Page 120 of 400 FirstFirst ... 2070110118119120121122130170220 ... LastLast
Results 1,191 to 1,200 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1191
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    tthiraiyil bhakthi ( helping rajesh )

    From SrivaLLi

    yaar undhanaippol enai aadharippavar aarumukatharase.....



    Baby Kamala dancing.

    I posted this song because a leading vocalist opened his concert with this song. That was a surprise to me. In my days concerts always opened with 'vaathaapi ganapathim.....'. I like the change shifting to Tamil compositions opening the concerts !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. Thanks rajeshkrv thanked for this post
    Likes chinnakkannan, rajeshkrv liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1192
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Taxi Driver -1975-Martin Scorsese

    Neo noir படங்களின் மூலகர்த்தாக்களில் ஒருவர்.அது என்ன Neo Noir ?அடிக்கடி சொல்கிறாயே என்கிறீர்களா? இதற்கு அர்த்தம் Theme (கருபொருள் )Content (உட்பொருள்கள் ),Style (அமைப்பு),Form (வடிவம்),Visual Element (காட்சி படிமங்கள்) எல்லாவற்றிலும் வேறுபட்ட புதிய கருப்பு படங்கள் . பெரும்பாலும் Anti -Hero படத்தின் protagonist ஆக இருப்பார்.Camera Placement ,Light &Shadows ,Low Key Lighting ,Visual எல்லாமே மாறுபட்டிருக்கும்.இதில் காதாநாயகர்கள் மன அழுத்தம் கொண்டு விரக்தியான விளிம்பு நிலையில் ,அழிவில் நீதி காணுவார்கள்.

    எனக்கு பிடித்த மிசொகுசி,ரொசலினி,பெல்லினி,குப்ரிக்,அன்ட்ரே வாஜ்தா,ஆர்சென் வேல்ஸ்,பிரான்சிஸ்கோ ரோசி,ஹிட்ச்காக் போன்ற இயக்குனர்களால் உந்த பட்டவர் Martin Scorsese .இவரின் சமீப படங்கள் Gangs of Newyork ,Aviator ,Departed போன்ற படங்கள் எனக்கு பிடிக்குமென்றாலும்,taxi Driver தனி ரகம்.1975 இல் இதை பட விழாவில் பார்த்து விட்டு வந்த போது சக மாணவர்களின் பொறாமை தீயில் வெந்தேன். ஆனால் எனக்கு படம் பிடித்தது வேறு காரணங்கள்.(அந்த சமாசாரத்துக்கு மலையாள பிட் படம் போதுமே )

    வியட்நாம் போர் என்பது அமெரிக்க மனசாட்சியை குலுக்கி விட்டது. சம்பந்தமே இல்லாத, எதற்கு என்ற காரணம் புரியாமல் ,கட்டாயமாக ராணுவ சேவைக்கு பல இளைஞர்கள் பரிச்சயமில்லாத நாட்டுக்கு ,குரூரம் புரிய அனுப்ப பட்டு உடலும்,மனமும் சிதைந்து ,மன அழுத்தத்திற்கு ஆட்பட்டார்கள். இதன் கதாநாயகன் ,மன அழுத்தம் கொண்டு ,தூக்கம் வராமல் இரவில் டாக்ஸி ஓட்டி, போர்னோ படம் பார்த்து கொண்டு நோக்கமில்லாமல் வாழ்வை கழிப்பவன்.(பெரும்பாலும் இந்த காலகட்டத்தில் ஹிப்பி culture அல்லது criminal tendency பல பேரை அமெரிக்காவில் ஆட்கொண்டது). ஒரு பெண்ணை கவர முயன்று தோல்வி கண்டு, ஏதோ ஒரு விபசார பெண் விஷயத்தில் obsession கொண்டு, அவளை விடுவிக்கும் போக்கில் கடைசியில் மன அழுத்த வெடிப்பில் குற்றங்களை செய்து , ஒரு உண்மை நாயகனாக கூட்டத்தால் கொண்டாட படுகிறான்.

    அப்பப்பா ,முதல் காட்சியிலிருந்து படம் நம்மை கட்டி போடும். இந்த இயக்குனருக்கும் ,Robert Deniro வுக்கும் நம்ம பீம்சிங்-சிவாஜி அளவு chemistry . இந்த படத்தில் நண்டின் இயல்பில் நடிப்பார் . "He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side." நமது நடிகர்திலகமும் பல படங்களில் மிருகங்களின் இயல்பை தனது பாத்திரங்களில் கையாண்டு ,பாத்திரங்களை மெருகேற்றுவார். அத்தனை உலக நடிகர்களும் கையாண்ட இந்த உத்தியை ,நமது மேதை 50 களில் இருந்தே கையாண்டுள்ளார்.

    இந்த படம் , எப்படி ஒரு Neo Noir படம் எடுக்க பட வேண்டும் என்ற ஒரு பாடம். ரொம்ப உட்புக மனமில்லையென்றால் ஒரு crime thriller மாதிரியும் ரசித்து விட்டு கடக்கலாம்.
    Last edited by Gopal.s; 18th June 2015 at 12:04 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Thanks vasudevan31355 thanked for this post
  6. #1193
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு..புகுந்த வீடு பார்த்ததில்லை (படம் தான்) மாடிவீட்டு மைனா பாட்டு புகையாய்க் கேட்ட நினைவு..இப்போது தான் பார்க்கிறேன்..வழக்கம்போல அக்கக்காக அனுபவித்து ரசித்திருக்கிறீர்கள்

    ராகவேந்தர்.. இசைத்தவர்களின் படங்கள் தகவல்களுக்கு நன்றி..

    ராஜேஷ் தெலுகுப் பாட்டிற்கும் ராஜ் ராஜ் குமாரிகமலா பாட்டிற்கும் தாங்க்ஸ்

    கோ.. வெகு அழகாக இருக்கிறது நீங்கள் படங்கள் கொடுப்பது..டாக்ஸி டிரைவர் பார்த்ததில்லை..ஆனால் ராபர்ட் டி நீரோ பிடிக்கும் பிற் படஙக்ளில்.. அனலைஸ் திஸ், மீட் த பேரண்ட்ஸ் பார்த்திருக்கிறேன்..இன்னொரு படம் ராபர்ட் டி நீரோவும் இன்னொருவரும் ( மாஸ்க் ஹீரோவா என்ன) கனடாபக்கம் சென்று ஒரு சர்ச்சில் பாதிரியார்களாக அதகளம் பண்ணியிருப்பார்கள் ( படம் பெயர் மறந்து விட்டது) மறக்காதது ஒன்று - அந்தப் படத்தில் டெமி மூர் உண்டு (அதானே) தொடருங்கள்..

  7. Thanks vasudevan31355 thanked for this post
  8. #1194
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Taxi Driver..

    The real dimension in which this film has to be approached ... is rightly presented by Gopal..

    Well done Gopal..

    பல அந்நியப் படங்கள் நமக்குள்ளே பாதிப்பு ஏற்படுத்தியுள்ளன என்றால் அதற்கு மூல காரணம் நமது நடிகர் திலகமே... நடிப்பின் அத்தனை பரிமாணத்தையும் தன் முதல் சில படங்களிலேயே அளித்து விட்டதால், எந்த நடிகரைப் பார்த்தாலும் எந்தப் படத்தைப் பார்த்தாலும் மனம் நம்மையும் அறியாமல் நடிகர் திலகத்தைத் துணைக்கழைக்கிறது. அவருடைய துணை நம் நினைவில் வராமல் நம்மால வேற்றுப் படங்களைப் பார்க்க முடிவதில்லை. இதற்கு Sivaji Phobia என்று பெயர் வைத்தாலும் தப்பில்லை.

    இதே அடிப்படையில் தான் டாக்ஸி டிரைவர் பார்க்கும் போது எனக்குத் தோன்றியது.

    மிகவும் அதிக அளவில் நடிகர் திலகத்தை ஒவ்வொரு ஃப்ரேமிலும் நினைவூட்டிய படம், ஓமர் முக்தர். அந்தோனி க்வின் நடிப்பு அப்படியே நம்மவரை நினைவூட்டும்.

    ஓமர் முக்தரைப் பற்றிய அலசலை கோபாலிடம் எதிர்பார்க்கிறேன்.

    Of course is not such a cult classic in my view.

    ஒரே ஒரு யோசனை தோன்றுகிறது..

    இது பாடல்களைப் பற்றிய திரி என்பதால் படங்களைப் பற்றிய கருத்துரைகளை நம் நெஞ்சம் மறப்பதில்லை இழையில் விவாதிக்கலாமே.. (எல்லாம் ஒரு சுயநலமே)
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Gopal.s, vasudevan31355 liked this post
  10. #1195
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    பிறப்பால் தமிழர்களாக இருந்தாலும் சிலர் வட இந்தியாவில் வளர்ந்ததால் அங்கே பிரபலமடைந்தார்கள்
    அவர்களில் இந்த இருவர் மிகச்சிறந்தெ பெண் பாடகிகள்

    ஒருவர் கவிதா கிருஷ்ணமூர்த்தி இல்லை சுப்ரமணியம்.. அல்கா யாக்னிகும் இவரும் 80’களின் கடைசியில் வந்து 90’களின் கடைசி வரை கொடிகட்டி பறந்தனர்.

    அல்கா மெலோடி என்றால் கவிதா ஒரு வித ஹிந்துஸ்தானி சாயை உள்ள குரல் ..
    எத்தனை எத்தனை பாடல்கள் ... ஆர்.டி.பர்மனின் கடைசிபடங்களின் பெண் குரல் இவருடையது தான்
    ஏக் லட்கி கோ தேகா போன்ற பாடல்கள் இன்றும் நம்மை கவரத்தானே செய்யும்..

    ஆஜ் மைன் ஊபர் ஆஸ்மான் நீச்சே , மார் டாலா போன்ற பாடல்களின் இவரது திறமை நமக்கு தெரியுமே
    இவர் தமிழில் குறைவாகவே பாடியிருந்தாலும் தமிழ் உச்சரிப்பிலும் சரி பாடிய விதத்திலும் சரி என்றுமே சூப்பர் தான்

    ஆர்.டி.பர்மனின் இசையில் தான் இவரது முதல் தமிழ் பாடலும்

    அடடா வயசுப்புள்ள



    பின் பல பாடல்கள் பாடினாலும் எனக்கு மிகவும் பிடித்த 2 பாடல்கள்
    ஆம்
    தேவதை படத்தில் இளையராஜாவுடன் இவர் பாடிய நாள் தோறும் எந்தன் கண்ணில் நீ பெளர்ணமி

    அதே போல் ரிதம் திரையில் உன்னியுடன் இவர் பாடிய காற்றே என் வாசல் வந்தாய் பாடலும் அழகோ அழகு



    கவிதாவைப்போலவே தமிழராய் இருந்தாலும் வட இந்தியாவில் புகழ்பெற்ற இன்னொருவர்
    மஹாலெக்*ஷ்மி ஐயர்

    இவரும் சங்கர் மகாதேவனும் மராட்டி அபங் எல்லாம் வெளுத்துவாங்குவார். ஒரு துளி கூட இவர்கள் பாடுவதில் தமிழ் வாடை கொஞ்சம் கூட இருக்காது.
    இவரும் தமிழில் பல பாடல்களை அற்புதமாக பாடியுள்ளார்
    கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
    என்னவோ என்னவோ
    குறுக்கு சிறுத்தவளே
    வெள்ளி மலரே வெள்ளி மலரே
    யாரோ யாரோடி
    பூவே வாய் பேசும் போது
    முத்தம் முத்தம் முத்தமா
    மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே
    போன்ற அற்புத பாடல்கள் இவரது குரலில் ஒலித்தது.
    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இளையராஜாவின் இசையில் பூந்தோட்டம் திரையில் ஹரிஹரனுடன் பாடிய
    மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்


  11. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, chinnakkannan liked this post
  12. #1196
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஜி!

    கலந்து கட்டி விளையாடி விட்டீர்கள். சூப்பர். கவிதாவின் கிறங்கடிக்கும் குரலில் சொக்கிப் போனவன் நான். 'அடடா வயசுப் புள்ள' செம ரகளை. அதுவும் அவர் 'அஹ்ஹோ' என்று சப்போர்ட் பண்ணும் போது அள்ளிகிட்டு போகும்.

    ஜி! மறுபடி மூட்-அவுட் செய்து விட்டீர்கள். கவிதா பாடல்களை கேட்க ஆரம்பித்தால் இன்றைய என்னுடைய வேலைகள் அனைத்தும் அம்பேல். சின்னா மாதிரி 'என்னவோ போங்க' என்று சொல்ல முடியாது.

    என் வரையில் ஸ்ரீதேவிக்கு மிகப் பொருத்தமான குரல் யாரென்றால் அது கவிதாவுடையதுதான். அப்படியே அம்சமாகப் பொருந்தும்.

    'மிஸ்டர் இந்தியா' வின் வெற்றி ஸ்ரீதேவிக்கு இவர் சிறப்பான பாடகி என்ற இடத்தைக் கொடுத்தது. இவர் குரலில் ஸ்ரீதேவி களத்தில் இறங்கினார் என்றால் ஏக ரகளைதான்.

    முக்கியமாக நிறைய க்ரூப் டான்சர்களுடன் ஸ்ரீதேவி வேடிக்கை வினோதங்கள், கேலி முகபாவங்கள், புரிந்து பிரம்மாண்ட செட்களில் பாடும் இந்தப் பாடல் என்னை மிகவும் கொள்ளையடித்த பாடல் ஆகும்.

    'ரூப் கி ராணி சோரான் கா ராஜா' என்ற அனில்கபூரின் படத்தில் 'யாரோ கோன்' என்ற பாடலில் கவிதாவின் குரலில் சர்வ அலட்சியமாக ஸ்ரீதேவி கேலி, கிண்டல்கள் மிகுந்த நடனம் புரிவது டாப்போ டாப். கவிதா புகுந்து விளையாடுவார்.

    நான் இப்பாடலை எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கு வைத்துக் கொள்ளவில்லை.

    ஸ்ரீதேவியைப் பாராட்டுவதா அல்லது கவிதாவை புகழ்வதா இல்லை ஜாவேத் அவர்களைப் புகழ்வதா, லஷ்மி-பியாரியை பாராட்டுவதா

    அல்லது இன்று கவிதா பற்றி எழுதி என் மூடை ஸ்பாயில் செய்த உங்களை செல்லமாக பாராட்டுவதா என்றுதான் தெரியவில்லை.

    நான் கவிதாவுக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் இந்தக் கால ஷம்ஷத். சரிதானே ஜி!

    இந்தாங்க ஸ்ரீதேவி, கவிதா அக்கிரமத்தைப் பாருங்க. இந்த பேஜை விட்டு நகரவே மாட்டீங்க.

    Last edited by vasudevan31355; 18th June 2015 at 10:19 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes chinnakkannan, rajeshkrv liked this post
  14. #1197
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    ஆமாம் ஜி
    ஸ்ரீதேவிக்கு மிகவும் பொருத்தம் கவிதா தான்.
    ஹவா ஹவாயி மறக்க முடியுமா

  15. Likes vasudevan31355 liked this post
  16. #1198
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    ஆமாம் ஜி
    ஸ்ரீதேவிக்கு மிகவும் பொருத்தம் கவிதா தான்.
    ஹவா ஹவாயி மறக்க முடியுமா
    ஐயோ! தூள்! மறுக்க முடியுமா?
    நடிகர் திலகமே தெய்வம்

  17. #1199
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //பல அந்நியப் படங்கள் நமக்குள்ளே பாதிப்பு ஏற்படுத்தியுள்ளன என்றால் அதற்கு மூல காரணம் நமது நடிகர் திலகமே... நடிப்பின் அத்தனை பரிமாணத்தையும் தன் முதல் சில படங்களிலேயே அளித்து விட்டதால், எந்த நடிகரைப் பார்த்தாலும் எந்தப் படத்தைப் பார்த்தாலும் மனம் நம்மையும் அறியாமல் நடிகர் திலகத்தைத் துணைக்கழைக்கிறது. அவருடைய துணை நம் நினைவில் வராமல் நம்மால வேற்றுப் படங்களைப் பார்க்க முடிவதில்லை. இதற்கு Sivaji Phobia என்று பெயர் வைத்தாலும் தப்பில்லை.//

    நடிகர் திலகமே தெய்வம்

  18. Likes Gopal.s liked this post
  19. #1200
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    9

    'நிலவே நீ சாட்சி'



    பாட்டின் முதல் வரியே படத்தின் தலைப்பும்.

    முதலில் கொஞ்சம் கதை பார்ப்போம்.

    கல்லூரியில் படிக்கும் ஜெய்யும், கே.ஆர்.விஜயாவும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுக்கிறார்கள். ஆனால் விஜயாவின் அக்காள் மணிமாலா குழந்தை பெற்றுவிட்டு இறந்து போக, அவள் கணவர் மனோதத்துவ டாக்டர் முத்துராமன் குழந்தையுடன் தனியே கஷ்டப்படுகிறார். வேறு கல்யாணம் செய்யவும் மறுக்கிறார்.

    அக்காளின் குழந்தையை விஜயா அன்போடு பார்த்துக் கொள்வதை வீட்டின் பெரியோர் கவனித்து விஜயாவை முத்துராமனுக்குத் திருமணம் செய்து வைத்தால் முத்துராமனுக்கும் மறுவாழ்வு கிடக்கும்....குழந்தைக்கும் விஜயாவைவிட சிறந்த மாற்றுத் தாய் அமைய முடியாது என்று விஜயாவை திருமணத்திற்கு வற்புறுத்துகின்றனர். விஜயா ஜெய் காதல் விவகாரம் வீட்டாருக்குத் தெரியாது.

    முதலில் மறுக்கும் விஜயா வீட்டாரின் பிடிவாதத்தால் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகிறார். திருமணத்திற்கு மறுக்கும் முத்து விஜயா சம்மதித்ததால் தானும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்தே விடுகிறது

    வீட்டாரிடம் பெர்மிஷன் வாங்கி நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஜெய்யைக் காத்திருக்கச் சொன்ன விஜயா இன்னொருத்தர் மனைவியாக காதலன் ஜெய்யை சந்தித்து தனக்குத் திருமணம் நடந்த கதை கூறி தன்னை மறந்து விடும்படி கூறி சென்று விடுகிறார். அவள் மேல் அளவு கடந்த காதல் வைத்துள்ள ஜெய் இந்த அதிர்ச்சியைத் தாங்காமல் மனநில பாதிப்புக்கு உள்ளாகி பைத்தியம் பிடித்தவர் போல் ஆகிறார்.



    விதி விளையாடுகிறது. மனநிலை மருத்துவரான முத்துராமனிடமே நோயாளியாக வந்து சேருகிறார் ஜெய். விஜயா தர்ம சங்கடத்துக்கு உள்ளாகிறார். ஆனால் கடமை முக்கியம் என்று ஜெயக்கு நினைவு திரும்பச் செய்ய முத்துராமன் முடிவெடுக்கிறார் அவர் தன் மனைவியின் காதலன் என்று தெரிந்தே. (விஜயா எல்லா உண்மையையும் முத்துராமனிடம் முன்னமேயே சொல்லியிருப்பார். முத்துராமனும் உளமார அவரை நம்பி நேசிப்பார்)

    விஜயா செய்வதறியாது தவித்து, முதலில் மறுத்து, கணவனின் பிடிவாதத்தால் ஜெய்யைக் குணப்படுத்த உதவுவதாகக் கூறுகிறார்.

    காதலர்களாக இருக்கும் போது ஜெய் வயலின் வாசிக்க, விஜயா 'நிலவே நீ சாட்சி' என்ற பாடலைப் பாடியிருப்பார். எனவே அதே பாடலை திரும்பப் பாடினால் ஜெய் குணமடையக் கூடும் என்று முத்து விஜயாவை ஜெய் முன் பாடச் சொல்வார். விஜயாவும் 'நிலவே நீ சாட்சி' என்று பாடலைப் பாட ஆரம்பிக்க, பாடலின் வரிகளைக் கேட்டு ஜெயக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வந்து, புத்தி தெளிந்து, தானே மீதிப் பாடலைப் பாடி முடிப்பார். முத்துராமனும் தன் பேஷன்ட் குணமாகி விட்டார் என்று சந்தோஷப்படுவார். விஜயாவிற்கு கஷ்டகாலம் ஆரம்பமாகும்.

    அப்புறம் கிளைமாக்ஸ்? அது எதற்கு நமக்கு? பாடலின் சிச்சுவேஷன் புரிந்து விட்டதல்லவா? இனி பாடலை நீங்கள் புரிந்து ரசிக்கலாம்.


    விஜயா வழக்கம் போல பரிதாபப்பட வைப்பார். 'நச்'சென்று பொருந்தும் பாத்திரம். பழைய காதலனுக்கும், மருத்துவக் கணவருக்கும் இடையே சிக்கி போராட்டம். இத்தனைக்கும் கணவர் எல்லா உண்மையும் தெரிந்தவர் என்ற போதிலும். முத்துராமன் டாக்டர் கணவன். அநியாயத்துக்கு நல்லவர். ஜெய் காதலன் ப்ளஸ் பேஷன்ட். இவரும் பரிதாபப்பட வைப்பார். நடிப்பில் முன்னேற்றம் தெரியும்.

    முத்துராமன் விஜயாவிடம் முன்பு அவர் ஜெய்யிடம் பாடிய பாடலை பாடச் சொல்லி வற்புறுத்த விஜயா 'நிலவே நீ சாட்சி' என்று பாடத் துவங்க, ஜெய் தலையில் இடி மின்னல் இறங்கி, அவர் குழம்பி, பின் தெளிந்து விஜயா விட்ட இடத்திலிருந்து பாடலை முழுதாகப் பாடி முடித்து தான் குணமடைந்ததைக் காட்ட, இது ஒருவிதமான குடும்பப் பாட்டு போல் வியாதியை குணமாக்கும் காதல்(அரு)மருந்துப் பாட்டு.

    ஆனால் பாலா குரலில் நமக்கு விருந்து தரும் பாட்டு.

    மிக இனிமையாகப் பாடியிருப்பார் மனிதர். முதலில் விஜயா பாடுவதும் பின் ஜெய் தொடர்வதும் நன்றாகவே இருக்கும். விஜயாவுக்கு ராதா குரல் கொடுத்திருப்பார் இந்தப் பாடலில். சரியா ராகவேந்திரன் சார்?

    எஸ்.பி.பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படத்திற்கு கதை வசனம் பாலமுருகன். கண்ணதாசனின் மிக அருமையான பாடல்கள்.

    'மெல்லிசை மன்னர்' இசையில் மட்டுமல்ல... பாடல் பாடுவதிலும் நான் மன்னன் என்று நம் எல்லோரையும் ஏன் நமது கோபாலையும் கூட வாய்பிளக்க வைத்த படம் இது.

    (நீ நினைத்தால்... இந்நேரத்திலே... ஏதேதோ நடக்கும்...ராட்சஷியுடன் 'மன்னர்' பாடிய இப்பாடலை 'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் பதிவாகத் தந்துள்ளேன்)

    கொஞ்சம் சிக்கலான கதை அமைப்புள்ள இப்படத்தை மாதவன் நன்றாகவே இயக்கியிருந்தார். ஒளிப்பதிவை பி.என்.சுந்தரம் கவனித்திருந்தார்.

    'என்னடா இது!.. நடிகர் திலகத்தின் ஆஸ்தான கூட்டமாயிருக்கிறதே' என்று ஆச்சர்யம்தானே உங்களுக்கு ஏற்படுகிறது?

    படத்தின் டைட்டிலில் கூட இப்பாடலின் விசில் சப்தத்தை 'மன்னர்' அழகாகத் தந்திருப்பார்.

    பாலா மிக மிக அழகாக பாடி தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொண்ட பாடல். ரொம்ப அருமையாக அனுபவித்துப் பாடியிருப்பார்.

    இதே பாடலை சுசீலா அம்மா விஜயாவிற்காக அற்புதமாக தனியே பாடியதை மறந்து விட்டு இந்தப் பதிவை எழுதினால் நான் மனிதனே இல்லை. (ஜி சந்தோஷப்படுவார்)





    நிலவே நீ சாட்சி
    மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
    நிலவே நீ சாட்சி

    நிலவே
    நிலவே
    நீ சாட்சி
    சாட்சி
    மன
    நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
    நிலவே நீ சாட்சி

    நிலவே நீ சாட்சி
    மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
    நிலவே நீ சாட்சி

    பாதைகள் இரண்டு சந்திப்பதும்
    அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும்
    பாதைகள் இரண்டு சந்திப்பதும்
    அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும்
    காதலில் கூட நடப்பதுண்டு
    அங்கே காலத்தின் தேவன் சிரிப்பதுண்டு
    காலத்தின் தேவன் சிரிப்பதுண்டு

    நிலவே நீ சாட்சி
    மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
    நிலவே நீ சாட்சி

    ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு
    சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
    ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு
    சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
    இருவரை இணைத்து திரை போட்டு
    இது இறைவன் நடத்தும் விளையாட்டு
    இறைவன் நடத்தும் விளையாட்டு

    நிலவே நீ சாட்சி
    மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
    நிலவே நீ சாட்சி

    நிலவே நீ சாட்சி




    இதே படத்தின் இன்னொரு பாலாவின் ஈடு இணையில்லாத பாடல் அடுத்த பாலா பதிவில்
    Last edited by vasudevan31355; 18th June 2015 at 04:56 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  20. Likes Russellmai, RAGHAVENDRA liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •