[QUOTE=sivajisenthil;1243695]ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!



கெட்டப் கெட்டிக்காரர் 1 : மக்கள் திலகம் MGR

மாறுவேட மதுரம் 1: கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் / படகோட்டி

வில்லன்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு காதலி சரோஜாதேவியை சந்திக்க வளையல்காரர் கெட்டப்பில் கனகச்சிதமாகப் பொருந்தும் மக்கள்திலகம் அத்தனை வளையல் சரங்களையும் சர்வசாதாரணமாக தனது வலிமை வாய்ந்த தோள்களில் தாங்கி சோபாவின் மீது குதித்தமர்ந்து ஆடிப் பாடுவது மிஸ் பண்ணக் கூடாத கண்கவர் ஆடல் பாடல் காட்சியமைப்பே !

எண்ணற்ற மாறுவேட கெட்டப்களில் ரசிகர்களை மகிழ்வித்திருந்தாலும் எனது கணிப்பில் இதற்கே முதலிடம்! ஏனெனில் ஏகப்பட்ட சுமைகளுடன் அலட்டிக்கொள்ளாமல் அவர் ஆடியிருக்கும் விதமே அலாதி !

-----------------------

நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு,

படகோட்டி பாடலுக்கும் அதற்கு தாங்கள் கொடுத்துள்ள விளக்கத்துக்கும் மிகவும் நன்றி. ஆறே வரிகளில் மொத்த பாடலின் அழகையும் மக்கள் திலகத்தின் நடன சிறப்பையும் வர்ணித்து விட்டீர்கள். மக்கள் திலகம் இதை விட சிறப்பாக வேறு மாறுவேடங்களில் வந்திருந்தாலும் இந்த மாறுவேடப் பாடல் நீங்கள் கூறியிருப்பதுபோல் அலாதியானதுதான்.

தங்களுக்கு மீண்டும் பணிவான நன்றிகள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்