-
25th August 2015, 07:14 PM
#2961
Senior Member
Diamond Hubber
வாசுஜி.....
யெஸ்.....அதே. அதே... நான் படம் பார்த்ததில்லை. ஆனால் வானொலியில் கேட்டிருக்கிறேன்.. முதல் வரி டியூன் கேட்டதும் நினைவுக்கு வந்தாச்சு...
வாவ்... எத்தனை நாளாச்சு இந்தப் பாட்டெல்லாம் கேட்டு...
புடவைக்கும் வேட்டிக்கும் முடிச்சொண்ணு போடடி. .. ஹா..ஹா..ஹா..
ஜில் ஜில் மேனி பாட்டையும் கொஞ்சம் பகிருங்களேன் ப்ளீஸ்...
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
25th August 2015 07:14 PM
# ADS
Circuit advertisement
-
25th August 2015, 08:18 PM
#2962
Senior Member
Diamond Hubber
மதுண்ணா!
யூனியனில் மீட்டிங். போய் விட்டு வந்தேன். அதான் லேட். உங்களுக்கில்லாததா? இந்தாங்க 'ஜில் ஜில் மேனி'
http://www.mediafire.com/download/51...thum+Vetri.mp3
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
25th August 2015, 08:27 PM
#2963
Senior Member
Diamond Hubber
மதுண்ணா !
இந்தப் பாடல்களையெல்லாம் போன வருடம் எனக்களித்து உதவி புரிந்த சுந்தரபாண்டியன் சாருக்கு நமது மதுர கானங்கள் சார்பாக மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி சுந்தரபாண்டியன் சார். மிக்க நன்றி!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th August 2015, 08:56 PM
#2964
Senior Member
Seasoned Hubber
Vanakkam madhunna & Vasuji (vaji vaji ...)
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
25th August 2015, 09:01 PM
#2965
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
Vanakkam madhunna & Vasuji (vaji vaji ...)
Vanakkamji!
en jeevan
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
25th August 2015, 09:04 PM
#2966
Senior Member
Seasoned Hubber
ஜி
இதோ உங்களுக்காக ஒரு இனிய கன்னட பாடல்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
25th August 2015, 09:29 PM
#2967
Junior Member
Veteran Hubber
சிறைச்சாலை என்ன செய்யும் ? ஜெயிலில் மலர்ந்த குயிலிசை கான மலர்ச்சரம்!
குயில் 2 : மக்கள் திலகம் கூண்டுக்கிளியாக.....
சிறைச்சாலை என்பது தோற்றுவிக்கப் பட்டதே குற்றவாளிகள் மனம் திருந்தி குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்கே !
சட்டம் ஒரு இருட்டறையாகவும் வழக்குரைஞரின் வாதம் ஒரு சுடர் விளக்காகவும் இருக்கும் வரை நீதிதேவனின் மயக்கம் சந்தர்ப்ப சூழல்களால் குற்றமற்ற அப்பாவிகளையும் சிறைக்கு அனுப்பி விடுகிறதே !
பெரும்பாலான நமது கதாநாயகர்கள் இந்த கோட்டாவில்தான் செய்யாத குற்றத்திற்கு ஜெயிலுக்குப் போய்ப் பாட்டெல்லாம் பாடி ஜாலியாக இருப்பார்கள் !!
மக்கள் திலகமும் புரட்சிக்காரராகவும் அப்பாவியாகவும் நிறைய படங்களில் ஜெயிலுக்குப் போயிருக்கிறார் !! ஆனால் காவலர்கள் இவர் வருகையால் திருந்தி நல்லவர்களாகி விடுவார்கள் !
ஜெயில் வாழ்க்கையில் குயிலாக மாறி அவர் இசைத்த கானங்களின் வரிசை......
குடியிருந்த கோயிலில் மட்டும் பிடிகிட்டாப் புள்ளியாக தப்பித்து ஓடுபவர் ஒரு விபத்தால் சிறைப்படுத்தப் பட்டு சுயநினைவின்றி சிறைப்படுத்தப் படுவார் ! தான் யாரென்று தெரிந்து கொள்வதற்காக டாக்டர் நர்ஸ் இன்ஸ்பெக்டர் இன்னொரு எம்ஜியார் எல்லோரையும் நிற்க வைத்து பாட்டலடிப்பார்!!
தூங்கிப் பொழுதைக் கழித்துக் கொண்டு சோம்பேறிகளாக இருக்கும் காவலர்களுக்கு உறைக்கும் வண்ணம் வாழ்க்கையின் வெற்றி இலக்குத் தத்துவங்களை
புரட்சிப் பாடகராக வெளிப்படுத்தும்போது கூண்டுக்கிளியாய் பக்கத்து செல்லில் 'சுவற்றுக்கும் கேட்கின்ற காதிருக்கும்' என்னும் கோட்பாட்டை நிரூபிக்கும் வண்ணம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் ஜெயில் பறவையாக இருக்கும் நாயகிக்கும் ஒரு பிராக்கெட் போடப்படும் !!
[url]https://www.youtube.com/watch?v=rfT6xXit7Sk
செய்யாத தவறுக்காக கதாநாயகன் சிறுவயதாக இருக்கும்போதே தந்தை ஜெயிலுக்குப் போய்விடுவார் !
அதே வழியில் விதி கதாநாயகரையும் கரெக்டாக அதே ஜெயிலுக்குக் கொண்டு போய் கைதியாகக் கோர்த்து விடும் !!
மனம் கல்லாகிப் போன மனிதர்களே கடவுளும் கல்லாக சமைந்து நிற்கக் காரணம் என்று ஜெயில் வளாகத்தில் பாடும்போதுதான் தந்தை கண்டுபிடித்து பிளாஷ் பேக்கடித்து ....நாயகர் வெளியே வந்து பழிதீர்த்திட வழி கிடைக்கும்!! நமக்கும் தியேட்டரை விட்டு வெளிய வருபோது ஒரு வாழ்க்கைத் தத்துவப் பாடல் மனதில் ஆணியடிக்கும் புண்ணியம் மக்கள்திலகத்தாலேயே !
[url]https://www.youtube.com/watch?v=DrtNhx9XcKM
Last edited by sivajisenthil; 25th August 2015 at 09:50 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th August 2015, 10:23 PM
#2968
Senior Member
Diamond Hubber
ஜி!
ரெண்டு கல்ஸும்
பாடும் கன்னடல் பாடல் கேட்டேன். நன்றாக இருந்தது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th August 2015, 10:36 PM
#2969
Senior Member
Senior Hubber
ஹாய் ஆல்.. செளக்கியமா இருக்கேளோன்னோ..
என்ன ஆச்சுன்னே தெரியலை..வந்து பாத்தா புச்சு புச்சா வாசுண்ணாவும் மதுண்ணாவும் பழைய பாட்ஸ் போட்டுக்கிட்டே போய்க்கினு இருக்காங்க..ஒண்ணொன்னா கேக்கணும்..
இன்னொரு கோயமுத்தூர்க் காரவுக ஷவர்ல குளிச்சுக்கிட்டே இருந்தாரா என்ன நெனச்சாரோ ஜெயிலுக்குக் களத்தை மாத்திட்டார்என்ன சொல்ல..
நடுல கொஞ்சம் நாளாக் காணோம்னு நினச்சுருந்த வரத குமார சுந்தர ராம அண்ணா கற்புக்கரசி, அல்லி பெற்ற பிள்ளை மணிமேகலை,ராஜசேவை(மோர்க்குழம்பு சைட்டிஷ்ஷா தருவாங்களா), காவேரியின் கணவன் என தெரியாத படங்களோட விளம்பரமாக் கொடுத்து அசத்துறாரா..
..
//அந்த மாதிரி ஒரு பாடல்தான் இது. இந்தப் பாடலைக் கேட்டாலே ஏதோ ஒரு இனம் புரியாத கலவரம் நெஞ்சில் ஓடுவது தவிர்க்க முடியாததாகிறது. இத்தனைக்கும் நெஞ்சை உருக்கக்கூடிய சோகப் பாடலும் இல்லை. ஆனால் நெஞ்சாங்கூட்டை அடைக்கிறது. ஏதோ சொல்ல முடியாத உணர்வுகள் ரத்த நாளங்களில் பாய்கின்றன. இதற்கு சுசீலா அம்மாவின் குரலும் பெரும் காரணம்.// ஆஹா எவ்ளோ உருக்கம்.. எனக்கும் தேடித்தேடிப் பார்த்திருந்தேன் பாட் பிடிக்கும்.. இனிதான் கேக்கணும்..
//பத்மப்ரியா கூட ஹேமமாலினி போல ஜாடையில் இருப்பார்.. இதில் அழகு பத்தியெல்லாம் ஒண்ணும் கிடையாது.. Just இவரைப் பார்க்கிறபோது அவர் நினைவு வரும். அம்புட்டுதேன்.// நம்பறோம் மதுண்ணா..
ராஜேஷ் ஜி.. ராமாயணப் பாட் போட்டாருன்னா மதுஜி பால காண்டத்துலருந்து ஆரம்பிச்சு அதே பாட் போடறார்..
எனக்கும் அது தொடர்பா லட்சுமணன் நினைவு வந்து முன்பு எழுதிய (சுமார் பதினைந்து வருடம் முன்) கவிதை நினைவுக்கு வந்து தேடிப் பார்த்து த் டைப்புகிறேன்..
*
லட்சுமணக் கோடு..
**
சுழலில் சுற்றும் வட்டம் போலே
சுற்றிச் செல்லுது நினைவும் பின்னால்..
*
மேகத்தில் மறையா மின்னலைப் போல
மேகக் கூந்தலில் மல்லிகை இருக்க
என்றே எழுதிப்பார்த்தபோதில்
அம்மா சொன்னாள் வாசலில் யார்பார்..
கூடம் ரேழியைத் தாண்டிச் சென்றால்
வட்டத் திங்கள் சின்னச் செவ்வாய்
மேலே பார்க்குமுன் அம்மா வந்து
வாவா இவளே வழிதெரிஞ் சுதாடி..
இவனே இவள்தான் அவரின் பெண்” என
இந்த ஊரில் கொஞ்சம் ஆஃபீஸ்‘
வேலை இருந்தது மாமி வந்தேன்
நாளை தான்பஸ் எங்கே மாமா?”
எப்பவும் போல இப்பவும் டூர்தான்
எனக்கும் நாளை உறவின் திருமணம்
இன்று மாலை துவரிமான் போகணும்
காலை வருவேன் கவலைப் படாதே..
இவன்பார்த் துப்பான் என்ற அம்மா
நேரம் ஆகவும் கிளம்பிச் செல்ல..
மாலை சென்றதும் நானும் அவளும்
டிவி ரேடியோ டேடிகூல் பாட்டு
எல்லாம் பேசி அலுத்த பின்னர்
இரவும் வந்தது நிலவும் வந்தது
அவளும் என்னைப் புதிராய்ப் பார்த்து
மெல்ல நகர்ந்து அறையினுள் செல்ல
படுக்கை இரண்டு தலையணை எல்லாம்
எடுத்து விரித்து ஹாலில் படுத்தேன்..
*
என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்லணும்
தேடலைத் துவக்கும் கல்லூரிப் பருவம்
அறிவதில் தெரிவதை அறியும் பருவம்
உள்ளே இருப்பவள் உன்வயது தானே
ஒருவகை உனக்கு முறைப்பெண் தானே
உள்ளே போயேன்” மற்றும் பலவாய்ப்
புலம்பிய சாத்தானைத் தட்டி அடக்கிக்
கண்ணை மூடிக் கடவுளை அழைத்தால்
கடவுள் வரலை ஸ்ரீதேவி வந்தாள்…..
கனவினில் தூங்கி எழுந்தால் மறுநாள்…
*
சிற்சில மாதங்கள் சென்றபின் ஒரு நாள்
அவளின் திருமணம் அழைப்பிதழ் வந்தது;
சென்றால் சுற்றம் இல்லாப் போதில்
சுற்றும் பார்த்து “நன்றி” என்றாள்
அதன்பிறகு நானும் இதுவரை அவளைப்
பார்க்கவே இல்லை…வேண்டுமா என்ன..
***
ம்ம் இதுக்குப் பொருத்தமா.. பாட் வேணும்னா தேடிப் போடுங்களேன்..
**
நானும் கொஞ்சம் தேடிப்பார்த்து ஒரு ரேர் சாங்க் போடட்டா..(ஹச்சோ போட்டாச் குரல் வராம இருக்கணுமே
*
மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி
மலராப் பொறந்தா தோட்டத்து ராணி..
ஆணா பொண்ணா பூமியில் பிறந்தா
அல்லும் பகலும் சோதனை தானே..
ம.தி, ஜெயலலிதா.. டான்ஸ் நல்லா இருக்கே..
பின்ன வாரேன்
Last edited by chinnakkannan; 25th August 2015 at 10:41 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
26th August 2015, 12:59 AM
#2970
Senior Member
Veteran Hubber
thiraiyil bhakthi - aadi paramporuLe
From Santhana Thevan (1939)
aadhi param poruLe........
The singer is U.R.Jeevarathnam.
rajesh: This song is to nudge into posting more !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks