-
31st May 2015, 01:09 AM
#2601
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
தங்களின் கைங்கரியத்தில் அக்னி புத்ருடு முழுப்படத்தையும் இங்கே அளித்து விட்டீர்கள்.. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அதுவும் நடிகர் திலகத்தின் அறிமுகக் காட்சி காணொளி, அதைப் பற்றிய தங்கள் வர்ணனை, அப்படத்தில் சைதன்யராக நடிகர் திலகத்தின் அட்டகாசமான நடிப்பு, சற்றும் பொருந்தாத குரலை மீறி வெளிப்பட்ட அவருடைய நடிப்பின் தாக்கம், என அமர்க்களமாக சித்தரித்துள்ளீர்கள்.
தங்களுக்கு உளமார்ந்த நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
31st May 2015 01:09 AM
# ADS
Circuit advertisement
-
31st May 2015, 01:10 AM
#2602
Senior Member
Seasoned Hubber
திலக சங்கமம் & Sivaji Ganesan - Definition of Style 23
குலமகள் ராதை
பொதுவாகவே தமிழ்த் திரையுலகில் ஆண்களைத் திரும்பத் திரும்பத் திரைப்படத்திற்கு வரவழைக்கும் சக்தி காதலுக்கு உண்டு.. அதை விட அதிகம் அதன் தோல்விக்கு உண்டு... வயது வித்தியாசமின்றி ஆண் இனம் சினிமாவில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி உள்செலுத்திக் கொண்டு ஆறுதல் தேடுவது காதல் தோல்விக் காட்சிகளிலும் அதனையொட்டிய பாடல்களிலும் தான். இது சினிமாவின் வெற்றிக்கு ஒரு ரகசியமாகக் கூட கொள்ளலாம்.
அப்படி ஆணினத்தை வரவழைக்கும் சக்தி காதல் தோல்விப் பாடல்களுக்கு உண்டு என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன். அவர்களின் மனதில் தனக்கெனத் தனியிடத்தை கவியரசர் பெற்றார் என்றால் அதில் பெரும் பங்கு காதல் தோல்விப் பாடல்களையே சாரும்.
இதற்குப் பெரிதும் உதாரணமாக விளங்குவது இரண்டு பாடல்களைச் சொல்லலாம். நூற்றாண்டுத் தமிழ்த்திரையுலகில் மெல்லிசை மன்னர்கள் கொடிகட்டிய காலத்திலும் சரி, அதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, திரை இசைத்திலகம் கே.வி.எம். அவர்கள் படைத்த காதல் தோல்விப் பாடல்களைப் போல் அமரத்துவம் பெற்ற பாடல்களை யாராலும் படைக்க முடியவில்லை என்பதே உண்மை.
அதுவும் இந்த இரண்டு பாடல்கள் -
குலமகள் ராதை படத்தில் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
மற்றும்
வானம்பாடி படத்தில் கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் ..
இந்த இரண்டு பாடல்களும் அந்தக் கால இளைஞர்களை மட்டுமின்றி எக்கால இளைஞர்களையும் ஈர்க்கக் கூடிய சிரஞ்சீவித்துவமான வரிகளைக் கொண்டு அமைந்தவை. இந்த அளவிற்கு காதல் தோல்வியின் வலியை ஆழமாக வேறு எந்தப் பாடலும் சித்தரிக்கவில்லை என்பது நிதர்சனம். எத்தனையோ பாடல்களை பதிலாக கூற முற்படலாம். ஆனால் தாக்கம் என்பது இந்த இரு பாடல்களுக்குப் பிறகே எனக் கூற முடியும்.
குறிப்பாக வெளியான நாள் தொட்டு இன்று வரை திரையரங்கில் ரசிகர்கள் தங்களை முழுதும் ஈடுபடுத்திக் கொள்வது குலமகள் ராதை படப்பாடலில் தான். ஒவ்வொரு வரியும் காதலில் தோல்வியடைந்தவர்கள் தங்கள் உள்மனதை வெளிப்படுத்தும் வகையில் உணர்ந்து பாடலோடு ஐக்கியமாகி விடுவதே இப்பாடலின் இமாலய வெற்றிக்குக் காரணம்.
