-
27th September 2015, 10:59 AM
#11
Junior Member
Junior Hubber
அன்பு நண்பர் ரவிகிரன் சார்
உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்!
ஒரு விஷயம் நினைவிருக்கிறதா? கட்டபொம்மன் படத்துக்கு சாந்தி திரைஅரங்கு கொடுக்காமல் விக்ரம்பிரபு நடித்த இது என்ன மாயம் படத்துக்கு கொடுத்த
ஒரு சாதாரணமான விசயத்துக்கு எவ்வளவு ஆத்திரபட்டீர்கள்! இது என்ன மாயம் படம் dvd யில் கூட பார்க்க கூடாது, அந்த படத்துக்கு ஒரு ரூபாய் கூட செலவு
செய்ய கூடாது என்று நீங்கள் கூறவில்லையா? இத்தனைக்கும் விக்ரம்பிரபு சிவாஜியின் சொந்த பேரன்! ஆனாலும் உங்கள் கோபம் நியாயமானது என்று
உங்களுக்கு கைபேசியில் தொடர்புகொண்டு என் ஆதரவை தெரிவித்தேன்! உண்மை தானே சார்?
கட்டபொம்மன் சாந்தியில் வராமல் வேறு மவுண்ட் ரோடு திரையில் வெளிவந்தால் என்ன கெட்டு விட போகிறது? சிவாஜி நடித்த காலங்களில் மற்ற திரைகளில் அவர் நடித்த படங்கள் வெளியாகி 100 நாட்கள் ஓடிய நிகழ்வுகள் நிறைய உண்டே!
இதை இப்போது ஏன் சொல்லுகிறேன் என்றால் சிவாஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற நியாயமான உங்கள் எண்ணங்களுக்காக ஒரு மிக
சாதாரணமான விசயத்துக்காக நீங்கள் அவரின் மகன்கள் பேரன் எல்லோரையும் துச்சமென தூக்கி எறியும் போது சிவாஜியின் அரசியல் தவறுகளால் இன்றைக்கும் அவரை ஒரு mla கூட ஆக லாயக்கில்லாதவர் என்று பொதுமக்களே கேலி பேசும் போது என்னை போன்ற அவரின் உண்மையான ரசிகர்களுக்கு
நெஞ்சில் எவ்வளவு ரணம் இருக்கும் என்பது உங்களை போன்றவர்களுக்கு புரியாது!
1989 இல் mgr அவர்களை ஆதரிக்க தான் கட்சி ஆரம்பித்தார் என்றால் அந்த கட்சியிலேயே போய் சேர வேண்டியதுதானே? ஏன் சொந்தமாக கட்சி
நடத்தி தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும் புகழையும் இழக்க வேண்டும்? பிரச்சாரத்தோடு நிற்காமல் ஏன் திருவையாறில் போட்டியிட வேண்டும்?
உங்களை போன்றவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது!
அவரின் அரசியலால் அவர் புகழ் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் பாதித்த நிலைதான் இன்றைக்கும் உள்ளது! மையம் திரியில் எழுதும் நம்மை போன்ற
சிலரின் எண்ணங்களை வைத்து எதையும் முடிவு செய்யவேண்டாம்! நீங்கள் மற்ற சிவாஜிரசிகர்கள், மற்ற கட்சியினர், பொதுமக்கள் போன்ற எல்லோரிடமும் உங்களுக்கு அவகாசம் கிடைக்கும் போது பேசி பாருங்கள்! நான் சொல்வது தான் எல்லோர் கருத்துமாகவும் இருக்கிறது என்ற உண்மை
உங்களுக்கு தெரியும்!
நன்றி !
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
27th September 2015 10:59 AM
# ADS
Circuit advertisement
Bookmarks