-
7th October 2015, 01:00 PM
#11
டியர் வாசுதேவன் சார்,
எப்படி அருமையாக எழுதியிருக்கிறீர்கள், எவ்வளவு ஆழமாக அலசியிருக்கிறீர்கள் என்றெல்லாம் சொலவதற்கு முன், நாலு விஷயங்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு அதையே அரைத்த மாவாக அரைத்துக்கொண்டிருக்கும் இணையத்தில், புதிய புதிய மாவாக தேடிப்பிடித்து அரைக்கிறீர்களே அதற்கே முதல் பாராட்டு. பின்னே?. 'ஜாம் ஜாம் ஜாமென்று சந்தோஷமா' பாடலையெல்லாம் யார் எடுத்து இவ்வளவு விரிவாக ஆராய்வார்கள் சொல்லுங்கள்.
ஆனந்தன்
சுருட்டை முடியும், களையான முகமும், ஓரளவு முரட்டுத்தனமான நடிப்பும் கொண்ட ஆணழகன் ஆனந்தனை தமிழ்ப்பட உலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும் ஆனால் தமிழ்ப்படவுலகம் கண்டுகொள்ளாவிட்டாலும் நம் திரியில் அவரைப்பற்றி அதிகமாகவே அலசியிருக்கிறோம். அதன் தொடர்ச்சிதான் உங்கள் அருமையான ஆய்வு இப்படத்துக்கு டார்ஜான் வேடத்துக்கு தோதான ஆளாகத்தான் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் மெரிலேன்ட் சுப்பிரமணியம். ஆனந்தனும் அவரது நம்பிக்கையை காப்பாற்றியிருப்பார். 'யானை வளர்த்த வானம்பாடி மகன்' படம் சூப்பர் ஹிட்.
மாஸ்டர் பிரபாகரன்
வேலுத்தம்பி பிரபாகரனுக்கும், கேப்டன் பிரபாகரனுக்கும் முன்பே பிரபலமான பிரபாகரன் இவன்(ர்)தான் அப்போதைய எல்லாப்படங்களிலும் குழந்தை நட்சத்திரம் என்றால் பெரும்பாலும் பிரபாகர்தான்.. பாமா விஜயம்,சாதுமிரண்டால்,, இருகோடுகள், சாந்திநிலையம், எங்க மாமா, திருமலை தென்குமரி, ராமன் எத்தனை ராமனடி, பெண் தெய்வம், பதிலுக்கு பதில்,அனாதை ஆனந்தன் என்று ஏராளமான படங்கள். 'வா ராஜா வா' இந்த குட்டிப்புயலை புகழின் உச்சியில் வைத்தது. எதிர்காலத்தில் நன்றாக வருவான் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் நிலைமை மாறியது. ராஜா, இதயவீணை, தங்கதுரை, மணிப்பயல் என்று மாஸ்டர் சேகர் முன்னேற, இவன் பின்னுக்கு தள்ளப்பட்டான். கண்ணா நலமா படத்தின்போது குரல் உடைந்ததும் ஒரு காரணம். அதன்பின்னர் எழவே முடியவில்லை.
யானை வளர்த்த வானம்பாடி மகன்
படம் ரிலீசானபோது ஏனோதானோ என்று தியேட்டருக்கு போனால் கடுமையான கூட்டம். டிக்கட் கிடைக்கவில்லை. பின்னர் இன்னொருநாள் சீக்கிரமாக போய் பார்த்த படம். காட்டுப்பகுதிகளில் ஒளிப்பதிவு மிக நன்றாக இருந்தது. வண்ணம் சற்று கூடுதலாக கண்களுக்கு இதமளித்தது. இம்மாதிரிப் படங்களில் நாயகியர் போனால் போகிறதென்று கால்வாசி உடைகள்தான் அணிந்து வருவார்கள் என்பது நமக்குத்தெரியும். கியூவில் கூட்ட நெரிசலுக்கு அதுவும் ஒரு காரணம் மொத்தத்தில் படம் திருப்தியளித்தது.
உங்கள் பாடல் அலசல் பழைய நினைவுகளை கிளறிவிட்டது. நல்ல ஆய்வு. பாராட்டுக்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
7th October 2015 01:00 PM
# ADS
Circuit advertisement
Bookmarks