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாடல் இரு திலகங்களின் சங்கமத்தின் சிகரம் எனலாம். எவ்வாறு நடிகர் திலகம் மெல்லிசை மன்னர்கள் இணைந்த எங்கே நிம்மதி இறவாப் புகழ் பெற்றதோ அதற்குச் சற்றும் குறையாத பெருமை வாய்ந்த பாடல் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாடல்
நடிகர் திலகத்தின் நடை..
இதைப் பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளது.
ஆனால் இப்பாடலில் காதல் தோல்வியைத் தன் நடையிலேயே சித்தரிக்கும் உன்னதத்தை என்னென்பது. அந்த மேட்டில் ஏறும் போதே அவருடைய நடையில் அந்த்த் துயர் தெரிய ஆரம்பிக்கிறது. அசரீரியில் அவருடைய குரல் அவளைப் பற்றிக் கூற நடையில் மெல்ல மெல்ல அதன் வீச்சு அதிகமாகிறது. அந்த அசரீரி முடியும் தருவாயில் வலது காலை வைத்த பின்னர் இடது காலை சற்றே தாமதித்து எடுத்து வைக்கும் போது அவர் வெளிப்படுத்தும் உணர்வு...
கோபம் கொப்பளிக்க பாடகர் திலகத்தின் குரல் துவங்குகிறது. ராதா ராதா... என ஒலிக்க அந்த இடி மின்னலுடன் துவங்குகிறது பாடல் காட்சி..
அந்த இடி மின்னலில் எவ்வளவு தான் உரத்த குரல் கொடுத்தாலும் காதில் கேட்காது என்பது நாயகனுக்குத் தெரியும் இருந்தாலும் அவனுடைய ஆற்றாமை அவள் காதில் விழவேண்டும் என்பதற்காக குரல் கொடுக்கிறான். அந்த ராதா என்கின்ற குரலுக்கு தன் உதட்டசைவில் அழுத்தம் அளித்து தன் நடிப்பு ராஜ்ஜியத்தைத் துவக்குகிறார் நடிகர் திலகம்.,
அக்கார்டின் இசை, இடி ஓசை, கண்ணைப் பறிக்கும் மின்னல் இவற்றினூடே சற்றும் கவலைப் படாமல் அந்த இடி மின்னலை நோக்குகிறார் நடிகர் திலகம். உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பல்லவியை துவக்குகிறார். இரண்டாம் முறை பாடும் போது பாடலின் வரிகளுக்கேற்ப தன் முகத்தை சுழற்றும் போது அதில் அந்த விரக்தி வெளிப்படுவதைப் பாருங்கள்.
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி வரிகளின் போது இரு கைகளையும் விரித்துப் பின் வலது கைகை மேலே தூக்கி கடவுளைச் சுட்டிக் காட்டி அவரைக் குற்றம் சாட்டும் போது அந்த கோபம் கடவுளின் மீதே வெளிப்படுத்துவதைத் தன் முகத்திலும் உடல் மொழியிலும் கொண்டு வருவதைப் பாருங்கள்.
இப்போது முதல் சரணத்தின் பின்னணி இசை துவங்குகிறது. மெல்ல அந்த மண்டபத்தை நோக்கிச் செல்கிறார். ஆஹா.. தொடர்வது கண்களையும் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் அந்த அற்புத போஸ்...
மின்னல் பளிச்சிட உடனே ஸ்டைலாகத் திரும்பி மின்னலை நோக்கியவாறு, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என அந்த மின்னலுக்கே சவால் விடும் அலட்சியமான பார்வை,

உடனே திரும்பி நடை.. இரண்டு மூன்று ஸ்டெப்புகள்.. மண்டபத்தில் கால் வைக்கிறார். உடனே மின்னல்.. இன்னும் அதிக அளவில் அந்த அலட்சிய நோக்கு..
இப்போது வலது கையைத் தூணின் மீது வைத்து ஒரு கோபமான நிற்றல். நின்று பார்ப்பதிலும் ஒரு ஜீவனைக் கொணடு வருவது நடிகர் திலகம் மட்டுமாகத் தான் இருக்க முடியும்.
மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை..
திரையரங்கை அதிர வைக்கும் வரிகள்... அதைப் பாடும் போது பாடகர் திலகத்தின் குரலில் வெளியாகும் கோபம்...அதைச் சொல்லும் போது இவர் முகத்தில் வெளிவரும் உணர்வு...
இதற்கு அடுத்த வரிகள் கொட்டகையின் கூரையை உடைத்து சீறிட்டுக கிளம்பும் வகையில் கரகோஷத்தை உருவாக்கும்..
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை..
இந்த வரியை இரண்டாம் முறை கூறும் போது தன் வலது கை சுட்டு விரலால் அனாயாசமாக கடவுளைச் சாடும் உடல் மொழி...
இப்போது பல்லவியில் காலம் செய்த கோலமடி வரிகளின் போது இரு கைகளையும் அகல விரித்து இரண்டையும் மேலே தூக்கும் போது கடவுளின் மீதுள்ள கோபத்தை இரு மடங்காக சித்தரிக்கிறார் நாயகன்.
அந்த கோபத்தைப் பாருங்கள்

இப்போது கோபத்தைக் கொட்டிய பிறகு மனம் உடைகிறது. விரக்தி திரும்புகிறது. நடை தளர்கிறது.
இப்போது மின்னலைக் காண கண்ணும் மனதும் கூசுகின்றன. கை தன்னையறியாமல் கண்ணை மூடுகிறது.. மெல்ல கண்களின் அந்த ஒளி வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைக்கும் முயற்சியாக விரல்களால் கண்களைத் துடைத்துக் கொண்டே வர, நடை சற்றே வேகம் பிடிக்கிறது... இந்த நடையைப் பாருங்கள்..
இதில் தளர்வு, விரக்தி வெளிப்படுகிறது...
இப்போது அந்த சூழலை சற்றே மாற்றும் வகையில் திரை இசைத் திலகம் தன் மேதைமையை வெளிப்படுத்துகிறார். மழை நீர் சொட்டும் ஓசைக்காக அவர் பயன் படுத்தும் இசைக் கருவியின் ஒலியோடு இணைந்து ஒளிப்பதிவாளர் அந்த்த் தண்ணீர்ப் பரப்பை அப்படியே நகர்த்திச் செல்வது ... ஆஹா.. என்ன கவிதைத்துவம்... கருப்பு வெள்ளையில் காவயமே படைத்து விடுகிறார்கள் இந்த இடத்தில்...
இப்போது ஒலிக்கிறது அந்த வைர வரிகள்..
உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்...
அந்த மழை நீரின் வீச்சையும் தாண்டி அந்தக் குளிரான சூழலிலும் கண்களில் அனல் தெறிக்கிறது நாயகனின் முகத்தில்.. அதைப் பாருங்கள்.. நடிகர் திலகத்தின் கண்கள் அந்த சூழலிலும் கோபத்தையும் உஷ்ணத்தையும் வெளிப்படுத்துவதையும் அதை அவ்வளவு அருமையாக ஒளிப்பதிவாளர் படம் பிடித்துள்ளதையும்.. அவருக்கு ஒரு சபாஷ்...
அந்த வரிகள்.. கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி..
ஆஹா கவியரசின் வரிகள் அண்டம் முழுதும் எதிரொலிக்கும் ஆரவார கரகோஷத்தைத் திரையரங்கில் பெறுகின்றனவே...

மழையென்றும் வெயிலென்றும் பாராமல் நாயகன் தவிக்க, காதலியோ தன்னை மறந்து நித்திரையில் ஆழ்ந்திருக்கிறாள்.. இந்த இடத்தில் திரை இரண்டாகப் பிரிக்கப் பட்டு நாயகன், நாயகி இருவரையும் சித்தரிக்கிறது..
இருவர மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி..
கடவுளை நேரடியாக அட்டாக் செய்து விடுகிறார் கவியரசர்.
அதை தீர்க்கமாகத் தன் குரலில் கொண்டு வருகிறார் பாடகர் திலகம்.

தன் சுட்டு விரலின் வேகமான அசைவுகளால் அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்து இறைவன் மீது காதலர்களுக்குக் கோபத்தை வரவழைக்கிறார் நடிகர் திலகம் தன் நடிப்பின் மூலம்..
காதல் தோல்விக்கு கடவுளைச் சாடும் இரு பாடல்களில் ஒன்றான இந்தப் பாடல் சாகா வரம் பெற்றதில் வியப்பென்ன..
குலமகள் ராதை எப்போது மறுவெளியீடு கண்டாலும் சிவாஜி ரசிகர்கள் மட்டுமின்றி காதல் வயப்பட்டு தோல்வியுற்ற ஆண்களையும் திரளாக வரவழைக்கும் உன்னதத் திரைக்காவியமாக விளங்கி மாபெரும் வெற்றி காண்பதின் ரகசியம் புலப்படுகின்றதல்லவோ..
இறுதியில் நமக்குத் தோன்றும் வரிகள்..
நீ ஏன் எப்போது பார்த்தாலும் சிவாஜி சிவாஜி என்று அலைகிறாயோ தெரியவில்லை. என சிலர் கூறுவதோடு,, செல்லமாக, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை கடவுள் செய்த குற்றம் என கடவுளையும் திட்டும் அளவிற்கு ரசிகர்களை உருவாக்கிய பாடல்...
பாடலைப் பாருங்கள்.. அணுஅணுவாக ரசியுங்கள்..
கவியரசரின் வரிகளை, திரை இசைத் திலகத்தின் உயிரோட்டமான இசையை. பாடகர் திலகத்தின் ஜீவனுள்ள குரலை..

பல்வேறு தலைமுறைகளைத் தாண்டி ஏன் இன்னும் ரசிகர்களை நடிகர் திலகம் பெறுகிறார் என்பதற்கு அத்தாட்சியான பாடலை...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
31st May 2015, 01:31 AM
#2603
Senior Member
Seasoned Hubber
அபூர்வமான காணொளி..
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாடலை பாடகர் திலகம் மேடையில் பாடி நடிக்க, திரையிசைத்திலகம் இயக்கும் காட்சி..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
31st May 2015, 04:44 AM
#2604
Junior Member
Newbie Hubber
Dear Ragavendra,
Belated Wishes for your peaceful,prosperous ,healthy and Happy long life. As I was travelling ,I couldnt wish you earlier.
-
31st May 2015, 05:20 AM
#2605
Junior Member
Newbie Hubber
வாசுவிற்காக, தன்னிச்சையாக நான் நீக்கி விட்டேன்.
Last edited by Gopal.s; 1st June 2015 at 10:55 AM.
-
31st May 2015, 07:58 AM
#2606
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
31st May 2015, 08:04 AM
#2607
Senior Member
Diamond Hubber
யாருப்பா அது? என்னுடைய முந்தைய பதிவிற்கு தெரியாத்தனமாக் கூட யாரும் லைக், தேங்க்ஸ் போட்டுடாதீங்க.
அப்புறம் தொலைஞ்சீங்க. கபர்தார்...
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
31st May 2015, 08:50 AM
#2608
Junior Member
Newbie Hubber
வாசுவிற்காக, தன்னிச்சையாக நான் நீக்கி விட்டேன்.
Last edited by Gopal.s; 1st June 2015 at 10:55 AM.
-
31st May 2015, 09:19 AM
#2609
Senior Member
Diamond Hubber
குறுகிய நோக்கம் கொண்டிருந்தால் நான் ஏன் இங்கு திரும்ப வருகிறேன்? சொல்லி விடுங்கள். இன்றோடு போய் விடுகிறேன். மதுர கானத்தை மட்டுமே உங்கள் எதிரிகளோடு அதாவது நீங்கள் சொல்வது போல என் உயிர் நண்பர்களோடு சேர்ந்து நாங்கள் அனைவரும் முதுகு சொறிந்து கொண்டு நடத்திக் கொள்கிறோம்.
போய் விட்டால் குறுகிய நோக்கம் என்பீர்கள். வந்தால் வம்பு வளர்ப்பீர்கள். எனக்கும் மான அவமானங்கள் உண்டு. நீங்கள் நண்பர் என்பதால் எல்லாவற்றுக்கும் பொறுத்துப் போக முடியாது.
திரும்ப வந்த சில நாட்களில் என் மனதார என் தெய்வத்துக்கு எவ்வளவு உண்மையான சேவை செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்து கொண்டிருக்கிறேன். இதில் குறுகிய நோக்கம் என்ன?
சரி! நீங்களே நடத்திக் கொள்ளுங்கள். நான் வரவில்லை. ஆனால் நான் விலகவில்லை. உங்கள் குறுகிய நோக்கிய வார்த்தை விஷம். கக்கியதை எடுங்கள். திரும்ப வருவது பற்றி யோசிக்கிறேன்.
இது பயமுறுத்தல் இல்லை. தன்மான ரோஷம். நான் இல்லையென்றால் லட்சம் பேர் நடிகர் திலகத்திற்கு.
போவதற்கு முன்..
தலைவரின் பதிவு ஒன்றை செந்தில் சாரின் பதிவுக்கு பதில் பதிவாக ரெடி செய்து கொண்டிருந்தேன் இன்று காலையில். இதற்கே ஒரு நிமிடம் கூடத் தூங்காமல் கண் விழித்து நைட் ஷிப்ட் முடித்து வந்து டீ கூட அருந்தாமல் பதிவு ரெடி செய்து கொண்டிருந்தேன். நீங்கள் சொன்னபடி குறுகிய நோக்கத்துடனே.
அதை பதிவு செய்து விட்டு கிளம்புகிறேன்.
பொசுக்கென்று கோபித்துக் கொண்டெல்லாம் கிளம்பவில்லை. குறுகிய நோக்கம் நெடிய நோக்கமான பிறகு வருகிறேன்.
நடிகர் திலகம் திரியில் நல்ல பதிவாளர்கள் எவரும் நிலைத்து நிற்கவே முடியாது. இதுதான் சத்தியமான உண்மை. இது இந்தத் திரியின் சாபக் கேடு போலும்.
Last edited by vasudevan31355; 1st June 2015 at 09:58 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
31st May 2015, 09:50 AM
#2610
Senior Member
Diamond Hubber
செந்தில் சார்,




'குலமகள் ராதை'யில் 'ராதே உனக்குக் கோபம் ஆகாதேடி' பாடலில் தலைவர் நிலைக் கண்ணாடி முன் அமர்ந்திருக்கும் சரோஜாதேவியின் பின் நின்று, அவரது இரட்டை ஜடையை பிடித்து இழுத்து வம்பு செய்து, பின் தேவி எழுந்திருக்க எத்தனிக்கும் போது அவரது உச்சந்தலையில் தன் முகவாய்க் கட்டையை அழுத்தி மீண்டும் அவரை அமர வைப்பார் பாருங்கள். அள்ளிக் கொண்டு போகும்.
காதலர்களின் ஆபாசக் கலப்பில்லாத அன்னியோன்ய நெருக்கத்தை, செல்லச் சீண்டல்களை, வெறும் ஜடையைப் பற்றி இழுக்கும் இந்த ஒரு காட்சியின் மூலமே அற்புதமாக அனைவருக்கும் உணர்த்தி விடுவார் தலைவர். கொள்ளை கொள்ளும் இயல்பான அழகு வேறு.
இப்போது ஸ்டில் பாருங்கள். எனக்கும், முரளி சாருக்கும் மிக மிக பிடித்தமான ஸ்டில் இது.
அடுத்து 'தங்கமலை ரகசியம்' படத்தில் கண்ணாடி காட்சி.




ஜமுனா காட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது நமது 'டார்ஜான்' அங்கு வந்து, அங்கு வரும் வீரகளை துவம்சம் செய்து பந்தாடி விட்டு, பின் ஜமுனா அறைக்குள் நுழைந்து அட்டகாசம் பண்ணுவார்.
சுழல் நாற்காலியில் அமர்ந்து சுற்றிப் பார்த்து வியப்பார்.
பின் அங்கிருக்கும் நிலைக்கண்ணாடி முன் நின்று அது உருவம் காட்டும் என்று தெரியாமல் முதன் முதலாக தன் முழு உருவத்தையும் பார்த்து, முரட்டுத்தனமாக, தன்னைப் போலவே இன்னொருவன் எதிர் இருக்கிறான் என்று எண்ணி தன் பிம்பத்தைக் காட்டும் அந்தக் கண்ணாடியை மூர்க்கத்தனமாக உடைத்து நொறுக்கி சுக்குநூறாக்கி விடுவார். உடைத்துவிட்டு ராட்சஸ சிரிப்பொன்றை சிரிப்பார்.
நன்றாகக் கவனியுங்கள்.
நிலைக் கண்ணாடி மேலும் கீழுமாக லேசாக வேறு ஆடிக் கொண்டிருக்கிறது. அதில் தன் உருவத்தை பார்க்கிறார் தலைவர். அப்படியே கோபம் கொண்டு இரு கைகளையும் வலுவுடன் மடக்கி, டார்ஜான் ஸ்டைலில் மார்புகளை குத்திக் கொண்டு பின் வலது கை முஷ்ட்டியை மடக்கி (கையில் எந்த ஆயுதமும் இருக்காது. வெறும் கையாலேயே) கண்ணாடியை ஓங்கி ஒரு குத்து விட்டு நொறுக்குவார். நிஜமாக. உண்மையாக. சத்தியமாக. எந்த மாய்மால வேலையும் இருக்காது.)
நான் ஒரு தடவைக்கு பல தடவை பார்த்து விட்டேன். வெறும் கையால் கண்ணாடியை உடைப்பது சுலபமல்ல. கைகளைக் கிழித்து காயப்படுத்தி பதம் பார்த்து விடும். பயிற்சி எடுத்தவர்கள்தான் அதை திறம்படச் செய்ய முடியும். ஆனால் தலைவர் படுஅலட்சியமாக, சர்வ சாதரணமாக இந்த ஆபத்தான காரியத்தை அசால்ட்டாக செய்து காட்டுவார். பார்த்து நிஜமாகவே ஆடிப் போய் விட்டேன் தெரியுமா!
வீடியோ இருந்தால் மறுபடி பாருங்கள். மூக்கின் மேல் விரல்கள் வைத்து விடுவீர்கள்.
வீரம் என்றால் இதுவல்லவோ வீரம்.
வெறும் லைக்குகளால் நன்றிகளால் பயனில்லை. அந்தக் காட்சிகளைப் பார்த்து தாங்கள் ரசித்தவற்றை இங்கு நண்பர்கள் பதிந்து அதைப் பற்றிய கருத்தையும் பதிந்தால் பதிவுகள் முழுமை பெறும். இல்லையென்றால் சலிப்புதான் ஏற்படும்.
செந்தில் உங்களுக்கு மறுபடி நன்றி!
நீங்கள் இப்படி எடுத்துக் கொடுப்பதினால்தான் வெளியே வராத, அதிகம் அறியப்படாத, பேசப்படாத, தலைவரின் அரிய திறமைகளை இங்கே என்னால் முடிந்த மட்டும் வெளிக் கொணர்ந்து மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவோ அல்லது மீண்டும் ஞாபகப்படுத்தவோ முடிகிறது.
ஆனால் தொடர முடியாமல் போவது துரதிருஷ்டமே! வருகிறேன்.
நன்றி செந்தில்.
Last edited by vasudevan31355; 31st May 2015 at 10:02 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
Bookmarks