-
31st July 2015, 02:09 PM
#2241
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
31st July 2015 02:09 PM
# ADS
Circuit advertisement
-
31st July 2015, 02:10 PM
#2242
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
31st July 2015, 06:14 PM
#2243
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 15: வானை நோக்கிப் பொழியும் சாரல்
ஒரே மெட்டைப் பல்வேறு மொழிகளில் பயன்படுத்துவது என்பது இசையமைப்பாளரின் சுதந்திரம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; வெவ்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மாநிலங்களின் ரசிகர்களின் மனதைத் தொடும் அளவுக்கு, குறிப்பிட்ட அந்தப் பாடலை மெருகேற்றுவதைப் பற்றியது. ராஜேஷ் கன்னா, அமிதாப் நடித்த ‘ஆனந்த்’ படத்துக்காக இசையமைத்த ‘நா ஜியா லாகே நா’ பாடலின் மெட்டை பாலுமகேந்திராவின் முதல் தமிழ் படமான ‘அழியாத கோலங்கள்’ திரைப்படத்தில் ‘நான் எண்ணும்பொழுது’ பாடலாகத் தந்தார் சலீல்சவுத்ரி. இந்திப் பாடலின் சூழல் வேறு. இளமைக் கால நினைவுகளின் தொகுப்பாகவே தமிழில் இப்பாடலை உருவாக்கியிருந்தார் சலீல் தா. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
தமிழ்த் திரைக்கு அறிமுகமான காலத்திலேயே பிற தென்னிந்திய மொழிகளிலும் இசையமைக்கத் தொடங்கிவிட்ட இளையராஜாவும் ஒரே மெட்டை வெவ்வேறு மொழிகளில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனந்த் நாக், ரஜினிகாந்த், சாரதா நடித்த ‘மாத்துதப்பட மக’ (1978) எனும் கன்னடப் படத்துக்காக அவர் இசையமைத்த ‘பானு பூமியா’ பாடலின் தமிழ் வடிவம்தான் ஜேசுதாஸ், எஸ்.பி. ஷைலஜா பாடிய ‘ஏதோ நினைவுகள்’ பாடல்.
விஜய்காந்த், ஷோபா நடித்த ‘அகல் விளக்கு’ (1979) படத்தில் இடம்பெற்ற பாடல் அது. புகழ்பெற்ற கதாசிரியர் ஆர். செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். கன்னடப் பாடலை எஸ்.பி.பி.யும் எஸ். ஜானகியும் பாடியிருந்தார்கள். ஒரே மெட்டுதான். ஆனால், பாடகர்கள் தேர்வு, தாளம், நிரவல் இசை தொடங்கி பாடலின் உணர்வு வரை, இதன் தமிழ்ப் பிரதி தரும் அனுபவம் முற்றிலும் வேறானது. ஓராண்டுக்கு முன்னர் உருவாக்கிய கன்னடப் பாடலை அந்த அளவுக்கு மிக நேர்த்தியாக மெருகேற்றியிருந்தார் இளையராஜா.
ஆங்கிலத்தில் haunting என்று ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். இதற்கு ஆட்கொள்ளுதல் என்று தமிழில் பொருள் கொள்ளலாம். அந்த வகையில், கேட்பவர்களை மெள்ளமெள்ள ஆட்கொண்டுவிடும் பாடல்களில் ஒன்று இது. காதலின் களிப்புடன் பாடப்படும் டூயட் பாடலாக அல்லாமல், கைவிட்டுப்போன காதலின் நினைவு தரும் வலியின் இசை வடிவமாகவே இப்பாடலைக் கொள்ளலாம். விரிந்து வியாபித்திருக்கும் இயற்கையின் பிரம்மாண்டத்துக்குள் தன்னைக் கரைத்துக்கொள்வதன் மூலம், இழப்பின் வலியை மறக்கச் செய்யும் போதை வஸ்து என்றே இப்பாடலைச் சொல்ல முடியும்.
‘ம்..ஹ்ம்..’ என்று ஜேசுதாஸின் மெல்லிய ஹம்மிங்குடன் தொடங்கும் பாடலின் உயரத்தை, தொடர்ந்து ஒலிக்கும் ஷைலஜாவின் ஹம்மிங், பரந்து விரிந்திருக்கும் வானம் வரை இட்டுச் செல்லும். சுற்றியலையும் மெல்லிய காற்று தவழ்ந்து பூமியில் படர்வதைப் போன்ற உணர்வைத் தரும் முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும்.
‘ஏதோ நினைவுகள்…’ எனும் பல்லவியின் முதல் வார்த்தைகளே, கடந்து வந்த வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் தேங்கி நிற்கும் வசந்த காலத்தின் உறைவிடத்துக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும். நண்பகல் வேளை ஒன்றில், சமவெளியான நிலப்பரப்பில் நின்றுகொண்டு வானில் மிதக்கும் மேகங்களை ரசிக்கும் உணர்வைத் தரும் நிரவல் இசையைத் தந்திருப்பார் இளையராஜா. பூமியிலிருந்து வானை நோக்கிப் பொழியும் சாரல் மழையாக, இப்பாடலின் இசையை தன் மனதுக்குள் அவர் உருவகித்திருக்க வேண்டும். கேட்பவர்களின் அப்போதைய மனநிலைக்கு ஏற்ப வெவ்வேறு மனச் சித்திரங்களை உருவாக்கும் தன்மை கொண்ட பாடல் இது.
குறிப்பாக, இப்பாடலின் இரண்டாவது நிரவல் இசை தரும் உணர்வு விவரணைகளுக்கு அப்பாற்பட்டது. கடந்த கால நினைவின் நெகிழ்ச்சியான தருணங்களையும், மெல்லிய சோகத்தையும் தனக்குள்ளேயே மீட்டிப் பார்க்கும் பாவத்துடன் ஒலிக்கும் கிட்டார் இசையைத் தொடர்ந்து, அலை அலையாகப் பரவும் காற்றில் மிதக்கும் எண்ணங்களாக விரிந்து செல்லும் வயலின் இசைக்கோவையை அமைத்திருப்பார் இளையராஜா.
பகல் நேரத்துத் தனிமையில் அமர்ந்து இப்பாடலைக் கேட்பவர்களை இனம்புரியாத அமானுஷ்ய உணர்வு ஆட்கொண்டுவிடும். பாடலின் இறுதியில் ஒலிக்கும் பல்லவியின் வார்த்தைகளை ஜேசுதாஸும் ஷைலஜாவும் பகிர்ந்துகொள்ளும்போது பாடலின் வடிவம் வேறொரு தன்மையை அடைந்து முடிவுறும். “காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும்” எனும் உணர்வுபூர்வமான வரிகளை எழுதியவர் கங்கை அமரன்.
எஸ். ஜானகி பாடிய ‘மாலை நேரக் காற்றே’, சசிரேகா பாடிய ‘நீ கண்ணில் வாழும் மன்னன்தானே’ போன்ற பாடல்களும் இப்படத்தில் உண்டு. ‘ஓட்டு கேட்க வருவாங்கண்ணே’ பாடலில் பாவலர் வரதராசன் பேனருடன் தோன்றிப் பாடுபவர் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி. பாஸ்கர்.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
31st July 2015, 07:17 PM
#2244
Junior Member
Veteran Hubber
மாற்றார் தோட்ட மெல்லிசை மதுரங்கள்
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் தீம் இசை மற்றும் கிராபிக்ஸ் கலக்கலான டைட்டில் பாடல்கள் தொகுப்பு
பகுதி 25 : கோல்டன் ஐ / GOLDEN EYE (1995) debut starring by PIERCE BROSNAN as JAMES BOND OO7!
திமோதி டால்டனின் லிவிங் டே லைட்ஸ் மற்றும் லைசன்ஸ் டு கில் படங்கள் நல்ல முறையில் விமரிசகர்களின் மதிப்பான வரவேற்பினைப் பெற்றாலும் வசூலில் திருப்தியளிக்கவில்லை. பல்வேறு தயாரிப்பு ரீதியான தடங்கல்களுக்கு உள்ளான டால்டன் தானே முன்வந்து விலகிக் கொண்டார்.
இருப்பினும் மீண்டும் காலதாமதங்கள் எற்பட்டு ஒரு வழியாக பியர்ஸ் பிராஸ்னன் 1995ல் புதுப்பொலிவு கொண்ட ஜேம்ஸ் பாண்டாக கோல்டன் ஐ படம் மூலமாக அறிமுகமாகி நல்ல வரவேற்ப்பை பெற்று பட வசூலையும் உயர்த்தி அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்க முடிந்தது!
Official Trailer!
Tina Turners' scintillating titile song!
The Gun Barrel opening and titles as the credentials of a James Bond Movie till date!!
எரிக் செர்ராவின் புதுமைப் படுத்தப் பட்ட ஜான் பேரியின் தீம் மியூசிக் மற்றும் இசைக்கோர்வையில் டினா டர்னர் டைட்டில் பாடலை பாடினார்!!
ஜோர்ரோ சவுக்கடிப் படப் புகழ் மார்டின் கேம்பெல் இப்படத்தை விறுவிறுப்புக் குன்றாமல் இயக்கியிருந்தார் பின்னாளில் இவரே மீண்டும் கேசினோ ராயல்படத்தில் டேனியல் கிரைக்கை ஜேம்ஸ் பாண்டாக அறிமுகப் படுத்தினார் !!
மிகவும் பாராட்டுப் பெற்ற ஆக்ஷன் காட்சிகளை உள்ளடக்கிய படம் பின்னணி இசைக்கோர்ப்பும் நேர்த்தியானதே!
வில்லங்கமான வில்லி.... உடன் பணிபுரிந்த OO6 கூட இருந்தே குழிபறிக்கும் வில்லன்!
மாஸ்கோ தெருக்களில் ராணுவ டாங்கியில் ஜேம்ஸ் பாண்டின் பரபரப்பான துரத்தல் அசர வைக்கும் பங்கீ ஜம்ப் ஆரம்பம் ...சூப்பர் கிளைமாக்ஸ் பைட்
Last edited by sivajisenthil; 2nd August 2015 at 11:08 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
1st August 2015, 05:29 AM
#2245
Junior Member
Veteran Hubber
Monotony Breakers!
வில்லங்க கானங்களும் வெல்லங்களே!
அக்மார்க் வில்லன்கள் கோலோச்சிய தமிழ்த் திரையில் அந்த முத்திரையை உடைத்துக் கொண்டு இந்தப் பூனையும் பால்குடிக்குமா பாவனையில் அவர்கள் பாடினால் எப்படி இருக்கும் ?!
சில வில்ல(ன்)ங்கானங்களும் ரசனைக்குரிய பக்கங்களே!
Part 1 : S.A. Natarajan / Mandhiri Kumari (1950)
வில்ல நாதம் 1 : எஸ் ஏ நடராஜன் / மந்திரிகுமாரி (1950)
வில்லநாதம் என்றதும் பளீரென்று மனதில் முதல் சிம்மாசனமிடுவது மந்திரிகுமாரியின் மனம் கவர்ந்த உன்மத்த வில்லன் திரு எஸ் ஏ நடராஜன் அவர்கள் மாதுரியின் இணைவில் திருச்சி லோகநாதனாரின் வெண்கலக் குரலில் பாடிய வில்லங்க கானங்களே !
வித்தியாசமான வில்லத்தனம் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது !
ஏனோ சரியாக ஜொலிக்காது மின்னி மறைந்த நட்சத்திர வில்லன் !
Last edited by sivajisenthil; 1st August 2015 at 05:49 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
1st August 2015, 07:38 AM
#2246
Senior Member
Veteran Hubber
Jugalbandi 44 Chandi Rani again
From Chandi Rani (Tamil)
Vaan meethile....
From Chandi Rani (Telugu)
O Taraka....
From Chandi Rani (Hindi)
Chanda Tale Muskuraye
ChinnakkaNNan: Hope you get to sleep well listening to these songs !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
1st August 2015, 06:57 PM
#2247
Junior Member
Veteran Hubber
Monotony Breakers!
வில்லங்க கானங்களும் வெல்லங்களே!
அக்மார்க் வில்லன்கள் கோலோச்சிய தமிழ்த் திரையில் அந்த முத்திரையை உடைத்துக் கொண்டு இந்தப் பூனையும் பால்குடிக்குமா பாவனையில் அவர்கள் பாடினால் எப்படி இருக்கும் ?!
சில வில்ல(ன்)ங்கானங்களும் ரசனைக்குரிய பக்கங்களே!
Part 2 : S.V. Ramadas / Karnan (1964)
வில்ல நாதம் 2 : எஸ் வி ராமதாஸ் / கர்ணன் (1964)
எனக்குத் தெரிந்து வேறு எந்தப் படத்திலும் திரு ராமதாஸ் அவர்களுக்குப் பாடும் வாய்ப்பு தரப்படவில்லை!
எப்பேர்ப்பட்ட வாழ்நாள் வாய்ப்பு நடிகர்திலகம் ரசித்து நோக்க ஜெமினியை நினைவு படுத்தும் ஒப்பனையிலும் ஜெமினியின் பி பி எஸ் குரல் குழைவிலும் பசுமையான நினைவுப் பாடலை அவரால் முடிந்த அதிகபட்ச நடிப்பில் வெளிப்படுத்திய ராமதாஸ் அவர்கள் வியப்பின் சரித்திரக் குறியீடே!!
அதற்கப்புறம் அவர் பாடிக்கொண்டேயிருந்த ஒரே பாடல் அவரது டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டாரான 'எஸ் பாஸ்....எஸ் பாஸ்' பாட்டே!!
நடிகர்திலகத்தின் புதிய பறவை, உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை, பாரத விலாஸ் படங்களிலும் முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களை ஏற்றார் !
Last edited by sivajisenthil; 1st August 2015 at 07:45 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st August 2015, 07:48 PM
#2248
Junior Member
Veteran Hubber
வில்லங்க கானங்களும் வெல்லங்களே!!
பகுதி 3 : எம் என் நம்பியார் / மக்களைப் பெற்ற மகராசி
தமிழ்த் திரையுலக உச்ச வில்லனாகத் திகழ்ந்தவர்! உத்தம புத்திரன், குடியிருந்த கோயில்.......
மக்கள் திலகத்தின் பெரும்பாலான படங்களில் பிரதான வில்லனானாலும் நடிகர்திலகம் / காதல் மன்னர் படங்களிலும் மனதில் பதியும் பாத்திரங்களை திறம்பட
ஏற்றவர். அவரும் பாடல் காட்சியில் பாந்தமாக நடித்திருக்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை !
மீசையற்ற மழித்த முகவெட்டில் எவ்வளவு அமைதியான ஹீரோவாகப் பாடி நடிக்கிறார் !!எம் என் ராஜம் பொருத்தமான ஜோடியே !
mirudhanga sakkaravarthi !வில்லப் பாடகர்
Last edited by sivajisenthil; 1st August 2015 at 07:53 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
2nd August 2015, 04:29 AM
#2249
Senior Member
Seasoned Hubber
16 Vayathinile (1977) was Bharathirajas debut movie; with Kamal, Sridevi and Rajinikanth
in the lead roles. Music was composed by Ilaiyaraja, and the songs were very popular.
Here is செந்தூரப் பூவே, for which S. Janaki won the National Award for Best Female Singer:
The Telugu version Padaharella Vayasu (1978) featured Chandra Mohan, Sridevi and Mohan Babu,
and was directed by K. Raghavendra Rao. Music was by K. Chakravarthi, but Ilaiyarajas tune was
reused in sirimallepoovaa sirimallepoovaa sung again by S. Janaki
In 1979, Bharathiraja himself directed a remake of the movie in Hindi. Solva Sawan had
Amol Palekar, Sridevi and Kulbhushan Kharbanda in the lead. This was Sridevis and Bharathirajas
first Hindi movie. Jaidev composed the music, and செந்தூரப் பூவே became
pee kahaan pee kahaan sung by Vani Jairam:
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
2nd August 2015, 06:24 AM
#2250
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sivajisenthil
வில்லங்க கானங்களும் வெல்லங்களே!!
பகுதி 3 : [COLOR="#000080"]எம் என் நம்பியார்
சிவாஜிசெந்தில் சார்..
இதோ கவிதா படத்தில் ராஜசுலோசனாவுடன் எம்.என்.நம்பியாரின் இன்னொரு டூயட்...
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Bookmarks