள் அனைத்தும் திராவிடம் பொய்யாக எப்படிஎல்லாம் தவறாக பயன்படுத்தப்பட்டது என்பதை புரியவைக்கதான் !
ஒரு குறிப்பிட்ட ஜாதி...ஆரியர் ...இவர்கள் மட்டுமே ஜாதி பேதம் பார்த்தனர் ...அடித்தட்டு மக்களை நசுக்கினர், பிசுக்கினர் என்று அழகான தமிழில் அமுது படித்தால் அது உண்மை என்று ஆகிவிடுமா சார் ? தமிழகத்தில் உள்ள தேவர் இனம் என்ன செய்தது..என்ன செய்துகொண்டிருந்தது...என்ன செய்கிறது அடிமட்ட மக்களை ? இதனை ஏன் திராவிடம் விளம்புவோர் அவர்களை இதில் சேர்க்க மறுக்கின்றனர் என்பதே எனது கேள்வி..காரணம் பயம்...சொன்னால் அடுத்த நிமிடம் நாக்கு அறுந்துவிடும் ...இதை ஆரியர் செய்வரோ ? மாட்டார் ! ஆகையால் அவர்களை பழிப்பது (உதாரணம் : பாம்பையும் பாப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி ..என்ற வன்முறையை தூண்டும் வசனம் ) காரணம் ஆரியர் திருப்பி அடிக்கமாட்டார் என்று ஒரு தைரியம்...மேலும் அவர்கள் அன்று செய்ததற்கு இன்று நாங்கள் பதில் சொல்கிறோம் என்று சால்ஜாப்பு ! இதெல்லாம் ஒரு திராவிடம்....!
நடிகர் திலகத்தை ஏமாற்றி...முதுகில் சமயம் கிடைக்கும்போது குத்தி...CHARACTER ASSASINATION முடிந்தவரையில் செய்தது திராவிட தலைவர்கள் தான் ! அதில் மாற்றுகருத்து இருக்க முடியவே முடியாது...உதாரணங்கள் ஆயிரம் புனையலாம்....எனது வாதம் அதுவல்ல !
நடிகர் திலகத்தின் ஆராதகன் என்று கூறும்போது உண்மையான ஆராதனையாக இருக்கவேண்டும் ! அவரை விட ஒருபடி மேலாக தாய் தந்தையார் மற்றும் குருவை தவிர யாரும் இருக்கலாகாது.
அதே நடிகர் திலகம் என் மகன் திரைப்படத்தில் நீங்கள் அத்தனை பெரும் உத்தமர் தான சொல்லுங்கள் என்று ஒரு பாடலுக்கு அபிநயம் செய்வார். எனக்கு அந்த பாடல் மிகவும் பிடித்த ஒன்றாகும்....காரணம் அனைவருக்கும் தெரியும் புரியும்.....அதில் வரும் வரிகள் - சதிகார கூட்டம் ஒன்று சபையேற கண்டேன் தவறென்று என்னை சொல்லும் பரிதாபம் கண்டேன்...ஊழல் செய்பவன் யோகியன்போலே ஊரை ஏய்ப்பவன் உத்தமர் போலே காண்கின்றார்..என்றும்...
சட்டத்தின் பின்னல் நின்று சதிராடும் கூட்டம் .....தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்...என்றைக்கும் மேல் இடத்தில் இவர் மீது நோட்டம்..இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்......பலநாள் திருடன் ஒரு நாள் சிறையில் ....பாவம் செய்தவன் தலைமுறை வரையில் பார்கின்றேன் என்ற வரிகளும் வரும்.....தீர்கதருசி போல நடிகர் திலகம் பாடி நடித்தது பல தருணங்களில் நடந்தேறியுள்ளது !
திராவிட கட்சிகளின் ஊழல் பற்றியோ...அதாவது 2G ...இரண்டு ஏக்கர் திட்டம்...சமீபத்திய கலாசார சீரழிவு செய்கை தாலி அகற்றல் மற்றும் பல விஷயங்களை நான் இங்கு உரைக்கவில்லை...
நடிகர் திலகத்தை ஒரு படி இறக்கும் கனவான்களை போலி திராவிடத்தை அந்த போலி திராவிட அரசியல்வாதிகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் வகையில் நடிகர் திலகம் மீது அஸ்திரம் பாய்சுபவர்களைதான் நான் பதில் பதிவு செய்கிறேன்..அவர்களுக்கு உறுத்துகிறது...காரணம் குற்றமுள்ள நெஞ்சு குருகுருக்கதான் செய்யும்.
உங்கள் பதிவையே எடுத்துக்கொள்ளுங்கள் ...நடிகர் திலகம் அவர்களை நீங்கள் பாராட்டிய பதிவுகள் எதற்கும் திரு கோபால் இதுவரை நன்றியோ அல்லது minimum LIKE ஒ இதுவரை போட்டு நான் பார்த்ததில்லை. ஆனால் பெரியார், கலைஞர் இவர்களை சப்போர்ட் செய்வதுபோல எழுதியவுடன்...நன்றி உறைகிறார் !
நான் அதை தவறு என்று சொல்லவில்லை....இவர் நடிகர் திலகம் பற்றி போடும் வேஷத்தை கலைக்கவே இந்த உதாரணம்...
காரணம், நடிகர் திலகத்தை விட ஒரு படி உயரத்தில் நடிகர் திலகத்திற்கு இழைக்கப்பட்ட திராவிட துரோகத்தை மறந்து இவர் திராவிடம் தூக்குகிறார்...என்பதை புரியவைக்க இதை சொல்கிறேன்..!
நிச்சயமாக நீங்கள் நட்பின்பால் கேட்டுள்ளதால் நானாக இதுவரை எப்படி எதுவும் துவக்காமல் இருந்தேனோ அதே போல எப்போதும் இருப்பேன். இது எனது வாக்கு.
ஆனால், நடிகர் திலகத்தை பற்றி தேவையில்லாமல் திரு கோபால் விமர்சனம் செய்யும் பட்சத்தில் ..நானும் திராவிட அநியாய விளக்கவுரை நிறுத்தமாட்டேன் என்று மட்டும் தங்களுக்கு நான் தெரிவித்துகொள்கிறேன்.
REGARDS,
RKS
Last edited by RavikiranSurya; 15th April 2015 at 09:46 PM.
Bookmarks