காரோட்டி :
------------
இந்தியா போல் எங்கும் காணோம்
ஏழை நாட்டில் நடக்காது எதுவும்
எக்கச்சக்க சட்டம் எதற்கும் ஒரு திட்டம்
ஏமாற்று வேலை பம்மாத்து எல்லாம்

கருப்பு பணம் கையூட்டு கூடவே குப்பை
கொடிய நச்சு சூழல் குடிநீரில் சாக்கடை
கூடும் பணவீக்கம் விவசாயி வேதனை
குண்டும் குழியுமாய் நெடுஞ்சாலை

கொள்ளையர் ஆளும் நொள்ளை நாடிதே
குறை ஒன்றும் இல்லை அவர் பாடுகிறார்
கூசாமல் பொய் கூடையாய் சொல்கிறார்
கோபம் ஆத்திரம் பொத்து கிட்டு வருதே !

காரோட்டியின் மனைவி
-----------------------------
எல்லாம் போகட்டும் கதை தேவையில்லை
என்ன சொல்லியும் ஒன்னும் ஆவதில்லை
எதானாலும் சரி! ஒன்னும் பெரிதில்லை
எனது பிரச்னை இப்போ அதுவுமில்லை !

எங்கேயும் இல்லியே இந்த ரோட்டிலே இடம்!
எப்படி காரை நாம் பார்க் பண்ணுவோம் ?
என்ன கொடுமை இது ? என்ன செய்வோம் ?
ஏதேனும் கொடுத்து சரி செய் ! ஆச்சு நேரம்!