Page 325 of 400 FirstFirst ... 225275315323324325326327335375 ... LastLast
Results 3,241 to 3,250 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3241
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..


    ரவி..குட்..வழக்கம்போல கலக்குங்க..

    என்ன பண்றது கல்யாணம் ஆனா டயட் கண்ட் ரோல்லாம் போய்டும் போல இருக்கு..ஹிஹி.. நான் டயட்ல இருக்கேனாக்கும் ராகவேந்தர் சார்

    நடிகை ஜமுனாவின் பர்த்டேயாமே இன்னிக்கு..

    http://isaikuyil.blogspot.com/2014/05/blog-post.html




    இன்பமான இரவிது- மனிதன் மாற்வில்லை நான் கேட்டதில்லையே..


    ஆக்சுவலா ரவியோட பக்தி கேள்வி பதில் பாணியிலே அமைஞ்ச காதல் பாடல்..

    காதல் யாத்திரைக்கு ப்ருந்தாவனமும் கற்பகச் சோலையும் ஏனோ?
    வேல்விழி மாது என் அருகிலிருந்தால் வேறே சொர்க்கமும் ஏனோ?


    ம்ம் வீடியோ தேடினா சிக்கலை :துன்பம்:

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3242
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சி.செ இல்லாமல் கொஞ்சம் சோகம்+ நிறைய போர் அடிக்கிறது.. என்ன செய்யலாம்..

    அவர் பாணியிலேயே எழுதிப் பார்க்கலாம்..

    *

    பியானோ பாட்ஸ் : குறு(ம்புத்) தொடர்..

    கலர் நீலம் : கட்டை எனப்படும் மானிட உடலின் விரல்களால் மீட்டப்படும் இந்த இசைக்கருவியில் தான் எத்தனை கட்டைகள்..

    சொல்லத் தான் நினைக்கிறேன் முடியவில்லை அதை ச் சொன்னாலும்
    கேட்பவர்க்குப் பொறுமையில்லை.. அஞ்சலி அண்ட் நாகேஸ்வர ராவ் (தப்பா இருந்தா கரெக்ட் பண்ணுவாங்க மனசாட்சி)

    *



    மக்கள் தொடர்வார்கள் தானே

  4. #3243
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Ck - காயத்ரி 108 ஆ ? 1008 ஆ எவ்வளவு பண்ணினீர்கள் - (சொல்வது மந்திரம் நினைவிருக்கட்டும் !!)

  5. #3244
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு / CK ஏன் இந்த பாட்டைக்கொடுத்து செந்தில் சாருக்கு உதவி செய்யவில்லை ? இந்த பாட்டை சரியான சமயத்தில் அவருக்கு கொடுத்திருந்தால் , sabbatical அவருக்கு தேவைப்பட்டிருக்காது . இந்த பாட்டில் பல எண்கள் வரக்கூடும் .

    முத்தங்களுக்கு கணக்கு வைக்கக்கூடாது , கணக்கு பார்க்கக்கூடாது என்று CK வின் ஒரு கவிதையில் படித்த ஞாபகம் . இருந்தாலும் இந்த பாட்டில் எவ்வளவு எண்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை ஆராய்வோம் ( செந்தில் சாருக்கு ஆராய்வது மிகவும் பிடிக்கும் )

    "பத்து பதினாறு முத்தம் முத்தம் தொட்டு தரும் பாவை பட்டுக்கன்னம்.."

    10 , 16 முத்தம் முத்தம் ---- முதலில் ஒளிந்திருக்கும் எண் 1016 , பிறகு ஒளிந்திருக்காமல் தெரியும் எண் 10 & 16 . X X என்பது (X ) * (X ) - அதனால் 10* 16 = 160 ; 10 முத்தங்கள் முடிந்த பின்னே பிறகு முதலிலிருந்து மீண்டும் 16 முத்தங்கள் தேவைப்படலாம் - அப்படி நடந்தால் வரும் எண் 10+ 16 = 26 . இந்த ஒரு பாட்டில் மறைந்திருக்கும் முத்தங்களின் எண்கள் பின் வருமாறு :

    1. 10

    2. 16

    3. 26

    4. 160

    5. 1016

    அப்பாடா கோவை insititute இல் இருந்து phD கிடைத்துவிடும் .


  6. Likes chinnakkannan, Russellmai liked this post
  7. #3245
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    Ck - காயத்ரி 108 ஆ ? 1008 ஆ எவ்வளவு பண்ணினீர்கள் - (சொல்வது மந்திரம் நினைவிருக்கட்டும் !!)
    108

  8. #3246
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    காயத்ரி மந்திரம் :



    வாழ்க்கையில் பிரச்சனைகளை எதுவுமே சாதிக்காமல் தடம் பதித்தவர்கள் எவருமே இருக்க முடியாது . இந்த உடலுக்கு போஷாக்குகள் எப்படித்தேவையோ அப்படித்தான் இந்த ஆத்மாவிற்கும் , உள்ளத்திற்கும் தேவை . NASA , அவர்களுடைய சமீப ஆராய்ச்சியில் கண்டு பிடித்த உண்மை காயத்திரி மந்திரத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் சக்தி , வீரியம் , பலன் , 1000 கோடி சூரியனின் சக்தியை விட மிகப்பெரியது . நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் நம் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் , அடுத்த தலை முறை நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த மந்திரத்தை நாம் நாள் தோறும் சொல்வது அவசியம் . இன்று அந்த இறைவிக்கு நன்றி சொல்லும் தினம் . இந்த மந்திரத்தை எந்த பிரிவினரும் சொல்லலாம் - ஆண் , பெண் என்ற பாகுபாடும் தேவை இல்லை - தினமும் சொல்லிப்பாருங்கள் - உங்கள் வாழ்வில் எல்லாமே நல்லதாகவே முடியும் , நல்லதே நடக்கும் - இது சத்தியம் - உண்மை ...


    Full Version of Gayatri Mantra
    For those of you who want a little more, chant the long version. The introduction invokes the power of Gayatri in all seven lokahs, or dimensions, purifying and empowering all areas of your life. Reciting all seven lokas before chanting Gayatri energizes all of your chakras, adding efficacy, clarity and power.

    Om bhahu

    Om bhuvaha

    Om suvaha

    Om mahaha

    Om gahaha

    Om tapaha

    Om satyam

    Tat Savithur Varenyam
    Bhargo Devasya Dheemahi
    Dhiyo Yonaha Prachodayath



    Meaning of the Full Version of Gayatri Mantra:

    Bhuhu is the physical plane or Earth

    Bhuvaha is the astral the energy underlying the physical

    Suvaha is the mental world of thought

    Mahaha is emotions

    Janaha is creative generation

    Tapaha is intuition

    Satyam is the absolute from which the true teachings come

    By chanting the introduction, youre telling the energy created by Gayatri to progressively work through from the grossest physical level of your being to the highest, most refined aspect of you, purifying all.

    You become purer, more refined and more translucent Divine in all aspects. Swiftly becoming Divine radiant light is the greatest benefit and is the goal of chanting Gayatri morning, noon and night.

    Gayatri Mantra Benefits
    Becoming radiant Divine light is the greatest benefit, but if thats not enough for you, or you think its too far away, along the path to Divinity there are many other benefits that you can enjoy sooner.

    Gayatri:

    Removes obstacles from your life
    Protects you from danger
    Brightens you mind
    Dispels ignorance
    Improves communication abilities
    Opens your psychic vision
    Brings direct knowledge of the eternal truths


  9. Likes Russellmai, chinnakkannan liked this post
  10. #3247
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்!

    திரையில் பக்தி பொறுமையாக படித்துக் கொண்டிருக்கிறேன். அருமையாக இருக்கிறது. கேள்விகள்,பதில்கள் என்று புகுந்து விளையாடுகிறீர்கள். நமக்கு இதிலெல்லாம் சாமர்த்தியம் பத்தாது. டோட்டல் அவுட். இது உங்களால் மட்டுமே முடிந்த ஒன்று. 'திரையில் பக்தி' என்று சாமர்த்தியமாக தலைப்பிட்டு சாதுர்யமாக 'மானுடர் வாழ்வில் மனிதமே பக்தி' என்று பாடல்களின் மூலம் நிரூபித்து அதில் முழு வெற்றியும் கண்டிருக்கிறீர்கள். உங்கள் பதிவைக் காண ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது. மது அண்ணா எல்லாம் உங்கள் பதிவுகளை எப்படி ரசித்துச் சுவைக்கிறார்கள் என்று உணர முடிகிறது. 'காயத்ரி' சினிமா பற்றிதான் எனக்குத் தெரியும். மந்திரமெல்லாம் ம்ஹூம்... மருந்துக்குக் கூடத் தெரியாது.

    நீங்கள் சொன்ன டைப்பில் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். 'மக்கள் கலைஞர்' ஜெய் படம்தான். இந்த மனிதரின் படங்களில்தான் பாட்டுக்கள் எப்படியெல்லாம் அமைந்து விட்டன! தங்கப் புதையல் மாதிரி தோண்ட தோண்ட இவர் படங்களில் பாடல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். படங்களையோ அதன் தரத்தையோ விட்டுத் தள்ளுங்கள். ஆனால் பாடல்கள் இவர் படங்களில் தனி சிறப்பு.

    'கண்ணன் வருவான்' (1970) என்ற படத்தில் இந்தப் படத்தின் போஸ்டரே கொஞ்சம் வித்யாசமாக இருக்கும். புல்லாங்குழல் வாசித்தபடி கண்ணன் இமேஜ் மட்டும் மேலே இருக்க கீழே 'வருவான்' என்ற வார்த்தை மட்டும் இருக்கும். போஸ்டர் பார்ப்பவர்கள் 'வருவான்'... இப்படி ஒரு படமா என்று அப்போது கேட்டதுண்டு நான் உட்பட. பிறகுதான் புரிந்தது கண்ணன் படத்தை வைத்து சேர்த்து 'கண்ணன் வருவான்' என்று படிக்க வேண்டும் என்று. அப்போது இது ஒரு புதுமைதான். இல்லையா ராகவேந்திரன் சார்?

    இந்தப் படத்தில்

    'பூவினும் மெல்லிய பூங்கொடி'

    'நிலவுக்குப் போவோம் இடமொன்று பார்ப்போம்'

    என்ற காலத்தால் அழிக்க முடியாத சூப்பர் ஹிட் பாடல்கள் உண்டு. அதோடு சேர்ந்து இன்னொரு பாடல். பாடகர் திலகம் பாடியிருப்பார். உங்கள் கான்செப்டில் அதாவது கேள்வி பதிலாக வரும். எனக்கு நிரம்ப பிடித்த பாடல். கிட்டத்தட்ட நாத்திகக் கருத்துக்கள் அதிகம் இருக்கும். ஆனால் அருமையாக இருக்கும். பட்டை கிளப்புவார் சௌந்தரராஜன்.

    'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
    இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்'

    என்ற பாரதியின் தொகையறாவோடு அவர் சிலை முன் பாடல் துவங்கும். பட்டினிப் பட்டாளம் காட்டப்பட்டு, வள்ளுவர் சிலையும் காட்டப்பட்டு 'உங்கள்' குறளும் தொடர்ந்து வரும்.

    'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான்'

    உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக. அதாவது பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக என்பது இக்குறளின் விளக்கம்.

    டி.எம்.எஸ்ஸின் கேலி, வேதனை, வெடிச்சிரிப்பில் ஆரம்பித்து பல்லவி ஒலிக்கும்


    பூமியைப் படைத்தது சாமியா
    இல்லை சாமியைப் படைத்தது பூமியா
    தினம் பாலுக்கும் கூழுக்கும் ஏழைகள் அலைகையில்
    ஆயிரம் கேள்விகள் தேவையா?
    பூமாலையும் மேடையும் தேவையா?

    பிறப்பும் இறப்பும் அவன் பொறுப்பு
    சிரிப்பும் அழுகையும் யார் பொறுப்பு
    பிறப்பும் இறப்பும் அவன் பொறுப்பு
    சிரிப்பும் அழுகையும் யார் பொறுப்பு
    இரவு இங்கே வெளிச்சம் அங்கே
    என்ன வேலை இறைவனுக்கு?

    (பூமியைப் படைத்தது சாமியா)

    இவன் வேர்வையின் துளிகள்
    அவன் சூடிடும் மணிகள்
    இந்த ஏழையின் உழைப்பு
    அந்த மாளிகை மதிப்பு
    பருந்து அங்கே கிளிகள் இங்கே
    இரண்டின் நடுவே இறைவன் எங்கே?

    (பூமியைப் படைத்தது சாமியா)

    அது ஆலய மணியா?
    என் ஆசையின் ஒலியா?
    அவன் பூஜையின் குரலா?
    என் கேள்விக்கு பதிலா?
    வயிறு இங்கே உணவு அங்கே
    இரண்டின் நடுவே இறைவன் எங்கே?

    (பூமியைப் படைத்தது சாமியா)

    ஒரு பாதையில் போனால்
    மறு பாதையில் வரலாம்
    இது சாலைக்கு நியாயம்
    எது ஏழைக்கு நியாயம்
    பாதை அங்கே பயணம் இங்கே
    இரண்டின் நடுவே இறைவன் எங்கே?

    (பூமியைப் படைத்தது சாமியா)


    ஏழைகள் படும் கஷ்டங்களைக் காட்டி மனம் புண்ணாகி 'மக்கள் கலைஞர்' பாடுவதாக அமைந்த இந்தப் பாடல் எம்.ஜி.ஆர் படத்தில் வரும் பாடல் போல இருக்கும்.

    'பாடகர் திலக'த்தின் பாவங்கள் குரலில் அருவியாய் வந்து விழும்.

    மீண்டும் சொல்கிறேன். நான் ரொம்ப விரும்பும் பாடல். நீங்களும் அப்படித்தானே?


    Last edited by vasudevan31355; 30th August 2015 at 09:21 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Thanks uvausan thanked for this post
    Likes Russellmai, uvausan liked this post
  12. #3248
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி . உங்கள் உப பதிவுகள் , நான் இதுவரை போட்டவைகளை விட அற்புதமாக இருக்கின்றன . நான் திரு ராஜேஷ் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் - அவர் மனமுவந்து " திரையில் பக்தி " என்ற தலைப்பை எனக்கு விட்டுக்கொடுத்தற்காக - எல்லாவற்றையும் சொல்லிவிட்டோமே - தனியாக "தெய்வம் " என்பதைப்பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறது என்று நினைத்தேன் - உள்ளே இறங்கினால் , இது ஒரு ஸாகரம் என்பதை உணர்ந்தேன் - வெறும் பாடல்களாக பதிவிட மனம் ஒப்புக்கொள்ளவில்லை - சொல்வதில் ஒரு கருத்து இருக்க வேண்டும் - அந்த கருத்து படிப்பவருக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ( உங்கள் எல்லோரிடம் இருந்து கற்றுக்கொண்டதுதான் )

    ஒருவனை பிடிக்க வில்லை அது இறைவனே ஆகட்டும் - திட்ட வேண்டுமென்றால் நமக்கு ஆயிரம் காரணங்கள் கிடைக்கும் -- அதுவே ஒருவனை போற்றவேண்டுமானால் , காரணங்களை தேடிப்பிடிக்க வேண்டும் - இறைவனும் இதற்கு விதி விலக்கல்ல ..... கேள்வி என்று ஒன்று இருந்தால் , பதில் என்று ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும் --- சந்தேகம் என்று ஒன்று எழுந்தால் , அதைப்போக்க ஒரு மருந்து இருந்துதான் ஆக வேண்டும் - இது உலக நியதி - இதைத்தான் கேள்வி-பதிலாக சொல்கிறேன் - ஒரு சிறிய முயற்சிதான் --- என் வேகம் , முயற்சி எல்லாமே உண்மையாகவே தூங்குபவர்களை எழுப்பவதர்க்காகத்தான் - துங்குபவர்கள் போல் நடிப்பவர்களை அல்ல - அவர்களை அந்த இறைவன் கூட எழுப்ப முடியாது . மீண்டும் என் நன்றி வாசு உங்கள் பதிவுக்கு ...

  13. Likes madhu liked this post
  14. #3249
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாஸ்ஸீ.. இதில வேற ஏதோ ஜெய் சொல்றாரே


  15. Likes Russellmai liked this post
  16. #3250
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi and nine

    From Navagraha Nayaki (1985)

    navagraha nayakiye.....




    If you insist on nine in Tamil instead of Sanskrit here is a song from Dheivapiravi

    ivar kaanaa avar paanaa.......

    onbathu near the endin the line 'ivanga ellaam onbathu roopaa nottu'

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  17. Likes Russellmai, chinnakkannan, madhu liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •