-
25th May 2015, 07:01 AM
#11
Senior Member
Seasoned Hubber
அவன் தான் மனிதன்...
நேற்றைய மாலைப் பொழுது மற்றோர் மறக்க முடியாத இனிய மாலையாக அமைந்தது. நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் கவிஞர் எம்.ஜே.எம்.ஜேசுபாதம் அவர்களின் "நடிப்பதிலும் கொடுப்பதிலும் சிகரம் தொட்ட சிவாஜி" நூல் வெளியீட்டு விழாவும் அவன் தான் மனிதன் 40வது ஆண்டு விழாவும் சிறப்புற நடைபெற்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் பங்கேற்கும் ஐ.பி.எல். இறுதிப் போட்டியின் நேரலை ஒளிபரப்பின் காரணத்தால் மக்கள் வரமாட்டார்கள் என்ற பரவலான அபிப்ராயத்தைத் தவிடு பொடியாக்கி விட்டு, அரங்கு நிறைந்ததுடன் பலர் நின்று கொண்டே நிகழ்ச்சியைக் கண்டு களித்ததன் மூலம், நடிகர் திலகத்திற்காக எதையும் மக்கள் தியாகம் செய்வார்கள் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக நிரூபி்த்து விட்டது.
விழாவில் அன்புச் சகோதரர், அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர் திரு ராம்குமார் கணேசன் அவர்கள் நூலை வெளியிட, நம் அமைப்பின் தலைவர் திரு ஒய்.ஜீ.மகேந்திரா அவர்கள் பெற்றுக் கொண்டார். உடல் நிலை காரணமாக திரு பஞ்சு அருணாசலம் அவர்களால் பங்கேற்க இயலவில்லை.
பொதுவாக நடிகர் திலகத்தின் நடிப்புப் பற்றியே பலரும் நூல் வெளியிட்டு வந்த மரபை உடைத்து அவருடைய சமுதாயப் பணி, அவர் அளித்த நன்கொடைகள் இவற்றை எதிர்காலத் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வத்திலும் ஈடுபாட்டிலும் கவிஞர் திரு எம்.ஜே.எம். ஜேசுபாதம் அவர்கள் இந்நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். அவருக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.
நூல் வெளியீட்டைத் தொடர்ந்து அவன் தான் மனிதன் திரைக்காவியத்தின் சிறப்பை நமது முரளி சார் எடுத்துரைத்தார். மேலும் நமது அமைப்பின் சார்பில் ஒரு நினைவுப் பரிசும் வழங்கப் பட்டது.
தன்னுடைய 90 வயதிலும் சிரமப்பட்டாலும் பரவாயில்லை இவ் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வந்திருந்து சிறப்பித்ததோடு மட்டுமின்றி முழுப்படத்தையும் அமர்ந்து பார்த்த நமது அமைப்பின் உறுப்பினர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி அவர்கள் நம் மற்ற ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழ்ந்தார்கள்.
மிக நுட்பமாக ரசிக்கக் கூடிய ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் திலகம் மட்டுமே என்ப்து நேற்றும் நிரூபணமானது. குறிப்பாக அந்தப் படிக்கட்டு இப்படத்தில் ஒரு பாத்திரமாகவே மாறி விட்ட்து. ஆனந்த பவனத்தை விட்டு வெளியேறும் காட்சியில் வெளியில் நின்று திரும்பிப் பார்க்கும் போது உணர்ச்சி மிகுதியில் இது ஒரு படம் என்பதையே மக்கள் மறந்து அனுதாபத்தில் திளைத்தது ரசமான அனுபவம் [இதே போன்று படையப்பாவிலும் காட்சி அமைந்திருந்தாலும் அதற்கும் இதற்கும் தான் எத்துணை வித்தியாசங்களைக் காட்டியிருக்கிறார் தலைவர்...]. மாடிப் படிக்கட்டில் ஏறும் போது கூட அந்தப் பாத்திரத்தின் சூழ்நிலையைச் சித்தரிக்கும் வகையில் அந்த நடையில் காட்டியிருக்கும் வித்தியாசம்..
நடிப்பின் இலக்கணம் நடிகர் திலகம் என்பது ஆணித்தரமாக அங்கே நிறுவப்பட்டது.
விழாவில் வெளியிடப்பட்ட நூலின் முகப்பு நம் பார்வைக்கு.
அரங்கிலேயே கணிசமான எண்ணிக்கையில் நூல் விற்பனையாகியுள்ளதாக வெளியீட்டாளர் கூறினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விலை என்னவென்று முன் கூட்டியே தெரியாத நிலையிலேயே இவ்வளவு பிரதிகள் விற்பனையாவது நடிகர் திலகத்தால் மட்டுமே சாத்தியம்.
நூலின் பிரதியைப் பற்றி அறிந்து கொள்ள நூலாசிரியர் கவிஞர் எம்.ஜே.எம். அவர்களின் கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.... 9940225052

விழா விவரங்களை முரளி சாரின் நேர்முக வர்ணனையில் அனுபவியுங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 7 Likes
-
25th May 2015 07:01 AM
# ADS
Circuit advertisement
Bookmarks