-
18th May 2015, 01:36 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
A.ANAND
woow!!!raja-vin thannadakkam panivu...'vellakarane thundakanum thunniya kaanum innu odaranam'...haha!!!
புரியல. என்ன சொல்ல வறிங்கன்னு! இளையராஜா அப்படி சொல்றதால நாமெல்லாம் பெருமைதான் படணும். பண்ணைபுரத்திலிருந்து உதிர்தெழுந்த இசைச்சுயம்பு மேற்கத்திய இசைக் கலைஞர்களையெல்லாம் மேன்மையான இசைக்குறிப்புகளால் கட்டிப்போடுவது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை. இப்போதுதான் ராஜா இப்படி மக்களிடையே அடிக்கடி உரையாடுகிறார். சென்ற காலங்களில் இசையே மூச்சி என முப்பது நாற்பது படங்கள் சராசரியாக செய்துகொண்டிருந்தவர். கமல், ரஜினி படங்களாக இருந்தாலும் சரி, தான் இசையமைத்த பலநூறு படங்களின் பாடல் வெளியீட்டு விழாவிற்குச் சென்று நேரம் செழவழிக்கக் கூட விரும்பாமல் இசையே என மூழ்கி கிடந்தவர். இவரோட சாதனைகளை கால்வாசி கூட எட்டாத இசையமைப்பாளர்கள் பேசும் பேச்சோடு ஒப்பிட்டால், இன்னும் ராஜா தனது சாதனைகளுக்கு பல நூறு மணி நேரங்கள் பேசவேண்டி இருக்கும். இதுபோன்ற ஒவ்வொரு பேச்சிலும் ஓரிரு வார்த்தைகள் மிகவும் அம்சமாக பேசிவிடுவார். அதுபோலவே இந்தமுறையும் ஒரு அணையில் பல மதகுகள் வழி நீர் வெளியாவதற்கும், ஒரு அணையில் ஒரே மதகின் வழி நீர் வெளியாவதற்கும் உள்ள வேறுபாட்டை மற்ற திரை/தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் தனக்கும் உள்ள வேறுபாடு எனச் சொன்னவிதம் எவ்வளவு அழகா இருக்கு! உவமை கூட நம்மோட புவியியல் சார்ந்துதான். இந்த அளவுக்கு வேறு எந்த இசையமைப்பாளர்களுக்கு ஞானமாக பேச வராது!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
18th May 2015 01:36 AM
# ADS
Circuit advertisement
Bookmarks