-
22nd May 2015, 07:19 PM
#11
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan - Definition of Style 21
பாலும் பழமும்
பாலும் பழமும்..
பல காட்சிகளில் நுட்பமான நடிப்பில் நடிகர் திலகம் நம்மை மயக்கி விடுவார்..
எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று Contrivation... பொதுவாக Contrivation...என்றால் வலுவில் திணிக்கப் படுவது அதனால் அதில் செயற்கை இருக்கும் என்கிற அபிப்ராயம் உண்டு. ஆனால் அந்த Contrivation...என்கிறதையே யதார்த்தமாக மாற்றிய பெருமை பீம்சிங்கையே சாரும். டாக்டருக்குத் தன் கடமை உணர்ச்சியைப் புரிய வைக்க சாந்தி வெள்ளைக் கோட்டு அணிந்து டாக்டராக உருவகப்படுத்தி ரவிக்குப் புரிய வைக்கும் காட்சி. பேசப்படாது, நான் இப்போ டாக்டர் ரவி. நான் தான் நீங்க என சொல்வதும் அதற்கு உடனே நடிகர் திலகம் அப்போ நீங்க தான் நாங்களா எனக் கேட்டு விட்டு உடனே குரலை மாற்றி பெண் குரலில் பேசுவதும்...
ஆஹா.. யதார்த்தம் என்றால் இதுவல்லவோ யதார்த்தம்.. இயற்கை நடிப்பு என்றால் இதுவல்லவோ இயற்கை நடிப்பு..
இந்த இடத்தில் தலைவர் ஒரு விதமான புன்னகையோடு, அவள் சொல்வதைப் புரிந்து கொண்டே வருவதைத் தன் முகத்திலேயே பிரதிபலித்து, அப்படியே தன் கடமை உணர்ச்சி உந்த அமரும் இடம்...அந்த உட்காரும் விதத்திலேயே அந்த பாத்திரத்தின் மனதை வெளிப்படுத்தும் உன்னதம்...
சரோஜாதேவி சொல்லச் சொல்ல அந்த முகத்தில் மெலிதாக வெளிப்படும் பல்வேறு உணர்வுகள்,
பேரும் புகழுமாய் நீங்கள் கழுத்தில் மாலையுடன் வந்து நிற்பதை நான் பார்க்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது என்று சரோஜா தேவி சொல்லும் போது லேசாக கண்களை அவள் பக்கம் திருப்பி தான் அவளை கவனிப்பதாக நமக்கு உணர்த்தும் யுக்தி, அவள் காபி கொண்டு வரப் போனவுடன் அந்த சிந்தனையுடனேயே நம்மை கர்வத்தோடு புருவத்தை நிமிர்த்திப் பார்க்கும் பார்வை...
அது மட்டுமா. உடனேயே காட்சி சீரியஸாகி விடுகிறது. சாப்பிட உட்காரும் சாந்தியை அவரழைக்க, உடனே ஓடுவதும். (அழகுப் பதுமையாகவே வலம் வந்த சரோஜாதேவி அவர்களின் நடிப்பில் புதிய பரிமாணத்தை அறிமுகப் படுத்தியது பாகப்பிரிவினை என்றால் அதை அழுத்தமாக நிரூபித்தது பாலும் பழமும், அதற்கு இந்தக் காட்சி ஒரு பானை சோற்றில் ஒரு பதம்.. கையைக் கழுவிக் கொண்டு அவர் ஓடும் இடம் குறிப்பிட வேண்டும்.) அப்போது டாக்டர் தன் மருத்துவ உபகரணங்களைப் பார்த்துக் கொண்டே அவளுக்கு உத்தரவிடுவதும், அதை அவர் எடுக்கச் செல்வதும்.. அந்த அளவிற்கு கேஷுவலாக இருக்கும். அதுவும் அந்த மருந்துகளின் பெயர்களை நடிகர் திலகம் உச்சரிக்கும் போது..
யாராவது அங்கே சிவாஜியை நினைப்பார்களா... டாக்டர் ரவியைத் தானே பார்ப்பார்கள்.. இதற்கு மேல் இயற்கை நடிப்புக்கு உதாரணம் வேறென்ன வேண்டும்..
உடனே அங்கு வசனத்தின் பங்கு குறைந்து மெல்லிசை மன்னர் காட்சியைத் தன்வசம் எடுத்துக் கொண்டு விடுவார்.
இந்தக் காட்சி படத்தில் என்னை மிகவும் ஈர்த்த காட்சி.. கோபாலின் எழுத்தில் இந்தப் படத்தைப் பற்றிப் படித்தவுடனேயே என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இவை.
பார்க்க 49.45 நிமிடத் துளியில்.
Last edited by RAGHAVENDRA; 23rd May 2015 at 06:46 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
22nd May 2015 07:19 PM
# ADS
Circuit advertisement
Bookmarks