-
6th September 2015, 06:24 PM
#11

Originally Posted by
Baskar Trichi
தீபாவளி சமயத்தில் சிவந்தமண் வந்தது!
அதே சமயம் மற்றவரின் ஒரு பெரிய படமும் வந்தது! உண்மையிலே இரண்டு படங்களும் பெரிய வெற்றிதான்! ஆனால் தமிழ்நாட்டில் ஒன்பது திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடிய சிவந்தமண் தோல்விபடம் என்றும் ஆறு திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடிய அவர்கள் படம் தான் வெற்றியென்றும்
பொய் பிரச்சாரம் செய்தார்கள்! ரவிகிரண் சார் இப்போதும் கூட 55 வயதுக்கு மேற்பட்ட நம் ரசிகர்அல்லாதவரிடம் கேட்டு பாருங்கள்! சிவந்தமண் தோல்விப்படம் என்றுதான் கூறுவார்கள்! !
சிவந்த மண் வெளியாகி கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து நாட்கள் வரை தோல்விப்படம் என்றே பிரச்சாரம் செய்தனர். ஐம்பதாவது நாள் விளம்பரத்தில் அத்தனை தியேட்டர் பெயர்களுடன் வந்ததும் வாய்கள் மூடிக்கொண்டன.
சிவந்த மண் தனது போட்டிப்படத்தை விட அதிக இடங்களில் நூறு நாட்கள் ஓடியதால், போட்டிப்படத்தின் நூறாவது நாள் விளம்பரத்தில் எந்த ஊர், எந்த தியேட்டர் என்ற விபரமில்லாமல் வெளிவந்தது. நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பெயரெல்லாம் இடம்பெற்ற அந்த விளம்பரத்தில் ஊர்பெயர் / தியேட்டர்பெயர் கிடையாது.
-
6th September 2015 06:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks