Page 169 of 401 FirstFirst ... 69119159167168169170171179219269 ... LastLast
Results 1,681 to 1,690 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1681
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    1959ம் ஆண்டு வெளிவந்த வீ க பொம்மன்
    தூத்துகுடியில்100 நாட்கள் ஓடியது


    1969ம்ஆண்டு வெளிவந்த அடிமைப்பெண் தூத்துகுடியில்
    100 நாள் ஓடிய ஒரே படம் என
    மறைதிரு எம் ஜீ ராமச்சந்திரன் அவர்களின் ரசிக நண்பர்கள்
    நம்நாடு வரவேற்பிதழ் நோட்டீசில் பிரசுரித்துள்ளார்கள்
    (மக்கள்திலகம் எம் ஜீ ஆர் -பாகம்-16 பக்கம் 332 பதிவு-3317)


    இப்படியான பிழையான தகவல்களை அவர்கள் வெளியிடுவதை பார்க்கும் புதியவர்கள் அதனை நம்புவார்கள்
    இதுதான் அங்கு நடைபெறுகிறது



    1959ல் வெளிவந்த வீ க பொம்மன் தூத்துகுடியில் 100 நாட்கள் ஓடிய து




    ஊர் பெயர் விபரத்தில் சில குழப்பம்
    எ னவே இந்தத்திருத்தம்



    Last edited by sivaa; 14th September 2015 at 09:02 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Thanks Russellbzy thanked for this post
    Likes ifohadroziza, Harrietlgy, Russellbzy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1682
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    இன்று இங்கு பதிவிடலாம் என இருந்தேன். இப்பக்கமும் அடியேனின் சேகரிப்பில் இருந்து..

    நாளிதழ் விளம்பரங்கள் எதுவும் தற்சமயம் என்னிடம் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதன் முதலில் இணைய உலகில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் நாளிதழ் மற்றும் பருவ இதழ் விளம்பரங்களின் நிழற்படங்கள் இடம் பெற்றது நம்முடைய www.nadigarthilagam.com மூலம் தான் என்பதை நண்பர்கள் அறிவர் என எண்ணுகிறேன்.
    Last edited by RAGHAVENDRA; 14th September 2015 at 06:10 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks sivaa thanked for this post
    Likes ifohadroziza, Russellbzy, sivaa liked this post
  6. #1683
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பிரபல கல்கண்டு பத்திரிக்கையின் ஆசிரியர் தமிழ்வாணன் தான் எழுதிய 'நடிகர்திலகம் சிவாஜி கணேசன்' எனும் நூலில் 'சிவந்த மண்' படத்தை பிரம்மாண்ட வெற்றிப் படம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.



    இரண்டாவது ஸ்ரீதர் 'தர்த்தி' நன்றக ஓட வில்லை என்று கூறியிருப்பதே சரியில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.



    'தர்த்தி' வட மாநிலங்களில் கிட்டத்தட்ட 8 திரையரங்குகளில் 200 நாட்கள் தாண்டி ஓடியிருக்கிறது. வசூலில் டல் அடித்திருந்தால் நிச்சயம் அது இத்தனை திரையரங்குகளில் இவ்வளவு நாட்களை எட்டியிருக்க முடியாது.

    கலை சார்,

    பொதுவாக நான் வசூல் போன்ற விவரங்களில் அதிகம் தலையிடுவதில்லை. வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் சமீபத்திய 'சிவந்த மண்' பற்றிய தங்களது பதிவுகள் என்னையே நோக வைத்தது என்பது உண்மை. 'ஓஹோ' என்று ஓடிய ஒரு படத்தை, வசூலில் பிரளயம் நடத்திய ஒரு படத்தை, கண்கூடாக அதன் வெற்றியை நம்மைப் போன்றவர்கள் நேரிடையாக பார்த்த ஒரு படத்தை நஷ்டமடைய வைத்த படம் என்றும், தோல்விப் படம் என்றும் அதுவும் நீங்கள் முத்திரை குத்த முயற்சிப்பது வருத்ததிற்குரியது. ஆயிரம் ஆதாரங்கள் கிடக்கட்டும். நாம் அந்தக் காலக் கட்டத்தில் அதன் வெற்றியை நேரிடையாகப் பார்த்தவர்கள். அதை நாம் இப்போது உள்ள தலைமுறைக்கு சரியான முறையில் சொல்லுவதே சிறந்த கடமையாகும். பைத்தியக்காரத்தனமாக செட்களைப் போட்டு, வரைமுறை இல்லாமல் செலவு செய்து விட்டு அத்தனை செலவுகளுக்கும் 'சிவந்த மண் 'ஓடி, 'நடிகர் திலகம்' என்ற அட்சயப் பாத்திரம் வசூல் செய்து, அதற்கு மேல் லாபம் ஈட்டி, கல்லா நிறைய வேண்டும் என்பது ஸ்ரீதரின் ஆசை. அந்த ஆசையை அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு மேலாகவே ஈடு செய்தது 'சிவந்தமண்'.

    இதற்கெல்லாம் மேலே ஒன்று.

    'நடிகர் திலகம்' பொய் பேச மாட்டார். மனதில் பட்டதை சரியென்றாலும், தவறென்றாலும் முகத்துக்கு நேரே உண்மையை உரைத்து விடுவார். அவருடன் பழகியவன் என்ற முறையில் இதை நன்கறிந்தவன் நான்.

    அவர் 'சிவந்தமண்' படத்தைப் பற்றி சொல்லியிருக்கும் கருத்து.

    'அள்ளி அள்ளிக் கொடுத்த மக்களுக்கு கை சிவந்தது
    ஆனந்தந்தால் ஸ்ரீதருக்கு கண் சிவந்தது'.
    Last edited by vasudevan31355; 14th September 2015 at 09:59 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #1684
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சரியாகச் சொன்னீர்கள் வாசு சார்.

    அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களின் பார்வையில் சிவந்த மண்ணைப் பற்றிய அணுகுமுறை வியப்பூட்டுகிறது. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா என்பது போல சிவந்த மண் பெற்ற வெற்றி உலகளந்த ஒன்று. ஆனால் அதற்கு ஈடான வெற்றியை வட மாநிலங்களில் தர்த்தி திரைப்படமும் பெற்றது பலருக்குத் தெரியாத விஷயம். ஸ்க்ரீன் ஆங்கிலப்பத்திரிகையில் ஒவ்வொரு வாரமும் தவறாமல் இடம் பெற்றவை தர்த்தி படத்தின் வெற்றியைப் பற்றிய விளம்பரங்கள். அது மட்டுமல்ல, தர்த்தியில் நடிகர் திலகத்தின் பாத்திரம் வட மாநிலங்களில் பெரிதும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அது ஹிந்திப்படவுலகையும் விட்டு வைக்கவில்லை. தேஷ் ப்ரெமி என்கின்ற புதிய ஹிந்திப்படத்தில் நடிகர் திலகத்தை நடிக்க விரும்பிக் கேட்டு அவரும் கால்ஷீட் எப்போது தோதாக வாய்க்கிறதோ அப்போது தான் தர முடியும் என்று சொல்லி அதற்கும் தயாரிப்பாளர் ஒத்துக் கொண்டு (மன்மோகன் தேசாய் என நினைக்கிறேன்) விளம்பரமும் வெளிவந்தது. அதுவும் ஸ்க்ரீனில் நடுப்பக்கத்தில் இரண்டு பக்கத்திற்கு ஸ்ப்ரெட் செய்து வந்த விளம்பரத்தில் நடிகர் திலகத்தின் -ஒரு போர் வீரன் வேடம் என நினைவு - அருமையான ஸ்டில் இடம் பெற்றது.

    வாசு சார் சொன்னது போல், அர்த்தமற்ற வகையில் செலவு செய்து பொருளாதாரத்தில் திட்டமிடல் இல்லாமல் படம் எடுத்ததும் ஸ்ரீதரின் கைங்கர்யத்தில் ஒன்று. அதுவும் அந்த நீர்ச்சுனை ஒரு முறை செட் போடப்பட்டது. சுற்றிப் போடப்ப்ட்ட தடுப்பு மண்சுவர் சரிந்து தண்ணீரெல்லாம் வீணாகி அதற்காக போடப்ப்ட்ட அந்த செட்டும் பாழாகி விட்டது. அதில் அந்தக் காலத்திலேயே கிட்டத்தட்ட மூன்று லட்ச ரூபாய் நஷ்டம். மீண்டும் அதே செட்டைப் போட்டார்கள்.

    இத்தனைக்கும் அப்போது ஸ்ரீதர் அவர்களின் தாயார் உடல் நலமின்றி இருந்த நேரம். நடிகர் திலகம் ஸ்ரீதரை அழைத்து, வெளிநாடு சென்று வரும் செலவே நிறைய ஆகும், முடிந்த வரையில் வெளிப்புறப்படப்பிடிப்பிலேயே படத்தை முடித்து விடு, திரும்பவும் செட் போட்டு மேலும் பணத்தை வீணாக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியதாகவும் நாங்கள் கேள்விப்பட்டோம். தயாரிப்பாளரின் பொருளாதார நிலைமை அறிந்து அதற்கேற்ப ஆலோசனை வழங்கி தன்னுடைய உழைப்பையும் அதற்கேற்ப சலிக்காமல் தந்த உத்தம புருஷர் நடிகர் திலகம்.

    நடிகர் திலகத்தின் ஆலோசனையை ஏற்றிருந்தால் மேலும் செலவு செய்ததை தவிர்த்திருக்கலாம்.

    ஆனால் இத்தனையும் மீறி ஸ்ரீதருக்கு எந்தவிதத்திலும் பொருளாதார ரீதியில் நஷ்டத்தை ஏற்படுத்தாமல் அதிக அளவில் லாபத்தையும் ஏற்படுத்திக் கொடுத்த படம் சிவந்த மண்.
    நடிகர் திலகம் திரியைப் பொறுத்த மட்டில் நம்முடைய நண்பர்களுடன் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. அது மட்டுமின்றி இந்த வசூல் விவகாரங்களில் நான் ஈடுபடுவதும் இல்லை.

    என்றாலும் நடிகர் திலகத்தின் மாபெரும் வெற்றிப்படத்தால் பெரும் லாபம் ஈட்டிய ஸ்ரீதர் அவர்கள் சிவந்த மண் படத்தால் நஷ்டம் ஏற்பட்டு அதற்காக எம்.ஜி.ஆரிடம் சென்றார் என்பதை மனசாட்சியுள்ள எந்த சிவாஜி ரசிகனும் ஏற்கமாட்டான்.

    குளோப் தியேட்டரில் வெள்ளி விழாவை மிக எளிதாக கடந்திருக்கக் கூடிய சிவந்தமண் படத்தை ஓட்டக்கூடாது என்று திரையரங்கை நிர்பந்தித்ததெல்லாம் அந்நாளைய வரலாறு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் குறை சொல்லவரவில்லை. ஆனால் அவர் தங்களிடம் இருக்கிறார் என்பதற்காக நடிகர் திலகத்தை எந்த அளவிற்கு இழிவு படுத்த முடியுமோ, நல்ல வசூல் செய்தும் அவர் படத்தைத் தோல்வி என்று எந்த அளவிற்கு மக்களிடம் பிரச்சாரம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அவர் சார்ந்த இயக்கத்தினர் செய்தும் அதனையெல்லாம் சந்தித்து வெற்றி கொண்டு தான் இறந்தும் 14 ஆண்டுகள் கழித்தும் எங்கள் தலைவன் இறவாப்புகழுடன் இருக்கிறார்.

    நான் மீண்டும் மீண்டும் கலை மற்றும் அன்புமிக்க எம்.ஜி.ஆர். ரசிகர் நண்பர்களிடமும் நம்முடைய நடிகர் திலகம் ரசிக நண்பர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். ஒப்பீட்டை அறவே தவிருங்கள். நடிகர் திலகம் சாதனை படைத்தவையெல்லாம் யாராலும் மறுக்க முடியாத உண்மைகளாகும். இன்றில்லாவிட்டாலும் இன்னோர் நாள் நமக்கு ஆவணங்கள் கிடைக்காமல் போகாது. அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டு எதிர்காலத் தலைமுறைக்கு நாம் நடிகர் திலகத்தின் சாதனைகளை ஊரறியச் செய்வோம். ஒவ்வொரு ஆவணத்திற்கும் நேரம், உழைப்பு, காலம் இவையெல்லாம் பெருமளவில் செலவிட வேண்டும். இவற்றையெல்லாம் எந்த பிரதிபலனும் பாராமல் நமக்களித்த பம்மலாரின் சேவையைப் பாராட்டாவிட்டாலும் மனம் வருத்தம் செய்து அனுப்பி விட்டோம். இனிமேலாவது இங்கு பங்கேற்கும் ஒரு சிவாஜி ரசிகனும் மனம் நோகாமல் தொடர்ந்து பங்காற்ற உறுதுணையும் ஆதரவும் ஊக்கமும் நீங்கள் ஒவ்வொருவரும் அளிப்பதே தாங்கள் நடிகர் திலக்ததின் மேல் வைத்துள்ள பக்தியின் உண்மையான பிரதிபலிப்பு.

    சிவந்த மண்ணைப் பொறுத்த மட்டில் குளோப் திரையரங்கில் 84 பைசா, ரூ. 1.25, மற்றும் ரூ. 1.66 மூன்று வகுப்புகளும் கடைசி நாளன்று மாலை மற்றும் பகல் காட்சிகளில் நிறைவடைந்து வசூல் குறையாமல் வெற்றி நடை போட்டது. கடைசி நாளன்று ரூ.1.66 டிக்கெட்டில் வகுப்பு நிறைவு ஆடியன்ஸில் நானும் ஒருவன் என்கிற வகையில் இது மறுக்க முடியாத உண்மையாகக் கூறுகிறேன். இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படத்தைப் பற்றி இனிமேலும் யாருக்கும் சந்தேகம் வரத்தேவையில்லை.

    என்னுடைய வேண்டுகோள், இத்துடன் நாம் இந்த விவாதத்தை முடித்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் மற்ற விஷயங்களைத் தொடருவோம்.
    Last edited by RAGHAVENDRA; 14th September 2015 at 09:59 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Thanks sss, eehaiupehazij, vasudevan31355 thanked for this post
  9. #1685
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    5-11-1986 'இதயம் பேசுகிறது' இதழில் 'நடிகர் திலகத்தின் திலகத்தின் 50 ஆண்டுகள்' என்று தலைப்பிட்டு நடிகர் திலகத்தைப் பற்றிய சிறப்புப் பேட்டிகளும்,கட்டுரைகளும் இடம் பெற்றன. அதில் 'நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்' என்ற தலைப்பில் ஸ்ரீதர் எழுதிய கட்டுரை ஒன்று இடம் பெற்றது. இக்கட்டுரையில் ஸ்ரீதர் 'சிவந்தமண்' படத்தைப் பற்றிக் குறிப்பிடாவிட்டாலும் நடிகர் திலகத்தைப் பற்றியும், அவருடைய பெருங்குணம் பற்றியும், கலைத்துறையில் அவருடைய ஈடுபாடு பற்றியும், ஒத்துழைப்பு பற்றியும் நிறையவே கூறியிருக்கிறார். அப்போது நயாபைசா கூட இல்லாத ஸ்ரீதருக்கு நடிகர் திலகம் வாழ்வளித்த உண்மையை ஸ்ரீதர் நன்றியுடன் இங்கே பாராட்டுகிறார். படியுங்கள்.





    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1686
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    சரியாகச் சொன்னீர்கள் வாசு சார்.

    அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களின் பார்வையில் சிவந்த மண்ணைப் பற்றிய அணுகுமுறை வியப்பூட்டுகிறது. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா என்பது போல சிவந்த மண் பெற்ற வெற்றி உலகளந்த ஒன்று.

    சிவந்த மண்ணைப் பொறுத்த மட்டில் குளோப் திரையரங்கில் 84 பைசா, ரூ. 1.25, மற்றும் ரூ. 1.66 மூன்று வகுப்புகளும் கடைசி நாளன்று மாலை மற்றும் பகல் காட்சிகளில் நிறைவடைந்து வசூல் குறையாமல் வெற்றி நடை போட்டது. கடைசி நாளன்று ரூ.1.66 டிக்கெட்டில் வகுப்பு நிறைவு ஆடியன்ஸில் நானும் ஒருவன் என்கிற வகையில் இது மறுக்க முடியாத உண்மையாகக் கூறுகிறேன். இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படத்தைப் பற்றி இனிமேலும் யாருக்கும் சந்தேகம் வரத்தேவையில்லை.

    என்னுடைய வேண்டுகோள், இத்துடன் நாம் இந்த விவாதத்தை முடித்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் மற்ற விஷயங்களைத் தொடருவோம்.

    Ragavendran sir,

    I strongly suggest and wish Mr. Kalai Vendar should apologies to all NT fans for again and again defaming and giving false and in-correct information to park this topics. I have seen how Sivantha Maan made huge collections in so many re-run in our Madurai theaters....

    Long live NT fame....

  11. Thanks Russellbzy thanked for this post
    Likes Russellbzy liked this post
  12. #1687
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  13. #1688
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  14. #1689
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  15. Likes ifohadroziza liked this post
  16. #1690
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  17. Likes ifohadroziza liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •