-
19th April 2015, 05:36 PM
#1151
Junior Member
Seasoned Hubber
சிரித்து வாழ வேண்டும்
கலைஞர் கருணாநிதி அவர்களைப் பார்க்க அவரது வீட்டுக்கு திரு.சிவாஜி கணேசன் அவர்களும் திரு.வி.என்.சிதம்பரம் அவர்களும் சென்றுள்ளனர். திரு.சிதம்பரம் அவர்களைப் பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. (சென்னை கமலா தியேட்டர் உரிமையாளர். செட்டிநாட்டின் ராங்கியம் என்ற ஊரைச் சேர்ந்தவர் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் நெருங்கிய நண்பர். புரட்சித் தலைவருக்கும் நண்பர். புரட்சித் தலைவரால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காராக நியமிக்கப்பட்டவர் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும்.)
அப்படி, திரு.சிவாஜி கணேசன் அவர்களும் திரு.சிதம்பரமும் கலைஞர் கருணாநிதி அவர்களை பார்க்க அவரது வீட்டுக்கு போனபோது அங்கே உலகப் புகழ் பெற்ற நரம்பியல் நிபுணரான மறைந்த டாக்டர் திரு.ராமமூர்த்தி அவர்களும் இருந்துள்ளார். அவர் திரு.கருணாநிதி அவர்களுக்கு நெருங்கிய நண்பர். (திரு.ராமமூர்த்தி அவர்களை உலகப் புகழ் பெற்ற என்று நான் கூறுவதற்கு காரணம் உண்டு. புரட்சித் தலைவர் 1984-ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது ஜப்பானில் இருந்து டாக்டர் கானு என்ற நிபுணரை வரவழைத்தனர். அவர் வந்து பரிசோதித்து விட்டு, என்னை ஏன் அழைத்தீர்கள்? இங்கேயே திரு.ராமமூர்த்தி இருக்கிறாரே? என்று கேட்டார். அந்த அளவுக்கு ஜப்பானில் உள்ள டாக்டர் கானுவுக்கு திரு.ராமமூர்த்தியின் புகழ் எட்டியுள்ளது. பின்னர், அமெரிக்காவில் புரட்சித் தலைவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது கானுவும் அங்கு சென்று சிகிச்சை அளித்தார். புரட்சித் தலைவர் உடல் நலம் பெற்று திரும்பியபின், கானுவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு புரட்சித்தலைவர் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். அந்தப் படம் கூட தலைவர் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.)
விஷயத்துக்கு வருகிறேன். கலைஞர் கருணாநிதி வீட்டில் எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும்போது திரு.சிவாஜி கணேசன் அவர்கள் திரு.ராமமூர்த்தியைப் பார்த்து, ‘‘நான் நடுத்தர உயரம். மூனா கானா (கலைஞரை அவர் எப்போதும் இப்படித்தான் கூப்பிடுவார்) கொஞ்சம் குள்ளம். சீனாதானா (திரு.சிதம்பரம்) எங்களை விட உயரம். நீளமான கால்கள் உயரத்துக்கு காரணம். கால்களின் நீளம் எந்த அளவு இருக்க வேண்டும்?’’ என்று கேட்டுள்ளார்.
அதற்குள் திரு.கருணாநிதி அவர்கள் குறுக்கிட்டு, ‘இடுப்பில் இருந்து தரையைத் தொடும் அளவுக்கு இருக்க வேண்டும்’’ என்று கூறிய பதிலால், நம்மைப் போலவே அங்கும் குபீர் சிரிப்பு எழுந்துள்ளது.
பின்னர், சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு திரு.ராமமூர்த்தி அவர்கள், தான் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும் அங்கு போய் ‘‘தலையை காட்டி விட்டு வருகிறேன்’’ என்றும் கூறி விடை பெற்றிருக்கிறார்.
அப்போது திரு.கருணாநிதி அவர்கள் கேட்ட கேள்வி, ...‘‘ஏய்யா, ஊர்ல உள்ளவனெல்லாம் உன்கிட்ட தலையை காட்டுறான். (நரம்பியல் நிபுணர் என்பதால்) நீ எங்கே போய் தலையை காட்டப் போறே?’’
இதைக் கேட்டு திகைப்புடன் சிரித்தபடி நின்ற திரு.ராமமூர்த்தியை பார்த்து கையை நீட்டியபடி திரு.சிவாஜி கணேசன் மனம் விட்டு சிரித்தாராம்.......... துயரை மறந்து சிரிக்கும் திரு.கோபாலையும், கருத்து வேறுபாடுகளை கரைத்துவிட்டு சிரிக்கும் நண்பர்கள் திரு.ஜோ, திரு.ஆர்.கே.எஸ்.சையும் போலே.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
19th April 2015 05:36 PM
# ADS
Circuit advertisement
-
19th April 2015, 05:44 PM
#1152
Junior Member
Diamond Hubber
[
பீரங்கிகள் இருக்கின்றனவாம்.
பீரங்கிகள்
மன்னிப்பும் கேட்கட்டுமா. அம்மா?
ஒரு வேளை சாப்படலேன்னா உசுரா போயிடும்?
கை வீசம்மா கைவீசு!
அதத்தான எதிர்பார்க்கிறா.நடக்காதுடி. நடக்காது
இல்லை இல்லை அறவே மறந்து விட வேண்டிய விஷயம்
சிவம் தான் பெரிது
நான் எப்பவுமே பாரிஸ்டர்தான்
என் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு தோட்டா
தமிழ்நாட்டின் முதல்குரலே நன்றாயிருக்கிறதே!
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
இது நீண்டு கொண்டே போகும் வரிசை
ஒரு வரி வசனங்கள்தான்.அதை அவர் பேசி காவியம் ஆக்கி விட்டார்
சில வசனங்களில் அந்த கதாபாத்திரத்தின் குணத்தையேஅந்த ஒரு வரியில் உணர்த்தியிருப்பார்.உதாரணம்:
"நான் எப்பவுமே பாரிஸ்டர்தான்"
இந்த வாக்கியத்தில் வரும் வார்த்தைகள் மொத்தம் மூன்று தான்.வார்த்தைகளும் சாதாரணம்தான்.ஆனால் அவர் படத்தில் பேசியபின் அது காவிய
சொற்கள் ஆகி விட்டது.
அந்த கதாபாத்திரத்தின் தன்மை அதன் தன்னம்பிக்கை அதன் கர்வம் முதலியவற்றைஅந்த வார்தைகள் விளக்கவில்லை
.உணர வைத்தது
நடிகர்திலகத்தின்குரல்.
அந்த தொனி.[/quote]
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
19th April 2015, 06:27 PM
#1153
Junior Member
Newbie Hubber
கலை,
ஈகோ விஷயத்தில் தாங்கள் சொன்னது எனக்கும் உடன்பாடுதான்.ஆனால் எங்கள் திரிக்கு வந்தும் ,நடிகர்திலகத்தின் படங்களையோ ,நடிப்பையோ பற்றி தாங்கள் ஒரு வார்த்தை கூட மூச்சு விடுவதில்லை.யார் யாருக்கோ எங்கள் திரியில் வந்து பட்டமளித்து பதிவிடும் தாங்கள் ,என்னவோ சாதாரணமாக என்னை,முரளியை ,ராகவேந்தரை விளிப்பது போல திரு.சிவாஜிகணேசன் என பதிப்பது நேர்மையான,காழ்புணர்ச்சி இல்லாத,ஈகோ தவிர்த்த நியாயமான செயலா?சிந்தித்து செயல் படுங்கள்.
Last edited by Gopal.s; 19th April 2015 at 06:30 PM.
-
19th April 2015, 07:01 PM
#1154
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
கலை,
ஈகோ விஷயத்தில் தாங்கள் சொன்னது எனக்கும் உடன்பாடுதான்.ஆனால் எங்கள் திரிக்கு வந்தும் ,நடிகர்திலகத்தின் படங்களையோ ,நடிப்பையோ பற்றி தாங்கள் ஒரு வார்த்தை கூட மூச்சு விடுவதில்லை.யார் யாருக்கோ எங்கள் திரியில் வந்து பட்டமளித்து பதிவிடும் தாங்கள் ,என்னவோ சாதாரணமாக என்னை,முரளியை ,ராகவேந்தரை விளிப்பது போல திரு.சிவாஜிகணேசன் என பதிப்பது நேர்மையான,காழ்புணர்ச்சி இல்லாத,ஈகோ தவிர்த்த நியாயமான செயலா?சிந்தித்து செயல் படுங்கள்.
நீங்கள் சொல்வது சரிதான் திரு.கோபால். அது எனக்கு தோன்றவில்லை. உங்கள் மனம் புண்பட்டதற்கு மன்னிக்கவும். இனி என் பதிவுகளில் தவறை திருத்திக் கொள்கிறேன். தங்களிடம் இருந்தும் அதே போன்ற மரியாதையை (புரட்சித் தலைவருக்கு) எதிர்பார்க்கிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
19th April 2015, 07:07 PM
#1155
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
கலை,
ஈகோ விஷயத்தில் தாங்கள் சொன்னது எனக்கும் உடன்பாடுதான்.ஆனால் எங்கள் திரிக்கு வந்தும் ,நடிகர்திலகத்தின் படங்களையோ ,நடிப்பையோ பற்றி தாங்கள் ஒரு வார்த்தை கூட மூச்சு விடுவதில்லை.யார் யாருக்கோ எங்கள் திரியில் வந்து பட்டமளித்து பதிவிடும் தாங்கள் ,என்னவோ சாதாரணமாக என்னை,முரளியை ,ராகவேந்தரை விளிப்பது போல திரு.சிவாஜிகணேசன் என பதிப்பது நேர்மையான,காழ்புணர்ச்சி இல்லாத,ஈகோ தவிர்த்த நியாயமான செயலா?சிந்தித்து செயல் படுங்கள்.
மதிப்பிற்குரிய நண்பர் கலைவேந்தன்
'நடிகர்திலகமும்' 'மக்கள் திலகமும்' படிக்காத மேதைகளாய் மக்களின் மனதை பிடித்ததால் வாங்கிய என்றும் சிரஞ்சீவித்துவம் பெற்ற கவுரவமே!!
நாங்கள் மனம் நிறைந்து மக்கள் திலகம் என்று எங்கள் அன்பினையும் மரியாதையையும் வெளிப்படுத்துகையில் தாங்களும் தங்கள் திரியில் ஒரு மாதிரி (Role Model) பதிவராக நடிகர்திலகத்தின் மேல் அன்பையும் மரியாதையையும் உள்ளத்திலிருந்து உதடு வழியே வெளிக்கொண ரலாமே!! தயக்கம் தேவையில்லை என்பதே என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோளும் !
வாழ்க மக்கள் திலகத்தின் மாண்பும் நடிகர்திலகத்தின் மாட்சிமையும் !!
அன்புடன் செந்தில்
When NTexplicitly endorses (3 :53) his regard on his 'elder brother' Makkal Thilagam MGR as Puratchi Thalaivar....why ego in us?
Last edited by sivajisenthil; 19th April 2015 at 07:26 PM.
-
19th April 2015, 07:14 PM
#1156
கோபால் சார் ,
ஆழ்ந்த இரங்கல்கள்.... தங்கள் உறவுகளின் பிரிவில் நானும் பங்கு பெறுகிறேன்...
நடிகர் சிவகுமார் பேஸ்புக் பக்கம்
https://www.facebook.com/ActorSivaku...71508629528462
1981 - அக்டோபர்- 16 -ந்தேதி -காலை 6.30 மணி +ஊட்டி - கால்ப் காட்டேஜ்
ஆயிரம் முத்தங்கள் - படத்திற்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தேன் .உதவியாளர் ஓடிவந்து 'சார்,முத்துராமன் சார் ரோட்ல மயக்கமா கிடக்கறார் சார் என்றான். ஓடிச்சென்று காரில் ஏற்றி ஊட்டி டாக்டரிடம் காட்ட, உயிர்போய் அரைமணி ஆகிவிட்டது என்றார்.
மீண்டும் காட்டேஜ்...காரிலிருந்து உடம்பை நிமிர்த்தி இறக்கும்போது அவர் மூச்சுக்காற்று குபுக்கென என்மேல் பட, அய்யோ உயிரோட இருக்கறவரை செத்துப்போயிட்டார்னு டாக்டர் சொல்லிட்டாரே' அண்ணா, அண்ணா எழுந்திருங்கண்ணா'- என்று நானும் நடிகை ராதா, அவர் அம்மா, மூவரும் யூகலிப்டஸ் ஆயிலை அவர் உடம்பு முழுக்க பூசி தேய்த்தவாறு கதறினோம். அவர் பேசவில்லை.போய்விட்டார்.
ரத்த அழுத்த நோய் பல ஆண்டுகளாக அவருக்கு... படத்தில் ராதாவுக்கு அப்பாவாக நடிக்க வந்தவர்- நான் நேற்று காலை ஓடியதைப் பார்த்து ஆர்வத்தில் ஓடியிருக்கிறார். ஊட்டியில், 7000 அடி உயரத்தில் அதிகாலையில், பனிமூட்டம் அதிகம் இருக்கும்போது, ஆக்சிஜன் மிகவும் குறைவாக இருக்கும். அதனால் ஓடியவர் மூச்சுத்திணறி விழுந்து விட்டார். ..
நெஞ்சில் ஓர் ஆலயம் - படம் கண்ணியமான இந்தக் கலைஞனை திரும்பிப் பார்க்கவைத்தது... காதலிக்க நேரமில்லை- தூக்கி நிறுத்தியது..
வங்காள நடிகரைப் போல் கம்பீரத்தோற்றம், காந்தக்கண்கள், கணீரென்ற குரல்,கனிவான உள்ளம், எவரையும் குறை சொல்லாத, எல்லோரையும் நேசித்த- சகோதரக் கலைஞன்- இதோ நம்மை விட்டு அவசரமாகப் புறப்பட்டுப் போய்விட்டார்.
தாங்க முடியாத சோகத்துடன் இந்தச்செய்தியை சென்னையிலுள்ள அவர் வீட்டுக்குத் தெரிவித்தோம்.
தாயே உனக்காக - காவல் தெய்வம் -
ராஜ ராஜ சோழன்- காரைக்கால் அம்மையார்- திருமாங்கல்யம் - தீர்க்க சுமங்கலி என அவரும் நானும் 15 படங்களுக்கு மேல் சேர்ந்து நடித்தோம்.
ஒரு மூத்த சகோதரனாக என் மீது அன்பைப் பொழிவார்.
அதிமுக அமைச்சராக அன்று இருந்த
ஆர். எம். வீ.அவர்கள் மூலம் அரசு போக்குவரத்து மினி பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து, டி.ஜி.பி. ஆக இருந்த பரமகுரு அவர்கள் அனுமதியுடன், வழியில் பரிசோதனைத் தடைகள் தவிர்த்து- காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல்- மாலை 4 மணிக்கு - ஊட்டியிலிருந்து புறப்பட்டு மறுநாள் விடியற்காலை 5.00 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்.
சிவாஜி அண்ணனும் திரளாக, திரை உலகத்தினரும் காத்திருந்தனர்.
சென்ற வாரம் சிரித்துக்கொண்டு ஊட்டி போனவர், சடலமாய்த் திரும்பிய கோரக்காட்சியைக் கண்டதும், மயங்கிச்
சரிந்து விட்டார் திருமதி. சுலோசனா.
'டேய் தம்பி ! அந்தக் காலத்தில் முருகன் வேஷத்தில, நாடக மேடையில நடிச்சிட்டு இருக்கும்போது, விஸ்வநாத தாஸ் உயிரை விட்டமாதிரி, முத்துராமன், படப்பிடிப்புக்குப் போய் 'ஜாக்கிங்' பண்ணும்போது உயிரை விட்டிருக்கான். நல்ல சாவு. யாரும் வருத்தப் படாதீங்க'- என்று சிவாஜி கூறியது -அதிர்ந்து இருண்டு போயிருந்த எங்களுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th April 2015, 07:21 PM
#1157
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
sivajisenthil
மதிப்பிற்குரிய நண்பர் கலைவேந்தன்
'நடிகர்திலகமும்' 'மக்கள் திலகமும்' படிக்காத மேதைகளாய் மக்களின் மனதை பிடித்ததால் வாங்கிய என்றும் சிரஞ்சீவித்துவம் பெற்ற கவுரவமே!!
நாங்கள் மனம் நிறைந்து மக்கள் திலகம் என்று எங்கள் அன்பினையும் மரியாதையையும் வெளிப்படுத்துகையில் தாங்களும் தங்கள் திரியில் ஒரு மாதிரி (Role Model) பதிவராக நடிகர்திலகத்தின் மேல் அன்பையும் மரியாதையையும் உள்ளத்திலிருந்து உதடு வழியே வெளிக்கொண ரலாமே!! தயக்கம் தேவையில்லை என்பதே என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோளும் !
வாழ்க மக்கள் திலகத்தின் மாண்பும் நடிகர்திலகத்தின் மாட்சிமையும் !!
அன்புடன் செந்தில்
அன்பிற்கினிய திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு, தங்கள் ஆலோசனையை ஏற்கிறேன். நன்றி
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
19th April 2015, 07:59 PM
#1158
Junior Member
Senior Hubber
திரு.கோபால் சார் அவர்களுக்கு இரண்டு நாட்களாக திரிக்கு வரமுடியாத காரணத்தினால் தங்களுக்கு உறவினருக்க ஏற்பட்ட விபத்து பற்றி தெரியவில்லை, மன்னிக்கவும்.
பார்த்தால் பசி தீரும் படத்தில் ஒரு காட்சியில் நடிகர்திலகமும் ஜெமினி அவர்களும் உரையாடும் ஒரு காட்சியில் நமது மக்கள் தலைவர் சொல்வார் தனது நண்பனான ஜெமினியை பார்த்து எவ்வளவு இன்பம் வந்தாலும் நீ அனுபவித்து கொள் ஆனால் துன்பம் வந்தால் என்னிடம் விட்டு விடு நான் அனுபவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் நீ என் நண்பன் என்பார்.
நான் தலைவர் சொன்னது போல் முடியாவிட்டாலும் உங்களுடைய துயரத்தில பங்கெடுத்துக் கொள்கிறேன்.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
19th April 2015, 08:18 PM
#1159
Junior Member
Senior Hubber

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
19th April 2015, 08:19 PM
#1160
Junior Member
Senior Hubber

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks