Page 97 of 400 FirstFirst ... 47879596979899107147197 ... LastLast
Results 961 to 970 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #961
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    ஒருமணி நேரம் நின்ற ரயில்!


    அன்றும் இன்றும்
    ஊர்வசி சாரதா 70-வது பிறந்த தினம்: ஜூன் 12

    நடிகர்கள் உருவாவதில்லை பிறக்கிறார்கள் என்று சொன்னார் எல்லீஸ் ஆர் டங்கன். அவரது கூற்று உண்மை என்பதற்கு வாழும் உதாரணம் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடும் முன்னாள் நாயகி இன்னாள் குணச்சித்திர நடிகை சாரதா. இந்திய சினிமாவில் ஒப்பிட முடியாத நட்சத்திரமாக விளங்கும் இவர் யதார்த்தமான நடிப்புக்காகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆகிய நான்கு மொழிகளில் கொண்டாடப்படும் தன்னிகரற்ற தாரகை.

    சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்ற முதல் இந்திய நட்சத்திரம். நடிப்புக்கான அன்றைய தேசிய விருது ‘ஊர்வசி விருது’ என்று அழைக்கப்பட்டதால் ‘ ஊர்வசி சாரதா’ என்று அழைக்கப்படும் இவரை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்டு தயாரான ‘அம்மேக்கோரு தாராட்டு’ என்ற மலையாளப் படம் கடந்த ஜனவரியில் வெளியாகி மலையாள ரசிகர்களைக் கவர்ந்தது.

    கண்ணீரின் தத்துப் பிள்ளை

    துன்பமும் துயரமும் துரத்த, ததும்பும் கண்ணீரை ஏந்தி நிற்கும் கண்களையும் கேள்விக்குறியைத் திலகமாய்ச் சூடியதுபோன்ற வாழ்வையும் சுமக்கும் கதாபாத்திரங்களுக்காகவே தத்து கொடுக்கப்பட்ட நாயகி இவர். கூடு விட்டுக் கூடு பாய்ந்து காட்டிய இவரது நடிப்புத் திறமையைக் கண்டு, கதாபாத்திரங்களை இவருக்காகவே வார்க்க ஆரம்பித்தார்கள் தென்னிந்திய இயக்குநர்கள்.

    எத்தனை சோகமான கதாபாத்திரங்களில் மீண்டும் மீண்டும் நடித்தாலும் அவரது பெயரைத் தங்களது பெண் பிள்ளைகளுக்கு வாஞ்சையுடன் வைத்தார்கள் மலையாள ரசிகர்கள். ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்து, மலையாள சினிமாவில் மகுடம் சூடிய சாரதாவை மலையாள மக்கள் தங்கள் சேச்சியாகவும் அம்மேயாகவும் இன்றும் கொண்டாடுகிறார்கள்.

    சென்னை வாசம்

    1945-ல் வெங்கடேசலு ராவ் – சத்தியவதி தம்பதியின் மூத்த மகளாக ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலியில் பிறந்த அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் சரஸ்வதிதேவி. கலைமகளின் பெயரைச் சூட்டியதாலோ என்னவோ ஆறு வயதில் ஆரம்பித்துப் பரதம் கற்றுக்கொண்டார். தனது பதினோராவது வயதில் என்.டி.ராமாராவ் நாயகனாக நடித்த ‘கன்னியா சுல்கம்’ என்ற தெலுங்குப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டே பள்ளிக்கல்வியை முடித்தார். பதிமூன்று வயது முதல் நாடகங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

    மொத்தத் தென்னிந்திய சினிமாவும் சென்னையில் இயங்கியதால் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

    1961-ல் வெளியான ‘இத்தரு பித்ருலு’(இரு நண்பர்கள்) என்ற படத்தில் நாகேஸ்வர ராவின் தங்கையாக முதல் முழுநீள வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்பைக் கண்டு துணைக் கதாபாத்திரங் களுக்கான தெலுங்குப் பட வாய்ப்புகள் வரிசை கட்டி வந்தன. இன்னொரு பக்கம் நாடக வாய்ப்புகளுக்கும் பஞ்சமில்லை. இவரது அபார நடிப்புத் திறமையைப் புரிந்துகொண்ட மலையாளப் பட உலகம் இவரை மொத்தமாக ஸ்வீகரித்துக்கொண்டது.

    சாதனைகள் படைத்த துலாபாரம்

    திரைக்கதையின் பிதாமகன் என்று வர்ணிக்கப்படும் எம்.டி. வாசுதேவன் நாயர் தனது சிறுகதையொன்றை விரித்து எழுதித் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமான படம் ‘முறப்பெண்ணு’. முதுபெரும் இயக்குநர் ஏ. வின்சென்ட் இயக்கத்தில் பிரேம்நசீர் நாயகனாக நடித்து 1965-ல் வெளியான படம். இந்தப் படத்தில் பாக்கியலட்சுமி என்ற முறைப்பெண் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி மலையாள ரசிகர்களைக் கவர்ந்தார்.

    அதன் பிறகு எம். டி. வி. – ஏ. வின்சென்ட் – பிரேம் நசீர் கூட்டணி வெற்றிகளைக் குவித்த படங்களில் சாரதா ஆஸ்தான நாயகி ஆனார்.

    தொடர்ந்து பத்து ஆண்டுகள் மலையாளப் பட உலகின் தன்னிகரற்ற நாயகியாகக் கோலோச்சிய சாரதா நடிப்புக்கான முதல் தேசிய விருதைப் பெற்றது 1968-ல் வெளியான ‘துலாபாரம்’ படத்துக்காக. ஏ. வின்சென்ட் இயக்கிய இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டபோது இவருக்கு மாற்றாக யார் என்ற யோசனைக்கே இடமில்லாமல் எல்லாவற்றிலும் கதாநாயகியாக நடித்தது சாரதாவேதான்.

    துலாபாரத்தின் தெலுங்குப் பதிப்பு ஆந்திராவின் பெஜவாடா நகரில் இருக்கும் லீலா மஹால் என்ற திரையரங்கில் வெளியாகியிருந்தது. அந்தத் திரையரங்குக்குத் துலாபாரம் படம் பார்க்கப் போயிருந்தார். இவர்தான் சாரதா என்று யாருக்கும் தெரியவில்லை. படத்தின் உச்சகட்டக் காட்சியில் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அத்தனை பெண்களும் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து சாரதாவும் ஆனந்தத்தில் அழுதார்.

    ஒரு பெண் ரசிகை வாய்விட்டுக் கதறி “பாவி மகளே… மூணு குழந்தைகளை வச்சுக்கிட்டு இவ்வளவு கஷ்டப்படுறியே... என் வீட்டுக்கு வந்தா வயிறார நான் போஜனம் தர மாட்டேனா” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதிருக்கிறார். அந்தக் கணமே ஓடிப் போய் அந்த ரசிகையைக் கட்டிப்பிடித்துக்கொண்டார் சாரதா.

    ஒருமணி நேரம் நின்ற ரயில்

    சாரதாவின் நடிப்பாளுமைக்கு மேலும் பெருமை சேர்ப்பது அடூர் கோபால கிருஷ்ணனின் கலைப்படங்களில் அவர் கதாபாத்திரங்களாக மிளிர்ந்த காலம். அடூர் இயக்கத்தில் 1972-ல் வெளியான ‘ஸ்வயம்வரம்’ படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான ஊர்வசி விருதை இரண்டாவது முறையாகப் பெற்றார். முன்றாம் முறை அவர் தேசிய விருதைப் பெற்றது பி.எஸ். நாராயணா இயக்கத்தில் 1979-ல் வெளியான ‘நிமாஜனம்’என்ற தெலுங்குப் படத்துக்காக.

    25-ம் வயதில் முன்னணிக் கதாநாயகியாக இருந்தபோது ஒரு படப்பிடிப்புக்காகச் சென்னையிலிருந்து கல்கத்தா மெயிலில் சென்றுகொண்டிருந்தார் சாரதா. ஆந்திராவின் அனக்காபள்ளி என்ற நிலையத்தில் ரயில் நின்றது. சாரதாவை ரயிலில் பார்த்துவிட்ட உள்ளூர் ரசிகர்கள் திமுதிமுவென்றுகூட ஆரம்பித்தார்கள். ரயில் கிளம்பிப் போய்விட்டால் சாரதாவைக் காண முடியாதே என்று கிளம்பிய வண்டியை அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டார்கள். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.

    ரயிலை விட்டு எந்தக் கர்வமும் இல்லாமல் இறங்கிவந்த சாரதா “இந்த வண்டியில் நான் மட்டும் பிரயாணம் செய்யவில்லை. பலர் அவசர வேலையாகச் செல்லலாம். தயவுசெய்து எல்லோரும் உதவுங்கள்” என்று அவர் கேட்டுக் கொண்ட பிறகே ரயிலுக்கு வழிவிட்டார்கள் ரசிகர்கள். ஐந்து நிமிடங்கள் மட்டுமே நிற்க வேண்டிய அந்தச் சிறிய நிலையத்தில் சாரதாவுக்காக ஒருமணி நேரம் ரயில் நின்றது.

    சிவாஜி கண்டுபிடித்தார்

    எத்தனை பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் எளிமையின் உருவமாக வாழ்ந்துவரும் சாரதாவைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ‘திருப்பதி’ என்ற நாடகத்தில் சாரதா நடித்துக் கொண்டிருந்தபோது, அந்த நாடகத்துக்குத் தலைமை தாங்க வந்தார் சிவாஜி.

    நாடகத்தில் சாரதாவின் நடிப்பைப் பார்த்து வியந்து 1963-ல் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான ‘குங்குமம்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ‘துளசி மாடம், ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ ‘ஞான ஒளி’ ‘என்னைப்போல் ஒருவன்’உள்ளிட்ட பல படங்களில் சிவாஜியுடன் சரிக்குச் சரியாக நடித்துப் புகழ்பெற்ற சாரதா எம்.ஜி.ஆருடன் ‘நினைத்ததை முடிப்பவன்’படத்தில் நடித்தார்.

    சென்னையில் வசித்தாலும் தனது சொந்த ஊரான தெனாலியில் 100 ஆண்டுகளாகத் தன் குடும்பத்தார் வசித்த பாரம்பரிய வீட்டை வாங்கி அதைப் புதுப்பித்து அதற்கு ‘ஊர்வசி பவனம்’என்று பெயர் சூட்டியிருக்கிறார் அரசியலிலும் கால் பதித்த இந்தச் சாதனை நட்சத்திரம்.

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #962
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    சினிமா ரசனை 2: பட்டை தீட்டிய பயிற்சிப் பட்டறை!




    ஈவ் என்ஸ்லர்
    ஈவ் என்ஸ்லர்

    உலக நாடக அரங்கின் மிக உயரிய விருதான டோனி விருதை ஈவ் என்ஸ்லர் என்ற பெண் வென்றிருக்கிறார். கிட்டத்தட்ட இருநூறு பெண்களைப் பேட்டிகண்டு, பாலியல், உறவுகள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை ஆகியவற்றைப் பற்றிய அவர்களது கருத்தை 1996-ல் ஈவ் என்ஸ்லர் பதிவுசெய்தார்.

    இந்தக் கருத்துகளை மையமாக வைத்து, வெஜைனா மோனோலாக்ஸ் (Vagina Monologues) என்ற நாடகத்தையும் எழுதினார். பெண்களுக்கெதிரான வன்முறையை எதிர்த்து எழுதப்பட்ட இந்த நாடகம் உலகெங்கும் புகழ்பெற்றது. (நீங்கள் எதிர்பார்ப்பது போலவே) தமிழகத்தில் உடனடியாகத் தடையும் செய்யப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மேடையேற்றப்பட்டாலும், தமிழ்நாட்டில் மட்டும் இன்றுவரை அத்தடை நீடிக்கிறது.

    இந்நாடகத்தின் மூலமும், அவருடைய பிற பங்களிப்புகளின்மூலமும் குறிப்பிடத்தக்க சமுதாயத் தொண்டு புரிந்ததன் காரணமாகவே இஸபெல் ஸ்டீவன்ஸன் விருது 2011-ல் ஈவ் என்ஸ்லருக்கு வழங்கப்பட்டது. இந்த ஈவ் என்ஸ்லரை அழைத்து, தனது படத்தில் நடிக்கும் நடிகைகளுக்காக ஒரு கருத்துப் பட்டறை நடத்தச் சொல்லி ஜார்ஜ் மில்லர் என்ற இயக்குநர் பரிந்துரைத்தார்.

    உலகம் முழுக்கப் பெண்களுக்கெதிராக நடைபெறும் வன்முறை, போர்க்களங்களில் சிக்கிக்கொள்ளும் பெண்களுக்கெதிராக எப்படியெல்லாம் வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது என்பன போன்ற கருத்துகளை வைத்துக்கொண்டு ஈவ் என்ஸ்லர் ஒரு வாரம் நமீபியாவில் இருந்த படப்பிடிப்புத் தளத்துக்கே வந்து நடத்திய இந்தப் பட்டறை பரவலாகப் பரவியது. இதனால் படப்பிடிப்பில் இருந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலருமே இந்தப் பட்டறையில் இடம்பெற்றனர்.

    சுக்குநூறாக உடைத்த இயக்குநர்

    இந்தப் பட்டறைக்கான காரணம் என்ன? ஜார்ஜ் மில்லர் இயக்கிய ‘மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்’ (Mad Max: Fury Road) என்ற அந்தப் படம் முழுக்கவே பெண்களுக்கெதிரான வன்முறையைப் பற்றியதுதான். ஆனால் பொதுவாக நாம் எதிர்பார்ப்பதுபோல இத்தகைய கருத்துகளை மென்மையாகச் சொல்லும் படம் இல்லை இது. தொடக்கம் முதல் இறுதிவரை அதிரடி ஆக்*ஷன் காட்சிகள் நிறைந்த ஹாலிவுட் படம்.

    ஆனால் பிற ஹாலிவுட் படங்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்றால், இதில் ஒரு பெண்தான் (சார்லீஸ் தெரான்) கதாநாயகி. அவருடன் நடித்திருக்கும் டாம் ஹார்டி, படம் முழுக்கவே சார்லீஸ் தெரான் ஏற்றிருக்கும் ஃப்யூரியோஸா என்ற கதாபாத்திரத்துக்குத் துணையாகவே வருகிறார்.

    சில காட்சிகளில் இவரால் செய்ய முடியாமல் போனவற்றையெல்லாம் ஃப்யூரியோஸா எளிதாகச் செய்து முடிப்பதுபோன்ற காட்சிகள் படத்தில் உள்ளன. ஹாலிவுட்டுக்கு இது புதிதுதான். அங்கே எப்போதுமே மிகப் பெரிய ஆக்*ஷன் படங்களில் ஆண்கள் மட்டுமேதான் நாயகர்கள். பெண்களுக்கு எப்போதும் துணைக் கதாபாத்திரம்தான். மிக அரிதாக ‘ஏலியன்’ போன்ற படங்கள் வந்தாலும், பெரும்பாலான படங்களில் அங்கே பெண்கள் ஊறுகாய்கள் மட்டுமே. அதைத்தான் ஜார்ஜ் மில்லர் சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கிறார்.

    இந்தப் படத்திலும், நாயகி ஃப்யூரியோஸா காப்பாற்றுவது ஐந்து அப்பாவிப் பெண்களை. ஒரு கொடுங்கோலனின் பிடியில் சிக்கிக்கொண்டு, அவனுடைய வாரிசுகளைச் சுமப்பதற்காக அடிமைப்படுத்தப்படும் ஐந்து பெண்களைத்தான் ஃப்யூரியோஸா தப்புவிக்கிறாள். அவளைத் துரத்திக்கொண்டு வரும் இம்மார்ட்டன் ஜோ என்ற அந்தக் கொடியவனின் பிடியிலிருந்து இந்த ஐந்து பெண்கள் எவ்வாறு தப்புவிக்கப்பட்டனர் என்ற கதையை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்வதுதான் ‘மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்’.

    கற்றுத் தந்த பட்டறை

    இப்படிப் படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்துமே பெண்கள் சார்ந்து இருந்ததால்தான் இயக்குநர் ஜார்ஜ் மில்லர் நாடகாசியர் மற்றும் பெண்ணியச் செயற்பாட்டாளர் ஈவ் என்ஸ்லரை அழைத்தார். படத்தில் நடித்த அனைத்துப் பெண்களுக்கும் ஈவ் என்ஸ்லரின் பட்டறை மிகவும் உதவியது. உலகம் முழுக்க இப்படி அடிமைப்படுத்தப்பட்ட பெண்களைப் பற்றி ஈவ் என்ஸ்லர் விரிவாகப் பேசினார்.

    ஜப்பானியர்களால் இப்படி அவர்களது பாலியல் தேவைகளுக்காக அடிமைகளாக்கப்பட்ட Comfort Women என்று அழைக்கப்பட்ட பெண்களைப் பற்றி, போஸ்னியா, காங்கோ, ஆஃப்கானிஸ்தான், ஹைத்தி போன்ற இடங்களில் இன்னமும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வன்கொடுமைகள், வன்முறைகள் ஆகியவை பற்றி, அமெரிக்காவில் நடந்துவரும் பாலியல் வியாபாரத்துக்காக (Sex Trafficking) பிற நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பெண்களை ஒவ்வொரு வருடமும் ஏராளமாக அமெரிக்காவினுள் சட்டவிரோதமாகக் கொண்டுவருவதைப் பற்றியெல்லாம் ஈவ் என்ஸ்லர் உதாரணங்களோடும் புள்ளி விவரங்களோடும் இந்தப் பட்டறையில் விளக்கினார். இதனால் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களைப் படத்தில் நடித்தவர்கள் உணர்ந்துகொண்டு நடிக்க முடிந்தது. உண்மையில் இந்தப் பயிற்சிப் பட்டறை படத்தில் இடம்பெற்ற பெண் நடிகர்களைப் பட்டை தீட்டியது.



    படத்தின் இயக்குநர் ஜார்ஜ் மில்லர், இக்கதாபாத்திரங்களை அடிமைகளாகக் காட்ட விரும்பவில்லை. மாறாக, சுதந்திர வேட்கை உள்ள பெண்களாக, அடிமைத்தளையை உடைத்துக்கொண்டு வெளிவரும் வீரமிக்க பெண்களாகவே காட்ட விரும்பினார். படத்தின் தொடக்கத்தில் கிழிந்துபோன ஆடைகளோடு அடிமைகளாகக் கிடந்த பெண்கள், படம் முடியும் தறுவாயில் எப்படி வீரத்தோடு போரிட்டு மரணத்தையும் தழுவத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் ஜார்ஜ் மில்லர் காட்ட விரும்பிய கதை. அது ஈவ் என்ஸ்லரின் பங்களிப்பால் இன்னும் துல்லியமாக எடுக்கப்பட்டது.

    நாம் கவனிக்க வேண்டிய படம்

    உலகம் முழுவதும் சில வாரங்கள் முன்னர் வெளியான ‘மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்’ படத்துக்கு ஏராளமான வரவேற்பு. படத்தில் இடம்பெற்ற அட்டகாசமான சண்டைக் காட்சிகளைவிடவும், படம் முழுவதும் பேசப்பட்ட பெண்ணியக் கருத்துகள்தான் உலகெங்கும் மக்களின் ஆதரவைப் பெற்றுவருகின்றன.

    முழுக்க முழுக்கக் வணிகத் திரைப்படமான இதில், இப்போது பரவலாக விவாதிக்கப்பட்டுவரும் பல பெண்ணியக் கருத்துகள் இடம்பெற்றது உண்மையிலேயே அனைவரும் வரவேற்க வேண்டிய அம்சம். குறிப்பாக, இந்தியாவில் இது அவசியம் கவனிக்கப்பட வேண்டிய படம்.

    மேலோட்டமாகக் கவனித்தால் இவையெல்லாம் இப்படத்தில் தெரியாமலேயே போய்விடும் ஆபத்து உள்ளது. எனவே, ஈவ் என்ஸ்லரைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு அதன் பின் இப்படம் பார்த்தால் அவசியம் அது பல கேள்விகளை மனதில் எழுப்பும்.

  5. Thanks vasudevan31355 thanked for this post
  6. #963
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - பாடல் உங்களுக்காகவும் , CK விற்காகவும் அண்ட் கலை அவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் - கணவன் பாதையில் செல்லும் இந்த பாடல் முத்துக்களின் வரிசையில் இடம் பெற வேண்டிய ஒன்று .


  7. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  8. #964
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    'வாடா மச்சான் வாடா'

    [COLOR="blue"][SIZE=2][B]'அன்று கண்ட முகம்' படத்தில் வரும் செம ஜாலி கலாய்ப்பு பாடல். 1968-ல் வந்த இந்தப் படம் நன்றாகவே இருந்தது.



    ரவி, நாகேஷ் இருவரும் சேர்ந்தால் கேக்கணுமா?
    வாசு - மற்றவர்களுக்கு சாதாரணமாகத் தெரியும் ஒரு பாடலை தேடிக்கண்டுபிடித்து , அதை உயிர்ப்பித்து அதற்க்கு அழகு பூட்டி , சிங்கார நகையைப்பூட்டி ( என் முத்துக்களில் சிலவற்றை காணவில்லை, தேடுகிறேன் !!) அழகிய நெய்வேலி அக்மார் நெய்யில் தமிழைத்தோயித்து இங்கு எல்லோருக்கும் தாழ்வு மனப்பான்மை யைக்கொடுத்து ( ஏன் இவ்வளவு நாட்களாக இந்த பாடலை ரசிக்காமல் போய்விட்டோம் என்று எண்ணும் படி ---) இங்கு எங்கள் எல்லோருக்கும் மதுர காண விருந்து வைக்கும் உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை ...... சிலருக்கு இறைவன் திறமையைக்கொடுக்கிறான் - சிலருக்குத்தான் கொடுக்கிறான் --- திறமையை வைத்தே சிலரை படைக்கிறான் - நீங்கள் மூன்றாவது இனத்தை சேர்ந்தவர் என்று ,நான் சொல்லி யாரையும் புரியவைக்கும் தேவை இல்லை ... ஸ்விம்மிங் பூலில் இருப்பதால் , போட்டுக்கொண்டிருக்கும் நீச்சல் உடையுடன் உங்களை மனமார வாழ்த்துகிறேன் ... பிடியுங்கள் இந்த பாட்டை - இதில் எனக்கு தலைவர் தென்படவில்லை - நீங்கள் தான் தெரிகிறீர்கள் ..........

    Last edited by g94127302; 13th June 2015 at 11:06 AM.

  9. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  10. #965
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு

    சூப்பர் பாடல்

    "வாடா மச்சான் வாடா பயபடாம வாடா "
    ஏடா மூடா உந்தன் ஜம்பம் என்னிடம் பலிக்குமாடா "

    வில்லனின் அடியாட்கள் ஒருவர் ஜஸ்டின் என்று நினைக்கிறன் இன்னொருவர் யார் என்று தெரியவில்லை . இந்த பாட்டு முடிந்த உடனே ஒரு fight இருக்கும்.கால் பிடி, கை பிடி, ஜூடோ போன்றவற்றுடன் அவ்வபோது அடியாட்களின் ஓங்கார சவுண்ட் "ஹ ஆ உ "
    இன்று வேலை கிழிஞ்ச மாதிரி தான் .சீட் கிழியாமல் இருந்தால் சரி

    இது போன்ற படங்கள் இப்போது வருவதில்லை
    வாலிப விருந்து,அன்று கண்ட முகம்,எதிரிகள் ஜாக்கிரதை ,நான் யார் தெரியுமா ,பணக்கார பிள்ளை,கௌரி கல்யாணம்,நாம் மூவர் நெல்லை palace டீ walace திரை அரங்கில் 70 களில் கண்டு கழித்த களித்த திரைப்படங்கள்.

    தாடி கார மச்சான் இவரு நாடி பிடிச்சு பாரு - பாட்டு நினைவு இருக்கா
    gkrishna

  11. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  12. #966
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங் ஆல்

    வாசு, கிருஷ்ணா நன்றி

    வாசு வாடா மச்சான் வாடா ரொம்ப நாள் முன்னால கேட்ட பாட்டு இப்பத் தான் மறுபடி கேட்கிறேன் நன்றி

    நமக்கெல்லாம்பெண்கள் மச்சான் என்று பாடுவது தான் நினைவுக்கு வரும்..

    ஏ மச்சான் என்ன மச்சான்..

    அங்கே வீட்டூக்குள்ளே ஆளிருக்காக தொல்லையாக
    இங்க காட்டுக்குள்ளே யாரிருக்கா என்னைப் போலே

    கோட் சூட்டோட காட்டில ஹீரோ – நாடோடி டிரஸ்ஸில்ஹீரோயின்.. கண்மணி ராஜா..




    *

    முத்து பாட்டு வரிசைக்கு தாங்க்ஸ் ரவி.. என் வியாபாரமும் அதே என்றாலும் தங்கள் தகவல்களும் நன்றாக உள்லன

    *
    ராஜ் ராஜ் சார் வரிகளுக்கு நன்றி

    *

    எஸ்.வாசு.. அழகான பாடல் இந்த குருட்டுப் பெண் பாடும் பதங்க் பாடல்..அப்படியே இன்னொரு தமிழ்ப் பாடலை நினைவு படுத்துகிறது இல்லியோ

    ஏறு பூட்டிப் போவாயே அண்ணே சின்னண்ணே




    நிறைய எழுதலாம்..இப்போ வெளியில் போய்விட்டு அப்புறமா வாரேன்..

  13. Thanks vasudevan31355 thanked for this post
  14. #967
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அப்பாடா ,இன்றுதான் மூச்சு விட நேரம் கிடைத்தது. கிடைத்த மூச்சை யார் மீதாவது விட வேண்டாமா? (சுதந்திரம் என் மூச்சு, அதை பிறர் மீது விடாதே).அதுதான் இங்கு வந்தேன். இந்த நூற்றாண்டில் பிறந்து சினிமா பிடிக்காது என்று சொல்பவன் பிறக்கவே தகுதியற்றவன். அதுவும் நல்ல சினிமா பிடிக்காது என்று சொல்பவன் வாழவே தகுதியற்றவன்.

    எனக்கு சினிமா இயக்குனர்களின் கரும் பலகை (அல்லது வெண் பலகை)என்பதில் அபார நம்பிக்கையுள்ளவன். உலகத்திலேயே ஒரே ஒரு மனிதருக்காக மட்டும் ,நடிகரின் படம் என்று ரசிப்பது ,நம் நடிகர்திலகத்தை முன்னிட்டு மட்டுமே. இவரை ரசிக்க தெரியாதவன் (வாய் விட்டு சொல்வானேன்)

    ஏற்கெனெவே எனக்கு பிடித்த தமிழ் படங்களை வரிசை படுத்திய போது ,முரளி முரண் பட்டார். இங்குதான் இலக்கியம்,தத்துவம்,கரு, நவரத்னங்கள் என்று ஏதேதோ நுழைந்த பிறகு, இதையும் நுழைத்தால் என்ன என்று பட்டது. எனக்கு மிக பிடித்த உலக இயக்குனர்களின் ஒரே ஒரு படம் அலச படும். எனக்கு பிடித்த வரிசையில்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  15. #968
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    மதுர கானம் திரி நன்றாய் தானே போய்க்கொண்டிருந்தது. பிடித்தவர்கள் வரட்டும் பதியட்டும். பிடிக்காதவர்கள் ஒதுங்கியிருக்காமல் எதற்கு கலகத்தை உண்டு செய்ய வேண்டும்..
    டியர் ராஜேஷ் சார்,

    நடிகர்திலகம் திரியில் சிவா அவர்களின் பதிவுக்கு நான் இட்ட பதிவுக்கு வாசுதேவன் அவர்கள் அதே திரியில் பதில் சொல்லியிருந்தால் ரேயானால், விஷயம் அங்கேயே முடிந்துபோயிருக்கும் அல்லது அங்கேயே தொடர்ந்திருக்கும். மதுர கானம் திரியில் கலகமும் வந்திருக்காது. அங்கே நான் பதித்ததற்கு இங்கே பதில் சொல்லி கலகத்தை இங்கே இறக்குமதி செய்தது யார் என்பது இங்கு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

    அதிலும் அவரிடமிருந்து வந்த பதில்களில் என்னை முட்டாள், மென்ட்டல், தற்குறி, (இன்னும் பல அர்ச்சனைகள்) கடைசியாக சகதி என்று அழைக்கப்பட்டுள்ளேன். ஆனால் என்னுடைய பதிவுகளில் வாசுதேவன் பற்றி ஒரு வார்த்தைகூட மரியாதைக் குறைவாக வந்ததில்லை. காரணம் அவருடைய அந்தரங்க சுத்தியான உழைப்பின்மீது எனக்கிருக்கும் மரியாதை.

    பாடல்கள் தீவிரமாக அலசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மேலும் இதை நீட்டிக்க விரும்பவில்லை.

  16. Thanks Gopal.s thanked for this post
  17. #969
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் கிருஷ்ணா சார்,

    பல்வேறு இடங்களில் பதியப்பட்டிருக்கும் சிறந்தவற்றை இங்கே தொகுத்து தருவது சிறப்பாக உள்ளது. பல நல்ல விஷயங்களை தேடி இங்கு பறிமாருகீறீர்கள்.

    அனைத்தும் நன்றாக உள்ளன. தொடருங்கள்.

  18. Thanks gkrishna thanked for this post
  19. #970
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //தாடி கார மச்சான் இவரு நாடி பிடிச்சு பாரு - பாட்டு நினைவு இருக்கா//

    நினைவு இருக்காவா? இந்தப் பாட்டோடேயே வாழ்ந்த காலங்கள் உண்டு கிருஷ்ணா. கோபாலருக்கு கோகோ கோலா இந்தப் பாடல். இப்ப ஓடி வரும் பாருங்களேன்.

    'எட்டடி உயரம் ரெண்டடி அகலம் ஒட்டகம் என்பது இவன்தானோ'

    ரவி தாடியுடன் செம ஸ்டெப்ஸ். கூட மாந்தோப்பில் நின்றிருந்த ரத்னா மாடர்ன் டிரெஸ்ஸில்.

    இன்னா பாட்டு. 'வாடா மச்சான் போட்டா' நீர் 'சிங்கப்பூரு மச்சானை'கூப்பிடுறீர். (தலைவர் 'சவாலே சமாளி'யில் நம்பியாரிடம் தாலியைக் கையில் வைத்துக் கொண்டு சொல்வார் 'சும்மா இருடா மச்சான்' அந்த மச்சானுக்கு முன் எந்த மச்சானும் நிக்க முடியாது. )

    நாம் மூவர் அல்ல. நால்வர் ... ஐவர்.. அறுவர்... ஏழ்வர். ஆனால் வீழ்வோர் அல்ல.

    இன்னைக்கு முழுக்க மச்சான் பாட்டா இருக்கப் போவுது.

    கிருஷ்ணா! மச்சானைப் பார்த்தீங்களா?

    Last edited by vasudevan31355; 13th June 2015 at 12:02 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  20. Likes rajeshkrv, Russellmai, Gopal.s liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •