-
20th July 2015, 08:38 PM
#2021
வாசு,
எஸ்பிபி பாடல்கள் தொடரை படித்துக் கொண்டு வருகிறேன். சில நேரங்களில் உடனே. சில நேரங்களில் தாமதமாக. ஆதலினால் உடனே அதை பற்றி எழுத முடிவதில்லை. .
வீட்டுக்கு வீடு படத்தில், அங்கம் புது விதம் பாடலை நீங்கள் அலசிய விதம் நன்றாக் இருந்தது. பிற்காலத்தில் எஸ்பிபியின் முத்தரையாக கருதப்பட்ட சில improvisations இந்தப் பாடலில்தான் தொடங்கியதோ என்று யோசிப்பேன். அவர் அங்கம் என்று சொல்லும் ஸ்டைலைதான் குறிப்பிடுகிறேன். 1970 மே மாதம் வந்த படம். இதுவும் மதுரை தங்கத்தில்தான். நன்றாக போனது. பிற்காலத்தில் [அதாவது 3,4 வருடங்களுக்கு பிறகு] என் கஸின் படித்த் மதுரை கல்லூரியில் [Madura College] மாணவர் யூனியன் சார்பில் திரையிட்டபோது பார்த்தேன்.
மங்கையரில் மகாராணி அருமையான பாடல். நீங்கள் குறிப்பிட்ட மாதிரி சில வரிகளில் எஸ்பிபி கிளப்பியிருப்பார்.
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
தீராத ஆசை கோடானு கோடி
போன்ற வரிகளை சொல்ல வேண்டும்.
ஆயிரம் நினவு பாடலை விட உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடலும் மலர் எது பாடலும் ரொம்பவே பிடிக்கும். அதிலும் மலர் எது படமாக்கம் சூப்பர். [ஆனால் ஸ்ரீதரின் சிஷ்யன் சிவிஆர் இதற்கு முன்னரே நில் கவனி காதலி படத்தில் ஜில்லென்று காற்று வந்ததோ பாடலில் underwater ஒளிப்பதிவை அருமையாக பண்ணியிருப்பார். என்ன அது பிளாக் & ஒயிட், இது கலர்].
அவளுக்கென்று ஒரு மனம் படத்தை நினைக்கும்போது எனக்கு எப்போதும் இரண்டு சிந்தனைகள் வரும். ஒன்று அந்த படத்தின் விளம்பரங்களிளெல்லாம் எரிந்துக் கொண்டிருக்கின்ற மூன்று மெழுகுவர்த்திகள். ஒரொரு மெழுகுவர்த்தியிலும் படத்தின் தலைப்பிலிருந்து ஒரொரு வார்த்தையை எழுதியிருப்பார்கள்
இரண்டாவது, அவளுக்கென்று ஓர் மனம் 1971 ஜூன் 18 அன்று ரிலீஸ் ஆனது. மதுரை சென்ட்ரலில். 71 ஏப்ரல் 14 வெளியாகி 10-வது வாரமாக பிராப்தம் ஓடிக் கொண்டிருந்தது. அதை எடுத்து விட்டுத்தான் அவளுகென்று ஓர் மனம் வெளியானது. இந்த படத்தை ஓபனிங் ஷோ பார்த்து விட்டு படம் தேறாது என்று என் கஸின் சொல்லி விட்டான். கடுப்பாக வந்தது. இந்த படத்தை ஏன் இங்கே கொண்டு போட வேண்டும், விட்டிருந்தால் பிராப்தம் ஓடியிருக்குமே என்ற எண்ணம் எப்போதும் வரும்.
ஒரு சந்தேகம். 1977 வரை அனைத்து எஸ்பிபி பாடல்களும் இடம் பெறும் என சொல்லியிருந்தீர்கள். ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த் பாடல் ஒன்று. இங்கே இடம் பெறவில்லையா அல்லது நான் கவனிக்காமல் விட்டு விட்டேனா என்று தெரியவில்லை. 1970-ல் வந்த பாடல். சங்கர் கணேஷ் இசை. சுறுசுறுவென தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட், (உங்கள் பாஷையில்) அதம் பதமாக லட்சுமி.
"மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்" என்று சற்றே மூக்கால் பாடுவார் எஸ்பிபி. அதில் "நாள் மணநாள் நெருங்கினால்" என்ற இடம் அள்ளிக் கொண்டு போகும். எந்த பாடல் என்று உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன். இந்த பாடல் போட்டு விட்டீர்களா?
அப்புறம் எனக்கு இரண்டு மூன்று எஸ்பிபி பாடல்கள் இருக்கின்றன. 1973-ல் G.K வெங்கடேஷ் இசையில் வந்த பாடல், 1974-ல் விஜயபாஸ்கர் இசையில் வந்த பாடல். எல்லாவற்றிருக்கும் மேலாக 1974-ல் மெல்லிசை மன்னர் இசையில் எஸ்பிபி உங்கள் ராட்சசியுடன் இணைந்த பாடல் (எனக்கு பிடித்த சுறுசுறு ஹீரோவும், எனக்கு பிடிக்காத நடிகரும் நடித்தது).அதெல்லாம் வருமல்லவா?
நன்றி! தொடருங்கள். நேரம் கிடைக்கும்போது கலந்துக் கொள்கிறேன்.
அன்புடன்
கண்ணா, சென்னை வந்துவிட்டு மதுஜியை பார்க்கவில்லை எனபதை விட சக மதுரைக்காரனை பார்க்கவில்லை என்பது பெரிய குற்றம். அப்புறம், உல்லாச பறவைகள் அலங்காரில் ரிலீஸ். சினிப்ரியா அல்ல. 1980 மார்ச்..
Last edited by Murali Srinivas; 20th July 2015 at 09:07 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
20th July 2015 08:38 PM
# ADS
Circuit advertisement
-
20th July 2015, 08:52 PM
#2022
Senior Member
Senior Hubber
மீள் பதிவு..
***
நண்பர்கள் கொடுத்த உற்சாக போதையில் மனம் மயங்கி சற்றே மதியிழந்து
இங்கு எழுதப் போவது என்னவோ இரண்டு செளகார் ஜானகி படங்கள்! (என்னா தெகிரியம்)
அதாகப் பட்டது நல்ல உயர்ந்த ரக டர்க்கித் துண்டினை வாஷிங்க்மெஷினில் போட்டு நனைத்து அலசி
பின் பிழிந்து பின் உதறி கொடியில் காயப் போட்ட பிறகும் கூட அதிலிருந்து ஓரிரு துளிகள் கீழே சிந்தும்..
அப்படிப் பட்ட துளி போல அடியேனும் இழையோட்டத்திலிருந்து மாறாமல் எழுதப் போகும் முதல் படம்..அதே தான்..
அரபு நாட்டில் இருப்பதால் மன ஒட்டகத்தைச் சற்றே பின்னுக்குத் தள்ள முயற்சித்து, முடியாமல்
கழுத்தை மட்டும் பின்னால் திருப்பி அழகான வாயால் அசைத்து எண்ணத்தைப் பின்னோக்கி ஓட வைத்தால்..
அட யாரந்தச் சிறுவன்.. மெரூன் கலர் டிராயாரும் வெள்ளை (ரின் சோப்) சட்டையுமாக என உற்றுப் பார்த்தால்
அட நான் தான்.(ஒன்பதாம் வகுப்பு).என்னருகில் இருந்தது வீடிருந்த தெருவில் மறு முனையில் இருந்த
வீட்டில் இருக்கும் பையன் சோமு(எட்டாம் கிளாஸ்) அவனருகில் அவனது அக்கா விம்மி என்றழைக்கப் பட்ட ஒல்லி நிர்மலா(?!)
கேப்ரன் ஹால் பத்தாம் வகுப்பு என நினைவு..
இருவரும் என்னிடம் தீபாவளிக்கு ரீரன்னாக வந்த படமான புதிய பறவையைப் பற்றிக் கொஞ்சமாய்ச்
சொல்ல என் வயிற்றுக்குள் கொஞ்சம் மிளகாய்க் காந்தல்..அதில் சோமு வேறு ஒன்றைச்
சொல்லிப் படுத்தியும் விட்டான்..அதற்காக இரண்டு வருடங்கள் கழித்து
அவனைத் திட்டியிருக்கிறேன்..(அது கடைசியில் சொல்கிறேன்)
அந்த வருடம் இரு முறை முயன்றும் டிக்கட் கிடைக்கவில்லை என நினைவு..பின்
தொலை தூர அலங்காரில் ஒரு தடவை போட பார்க்க முடியவில்லை என வருத்தம்
..இரண்டு வருடம் கழித்து அப்பாவின் ராலே சைக்கிள் கிடைத்ததும் பளஸ் ஒன்னில்
ஊர் சுற்ற ஆரம்பித்ததும் அந்தப் படத்தை பரமேஸ்வரி தியேட்டரில் போட்டிருந்தார்கள்.
.
ஒரு நல்ல சனிக்கிழமையில் அம்மாவிடம் பர்மிஷன்+ இரண்டு ரூபாய் வாங்கி
மாலைக்காட்சி பார்க்கக் கிளம்பினால் மழை.. அடடா மழைடா அடை மழைடா என்ற பாடல் மட்டுமல்ல
அந்தப் பாடல் பாடும் கதாநாயகி கூடப் பிறந்திருக்காத வருடம் அது!
இருந்தும் விறு விறு என மிதித்து கர்டர் பாலம் கீழே அவ்வளவாக தண்ணீர் தேங்காததால்
இறங்கி ஏறி கேப்ரன் ஹாலைக் கடந்து ஆரப்பாளையம் கிராஸ் அடைந்து குறுக்குவாட்டில்
பயணித்து தியேட்ட்ர் அடைகையில் ஆள் முழுக்க தெப்பமாகியிருந்தேன்..ஹச்..
இருந்தும் கூட்டம்..கியூவில் நின்று மேல்வரிசை 1.45ரூ டிக்கட் வாங்கி உள்சென்று
அமர்கையில் மனமெல்லாம் மத்தாப்பூ..(அதைப் பார்த்த யாரோ தான் பிற்காலத்தில் படத்தலைப்பாக்கினார்கள்!)
பின் இளமை பூரிக்கும் மாலா வந்து கோல்கேட் பற்பசை வாங்கச் சொல்லிச் சிரிக்க,
ஆரோக்கிய வாழ்வைக் காப்பது லைப்பாய் எல்லாம் வந்து, அரங்கம் நிறைந்திருந்தும்
ஏதோ கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பீகாரில் வெள்ளம்
என மத்திய அரசு செய்திப்படம் ஓட, எனக்குள் எரிமலை பொங்கிக் குமுறி வெடிக்கும் நேரத்தில்
சென் ட்ரல் போர்ட் ஃபில்ம் சென்சார் போட எனக்கு இன்ப அதிர்ச்சி..
இந்த இரண்டு வருட காலகட்டத்தில் புதிய பறவை பாடல்கள் அனைத்தையும்
இலங்கை வானொலியில் கேட்டு ருசித்திருக்கிறேன், மறந்திருக்கிறேன் என்னை, ரசித்திருக்கிறேன்..
இன்னும் என்னவென்னமோ ..கிறேன்..!அதுவும் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து பாடல்,
மெல்ல நட மெல்ல நட பாடல் எல்லாம் மனத்திரையில்(மன்னிக்க பழைய உவமை)
நடிகர் திலகம் கறுப்பு வெள்ளையில் க்ரேபாண்ட் வொயிட் ஷர்ட்டிலும் சரோஜா தேவி
டார்க் கறுப்பு புடவையிலும் நடப்பதாக ஓட்டிப் பார்த்திருந்த் எனக்கு படம் ஈஸ்ட்மென்கலர்
எனப் பார்த்ததும் சர்க்கரைப் பொங்கலை வாயிலிட்டால்
கூடவே முந்திரிப்பருப்பும் நிரடினால் என்னவொரு மகிழ்ச்சி பொங்குமோ அது போல ஆனது.
.
வைத்த கண் வாங்காமல் காரோட்டும் நடிகர் திலகக் கண்கள், ஓடும்பெண் என டைட்டில் பார்த்து
கப்பலில் ந.தி தெரியாமல் சரோஜா நதியுடன் மோதித் திரைப்படம் தொடர அதில் மூழ்கிவிட்டேன்..
சுவாரஸ்யமான த்ரில்லர்.. நடிகர் திலகத்தின் அற்புதமான முகபாவங்கள்:
சரோஜாதேவி தனது எண்ணத்தை சிட்டுக்குருவியிடம் பார்த்துத் தெரிந்து கொண்டது
போலச் சொல்லும் பாடல்- ஒரு பொழுது மலராகக் கொடியில் இருந்தேனாஇரவினிலே
நிலவினிலே என்னை மறந்தேனா, இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா-
என செக்கச் செவேல் மேக்கப் போட்டகன்னத்தைக் காட்டி வெட்கப் படும்போது முத்தெடுத்துக் காட்டும் முகபாவம்,
சடசடத்து ரயில் செல்ல படபடத்த இதயத்தை முகத்திலே காட்டுவது,
எம் ஆர் ராதாவின் டெலிஃபோன் உரையாடலைக் கேட்கும் போது யோசனையில் நெளியும் நெற்றிச் சுருக்கங்கள்,
பின் இரண்டாவது தடவை ரயிலில் வரும்போது சொல்லும் ஃப்ளாஷ் பேக்..
ப்ளாஷ் பேக் வரும்போது அவருடன் சேர்ந்து நானும் வருத்தப் பட்டிருக்கிறேன்..
அவர் ஹோட்டலில் அமர்ந்து நடனத்தைப் பார்க்க ஆரம்பிக்க- என்னா அருமையான பாட்டுங்க அது- அந்த நீல
நதிக்கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் எனப் பாடும் செளகார் ஜானகியைப் பார்த்ததும் சற்றே ஏமாற்ற்ம் தான்.
.
என்ன தான் சொல்லுங்கள்.. என் கனவுக் கன்னி செளகார் ஜானகி தான்..என்ன ஒரு நிறம்..
என்ன ஒரு அழகு என்ன ஒரு நடிப்பு, என்ன ஒரு அழுகை..எப்பொழுதும் வந்து என்னிடம் டூயட் பாடுகிறார் அவர் என
எந்தத் தாத்தாவும் சொல்லியிருக்க மாட்டார்.. இதற்காக செளகாரை நான் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று எண்ண வேண்டாம்..
இந்த குறிப்பிட்ட படத்தில என்ன தான் வித்யாச நடிப்பைத் தந்திருந்தாலும்
கொஞ்சம் இளமைக் குறைவு அப்பட்டமாகத் தான் தெரிந்தது..
பின் ஃப்ளாஷ் பேக் முடிந்து சரோஜா தேவியைக் கல்யாணம் செய்து கொள்ள ஒப்புதல் வாங்குதல்
, நிச்சய தார்த்தத்தில் மறுபடி செளகார் ஜானகியைப் பார்க்கும் போது ஏற்படும் அதிர்ச்சி,
அவள் தன் மனைவியில்லை எனப்போராடும் தருணங்கள், இறுதியில் லதா நீயா இப்படிப் பண்ணே எனக் கேட்கும்
கையறு நிலை (ஏற்கெனவே கோபால் சார் புட்டுப் புட்டு வைத்ததால் நான் சுருக்கிவிட்டேன்)
என அபார நடிப்பு நடிகர் திலகத்தினுடையது....
சரோஜா தேவி முழுக்க முழுக்க ஆடையணிந்த மேக்க்ப் அணிந்த தேவதையாய் வந்தாலும்,
மேக்ஸியில் நடிகர் திலகத்துடன் கொஞ்சும் சமயத்தில் கொஞ்சம் கூடுதல் அழகாய்த் தெரிவார்..
நாகேஷின் முகபாவங்கள், எம்.ஆர்.ராதாவின் யதார்த்தமான வில்ல நடிப்பு
கதைக்குத்தேவை என்பதாலோ கொஞ்சம் பொம்மைத் தனமான இரண்டாம் செள.ஜா வின் நடிப்பு,
ராமதாஸ், ஓஏகே தேவர் என அனைவரும் தம் பங்கை ஒழுங்காய்ச் செய்திருந்தனர்..
இந்தப் படம் பார்த்துச் சிலமாதங்கள் கழித்துத் தான் சோமுவைப் பார்த்தேன்
மீனாட்சி அம்மன் கோவிலில்.. குட்டியாய் முதுகில் குத்தும் விட்டேன்.
.பாவி இப்படிப் பண்ணிட்டயே என..
அவன் அன்று சொன்னதாவது கடைசில தாண்டா சரோஜா தேவியும் போலீஸ் ஆஃபீசர்னு தெரியும்!
எத்தனை முறை பார்த்தாலும் இந்தப் படம் எனக்கு அலுக்கவே இல்லை..
*
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
20th July 2015, 09:02 PM
#2023
Senior Member
Senior Hubber
//கண்ணா, சென்னை வந்துவிட்டு மதுஜியை பார்க்கவில்லை எனபதை விட சக மதுரைக்காரனை பார்க்கவில்லை என்பது பெரிய குற்றம். அப்புறம், உல்லாச பறவைகள் அலங்காரில் ரிலீஸ். சினிப்ரியா அல்ல. 1980 மார்ச்..//
அன்பின் முரளி.. ரொம்ப ரொம்ப ஸாரிங்க.. எல்லா நண்பர்களையும் பார்க்கவேண்டும் என்ற ஆவல் தான்.. இந்த தடவை லீவில் நிறைய டூர் போட்டுக்கொண்டு விட்டேன் ப்ளஸ் – ஒருகுட்டிப் ப்ரச்னையால் மன உளைச்சல்..(இங்கு வந்த பிறகு தான் சால்வ் ஆனது)சென்னையில் இருந்ததே இரண்டு+இரண்டு நாலு நாள் தான். தவிர திரும்புகையில் ஜலதோஷம் லொக் லொக் இருமல்..அதனால் சோபனம் முடித்த புது மணப் பெண்ணின் கண்களைப் போல கண்களில் சிவப்பு! விமானம் ஏறும் போது கூட இமிக்ரேஷன் என் கண்களைப் பார்த்து மறுமுறை பார்த்தார்..
கண்டிப்பாக அடுத்த விசிட்டில் உங்களை வாசுவை மதுண்ணாவை ராகவேந்திரரைப் பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்..இந்த முறை என்னை மன்னிக்கவும்..
ஓ உ.ப அலங்காரா.. ஸாரி..வயதாகி வருகிறதோ..தெரியவில்லை ..(என்னைச் சொன்னேன்)
-
20th July 2015, 09:06 PM
#2024
Senior Member
Senior Hubber
வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து
இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .// கோபால் சாமி சத்தியமா கோனார் நோட்ஸ் படித்த பின்னர் தான் புரிந்தது.. ஆனால் நினைவு நாளுக்கு க் கவிதை என்று எழுதீயிருந்தீர்கள்.. கவிதை எங்கே..?! (கண்ணா எஸ்ஸ்கேப்
) என்னமோ மரபு தெரியும் தெரியும் நு யாரோ சொன்னாங்க..ஆனா எழுத மட்டும் மாட்டாங்களாம்..ம்ம் என்னமோ போ நாராயணா
Last edited by chinnakkannan; 20th July 2015 at 10:55 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th July 2015, 09:34 PM
#2025
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Murali Srinivas
வாசு,
எல்லாவற்றிருக்கும் மேலாக 1974-ல் மெல்லிசை மன்னர் இசையில் எஸ்பிபி உங்கள் ராட்சசியுடன் இணைந்த பாடல் (எனக்கு பிடித்த சுறுசுறு ஹீரோவும், எனக்கு பிடிக்காத நடிகரும் நடித்தது).அதெல்லாம் வருமல்லவா?
நன்றி! தொடருங்கள். நேரம் கிடைக்கும்போது கலந்துக் கொள்கிறேன்.
அன்புடன்
கண்ணா, சென்னை வந்துவிட்டு மதுஜியை பார்க்கவில்லை எனபதை விட சக மதுரைக்காரனை பார்க்கவில்லை என்பது பெரிய குற்றம். அப்புறம், உல்லாச பறவைகள் அலங்காரில் ரிலீஸ். சினிப்ரியா அல்ல. 1980 மார்ச்..
முரளி ,
ரவியின் சுறுசுறுப்பை பாராட்டியதற்கு நன்றி. (ஒரே கலைஞரின் ராமானுஜ குலமல்லவா?)மற்ற படி எனக்கு பிடிக்காத நடிகர்,உங்களுக்கும் பிடிக்காததை எண்ணி மகிழ்ச்சியே. வாசு ,முரளியும் நம் இனமே.
-
20th July 2015, 10:33 PM
#2026
Junior Member
Diamond Hubber
பழனி -இதயம் இருக்கின்றதே
குழிமேட்டில் இருந்து இதயம் இருக்கின்றதே என்று பாடிக்கொண்டே தலையைத்தூக்கி அவர் பாடுவது சோக ராகம் என்றாலும் அதிலும் கூட பிரமிப்பூட்டும் முக பாவனைகளில் சாகசம் செயயும் நடிப்பு அவருக்கு மட்டுமே வரும்.அடக்க முடியாத சோகங்களைதன் அடக்கியாளும் நடிப்பினால்அடக்கிக் காட்டும் நடிப்புச்சித்தன்இந்தப் பழனியாய் வாழ்ந்த நடிகர்திலகம்.அந்த இடத்திலிருந்து அவர் மெல்ல எழுந்துவரும்போது அவர் காட்டும் உணர்வுகள்அரை நூற்றாண்டு வாழ்ந்து கெட்டஒரு மனிதனின் சரித்திரத்தை அரை நொடியில் காட்டி விடும் நடிப்பல்லவா அந்த நடிப்பு.முதல்முறை வரும்"தம்பி "
என்கிற வார்த்தையின் போது வெளிப்படுத்தும்தலையாட்டல் இரண்டாம் முறை"தம்பி"என்று பாடும் போது வேறு. விதமாய் இருக்கும்.அதே "தம்பி"மூன்றாம்முறை இன்னொரு விதம்.இதே மூன்று வேட நடிப்பாகி விட்டது.இதெல்லாம் மீறினால்20 செகண்டுகளுக்குள் நடந்து விடும் மாயாஜாலம்.இந்த நடிப்புகளை நாம் கிரகித்து வியக்கும் காலகட்டங்கள் இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அதனால்தான்அவை அதிசயங்கள்.அதிசயங்கள் எல்லா காலங்களிலும் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருப்பதைப் போல்தான் இதுவும்.
வாழ்வின் உறவுகளை அதன் இழப்புகளை
வலிய பாடல்வரிகளையும் தாண்டி
பாவங்கள் காட்டிஅவர் நடித்த நடிப்பு கற்காலம் முதல் நிகழ்காலம் வரை மனிதன் பார்த்தறியாத உணர்ச்சிப் பிளம்புகளாகத்தான் இருக்கும்.
உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும்
துண்டை தோளில் தூக்கிபோட்டு" ஓடிடும் ஏழையர்க்கும்" எனும்போது நெஞ்சத்து குமுறல்களைமென்மையாகத்தான்வெளிப்படுத்துவார்.ஆன ால் அந்த வெளிப்பாடு எரிமலையின் சீற்றம்உள்ளே அடங்கி இருப்பதுபோல் காட்டும் மறைமுகநடிப்பின் வெளிப்பாடு.கிராமத்து விவசாயிகளின் துயரங்களையும்,இயாலாமைகளையும்
சில நிமிடங்களில் சாட்சியப்படுத்தும் பாடலுக்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.எல்லாம் அறுந்து இனி பிடிப்புக்கு ஒன்றுமே இல்லை என்பது போல் , தரையில் மெதுவாக அவர் அமரும் காட்சி ஒன்றே அதை விளக்கிவிடும்.
எளியவர்களின் வலிய சோகங்களை துல்லியமாய் காட்டும் அந்த நடிப்பு அசாத்தியமானது.எந்த எழுத்து அதை வடிக்க இயலும்?
தானாட மறந்தாலும் சதை மட்டும் தனியாகத்தாளாமல் துடிக்கின்றதே! - தம்பிதாளாமல் தாயென்றும் பிள்ளையென்றும்தழுவிக் கிடந்தவர்க்கும்தர்மம் துணையில்லையே! - தம்பிதர்மம் துணையில்லையே!.
தானாட மறந்தாலும் என்பதற்கு முன் ஒரு நடை வரும்.உடம்பை ஒடுக்கி,குறுகி நடந்து வரும்நடை.அந்த நடையே அந்தப்பாத்திரத்தின் தன்மையை விளக்குவதாக இருக்கும்.சோகத்தை கூட சொர்க்கமாக்கும் அவருடைய நடிப்பு.
ஒரு மரத்துக்கிளிகள் ஒன்றைவிட்டு
எங்கோ பறக்கின்றதே
கூட்டுக்குடும்ப வாழ்க்கையில்,
பிரிவுகளை.,பிரிவுகளின் வருத்தங்களை
விளக்கும் வரிகள்.இந்த வரிகளுக்கு ஒரு கையைத் தூக்கி நடித்தே வரிகளை வரலாறு ஆக்கி விட்டார்.ஜீவனுள்ள நடிப்பு.நெஞ்சையறுக்கும் படப்பதிவுகள்.
பழனி யின் இந்தப்பாடல் கிராமத்து பாமரனின் நெஞ்சகுமுறல்.அந்தக் குமுறல்
அவனின்சாதாரண புலம்பல் அல்ல.
அதில் மண்ணின் பாரம்பரியமுமம்,
உறவுகளின் சங்கமும்,அவற்றின் தன்மையையும் உணர்த்தும் பாடல்.
நன்றாக நடிக்க வேண்டும் என்று நினைக்கும் நாயகர்கள் பழனியைப் பாருங்கள்.
பழனி ...வாழ்கைப் போராட்டங்களின் பாடம்
இதயம் இருக்கின்றதே - தம்பிஇதயம் இருக்கின்றதே!வாழும் வழி தேடி வாடிடும் ஏழையர்க்கும்உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும்... (இத)உறவினில் நீராகி பிரிவினில் நெருப்பாகும்உணர்வும் இருக்கின்றதே! - தம்பிஉணர்வும் இருக்கின்றதே!... (இத)தானாட மறந்தாலும் சதை மட்டும் தனியாகத்தாளாமல் துடிக்கின்றதே! - தம்பிதாளாமல் 4!...தாயென்றும் பிள்ளையென்றும்தழுவிக் கிடந்தவர்க்கும்தர்மம் துணையில்லையே! - தம்பிதர்மம் துணையில்லையே!... (இத)ஒரு மரத்துக் கிளிகள் ஒன்றை விட்டு ஒன்றுஎங்கோ பறக்கின்றதே! - தம்பிஎங்கோ பறக்கின்றதே!... (இத)கூடப் பிறந்து விட்ட கொடுமையினால் மேனிகனலாய்க் கொதிக்கின்றதே! - தம்பிகனலாய்க் கொதிக்கின்றதே!
- Kannadasan
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
20th July 2015, 10:36 PM
#2027
Junior Member
Veteran Hubber
Monotony Breakers! Gap Fillers!!
தமிழ் படங்களில் பெண்ணாண்மை கீத மதுரங்கள் !
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு : ஆண்மையின் பெண்மைப் போ(பா)ர்வை!
என்னதான் ஆண்மகனாக பிறந்து வளர்ந்து வாலிபம் எய்தினாலும் உளவியல் ரீதியாக மனதில் ஓர் ஓரத்திலாவது பெண் வேடமிட விரும்பாத ஆடவர் அபூர்வமே!! பெண்டிர் ஆடவர் போல உடையணிய எண்ணுவதும் உளவியல் கூறே!
வீரத்திருமகன் ஆனந்தனும் நீலகிரி எக்ஸ்பிரஸ் முட்டைக்கோஸ் கண்ணர் 'சோ'வும் (மொட்டை பாஸ் அசோகனுடன்) நளினமாக அதகளப்படுத்தும் ஆண்மையின் பெண்மை!! கண்களுக்குக் காட்சி விருந்து! காதுகளுக்கு மதுர மருந்து !!அருந்துவோமே !!!
பெண் திரைப் படத்தில் சந்திரபாபுவின் குரலில் வீணை எஸ் பாலசந்தரின் நளினமான பெண்ணாண்மை!
இனிது இனிது வடிவேலு!!
ரிக்ஷாமாமா கவுண்டமணி !!
Last edited by sivajisenthil; 21st July 2015 at 12:03 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
20th July 2015, 10:46 PM
#2028
Senior Member
Veteran Hubber
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st July 2015, 12:19 AM
#2029
Senior Member
Senior Hubber
சி.செ. கொஞ்சூண்டு கோபம் உங்களிடம் (அது இப்போது இல்லை பிகாஸ் ஆஃப் யுவர் போஸ்ட்)
நினைவு நாள் கழித்து வருவதாகச் சொல்லியதால் கோபம்..
இந்த ஸ்பை ஹூ லவ்ட் மி இருக்கிறதே..அது என்னவாக்கும்..
*
கண்ணா ஒரு காமிக்ஸ் லவர் இந்த (பலவருடம் குறைந்த) வாசு சார்வயதிலும்.. (லார்கோ, வேய்ன் ஷெல்டன் லயன் காமிக்ஸ் படித்திருக்கிறீர்களா..இல்லையெனில் படியுங்கள்.காமிக்ஸ் அறிமுக மானது எனக்கு இரும்புக் கை மாயவியில்.. எங்கள் வீட்டு முனையில்பி. 4 போலீஸ் ஸ்டேஷன் அதன் இடது பக்கம் வந்தால் ஒரு செட்டியார் கடை..
அதற்கு முன் ஒரு டெய்லர் ஆர். எம் டெய்லர்..ப்ளஸ் அதைத் தாண்டி ஒரு பொடிக் கடை..அங்கு தான் வாங்கினேன்..(90 பைசா) அந்தக் காலத்தில் அந்த 90 பைசா வென்பது ஓஹோ பணம்..ஆனால் பணத்திற்கு வொர்த்..
அதன் பின்னர் வரிசையாக வந்த புத்தகங்களை வாஙக்ப் பணம் கொஞ்சம் தான் இருந்தத்.. உறை பனி மர்மம் வாங்கினேன் கொலைகாரக் க்ள்வன் (ஒன்று சொல்லவேண்டும் அந்த சமயத்தில் குமுதம் 65 பைசா விகடன் 75 பைசா (ஆ.வி தான்))
நாச அலைகள் வாங்கவில்லை பக்கத்து வீட்டு செட்டியார் பையன் வாங்கியிருந்த காற்றில் கரைந்த கப்பல்கள் வாங்கி என் வீட்டின் மாடியின் குறுகலான படியில் குட்டியூண்டு கண்ணனாக படித்தது மட்டும் நினைவில் .. ஹீரோக்கள் லாரன்ஸ் டேவிட் ( தேங்க்ஸ் டு மை ஆழ் மனம்.இது டைப் பண்ணும் வரையில் லாரன்ஸ் என்ற பெயர் நினைவிலேயே இல்லை)
கதை.. ஒரு கப்பல் கடலில் செல்கிறது இன்னொரு கப்பல் விழுங்காமல் அதை காப்ச்யூர் செய்து பெயர் மாற்றுகிறது என்பது போல் வரும்,
அதையே விகடனில் ஒரு விமர்சனத்தில் (மதன் தான் ஆ.ப விமர்சனம் எழுதினார்) படிக்கவும் ஆவல் மேலிட ஆனால் அது வெளியாகி கிட்டத்தட்ட ஆறு மாதம் அல்லது ஒருவருடம் கழித்து ரிலீஸ் ஆக..எங்கே தங்கம் தியேட்டரில் (முரளி சரியா)
அது தான் ஸ்பை ஹூ லவ்ட் மி
ஆரம்பத்தில் கப்பலை பெரிய கப்பல் விழுங்கும் காட்சியிலாகட்டும் இறுதியில் பாண்டும் அந்தப் பெண்டும் முத்தங்கொளும் காட்சியிலாகட்டும் சோடை போகவில்லை..
ஆனாக்க
வீடியோவில் ஆரம்பக் காட்சியே கிடையாது. துபாயில் அந்தப் படம் banned. அரபிக் காட்சிகள் வருவது என்பதால் ..(உங்களுக்குத் தெரியுமா..பட்ட்த்து ராணி பார்க்கும் பார்வை அந்த்தப் பாட்டையே தடை செய்திருந்தார்கள் வீடியோவில்.. 1987 முதல் 1995 வரை கொஞ்சம் ஜெயராஜ் படங்களுக்கும் கறுப்பு மை பூசியிருப்பார்கள் ஆனந்த விகடன் குமுதம் இன்ன பிற பத்திரிகைகளில்)(சென்சாராம்!)
2000 ல் ஒரு ஈராஸ் தியேட்டரோ வேறு எதுவோ (அதுஇப்போது இல்லை) அங்குஎன் ப்ரதர் இன்லாவிடம் சொல்லி போய்ப்பார்த்தேன்..அந்த வெர்ஷனிலும் கிடையாது..
ம்ம்
ஆனால் நல்ல படம்..ஆ. ...என சி.க பார்த்து ரசித்த படம்..அதுவும் கடலிலிருந்து கார் வெளியேறும் போது ஒரு மீனை பாண்ட் எறியும் காட்சியின் நகைச்சுவை எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும்..
நினைவூட்டலுக்கு நன்றி சி.செ 
ஜாஸ் என்னவோ எனக்குப் பிடிக்காது...!
Last edited by chinnakkannan; 21st July 2015 at 12:29 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
21st July 2015, 04:06 AM
#2030
Junior Member
Newbie Hubber
எம்எஸ்வியின் இசை நுணுக்கங்களை வெளிப்படுத்தவே என்னுள்ளே எம்எஸ்வி நிகழ்ச்சி! - இளையராஜா பேட்டி
ஜூலை 27-ம் தேதி இளையராஜா நடத்தும் என்னுள்ளே எம்எஸ்வி என்ற இசையஞ்சலி நிகழ்ச்சி, வெறும் பாட்டுக்கச்சேரியாக மட்டுமல்லாமல், எம்எஸ்வியின் இசை நுணுக்கங்களை விளக்கும் நிகழ்ச்சியாக நடக்கப் போகிறது. ஒவ்வொரு பாடலையும் எம்எஸ்வி உருவாக்கிய விதம், அந்த இசையின் நுணுக்கங்கள் போன்றவற்றை தன் இசைக் குழு மூலம் வாசித்து விளக்கப் போகிறார் இளையராஜா. Ilaiyaraaja speaks on Ennulle MSV concert இந்த நிகழ்ச்சியை ஜீவா இளையராஜா அறக்கட்டளை நடத்துகிறது. இதுகுறித்து இளையராஜா கூறுகையில், "இந்த நிகழ்ச்சி வெறுமனே அண்ணன் எம்எஸ்வியின் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்துவது அல்ல. எம்எஸ்வி என்ற மாமேதை தந்த இசையின் நுணுக்கங்களை ரசிப்பது. அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைத் திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. அவரின் இந்த இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் என நம்புகிறேன். இந்த இசை நுணுக்கங்களையெல்லாம் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் வகையில் சிறு இசைக்குழுவினரோடு நான் வாசித்துக் காட்ட இருக்கிறேன். எவ்வளவு பெரிய உயர்வான விஷயங்களை எப்படி சர்வ சாதாரணமாக செய்து காட்டியிருக்கிறார் மெல்லிசை மன்னர் என்பதை நான் மக்களுக்கு தெரியப்படுத்தப் போகிறேன். இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம் உயிரை எங்கோ அழைத்துசெல்லுகின்ற உணர்வை கொண்டுவருவது அவ்வளவு சதாரணமான விஷயம் அல்ல. இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். அவர் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும். அண்ணனின் உடல் மறைந்த 13வது நாளில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன்," என்றார். இதுவரை எந்த இசையமைப்பாளருக்கும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டதில்லை. ஒரு இசையமைப்பாளர் இறந்தால், இசைக் குழுக்கள் சில இப்படி நிகழ்ச்சி நடத்துவார்கள். ஆனால் பெரும் இசையமைப்பாளர் யாரும் அப்படி நடத்தியதில்லை. இளையராஜாதான் முதல் முறையாக எம்எஸ்விக்கு இப்படி இசையஞ்சலி நடத்துகிறார்.
Bookmarks