Results 1 to 10 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    கண்டனம்
    சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள எம்.ஜி.ஆர். புத்தகத்திற்கு
    பா.தீனதயாளன் எழுதிய இந்த புத்தகம் முழுக்க முழுக்க பொய்யான , மக்கள் திலகத்தின் மாண்புக்கு மாசு கற்பிக்கும் வகையில் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது. திரை அரசியல் இரண்டிலும் வெற்றிக் கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம் என்று அட்டையில் போட்டு எம்.ஜி.ஆர் ரசிகர்களைக் கவர்ந்திழுத்து விட்டு உள்ளே மக்கள் திலகம் மோசமான படங்களைத் தந்தவர், அவர்களை நம்பியவர்கள் கெட்டுப் போவார்கள், அவரால் படங்களை நல்ல முறையில் முடித்துத் தர இயலாது, அலைக்கழிப்பார், தரமற்ற படங்களைத் தருவார் ஆனால் அவை வெற்றி பெறும், கலைஞரின் தயவில் தான் மக்கள் திலகம் திரையுலகில் முன்னுக்கு வந்தார், இப்படி புத்தகம் முழுவதும் எம்.ஜி.ஆரைக் குறை கூறுவதாகவே அமைந்துள்ள புத்தகத்திற்கு அட்டை மட்டும் எம்.ஜி.ஆர் பக்தர்களை ஏமாற்றும் வகையில் தலைப்பு. வியாபாரமாக வேண்டுமே. முடியுமானால், மக்கள் திலகத்தை தாக்கி எழுதப்பட்ட புத்தகம் என விளம்பரம் செய்து விற்பனை செய்யுங்கள் பார்க்கலாம். இதில் எம்.ஜி.ஆரை நேசிப்பவர் பா.தீனதயாளன் என்று முத்துக்குமார் அவர்களின் பதிப்புரை வேறு . கேலிக்கூத்து. கண்ட கண்ட மஞ்சள் பத்திரிக்கைகளில் வந்த வதந்திகளை கோர்த்து அருகிலிருந்து பார்த்தவரைப் போல் எம்.ஜி.ஆர் முகத்தைத் திருப்பிக் கொண்டார், உதட்டை கடித்துக் கொண்டார், சத்தியம் வாங்கிக் கொண்டார்,மந்திரி பதவி கேட்டார், படப்பிடிப்பை வேண்டுமென்றே தாமதப்படுத்தினார், இப்படிப் பேசினார் ,அப்படி நடந்து கொண்டார் என்று கதை விட்டிருக்கிறார். இதை மக்கள் திலகம் ரசிகர்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    Last edited by jaisankar68; 9th August 2015 at 12:04 PM.

  2. Thanks Russellisf, Russellwzf, Richardsof, ujeetotei thanked for this post
    Likes Russellisf, oygateedat, ujeetotei liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •