Results 1 to 10 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திலக சங்கமம் & Sivaji Ganesan - Definition of Style 20

    இருவர் உள்ளம்

    நடிகர் திலகம் திரை இசைத் திலகம் இணையில் வசந்த மாளிகைக்குப் பிறகு மிக அதிகமாக மக்களிடம் சென்றடைந்த காதல் பாடல்கள் இடம் பெற்றது இருவர் உள்ளம் திரைப்படம் என்றால் அது மிகையில்லை. வசந்த மாளிகை வரும் வரையில் இந்தப் படமே மிகவும் அதிகமாக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது.

    அதுவரை இருந்த நடிகர் திலகத்தின் நடிப்பில் வேறோர் பரிமாணத்தைக் கொண்டு வந்தவர் இயக்குநர் எல்.வி.பிரசாத் அவர்கள். இயக்குநர்களுக்கான நடிகராக விளங்கிய நடிகர் திலகத்தின் நடிப்பில் பல்வேறு புதிய பரிமாணங்களைக் கொண்டு வரவேண்டியது அவர்கள் பொறுப்பு என்கின்ற வகையில் நடிப்பை அள்ளி அள்ளி வழங்கியவர் நடிகர் திலகம். இதில் Subtle Acting என்றால் என்ன வென்றும் அதில் எவ்வாறு வித்தியாசங்களைக் கொண்டு வர முடியும் என்றும் நிரூபித்தவர்.

    இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பிரசாத் அவர்கள் பூர்த்தி செய்யத் தவறவில்லை. இதற்கென்றே அழகு சிரிக்கின்றது பாடலை வைத்தார். குறிப்பாக பறவைகள் பலவிதம் ஒரு காதல் மன்னனாக அந்தப் பாத்திரத்தை சித்தரிக்க உதவியது என்றால் இந்தப் பாடல் ரசிகர்களின் ஆவலைத் தீர்ப்பதற்காகவே படமாக்கப்பட்டது எனலாம்.

    திரை இசைத்திலகத்தின் மிகச் சிறந்த புலமைக்கு எடுத்துக் காட்டு இப்பாடல். அருமையான அக்கார்டினுடன் துவங்கும் பாடலில் இசைக் கருவிகள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். கோபால் சொன்னது போல் இந்த தீம் மியூஸிக் எனப்படும் இசையை இந்தப் பாடலில் சரணத்தில் சற்றே வித்தியாசமாக பயன்படுத்தி யிருப்பார். டி.எம்.எஸ். பி.சுசீலா இணையில் அவர்களின் மகுடத்தில் மற்றுமோர் வைரக்கல் இப்பாடல்.

    கவியரசரின் வரிகள் காலத்தை வென்று நிற்பவை. இலக்கிய ரசம் சொட்டுபவை. ஆனாலும் என்ன அந்தக் கால தணிக்கை அதிகாரிகள் இலக்கியத்தை ரசிக்கும் மனநிலையில் இல்லையே.. என்ன தப்பு கண்டு பிடிக்கலாம் என காதிலும் விளக்கெண்ணெய் வைத்து துருவி துருவிப் பார்த்தார்கள்.

    அவர்களுக்கு ஆண்மை விழிக்கக் கூடாதாம். அள்ளி அணைக்கக் கூடாதாம். அந்தக் காலத் தணிக்கை அதிகாரிகளை இந்தக் காலப் பாடல்களைத் தணிக்கை செய்யச் சொன்னால்.. ஹ்ம்... ஒரு பாடலாவது மிஞ்சுமா... தெரியவில்லை.

    தணிக்கைக்கு முன் அழகு சிரிக்கின்றது பாடல்...

    http://gaana.com/album/iruvar-ullam

    தணிக்கையில் மாற்றப் பட்டு படத்தில் இடம் பெற்ற பாடல்..



    மக்கள் தலைவரின் ஸ்டைலைக் காணக் காணப் பரவசம்...

    இதில் ஒரு விசேஷம் குறிப்பிட வேண்டும்...

    நாயகி அமர்ந்திருக்க நாயகன் கை தூக்கி எழுப்பும் காட்சி... நடிகர் திலகம் எத்தனை படங்களில் இந்த மாதிரி காட்சிகளில் நடித்துள்ளார் என ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும். ஏனென்றால் அதிலும் ஏராளமான வித்தியாசங்களை சித்தரித்துள்ளார்.

    இந்தப் பாடலில் மிகவும் சற்றே குனிந்து எழுப்புகிறார். புதிய பறவையில் சிட்டுக்குருவி பாடல், எங்கள் தங்க ராஜாவில் இரவுக்கும் பகலும் பாடல், பார்த்தால் பசி தீரும் படத்தில் கொடியசைந்ததும் என ஏராளமான பாடல் காட்சிகள். ஒவ்வொன்றிலும் ஒரு விதம்.

    அதே போல் வண்டு வருகின்றது என்ற வரியின் போது மெதுவாக நாயகியிடம் செல்லும் உத்தி..

    ஆசை துடிக்கின்றது என அருவியின் பின்னணியில் நின்று கொண்டு தோளைச் சிலுப்பி புன்னகைக்கும் வசீகரம்...

    குளித்து வருகின்றது என்று நாயகி சொல்லும் போது அந்தக் கூந்தலை எடுத்து முகர்ந்து பார்க்கும் குசும்பு..

    அவள் பின்னால் செல்லும் நடையழகு..

    மஞ்சத்தில் அமரும் முன் ஒர் நடை... அமரும் போது பக்கவாட்டில் பார்க்கும் குறும்புப் பார்வை..

    இப்போது தான் அந்த வரிகள் ஆண்மை விழிக்கின்றது என நாயகன் கூற அள்ளி அணைக்கின்றது என நாயகி உரைக்கிறாள்.. இதை மாற்றி ஆர்வம் பிறக்கின்றது, அன்பே அழைக்கின்றது என படத்தில் மாற்றி விட்டனர்...

    ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர் திலகத்தை ரசிக்க வேண்டிய பாடல் காட்சி...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •