- 
	
			
				
					29th July 2015, 03:26 PM
				
			
			
				
					#2201
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
 
  
 
 (நெடுந்தொடர்)
 
 21
 
 'ஆரம்பம் இன்றே ஆகட்டும்'
 
  
 
 1970-ல் வெளிவந்த, சௌகார் ஜானகி தயாரித்த, பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த, வெற்றிப்படமான, செல்வி பிலிம்ஸ் 'காவியத் தலைவி' படத்திலிருந்து இன்று பாலாவின் தொடரில் ஒரு அற்புதமான பாடலைப் பார்க்கப் போகிறோம்.
 
 இசை 'மெல்லிசை மன்னர்'தான். 'காவியத் தலைவி' மிகவும் பேசப்பட்ட ஒரு படம். 'கடவுள் எல்லா இடங்களிலும் தானே இருக்க முடியாது என்பதனால்தான் தாயைப் படைத்தான்' என்ற உண்மையை உணர்த்தும், தாய்மையின் மகள் பாச உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். தாய் ஒரு காவியம் ஆனதால் இது ஒரு தாயின் கதை அதாவது காவியத்தின் கதை. அதனால்தான் அவள் 'காவியத் தலைவி' காசு கலெக்ஷன் அள்ளியதிலும் தலைவிதான்.
 
 காதலனை கைபிடிக்க முடியாமல், ஒரு கயவனை கணவனாய் மணந்து, கட்டிலுக்குக் கடன் கொடுத்து, தொட்டிலுக்கு விலை கொடுத்து ஒரு மகளை ஈன்று, நாட்டியமாடி மகளை வளர்த்து, மானத்தோடு வாழ்ந்தாலும் மானம் போனவளாய் சமூகத்தால் சித்தரிக்கப்பட்டு, தன் நிலை தன் மகளுக்கும் வந்து விடக் கூடாதே என்று அவளுக்குத் தெரியாமல் தள்ளியே நின்று, உண்மைகள் உணர்ந்த, அவளுக்காகவே வேறு திருமணம் செய்யாமல் தன் வாழ்வைத் தியாகம் செய்த பழைய காதலன் அவளுடைய மகளை தன் சொந்த மகளாகத் தத்தெடுத்து, வளர்த்து பெரிய ஆளாக்க, தள்ளி தள்ளி நின்று மகளின் வளர்ச்சியைப் பார்த்துப் பார்த்து பூரித்து, இறுதியில் மகளின் திருமண வாழ்வை சீர்குலைக்க வந்த கணவனையே சுட்டு வீழ்த்தி, மகளே தாய்க்காக வாதாட, பின் உண்மை தெரிந்து மகளே 'அந்தத் தாய் பெற்ற மகள் நான்தான்' என்று அனைவரிடமும் பெருமை பொங்கக் கூறி, அந்தத் தாயின் புனிதத்தை சபையில் உணர்த்தி அவளை பெருமைப்படுத்த, மகளுக்காக ஓடாகத் தேய்ந்து உருக்குலைந்துபோன அந்த தியாகத்தாய் மகளின் மடியிலேயே உயிரை விடும் பரிதாபமான கதை.
 
 கதையும், நடிப்பும், இயக்கமும் நெஞ்சைப் பிழிவது நிஜமே.
 
 சீனியர் நடிக நடிகைகள். ஜெமினி, ரவி, சௌகார் இரட்டை வேடம் (தாய் மற்றும் மகளாக), எம்.ஆர்.ஆர்.வாசு, ஜெமினி மகாலிங்கம், ராகவன் என்று நடிகர் கூட்டம். மூலக்கதை நிஹார் ரஞ்சன் குப்தா. பாடல்கள் கண்ணதாசன்.
 
 திரைக்கதை, வசனம், இயக்கம் 'இயக்குனர் சிகரம்'
 
 இந்தப் படத்தின் கதை, நடிப்பு, இயக்கம் எல்லாமே அம்சம். ஆனால் இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவது 'மெல்லிசை மன்னரி'ன் மறக்க முடியாத, காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள். வடநாட்டு இசைக் கருவிகளின் ஆளுமையை அற்புதமாக இந்தத் தென்னாடு ரசிக்கும்படி கொடுத்திருப்பார்.
 
 ஒவ்வொரு பாடலும் கோடி அட்சரம் பெறும்.
 
 'கவிதையில் எழுதிய காவித் தலைவி'
 
 'பெண் பார்த்த மாப்பிளைக்கு'
 
 'என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு'
 
 'நேரான நெடுஞ்சாலை'
 
 'கையோடு கை சேர்க்கும் காலங்களே'
 
 எல்லோர் மனதிலும் மிக ஆழமாகப் பதிந்த,
 
  
 
 'ஒருநாள் இரவு பகல் போல் நிலவு' ('கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? என் கண்மணி சுகமா?)
 
 அப்புறம் இன்றைய பாலா தொடரில் பிரகாசிக்க வரும்,
 
 'ஆரம்பம் இன்றே ஆகட்டும்'
 
 என்று ஏகோபித்த வரவேற்பைப் பற்ற பாடல்கள். சுசீலாவின் முழுத் திறமையையும் இப்படத்தில் அவர் பாடியுள்ள பாடல்களின் மூலம் அறியலாம். விதவிதமான உணர்ச்சிகளில் பாடி நம் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்வார்.
 
    
 
 தாய் வேடத்திற்கு சௌகார் படு பாந்தம். வேறு எவரையும் நினைத்துப் பார்க்க முடியாது. தானழுது நிஜமாகவே நம்மையும் அழ வைப்பார். ஆனால் மகள் கிருஷ்ணா வேடத்தில் நம் எல்லோரையும் முகம் சுளிக்க வைப்பார். நடிப்பில் சமாளிக்க முற்பட்டாலும் இளமைத் தோற்றம் முற்றிலும் பழிவாங்க இவரை மகளாகப் பார்க்கும் போது நமக்கு வருவது கொட்டாவி. (மகள் கேரக்டரை வேறு யாருக்காவது விட்டுக் கொடுத்திருந்தால் இன்னும் பிரமாதமாய் இருந்திருக்கும். என்னுடைய சாய்ஸ் லஷ்மி. பாலச்சந்தருக்கு தோதான நடிகையும் கூட.)
 
 ஜெமினி அருமை. (நடிகர் திலகத்திற்கு இந்த ரோல் கிடைத்திருக்கக் கூடாதா!). ரவி ஜுனியர் வக்கீலாம். ஒப்புக்குச் சப்பாணி. இயக்குனர் சிகரம் இயக்குனர் சிகரம்தான் என்பதற்கு 'ரேகா டிபார்ட்மெண்ட் ஸ்டோரி'ல் (ஜெமினியின் சொந்த ஸ்டோரா?) ஜெமினியும், சௌகாரும் சந்திக்கும் காட்சியை சில தினங்களுக்கு முன் எழுதி இருந்தேனே அந்த ஒரு காட்சியே சாட்சி.
 
 படம் முழுதும் சோகம் நிரம்பி வழிய, ஆறுதலுக்கு ஜாலியாக பாலாவும், ஈஸ்வரியும் பாடும் டூயட் பாடல். படத்தில் மகள் சௌகார் ஜானகிக்கும், ஜெமினியிடம் ஜூனியர் வக்கீலாகப் பணி புரியும் ரவிச்சந்திரனுக்கும் காதல் டூயட்.
 
 ஓகே! ஓகே! நம் பாடல் எது? இதோ வந்து விட்டேன்.
 
 ஒரு நல்ல என்ஜாய்பிளான பாடலை கேட்டு ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் அதைப் பார்த்துத் தொலைக்கக் கூடாது என்பதற்கு இப்பாடல் ஒரு உதாரணம். முகம் முற்றிய சௌகார், வழக்கமான சுறுசுறுப்பு இல்லாத ரவி (இளமையான ஜோடி இல்லை என்ற வருத்தமோ!?) என்று பார்க்கவே பிடிக்காது. சௌகாரே அவருக்கு திருஷ்டி.
 
 சௌகார் மாடர்ன் டிரெஸ் வேறு. பேன்ட் ஷர்ட், ஓவர் ஜாக்கெட், பெல்பாட்டம் என்று. அப்புறம் தலையை விரித்துப் போட்டு தலை சைடில் ஒற்றை ரோஜா என்று கொடுமை மேலும் தொடரும். (தாங்கல சாமி), ரவிக்கு ஒரு ஜிப்பாவைக் கொடுத்து விட்டார்கள். அப்புறம் போனாப் போகுது என்று ஒரு ஸ்வெட்டர்  பனியன்.
 
 பாலம், ஏரி, அணைக்கட்டு, பார்க் என்று முழுதுமே வெளிப்புறப் படப்பிடிப்பு என்பது சற்று ஆறுதல்.
 
 இந்தப் படத்தில் இரு ஆண்குரல்கள். ஒன்று பாலா. இன்னொன்று படத்தின் இசையமைப்பாளர். (என் உயிர்ப் பாடலான 'நேரான நெடுஞ்சாலை') ஆண் பாடகர்களில் டைட்டிலில் பாலா பெயர் மட்டுமே இருக்கும். 'மன்னர்' பெயர் இருக்காது. ஏன்?
 
 ஆனால் பாலாவும் ஈஸ்வரியும் கலக்கியிருப்பார்கள். இவர்களே இப்பாடலின் நாயக நாயகியர்.
 
 பாடலை ஈஸ்வரி 'ஆஆஆஆ' என்று ஹம்மிங் செய்ய ஆரம்பித்தவுடனேயே நம் மனதில் உற்சாக நெருப்பு 'பக்'கென்று பற்றிக் கொள்ளும். அந்த ஹம்மிங்கே எம்.எஸ்.வியின் விசில் சப்தமாக தொடர்ந்து வரும் போது அந்த நெருப்பு தீவிர ஜ்வாலையாய் எரியும்.
 
 பாலா 'ஆரம்பம் இன்றே ஆகட்டும்' என்று வேண்டுகோள் வைக்க, ஈஸ்வரி அந்த வேண்டுகோளை ஆறேழு நாட்கள் தள்ளி வைப்பதாக சொல்ல, 'அப்போதும் தள்ளி போடுவியா?' என்ற அர்த்தத்தில் 'அப்போதும் தள்ளிப் போடக் கூடாது' என்று பாலா செல்லக் கண்டிப்பு வைக்க, 'இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது' என்று ஈஸ்வரி மீண்டும் முரண்டு.
 
 பாலா கெஞ்சலும், கொஞ்சலுமாக 'அப்போதும் தள்ளிப் போடக் கூடாது' என்று பாடும் போதே எப்போதும் இப்பாடலைத் தள்ளிப் போடாமல் கேட்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது?
 
 'பொன்னான அங்கத்தையெல்லாம்' பாடும் போது அங்கத்தை...  யெல்லாம்' என்று அந்த 'யெல்லா'மை எப்படி விட்டு எடுப்பார் தெரியுமா? அதே போல 'சட்டங்கள் திட்டங்கள் எல்லாம்' பாடும் போதும்.
 
 பாலா ஈஸ்வரியுடன் சேர்ந்து நாம் வானொலியில் கேட்க முடியாத அந்த
 
 'லால்ல லல்லா லால்ல லல்லா
 லலல லல்லா லலல லல்லா'
 
 ஹம்மிங் அருமையோ அருமை.
 
 ஈஸ்வரியின் அந்த 'ஆஆஆஆ' வெட்டும், .'லாலலலலா' ஜோரும் சோறு தண்ணி இல்லாமல் கேட்டு மகிழக் கூடியவை.
 
 இது பாலாவின் தொடரில் 21 ஆவது பாடல். இத்தனை பாடல்களில் எது ஹிட் இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம் அல்லது எது பிடிக்க வில்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம். முன்னே பின்னே இருக்குமே தவிர அத்தனையும் செம ஹிட் சாங்க்ஸ். அதுதான் சார் பாலா. ஆரம்பத்திலேயே பாடுவதில் பல சாதனைகள் புரிந்து விட்டார் அவர்.
 
 இப்போது பாலாவும் உடன் ராட்சஸியும் உங்களை உலுக்கப் போகிறார்கள் பாருங்கள்.
 
   
 
 ஆஆஆஆ.....ஆஹா
 
 (விசில்) ரவி அழகாக விசிலடித்துக் கொண்டே 'ஜம்'மென்று வந்து நிற்பார்.
 
 ஆஆஆஆஆஆ.....ஆஹா
 
 (விசில்)
 
 ஆரம்பம் இன்றே ஆகட்டும்
 
 ஆஆஆஆ...ஆறேழு நாட்கள் போகட்டும்
 
 ஆஆஆஆ.... அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
 
 இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
 
 ஆரம்பம் இன்றே ஆகட்டும்
 
 ஆஆஆஆ...ஆறேழு நாட்கள் போகட்டும்
 
 ஆஆஆஆ.... அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
 
 இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
 
 லால்ல லல்லா லால்ல லல்லா
 லலல லல்லா லலல லல்லா
 
 பொன்னான அங்கத்தையெல்லாம்
 கண்ணாலே பார்த்தால் போதுமோ
 
 ஆஆஆ
 பொன்னான அங்கத்தையெல்லாம்
 கண்ணாலே பார்த்தால் போதுமோ
 
 ஆஆஆ
 கண்டாலும் உள்ளம் தித்திக்கும்
 என்றாலும் பெண்மை உன்னை சந்திக்கும்
 கண்டாலும் உள்ளம் தித்திக்கும்
 என்றாலும் பெண்மை உன்னை சந்திக்கும்
 
 ஆரம்பம் இன்றே ஆகட்டும்
 
 ஆஆஆஆ....ஆறேழு நாட்கள் போகட்டும்
 
 ம்ம்ம்ம் ..... அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
 
 இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
 
 (இந்த இடத்தில் சௌகார் புள்ளி மான் போல நாணல்களுக்கு மத்தியில் துள்ளித் துள்ளி ஓடி வருவார். இதே போல தாய் சௌகார் 'கையோடு கை சேர்க்கும் காலங்களில்' பாடலில் டிட்டோவாக ஓடி வருவார். தாய் போல மகள் என்பதை பாலச்சந்தர் அற்புதமாக ஞாபகம் வைத்து நமக்கு அழகாக இரு பாடல் காட்சிகளும் உணர்த்துவார். நன்றாக கவனித்தீர்களானால் தெரியும்.
 
 (விசில்)
 
 முத்துச்சரம் வாடும் வண்ணம் மெல்ல அணைத்தேன்
 பத்துத்தரம் வாங்கிக் கொள்ள நெஞ்சில் நினைத்தேன்
 முத்துச்சரம் வாடும் வண்ணம் மெல்ல அணைத்தேன்
 பத்துத்தரம் வாங்கிக் கொள்ள நெஞ்சில் நினைத்தேன்
 
 முத்தமிடலாம் கொஞ்சம் பொறுத்தால்
 சத்தமிடுவேன் தூது (?) கொடுத்தால் (மது அண்ணா! ஹெல்ப் ப்ளீஸ்!)
 
 லாலலலலா லாலலலலா
 
 லால்ல லல்லா லால்ல லல்லா
 லலல லல்லா லலல லல்லா
 
 சட்டங்கள் திட்டங்கள் எல்லாம்
 சந்திக்கும் வேளை ஏனம்மா
 
 ஆஆஆஆ
 பட்டங்கள் பெற்றால் போதுமோ
 பண்பாடு மாறிப் போகக் கூடுமோ
 
 ஆரம்பம் இன்றே ஆகட்டும்
 ஆஆஆஆ....ஆறேழு நாட்கள் போகட்டும்
 ஆஆஆஆ..... அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
 இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
 
 ஆஆஆஆ...ஆஹா
 ஆஆஆஆ....ஆஆ
 
 ஹோஹஹஹோ ஹோஹஹஹோ ஹோஹோ
 ஹோஹஹஹோ ஹோஹஹஹோ ஹோஹோ
 
 
 
 
 
 
				
				
				
					
						Last edited by vasudevan31355; 29th July 2015 at 03:38 PM.
					
					
				 நடிகர் திலகமே தெய்வம்  
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 7 Likes
	 
- 
		
			
						
						
							29th July 2015 03:26 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					29th July 2015, 04:38 PM
				
			
			
				
					#2202
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							வாசு , ஆறேழு நாட்கள் போகட்டும்  என்று விட்டு விடாமல் பாலாவின் அடுத்து அருமையான பாடலையும் , அகஸ்த்தியரை அழைத்து வந்த அதே வேகத்தில் அலசி விட்டீர்கள் . மிகவும் அருமையான பாடல்கள் நிறைந்த படம் . சில சொதப்பல்களினால் படம் பெற்றிருக்க வேண்டிய வெற்றியை பெற வில்லை -  இரண்டு வேடங்கள் சௌகார் எடுத்துக்கொண்டிருக்க வேண்டாம் . இரண்டாவது சௌகாருக்கு,  நல்லவேளை ,  இன்னொரு ஜெமினியை போட வில்லை . படத்தில் பல செயற்கைத்தனங்கள் இருக்கும் .. ஒரு அருமையான பாடலின் அலசல் மீண்டும் எங்களுக்கு தந்ததிற்கு மனமார்ந்த நன்றி ..
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					29th July 2015, 05:24 PM
				
			
			
				
					#2203
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுத்தண்ணீரை பார்த்தலில் ஒரு சுகம் உண்டு.
 நில்லாமல் சலசலத்து ஓடும் அதன்அழகில்மனம் லயிக்கும்.
 கடல் நீரைப்பார்த்துக்கொண்டிருப்பதிலும் ஒரு சுகம் உண்டு.
 நுரைநுரையாய்பொங்கிவந்து ஆக்ரோஷமாய் பாறைகளைதாக்கி தாக்கி சப்தத்தை உண்டு பண்ணும் அந்த அலைகளை பார்த்துக்கொண்டிருப்பதிலும் சுகம் உண்டு.
 இயற்கையை ரசிப்பதில் மனித மனங்கள் மாறுபாடு கொள்வதில்லை.
 இயற்கைகக்கு நிகராக இது போன்ற சுகங்களை ஒரு பாடல் முலம் கிடைக்கச் செய்ய முடியுமா?
 ஆற்று நீரையும்,கடல் நீரையும் தனித்தனியாக பார்த்துத்தான் அதன் இன்பங்களை அனுபவிக்க முடியும்.
 ஆனால்,
 இரண்டும் சேர்ந்த மாதிரியான இன்பத்தை இந்த பாடல் கொடுக்கிறது.
 பல்லவி முடிந்து சரணம் வந்ததும்
 அதை உணரலாம்.
 
 அந்த பாடல்:
 
 சற்று வித்தியாசமும் புதுமையும் கலந்த இசை..,
 பாடலுக்கு முன்ஆரம்பிக்கும் அந்த இசை
 
 
 அலைகளைமமுதலில் காட்டும்  காமிரா
 பின் கடற்பாறைகளைக் காட்டி நகரும்.சற்று நகர்ந்த காமிரா இப்போது நிற்கும்.நடிகர்திலகத்தையும் ஜெயதாவையும் சேர்ந்ததது போல் இப்போது காட்டும். அந்த நடிகை நகர்வதையும் நகர்ந்து பின் நிற்பதையும் காட்டும் காமிரா சட்டென்று க்ளோசப் காட்டும்.
 தூள்
 தூள்
 தூள்.
 எதை எவ்வளவு நேரம் காட்டினால் என்ன?காமிராவுக்கு புண்ணியம் அந்த முகத்தை காட்டுவதில்தானே.அந்த சின்ன ஷாட்டிலும் மின்னலாய்க் காட்டப்பட்ட ரியாக்ஷன் fantastic.
 
 
 எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
 இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
 என் வாழ்க்கை வானில் நிலாவே ..நிலாவே
 
 
 பெ:ஆஆஆநான் காண்பது உன் கோலமே
 அங்கும் இங்கும் எங்கும்
 ஆ:ஆஆஆஎன் நெஞ்சிலே உன் எண்ணமே
 அன்றும் இன்றும் என்றும்
 
 பெ:உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன்,..நீ...நீ...நீ...
 
 நான் காண்பது உன் கோலமேஎன்பதுஆற்று நீரை பார்த்து அனுபவிப்பது போல.
 அடுத்து வரும்
 அங்கும்...இங்கும்...எங்கும்...
 அலையடித்து தாக்குவது போல.
 இதே உணர்வு பாடல் முழுவதும் எதிரொலிக்கும்.
 
 
 எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
 இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
 என் வாழ்க்கை வானில் நிலாவே ..நிலாவே...
 
 
 ஆ:ஆஆஆகல்லானவன் பூவாகினேன்
 கண்ணே...உன்னை...எண்ணி...
 பெ:பூவாசமும்...பொன் மஞ்சமும்,..
 எங்கோ...எங்கோ...ராஜா...
 ஆ:இதற்காக வாழ்ந்தேன்உனக்காக வாழ்வேன்
 நான்...நீ...நாம்...
 
 
 எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
 இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
 என் வாழ்க்கை வானில் நிலாவே ..நிலாவே
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
	 
- 
	
			
				
					29th July 2015, 05:56 PM
				
			
			
				
					#2204
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							வாசு சார்
 ஆரம்பம் இன்றே ஆகட்டும்...
 அருமையான அலசல். தங்களுடைய அட்டகாசமான பாணியில்.
 
 1970 அக்டோபர் 29 -- தீபாவளித் திருநாள்..
 
 நான்கு படங்கள் வெளியாகின்றன..
 
 தலைவரின் சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், மற்றும் காவியத்தலைவி, மாலதி..
 
 நான்கிலுமே ஒரு பாத்திரம் குடிகாரன்..
 
 நான்கிற்குமே இசை மெல்லிசை மன்னர்...
 
 சொர்க்கம் - தேவி பேரடைஸில் கலக்கிக் கொண்டிருக்க..
 
 எங்கிருந்தோ வந்தாள் சாந்தியில் தூள் கிளப்ப..
 
 காவியத்தலைவி மிட்லண்டில் நல்ல வசூலோடு வெற்றி நடை போட..
 
 நானும் உள்ளேன் ஐயா.,. என்று வெலிங்டனில் மாலதி ப்ராக்ஸி அட்டெண்டன்ஸ் கொடுத்து விட்டு விடு ஜூட்...
 
 ஆனால் அந்த தீபாவளியைப் பொறுத்த வரையில் ஹீரோ மெல்லிசை மன்னர் தான்..
 
 மூன்று படங்களில் பாலாவின் பாடல்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்...
 
 காவியத்தலைவியும் மாலதியும் இடம் கொடுக்க..
 
 சொர்க்கத்திலே அவருக்கு வெயிட்டிங் லிஸ்ட் போட்டு அனுப்பி விட்டார்கள்...
 
 அதற்குப் பின் வீட்டுக்கு ஒரு பிள்ளையாக அவரைத் தத்து எடுத்துக் கொண்டு இன்று முதல் செல்வமிது என 1971 தீபாவளியைக் கொண்டாடினார்கள்..
 
 மறக்க முடியுமா...
 
 நினைவலைகளை மீட்டிய உங்கள் தேர்விற்கு என் உளமார்ந்த நன்றி.
 
 தெளிவாக ஒலியை இசைத் தட்டில் கேட்க...
 
 ஒரு சரணம் இசைத்தட்டில் இல்லை..
 
 http://www.inbaminge.com/t/k/Kaaviyath%20Thalaivi/
 
 
 
 
				
				
				
					
						Last edited by RAGHAVENDRA; 29th July 2015 at 06:04 PM.
					
					
				  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
	 
- 
	
			
				
					29th July 2015, 06:03 PM
				
			
			
				
					#2205
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							மாற்றார் தோட்ட மெல்லிசை மதுரங்கள் 
 பகுதி    23 அவர் மேன் பிளின்ட் / OUR MAN FLINT starring JAMES COBURN as DEREK FLINT spoofing on James Bond!
 டீன் மார்டின் போலவே அமெரிக்க துப்பறியும்  ஏஜெண்டாக ஜேம்ஸ் கோபர்ன் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் நடிக்க முயற்சித்த ஓரளவு வெற்றிகண்ட சீரிஸ்!
 But this flick too lacks lustre compared to the production value of Bond movies!
 However let us enjoy the music and songs part that are quite good! music composer....
 ....the greatest Musician JERRY GOLDSMITH!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
				
				
				
					
						Last edited by sivajisenthil; 29th July 2015 at 08:02 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					29th July 2015, 06:34 PM
				
			
			
				
					#2206
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
 
 செந்தில்வேல்
 தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் சூப்பரென்றால், அதற்குத் தரும் விளக்கம் இன்னும் சூப்பர்.
 தங்கள் பதிவைப் படித்தவுடன் எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்...
 சென்னை சாந்தியில் முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் சற்றே சோர்வடையும் நேரத்தில் இந்தப் பாடலும், யாரோ நீயும் நானும் யாரோ பாடலும் அழற்சியைப் போக்கி தெம்பை ஊட்டின. தேவதை பாடலும் நடிகர் திலகத்திற்கே கிடைத்திருந்தால் இன்னும் அமர்க்களமாக இருந்திருக்கும்.
 எங்கெங்கோ செல்லும் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் சிவப்பு மற்றும் கருநீல மேலங்கிகள் அவ்வளவு அழகாக அவரை எடுத்துக் காட்டியது சிறப்பாக இருந்தது. அதுவும் கல்லானவன் எனத்துவங்கும் அந்த மூன்றாவது சரணத்திற்கு முன் வரும் பின்னணியின் போது ஒலிக்கும் கிடார் இசையின் போது, இருவரும் தரும் அந்த Jerk, body twist with mild and slight movements, ஆஹா காணக் கண்கோடி வேண்டும்..
 படத்தை விடுங்கள். அது எப்படியோ போகட்டும்.
 தலைவருக்கு பாடல் காட்சிகள் இப்படத்தில் சூப்பர்.
 
  
 
 இளையராஜாவிற்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.
 இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தப் பாடலுக்கென்று தனியாக ரசிகர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.
 
 
 
 
				
				
				
				
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					29th July 2015, 07:17 PM
				
			
			
				
					#2207
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  vasudevan31355  
 [COLOR="#B22222"]
 
 முத்தமிடலாம் கொஞ்சம் பொறுத்தால்
 சத்தமிடுவேன் தூது (?) கொடுத்தால் (மது அண்ணா! ஹெல்ப் ப்ளீஸ்!)
 
 
 
 ம்ம்.. அது.. "சத்தமிடுவேன் .. இங்கு கொடுத்தால்" என்று நினைக்கிறேன் வாசுஜி..
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					29th July 2015, 07:36 PM
				
			
			
				
					#2208
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							சிகப்பு ரோஜாக்கள் starring Kamal and Sridevi was Bharathi Raja’s psychological thriller 
 that was released in 1978. Ilaiyaraja scored the music. Here is “நினைவோ ஒரு பறவை…”;
 Vaali’s lyrics sung by Kamal himself and S. Janaki:
 
 
 
 Bharathiraja also directed the Hindi remake of the movie. Red Rose [youtube.com/watch?v=4PabYs2sm1k],
 starring Rajesh Khanna and Poonam Dhillon was released in 1980. Music was by R.D. Burman.  Here are
 Kishore Kumar and Asha Bhosle singing “is ki sadaayEn mujh kO bulaayEn…”
 
 
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
	 
- 
	
			
				
					29th July 2015, 08:23 PM
				
			
			
				
					#2209
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							மாற்றார் தோட்ட மெல்லிசை மதுரங்கள் !
 பகுதி   24 : மாடர்ன் டைம்ஸ் / Modern Times starring CHARLES Spencer CHAPLIN as a Tramp!
 
 
	
		
			
			
				சார்லி     சாப்ளினின் ஊமைப் படங்கள் இன்று வரை உலக சினிமா ரசிகர்களுக்கு வரப்பிரசாதமே! 
மௌனப் பட காலகட்டத்திலேயே ஒரு சகலகலாவல்லவராக தன்னை நிலை நிறுத்திய நகைச்சுவை விற்பன்னர் !! இசையிலும் ஈடுபாடு கொண்டவர்!
 
செல்வச் செழிப்பு நிறைந்த மேலை நாட்டுப் படத்தயாரிப்பாளராயினும் மனதளவில் ஒரு கம்ம்யுனிச சிந்தனாவாதியாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் !! 
தெருவில் அலைந்து திரியும் பஞ்சைப் பராரியான டிராம்ப் என்னும் தொளதொள பேண்ட் கிழிந்த சட்டை தொப்பி காலணிகளுடன் கோணல் நடை உருவகத்தில் எல்லாப்  
படங்களிலும் தனது அடையாளமாகத் தோன்றினார்! 
 
சிட்டி லைட்ஸ், கிரேட் டிக்டேடர்...அவரது உச்சம்!!
 
அறுபது ஆண்டுகளுக்குப் பின்னும் மீள் வெளியீட்டில் சென்னையில் நூறு நாட்களைக் கடந்த மாடர்ன் டைம்ஸ் அவரது நகைச்சுவை உச்சம்! 
இப்படத்தில்    இசையுடன் கூடிய ஒரே ஒரு பாட்டும் நடனமும்....நகைச்சுவைப் பின்னலில்!!
			
		 
 
 
 
 
 காதலி எழுதிக் கொடுத்த பாடல் பிட்டைத் தொலைத்து விட்டு ஆட்ட பாட்டத்தில் அவர் சமாளிக்கும் நகைச்சுவை அபாரம் !
 
 
 
 Enjoy his imaginative comedy with an eating machine!
 
 
 
 
 
 
				
				
				
					
						Last edited by sivajisenthil; 29th July 2015 at 09:08 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					29th July 2015, 09:09 PM
				
			
			
				
					#2210
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							தமிழ்க் காமெடியர்களின் கலக்கல் மதுர கானங்கள் !!
 பகுதி    3    டி எஸ் பாலையா
 
 
	
		
			
			
				டி எஸ் பாலையா அவர்கள் தமிழ்த் திரையுலகில் ஹாலிவுட்டின்  ஜேம்ஸ் காக்னியைப் போல தனி முத்திரை பதித்த ஜாம்பவான்! 
ராதாவைப் போலவே வில்லத்தனத்திலும் காமெடியிலும் குணசித்திரத்திலும் கலக்கியவர் !! 
அபூர்வமாக ஆனால் அழுத்தமாக தனது முத்திரை நடிப்பை வெளிப்படுத்திய பாடல் காட்சியமைப்புக்கள் !!
			
		 
 
 
 தூக்குதூக்கியில் சேட்டாக வந்து   தமிழ் கலப்பில் அவர் செய்யும் சேட்டைகள் ரசிக்க வைக்கும் !!
 அடுத்தவர் மனைவியை அபகரிக்கும் பாத்திரம் ...
 நம்மள்கி தும்மள் மேலே மஜா ....!!!!
 
 
 
 2. வரவு   எட்டணா....பாமா விஜயம்
 
 
 
 
 3. ஒரு நாள் போதுமா..    ...திருவிளையாடல்....மறக்க முடியுமா
 
 
 
 
 
 
				
				
				
					
						Last edited by sivajisenthil; 29th July 2015 at 09:16 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
Bookmarks