ஒரு கச்சேரி நிகழவிருக்கிற
சபை.
பருத்த உடலும் தடிமனான
கண்ணாடியுமாய் பார்வையாளர்
வரிசையில் ஒரு பாகவதர்.
பக்கத்தில் வந்தமரும்
போலீஸ்காரருக்கு
வணக்கம் சொல்கிறார் பவ்யமாய்.
குயில் கூவலாய் ஒரு பெண்
பாட கச்சேரி துவங்குகிறது.
அழகாய்ப் பயணப்படும் அந்தப்
பாடலின் வழியில் ஒரு வேகத் தடை.
அந்தப் பெண்
திக்குகிறாள். திணறுகிறாள்.
பாட்டறிந்த பாகவதர்
மேடையேறுகிறார்.
பாடுகிறார்.
இனிக்கப் பாடுகிறார்.
இதயங்கள் நெகிழப் பாடுகிறார்.
அப்பப்பா...!
அந்தப் பாடலென்ன?
பாவனைகளென்ன?
அசைவுகளென்ன?
அபிநயங்களென்ன?
அணிந்திருக்கும்
மூக்குக்கண்ணாடிக்குள்
அழகாய் மிளிரும்
கண்களிலே,
அனைத்தும் உணர்ந்ததன்
விளக்கமென்ன..?
பாடும் உதடுகள் மீதினிலே
புன்னகை அமர்த்தும்
பழக்கமென்ன?
தன் திறம் காட்டுதல் மட்டும்
இல்லாமல்,
உடன் கலை செய்வோரையும்
உயர்த்தும் தன்மை என்ன?
ஓங்கி உயர்த்தி
குரல் தருதல்,
உடல் நிமிர்த்தியும்,தளர்த்தியும்
அசைவுறுதல்,
தூய இசையோடு ஒன்றி விடல்,
தொடையில் அழகாய்த்
தாளமிடல்..
அனைத்திலும் தெரியும்
உண்மையென்ன..?
பாடல் தொடர்கிறது.
தொடர்ந்து நகர்கிறது.
நகர்ந்து முடிகிற நேரத்...
..முதுகில் பிடுங்கிய
மூட்டைப் பூச்சி
நினைவூட்டியது..
அமர்ந்திருப்பது
திரையரங்கமென்றும், அந்தக்
கச்சேரி 'குங்குமம்' படக்
காட்சியென்றும்,
அந்தப் பாகவதர் நம் நடிகர்
திலகமென்றும்!
ஏங்க.. மதியச் சாப்பாட்டுக்கு
சாம்பார் வைக்கட்டுமா.. ரசம்
வைக்கட்டுமா?" என்று
கேட்டாள்..சரிவர சமைக்கத்
தெரியாத மனைவி.
கணவன்,அமைதியாகச் சொன்னான்.. "முதல்ல
ஏதாவது வை.சாப்பிட்டுப்
பாத்து பேரு வச்சுக்கலாம்"
என்று.
*****
சமைக்கத் தெரியாத பெண்களைக் கிண்டலடிக்கிற
விதமாய் அமைந்த அந்த
நகைச்சுவைத் துணுக்கு,
சிரிக்க வைத்தாலும், பசித்தும்
நல்ல உணவை உண்ண முடியாத அந்தக் கணவனுக்காகக் கவலைப்படவும் வைக்கிறது.
*****
பசி பொல்லாதது.
மனிதனின் வாழ்வில் எண்ணற்ற உணர்வுகள்,கடமைகள்,செயல்கள் உண்டு.
அவை அத்தனையையும் மறக்கடிக்கச் செய்து,மனிதன்
தன்னை மட்டுமே நினைக்குமாறு செய்ய வல்லது இந்தப் பசி.
*****
"பாபு" என்கிற திரைப்படம்.
"வரதப்பா..வரதப்பா"என்று
அதில் ஒரு பாடல்.
உழைத்துப் பசித்தவர்களின்
உணவு நேர சந்தோஷத்தை
இந்தப் பாடல் போல் எந்தப்
பாடலும் காட்டியதில்லை.
கலைப்பசியில் சுருண்டு கிடக்கும் நமக்கு இப்படி நடிகர் திலகம் போல் வேறு யாரும் நடிப்புச் சோறு ஊட்டியதில்லை.
*****
பசியாறியவர்களின் வயிறு குளிர்வது போல, பார்ப்பவர்களின் நெஞ்சு குளிர்கிறது.
பளிங்கு போன்ற முகம்.படிய வாரிய தலைமுடி பாதி வரை மறைத்திருக்கும் நெற்றி.அதன் கீழ் உருண்டோடும் அந்த
இரண்டே கண்களுக்குள்
இன்னும் நூறு தலைமுறைகள்
தாண்டி வருபவனையும் தன் வசம் வசம் ஈர்க்கும் சக்தி
இருக்கிறது.
பிள்ளையார் அமர்ந்த மரத்தடி,
மாடில்லாத மாட்டு வண்டி என்றிருந்த ஒரு இடம்,சாப்பாடு
கொணரும் அழகான பெண்ணொருத்தியால் களை கட்டி விடுகிறது.
"சமையல் எல்லாம் கலக்குது.
அது,சமத்துவத்தை வளர்க்குது.. சாதி சமய பேதமெல்லாம்
சோத்தைக் கண்டா பறக்குது."
-மை ஊற்றினால் எழுதும்
பேனாவினால், உண்மையை
ஊற்றி எழுதியிருக்கிறார் அமர கவி.அய்யா.வாலி.
'வீரலட்சுமி,விஜயலட்சுமி' என
வரிசைப்படுத்திப் பாடி விட்டு,
"எத்தனை லட்சுமி பாருங்கடா"
என்று நீளமாய்ப் பாடும் போது,
பெண்கள் கூட்டமொன்று வந்து
முறைக்க,"உங்களை இல்லம்மா" என்று சைகையால்
சொல்லிக் கொண்டே,பாடலுக்கு வாயசைப்பதையும்
அழகுறத் தொடரும் அய்யா
நடிகர் திலகத்தின் நடிப்பழகிற்காகவே,இந்தப்
பாடலைப் பார்க்கலாம்..
பத்தாயிரம் தடவை.
இன்று கிருஷ்ண ஜெயந்தி. அனைவருக்கும் அந்த வெண்ணெய்த் திருடனின் பிறந்த நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அந்த மாயக்கண்ணன் பிறந்த நாளில் அவனின் லீலைகளை மனதில் கொண்டே என்ன பாடல் இன்று இடலாம் என்று மண்டையைக் காய்ச்சியதில் திடீரென்று ஒரு பாடல் கிடைத்தது.
பொதுவாகவே கிருஷ்ணன், கண்ணன், கோபியர் சம்பந்தப்பட்ட பாடல் என்றாலே 'சட்'டென்று என் நினைவுக்கு வருபவர் 'வெண்ணிற ஆடை' நிர்மலா தான். இந்த சப்ஜெக்ட் பாடல்களுக்கு இவர் வெகு பொருத்தம். 'ராமன் எத்தனை ராமனடி', 'பிருந்தாவனத்திற்கு வருகின்றேன்' போன்ற பாடல்களே சாட்சி. ('பாசதீபம்' படத்தின் 'கனவு கண்டேன் கண்ணா' பாடலும் 'வெண்ணிற ஆடை' நிர்மலா பாடும் பாடல்தானே?) இவருடைய உடலமைப்பும் கோபிகாஸ்திரீ போலவே இருப்பதும் சிறப்புக்கு இன்னும் காரணம்.
தேவரின் 'துணைவன்' படத்தில் 'வெண்ணிற ஆடை' நிர்மலா கோபியர் உடை அணிந்து பாடும் அருமையான பாடல்.
கோகுலத்தில் ஓர் இரவு கொண்டாட்டமாம் கொண்டாட்டம்
கோபியர்கள் ஆடுகின்றார் கங்கைக்கரை வண்டாட்டம்
கொஞ்சினாள் முத்தமிட்டாள்
கோலமொழி பெண்ணொருத்தி
கன்னத்தில் வண்ணமிட்டாள்
கண்ணனுக்கு இன்னொருத்தி
சிரித்தாள் இதழ் விரித்தாள்
கனி பறித்தாள் புது பெண்ணாட்டம்
சேலை கொண்டு மெத்தையிட்டு
சேர்ந்து விட்டாள் பூவாட்டம்
பச்சைக்கல்லு வைரத்தோடு பட்டுப் பாவாடை
பருவப் பெண்ணின் தலையினிலே ஒரு கட்டுப் பூவாடை
குங்கும உதடு கன்னத்தில் ஓடி கொஞ்சுது அத்தானை
கூடை போலே மூடிக் கொள்ளுது கொட்டடி முந்தானை
அழகிய விழி மீனினைத் தொட்டு
அள்ளுது பூந்தேனை இங்கே
அஞ்சிடும் பெண்மானின் கைகள்
ஆடுது ஆடுது அம்மானை
பச்சைக்கல்லு வைரத்தோடு பட்டுப் பாவாடை
பருவப் பெண்ணின் தலையினிலே ஒரு கட்டுப் பூவாடை
ஒரு கட்டுப் பூவாடை
ஒரு கட்டுப் பூவாடை
எவ்வளவு அருமையான பாடல்! ஈஸ்வரியின் குரலும் நம்மை அப்படி ஈர்க்கும். சான்ஸே இல்லை. அப்படி ஒரு இனிமை. அதுவும் விடுவிடுவென்று 'பச்சைக்கல்லு வைரத்தோடு பட்டுப் பாவாடை' என்று அவர் ஆரம்பிக்கும் போது மனது சொக்கிப் போகிறது.
ராகவேந்திரன் சார், மதுண்ணா!
ஒரு பெரிய குரல் குழப்பம். இந்தப் பாடலை ஜானகியும் சேர்ந்து பாடி இருக்கிறாரா? பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும் குரல் அப்படியே ஜானகி போல் உள்ளதே! படத்தில் பாடுபவர் நிர்மலா மட்டுமே. இருகுரல்கள் ஒலி க்க அவ்வளவு வாய்ப்பில்லை. (சில படங்களில் விதி விலக்கு) ஆனால் ஜானகியும், ஈஸ்வரியும் சேர்ந்து பாடியிருக்கிறார்களா என்று சந்தேகமாய் இருக்கிறது. குரலைக் கண்டு பிடிப்பதில் சற்று சிரமமாய் இருக்கிறது. ஆனால் 'துணைவன்' பட டைட்டிலில் ஜானகி பெயர் இல்லை. ஈஸ்வரி மட்டும்தான் இருக்கிறது. தயவு செய்து சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும்.
எது எப்படியோ! மிக அருமையான பாடல் என்பதில் சந்தேகம் இல்லை.
Last edited by vasudevan31355; 5th September 2015 at 10:07 AM.
அருமை வாசு - அந்த மாய கண்ணன் உங்கள் அலுவுலக பிரச்சனைகளையும் கண்டிப்பாக தீர்த்து வைப்பான் . நம்பிக்கையுடன் இருங்கள் .
ஒன்றை இந்த மையம் திரியில் கவனித்தீர்களா ? திரியில் அருமையாக பதிவுகள் இடும் முக்கியமான நபர்கள் பெயர்களில் கண்ணனும் ஒளிந்திருக்கிறான் . தலைவனுக்கு உள்ள திறமை , . கருணை , அன்பு , குழல் ஊதுவதுபோல இனிமையான பதிவுகள் , மற்றவர்களை வழிக்காட்டும் திறன் , திரியை சாரதியாக ஓட்டும் அழகு , கண்ணனுக்கும் வருவது போல கோபதாபங்கள் இங்கு பதிவிடுபவர்களிடம் காண்கிறேன் - அந்த மாய கண்ணன் நம்மை ஆளுமை புரிவது மிகவும் அழகாக தெரிகிறது .
கண்ணன் மறைந்திருக்கும் நபர்கள் :
1. திரு ராகவேந்திரா ( கண்ணனையே நினைத்து கண்ணனாகவே மாறியவர் )
2. திரு ராஜ் ராஜ் ( கண்ணன் ராஜாக்கெல்லாம் ராஜா )
2. திரு மது ( மதுசூதனன் என்று கண்ணனுக்கு ஒரு பெயர் உண்டு )
3. திரு வாசுதேவன் ( 2) ( சொல்லவே வேண்டாம் - எல்லோரையும் மயக்கும் திறன் )
4. திரு கோபு ( கோபாலகிருஷ்ணன் என்ற பெயர் கண்ணனுக்கு உண்டு)
5. திரு கோபால்
6. திரு முரளி ஸ்ரீநிவாஸ்
8. திரு பார்த்த சாரதி
9. திரு ராதா கிருஷ்ணன்
9. திரு கிருஷ்ணா
10. திரு சின்ன கண்ணன்
11 திரு ராஜேஷ் - ( கண்ணன் ராஜ்யத்தை பரிபாலனம் செய்யும் வேளையில் மக்கள் அவனை அழைக்கும் செல்ல பெயர் இது )
12. திரு . கலை வேந்தன் ( பாரத போரில் பீஷ்மர் கண்ணனை ஒரு சில இடங்களில் அன்புடன் அழைக்கும் பெயர் இது )
13.திரு குமார் - விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் பெயர் இது
14. . திரு வினோத் ( கண்ணனை வினோத கிருஷ்ணன் என்று கோபியர் அழைப்பது உண்டு )
நடிகர் திலகத்தின் பாடல் இல்லாமல் 'கிருஷ்ண ஜெயந்தி'யா?
இதோ அற்புதமான ஒரு பாடல்.
துள்ளி ஓடும் அந்த சின்னக் கண்ணனை அள்ளி வாரி,
'கண்ணா! மணிவண்ணா! ஆயர்குல மணிவிளக்கே எங்கள் மன்னா!
வண்ணப் பசுங்கிளியே! வார்த்தெடுத்த பொற்சிலையே!
எண்ணமெனும் சோலையிலே இசை பாடும் இளங்குயிலே
இசை பாடும் இளங்குயிலே!
எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டுத்தான்
நல்ல செங்கமலச் சிரிப்பிரிக்கும் மன்னன் பாட்டுத்தான்'
'வா கண்ணா வா' என்று நம்மை அழைத்து என்றும் வற்றாத ஜீவனுள்ள நடிப்பைத் தந்து,
'நடிகர் திலகம்' இடுப்பொடித்து, பட்டு வேட்டியும், சிகப்பு வர்ணச் சொக்காயுமாய், இடுப்பில் அங்கவஸ்திரம் கட்டி, சுஜாதாவுடன் ஆடும்போது அள்ளிக் கொண்டு போகும்.
'சின்னக் கண்ணன் செல்லக் கண்ணன் சுட்டிப் பிள்ளைதான்
படுசுட்டி பிள்ளைதான்
அள்ளிக்கொண்ட கை மணக்கும் வண்ண முல்லைதான்'
(எங்கள் வீட்டில்)
'மணிவண்ணன் பாட்டுத்தான்
எங்கள் கண்ணன் பாட்டுத்தான்
சுத்திச் சுத்தி வந்து ஆடுங்கடி
சுந்தரக் கண்ணனைப் பாடுங்கடி'
(கொட்டுங்கடி)
இப்போது உறியடித் திருவிழா நடக்கும். வி.கே.ராமசாமி தொடை தட்டி உறியடிக்கப் போகுமுன் நடிகர் திலகத்தின் முகத்தில்தான் எத்தனை கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி! வி.கே.ஆர் உறியடிக்க முடியாமல் திணற, அடுத்து சுஜாதா நடிகர் திலகத்தை உறியடிக்கத் தள்ளிவிட, கம்பீரமாக களத்திற்குள் 'நடிகர் திலகம்' மீசையைத் தடவியபடி நுழைந்துவிட, சுற்றிலும் உள்ள பெண்மணிகள் இவர் மேல் மஞ்சள் தண்ணீரை ஊற்ற, நடிகர் திலகம் எம்பி எம்பி உறியை அடிக்க முயல்வது வெகு அழகு.
இப்போது நெஞ்சு நிமிர்த்தி, மீசை முறுக்கி, பின்னால் வீரமாக பின்னோக்கி நடந்து சென்று, பின் படு ஸ்டைலாக ஓடி வந்து உறியை கம்பால் அடித்து பதம் பார்ப்பாரே! அதகளம்தான்.
கன்னிப் பெண்கள் மத்தியிலே கண்ணன் ஆட, நடிகர் திலகத்தின் கோலாகல கோலாட்ட நாட்டிய முத்திரைகள் ஆரம்பமாகும். கைகளில் இரண்டு கோலாட்டக் குச்சிகளை வைத்துக் கொண்டு என்ன அழகாக, வாகாக, நளினமாக ஸ்டெப்ஸ் வைப்பார் தெரியுமா!
'கோலாட்டம் இது கோலாட்டம்
கோகுலத்தில் இன்று கொண்டாட்டம்'
'நடிகர் திலகம்' அருமையான முக பாவத்தில் இரண்டு கால்களையும் ஒன்று மாற்றி ஒன்று வைத்து கோல்களைத் தட்டியபடி,
'கண்ணனின் திருமுகம் பாலாட்டம்'
என்று பாட,
'கண்கள் இரண்டும் வேலாட்டம்
கன்னம் தாமரைப் பூவாட்டம்
சிந்தும் புன்னகை பொன்னாட்டம்'
என்று சுஜாதா தொடர்வார்.
அடுத்து வழுக்கு மரம் ஏறும் போட்டி. எண்ணெய் தடவிய வழுக்கு மர உச்சி ஏறி, உச்சியில் இருக்கும் கலசப் பானையிலிருந்து பரிசுப் பொருளை எடுக்க வேண்டும். இதிலும் சிலர் முயன்று தோற்க, நாயகர் வி.கே.ஆரை உசுப்பிவிட, வி.கே.ஆர் சந்தோஷத்துடன் தலையாட்டி சென்று பெரிய ஏணி ஒன்றை எடுத்து வருவாரே பார்க்கலாம்! ஏணியில் ஏறி பரிசுப் பொருளைக் கவர்வதற்காம்.
அடுத்து 'நடிகர் திலகம்' வழுக்கு மரத்தில் 'சரசர' வென கொஞ்சம் கொஞ்சமாக ஏற, கணவன் ஏறுவதைப் பார்க்கும் சுஜாதா கைகளால் 'அப்.. அப்' என்று சொல்வது போல கைகளை உயர்த்தி திலகத்தை உற்சாகப்படுத்துவார். (சுஜாதா ஆக்ஷனில் அசத்துவார் இந்த இடத்தில்) நடிகர் திலகமும் மேலே ஏறி கலசப் பானையை திறக்கும் போது ஆரவாரம், விசில் சப்தம் பறக்கும் திரையில் அல்லாமல் படம் பார்க்கும் திரை அரங்கு உட்பட. (சுஜாதாவின் முகத்தில்தான் எத்துணை பெருமை தாண்டவமாடுகிறது நடிகர்திலகம் கலசப் பானையைக் கைப்பற்றியவுடன்!)
இப்போது அப்படியே டிராக் மாறும்.
கண்ணன் 'நடிகர் திலகம்' மடியில் அமர்ந்திருக்க, ஆரத்தி எடுக்கப்பட்டு பாடல் தொடரும்.
கோகுல பாலா! எங்கள் கோதை மணாளா!
கோபியர்நேசா! வேணுகான விலாசா!
அருமையான கிருஷ்ண ஜெயந்தி பாடல். வயதான நடிகர் திலகத்தின் சிறுபிள்ளை விளையாடுத்தனமான ஜாலி நடிப்பு. பார்த்து அனுபவியுங்கள். அந்த கிருஷ்ணனின் புகழைப் பாடுங்கள். நம் 'ரங்கனி'ன் புகழையும் சேர்த்துத்தான்.
Last edited by vasudevan31355; 5th September 2015 at 01:05 PM.
ஒரு நாள் isis தீவிரவாதிகள் காரில் சென்றுகொண்டிருந்த ஒரு குடும்பத்தை வழி மறித்தனர்.
Isis தீவிரவாதி -
நீ எந்த மதம்?
அந்த மனிதர் -
நாங்கள் முஸ்லிம்
(அவர்கள் உண்மையில் கிருஸ்டியன்)
isisதீவிரவாதி -
அப்படியானால் குரானிலிருந்து சில வரிகளை சொல் பார்க்கலாம்.
(காரில் இருந்தவரின் மனைவி
நடுங்கிவிட்டாள்)
ஆனால் அவர் சிறிதும் தயக்கமின்றி
பைபிளில் இருந்து சில வரிகளை
கூறினார்.
Isis தீவிரவாதி -
சரியாக கூறினாய் நீ செல்லலாம்.
(கார் சிறிது தூரம் நகர்ந்ததும்)
அவரின் மனைவி -
"எப்படி சிறிதும் பயமின்றி குரானுக்கு பதிலாக பைபிலை கூறினீர்கள், ஒரு வேளை அந்த தீவிரவாதி கண்டுபிடித்திருந்தால் நம் நிலை என்னாவது?"
அவர் -
அவர்களுக்கு குரான் தெரியாது!
மனைவி -
அது எப்படி உங்களுக்கு தெரியும்.
அவர் சிரித்துக்கொண்டே
"அவர்கள் குரானை முழுவதும் படித்து புரிந்துகொண்டிருந்தால் ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை கொலை செய்யும் தீவிரவாதிகளாக மாறியிருக்கமாட்டார்கள்".
எந்த ஒரு மதமும் கொலை செய்ய சொல்லவில்லை.
தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது, அவர்கள் மனிதர்களும் கிடையாது......
வாசு - வா கண்ணா வா - பதிவு அருமை - இந்த பாடலைத் தேடினேன் - உடன் கிடைக்கவில்லை . ( ம்ம் -- எல்லோரும் வாசுவாகி விட முடியுமா என்ன ??) . நீங்கள் சொன்னது உண்மை - நடிகர் திலகத்தை நீக்கி , கண்ணன் பாடல்களை ரசிப்பது என்பது முடியாத காரியம் . இதோ இன்னும் சில பாடல்கள் - நம் நினைவுகளில் ரீங்காரம் இடுபவைகள் ---
Bookmarks