கோப்ப்ப்ப்பால்...வாங்க வாங்க...
//சின்னகண்ணன் இப்போது கொஞ்சம் தேறி வருகின்றனர். // ஹச்சோ..வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி..ஹைய்யா.. என் மனது பொங்கிப் பிரவாகமெடுத்து அலைகள் எல்லாம் சுனாமி வந்தாற்போல தாவிக்குதிக்கின்றன..![]()
ஒரே ஒருகுறை.. நீங்கள் உங்கள் வாழ்நாளில் முதன்முறை செய்த மிகப்பெரிய தவறு என்றும் சொல்லலாம்..ரவியை என்னுடன் சேர்த்தது..அவர் லெவலெல்லாம் வேறு..மிக உயரம்.. வெகு அபாரமான மனிதர்..மென்மனசுக்காரர்...
நான் இன்னும் எழுதிப் பழகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வதற்கு எந்தக்காலத்திலும் வெட்கப் பட்டதில்லை.. அடுத்து ஒரு பதிவு இடுவீர்களா அல்லது அக்டோபரா என்று கேள்வி கேட்கலாமா..
உங்கள் ப்ளாக் வேலை எப்படி இருக்கிறது..ரசனையின் உச்சமான, எழுதுவதில் பல வித உச்சங்கள் கண்ட, படிப்பவரையும் ஒன்ற வைக்கும் எழுத்துக்கள் கொண்ட நீங்கள் இந்த இடைவெளியில் எதுவும் எழுதினீர்களா..சொன்னீர் என்றால் தன்யனாவேன்..சொல்ல வில்லை என்றாலும் பரவாயில்லை..கொஞ்சம் தேறி எழுதும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருப்பேன்...
ஒவ்வொரு பாக ஆரம்பத்திலும் உங்கள் பூஜை நடக்கும்.. இங்கு ஆரம்பமே கணபதி பூஜை ஆனதினால் நாலு பக்கம் லேட்...
வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் டயரியா எனச்சொல்லும் உங்கள் மிகப்பெரியபரந்தமனதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. தொடருங்கள் தங்கள் அருமையான எழுத்துப்பணி..![]()
Bookmarks