- 
	
			
				
					7th October 2015, 11:26 AM
				
			
			
				
					#451
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
 
 (நெடுந்தொடர்)
 
 41
 
  
 
 'ஜாம் ஜாம் என்று சந்தோஷமா'
 
 'யானை வளர்த்த வானம்பாடி மகன்'
 
 அடுத்து பாலாவின் தொடரில் 'யானை வளர்த்த வானம்பாடி மகன்' படப் பாடல். 1971-ல் ரிலீஸ் ஆகி நன்றாகவே ஓடிய வண்ணப்படம்.
 
  
 
 1960-ல் நீலா ப்ரொடக்ஷன்ஸ் மலையாளத்தில் தயாரித்த 'ஆன வளர்த்திய வானம்பாடி' என்ற படம் வெளியாயிற்று. தமிழிலும் 'டப்' செய்யப்பட்டு வெளி வந்தது. இதில் வானம்பாடி ரோலுக்கு குமாரி என்ற நடிகை நடித்திருந்தார். நாயகன் ஸ்ரீராம்.
 
 'யானை வளர்த்த வானம்பாடி மகன்' இப்படத்தின் தொடர்ச்சி என்று கொண்டாலும் அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
 
 சரி! விஷயத்திற்கு வருவோம்.
 
 இந்தப் படத்தில் நாயகனாக நடித்தவர் 'விஜயபுரி வீரன்' C.L.ஆனந்தன். கட்டுமஸ்தான உடல் கொண்டவர் ஆதலாலும், மிருகங்களுடன் சண்டைக் காட்சிகளில் 'டார்ஜான்' ரேஞ்சுக்கு மோதும் தைரியம் பெற்றிருந்ததாலும் இந்த ரோலுக்குப் பொருந்தினார். மனோகர் இப்படத்தின் வில்லன் என்று நினைவு.
 
  
 
 முழுவதும் காடுகளில் எடுக்கப்பட்ட இந்த வண்ணப்படத்தில் கவர்ச்சி அம்சங்கள் தூக்கலாகவே இருந்தது. 'திரை இசைத் திலகம்' இப்படத்திற்கு இசை. மலையாளத்தின் தேவராஜன் இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் என்று சொல்வோரும் உண்டு. ஆனால் அது தவறு. ஆனால் நான் மேற் சொன்ன 'யானை வளர்த்த வானம்பாடி' படத்திற்கு இசை 'பிரதர்' லஷ்மணன்
 
 நிஜமாகவே பாடல்கள் நல்ல பாடல்கள்தான்.
 
 நம் 'பேபி' ஸ்ரீதேவி சிறு பெண்ணாகவும், 'மாஸ்டர்' பிரபாகரனும் (சிறிய வயது ஆனந்தன்) இணைந்து பாடும்
 
 'ராஜா மகன் ராஜாவுக்கு யானை  மேலே அம்பாரி
 ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி'
 
 பாடல் அப்போது பிரசித்தம்.
 
 இப்போது தொடரின் பாடல்.
 
  
 
 யானை வளர்க்கும் வானம்பாடி மகன் சிறுவன் பிரபாகரன் தன் அன்னையை வளர்த்த பீமா என்ற யானை மேல் அமர்ந்து பாடி வரும் பாடல். பாடலிலேயே சிறுவன் பெரியவனாக வளர்ந்து ஆனந்தன் ஆகி விடுவதைக் காட்டி விடுவார்கள். ரொம்ப அற்புதமான பாடல். நெடிதுயர்ந்த தேக்கு மற்றும் காட்டு மரங்களுக்கிடையே யானையில் புலித்தோல் உடை அணிந்து 'ஜம்'மென்று அமர்ந்து பிரபாகன் சுசீலா அம்மா குரலில் பாடி வருவது அமர்க்களம். அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கும். காட்டு யானைக் கூட்டம், புகையாய்க் கொட்டும் வெள்ளை வெளேர் சிலீர் அருவிகள், வாயைத் திறந்து பயமுறுத்தும் சிறுத்தைப் புலி, ஓடையில் அழகாக நீந்தும் அன்னப்பறவை என்று பாடல் முழுதும் இயற்கை ரம்மியம் ரகளை செய்கிறது.
 
 பாடலின் இடையே சிறுவன் பெரியவனாக வளர்ந்த ஆனந்தனாக அறிமுகம். யானை மேல் பம்பை முடியுடன், விரிந்த வெற்று மார்புடன், புலித்தோல் உடையுடன், புலி நக டாலருடன் பாடியபடி சிறுவர்களைக் கவருவார். கேரக்டருக்குப் பொருத்தமான் ரோல். வீர சாகசங்களுக்கு தோதானவர். சிறுத்தை, முதலை இவற்றுடன் சண்டைகள் உண்டு. பீமா யானையின் அசைவுகளும் கொள்ளை அழகு.
 
 
 நான்கு சரணங்கள் கொண்ட இப்பாடலில் முதல் மூன்று சரணங்கள் பிரபாகரன் நடிக்க சுசீலாம்மா பாடுவதாக வரும். ஆனந்தன் அறிமுகத்தில் அவருக்கு நம் பாலா அதாவது நான்காவது சரணத்திற்கு அற்புதமாகக் குரல் தந்து கம்பீரக் களையுடன் கானமிசைத்திருப்பார்.
 
 ஒரே ஒரு சரணம் என்றாலும் பாலா 'பளிச்'
 
 'ஹா ஹா ஹா' என்று படுகம்பீரமாக ஆனந்தன் அறிமுகத்தில் பாலா ஹம்மிங் எடுப்பது அந்தக் காடுகளில் உள்ள தேனை சுவைத்தது போல் அவ்வளவு இனிப்பு. கலக்கி விடுவார். வெகு வித்தியாசமான குரல் வளம் இந்தப் பாடலில். ஆனந்தனுக்கு அருமையாக சூட் ஆகும். காட்டுவாசிப் பாடல் என்பதால் பாலாவுக்கும் இது புது அனுபவமாய் இருந்திருக்கும். அதனால் இன்னும் அனுபவித்துப் பாடியிருப்பார்.
 
 பிரபாகரனுக்குப் பாடும் சுசீலா அமாவின் குரல் தேவாமிர்தத்தை மிஞ்சும். அவருக்கு மூன்று சரணங்கள். இந்த தேவதையின் தெளிவான தமிழ் உச்சரிப்பையும், ('அந்த காட்டானை கூட்டத்திடம் தந்தமிருக்கு') பிள்ளைக்கான அப்பாவித்தனத்தை தன் குரலில் பிரதிபலிக்க வைக்கும் அழகையும் கேளுங்கள்.
 
 மகாதேவன் யானை அசைந்து அசைந்து செல்வதற்குத் தக்கபடி அம்சமான பின்னணிகளை ஒலிக்க வைத்திருப்பார். ரீரிகார்டிங் அவ்வளவு பிரமாதமாய் வந்திருக்கும். கிடார் ஒலிகளும், ஷெனாய் இசையும் இனிமையோ இனிமை. பிரபாகரன் ஆனந்தனாய் மாறும்போது வரும் இடையிசைப் பின்னணி நிஜமாகவே பிரம்மிக்க வைக்கிறது. இடைவிடாது ஒலிக்கும் டிரம்ஸ் ஒலிகளும், அழகான புல்லாங்குழல் இசையும், பாங்கோஸ் உருட்டல்களும் நம்மை அந்த வனாந்திர சொர்க்கத்திகே கூட்டிச் செல்கின்றன. இரண்டாவது சரணம் முடிந்து வரும் பல்லவி வரிகளை மாற்றி டியூன் போட்டிருப்பது அம்சமான அம்சம்.
 
 'தளிர் நடை போடடா ராஜ பீமா
 ஜாம் ஜாம் என்று சந்தோஷமா'
 
 இந்தப் பாடலின் இசைச் சங்கதிகளை மகாதேவன் 'வாணி ராணி' படத்தில் 'முல்லைப் பூ பல்லக்கு போவதெங்கே' பாலா, சுசீலா டூயட்டில் அப்படியே முச்சூட அள்ளித் தந்திருப்பார். பாடலின் பிளிரும் முடிவிசை டாப்.
 
 பாடல் வரிகள் ரசிக்கத்தக்கவை.
 
 நிஜமாகவே 'ஜாம் ஜாம்' பாடல்தான். எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் பாடல்தான்.
 
  
 
 ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
 நீ தளிர் நடை போடடா ராஜ பீமா
 ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
 நீ தளிர் நடை போடடா ராஜ பீமா
 ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
 
 தாயில்லா பிள்ளை போல் காடு கிடக்கு
 அதைத் தாலாட்ட வானிலே மேகமிருக்கு
 தாயில்லா பிள்ளை போல் காடு கிடக்கு
 அதைத் தாலாட்ட வானிலே மேகமிருக்கு
 வாயில்லா ஊமை போல் சோலையிருக்கு
 அதை வார்த்தைகள் பேச வைக்க தென்றல் இருக்கு
 
 ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
 நீ தளிர் நடை போடடா ராஜ பீமா
 ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
 
 காடெங்கும் உன் ஜாதி சொந்தமிருக்கு
 அந்த காட்டானை கூட்டத்திடம் தந்தமிருக்கு
 காடெங்கும் உன் ஜாதி சொந்தமிருக்கு
 அந்த காட்டானை கூட்டத்திடம் தந்தமிருக்கு
 உங்களுக்கும் எனக்கும் பந்தமிருக்கு
 இந்த உறவை நினைக்கையில் இன்பமிருக்கு
 
 தளிர் நடை போடடா ராஜ பீமா
 ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
 
 தாயாரை வளர்த்தது நீதான் பீமா
 உன்னை தாத்தா என்றே நானும் சொல்லலாமா
 தாயாரை வளர்த்தது நீதான் பீமா
 உன்னை தாத்தா என்றே நானும் சொல்லலாமா
 வாயார முத்தமொன்றை இடலாமா
 என்னை வளர்க்கும் பொறுப்பையும் தரலாமா
 
 ஹாஹாஹா ஹாஹஹஹாஹஹாஹஹாஹா
 ஓஹோஹோ ஓஹஹோஹோஹோஹோஹோ
 
 காட்டிலுள்ள பாம்புகளில் நஞ்சுமிருக்கு
 ஆனால் கடிக்கக் கூடாதென்ற நெஞ்சுமிருக்கு
 நாட்டிலுள்ள மக்களிடம் நாலுமிருக்கு
 நாட்டிலுள்ள மக்களிடம் நாலுமிருக்கு
 அந்த நாலோடு சேர்ந்து கொஞ்சம் வாலுமிருக்கு
 
 ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
 நீ தளிர் நடை போடடா ராஜ பீமா
 
 ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
 
 
 
 
 
 
 
				
				
				
					
						Last edited by vasudevan31355; 7th October 2015 at 04:38 PM.
					
					
				 நடிகர் திலகமே தெய்வம்  
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
	 
- 
		
			
						
						
							7th October 2015 11:26 AM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					7th October 2015, 11:34 AM
				
			
			
				
					#452
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							வாசு ஜி...
 
 ஜாம் ஜாமென்று நடை போட்டு வந்த பாட்டு எப்போது கேட்டாலும் இனிக்கும். ஹாஹா.. எனக்குத்தான் இந்தப் பாட்டைக் கேட்கையில் முல்லைபூ பல்லக்கு நினைவுக்கு வருது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.  எங்கேயோ லிங்க் இருக்கு எது என்று புரியாமல் இருந்தேன்... !!!!!!
 
 "வாலுமிருக்கு" என்று கிண்டலாக பாலு சொல்வதை ரசித்து ரசித்து சிரித்ததுண்டு...
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					7th October 2015, 11:34 AM
				
			
			
				
					#453
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							வாசு - "வெள்ளிக்கிண்ணம் தான் " பாடலின் அலசலுக்கு நிஜமாகவே ஒரு வெள்ளிக்கிண்ணம் உங்களுக்கு பரிசாகத்தரவேண்டும் என்று மனசு துடிக்கிறது - நீங்கள் இங்கு வரும்போது அந்த பரிசு தயாராக இருக்கும் - அதுவரையில் ----- 
 
   
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
	 
- 
	
			
				
					7th October 2015, 12:28 PM
				
			
			
				
					#454
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  madhu  
 வாசு ஜி...
 
 "வாலுமிருக்கு" என்று கிண்டலாக பாலு சொல்வதை ரசித்து ரசித்து சிரித்ததுண்டு...
 
 
 
 நன்றி மதுண்ணா.
 
 உண்மைதான். பாலுவின் கிண்டல் தொனி கில்லி. அந்த வரிக்கு ஆனந்தன் கூட இடுப்பில் கைகளை வைத்து லேசாகப் பற்களைக் கடித்தபடி, மக்களின் வால்தனத்தைக் கடிந்தபடி வாயசைப்பதும் நன்றாகவே இருக்கும். மனம் மறப்பேனா என்கிறது பாடலை. சுற்றி சுற்றி 'ஜாம் ஜாம்'தான் 'ஜம்'மென்று சுழல்கிறது. இந்தப் பாடலிலும் நம் ஒத்த ரசனை வெளிப்பட்டு விட்டது. ரசனை தந்த இறைவனுக்கு நன்றி.
 
 
 
 
				
				
				
					
						Last edited by vasudevan31355; 7th October 2015 at 12:30 PM.
					
					
				 நடிகர் திலகமே தெய்வம்  
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					7th October 2015, 12:29 PM
				
			
			
				
					#455
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  g94127302  
 வாசு - "வெள்ளிக்கிண்ணம் தான் " பாடலின் அலசலுக்கு நிஜமாகவே ஒரு வெள்ளிக்கிண்ணம் உங்களுக்கு பரிசாகத்தரவேண்டும் என்று மனசு துடிக்கிறது - நீங்கள் இங்கு வரும்போது அந்த பரிசு தயாராக இருக்கும் - 
 
 
 அப்போது 'முத்துப் புன்னகை'யை உங்கள் கண்களில் காணலாமா?  
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					7th October 2015, 01:00 PM
				
			
			
				
					#456
				
				
				
			
	 
		
		
			
				
				
						
						
				
					
						
							டியர் வாசுதேவன் சார், 
 
 எப்படி அருமையாக எழுதியிருக்கிறீர்கள், எவ்வளவு ஆழமாக அலசியிருக்கிறீர்கள் என்றெல்லாம் சொலவதற்கு முன், நாலு விஷயங்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு அதையே அரைத்த மாவாக அரைத்துக்கொண்டிருக்கும் இணையத்தில், புதிய புதிய மாவாக தேடிப்பிடித்து அரைக்கிறீர்களே அதற்கே முதல் பாராட்டு. பின்னே?. 'ஜாம் ஜாம் ஜாமென்று சந்தோஷமா' பாடலையெல்லாம் யார் எடுத்து இவ்வளவு விரிவாக ஆராய்வார்கள் சொல்லுங்கள்.
 
 ஆனந்தன்
 
 சுருட்டை முடியும், களையான முகமும், ஓரளவு முரட்டுத்தனமான நடிப்பும் கொண்ட ஆணழகன் ஆனந்தனை தமிழ்ப்பட உலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும் ஆனால் தமிழ்ப்படவுலகம் கண்டுகொள்ளாவிட்டாலும் நம் திரியில் அவரைப்பற்றி அதிகமாகவே அலசியிருக்கிறோம். அதன் தொடர்ச்சிதான் உங்கள் அருமையான ஆய்வு இப்படத்துக்கு டார்ஜான் வேடத்துக்கு தோதான ஆளாகத்தான் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் மெரிலேன்ட் சுப்பிரமணியம். ஆனந்தனும் அவரது நம்பிக்கையை காப்பாற்றியிருப்பார். 'யானை வளர்த்த வானம்பாடி மகன்' படம் சூப்பர் ஹிட்.
 
 மாஸ்டர் பிரபாகரன்
 
 வேலுத்தம்பி பிரபாகரனுக்கும், கேப்டன் பிரபாகரனுக்கும் முன்பே பிரபலமான பிரபாகரன் இவன்(ர்)தான் அப்போதைய எல்லாப்படங்களிலும் குழந்தை நட்சத்திரம் என்றால் பெரும்பாலும் பிரபாகர்தான்.. பாமா விஜயம்,சாதுமிரண்டால்,, இருகோடுகள், சாந்திநிலையம், எங்க மாமா, திருமலை தென்குமரி, ராமன் எத்தனை ராமனடி, பெண் தெய்வம், பதிலுக்கு பதில்,அனாதை ஆனந்தன் என்று ஏராளமான படங்கள். 'வா ராஜா வா' இந்த குட்டிப்புயலை புகழின் உச்சியில் வைத்தது. எதிர்காலத்தில் நன்றாக வருவான் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் நிலைமை மாறியது. ராஜா, இதயவீணை, தங்கதுரை, மணிப்பயல் என்று மாஸ்டர் சேகர் முன்னேற, இவன் பின்னுக்கு தள்ளப்பட்டான். கண்ணா நலமா படத்தின்போது குரல் உடைந்ததும் ஒரு காரணம். அதன்பின்னர் எழவே முடியவில்லை.
 
 யானை வளர்த்த வானம்பாடி மகன்
 
 படம் ரிலீசானபோது ஏனோதானோ என்று தியேட்டருக்கு போனால் கடுமையான கூட்டம். டிக்கட் கிடைக்கவில்லை. பின்னர் இன்னொருநாள் சீக்கிரமாக போய் பார்த்த படம். காட்டுப்பகுதிகளில் ஒளிப்பதிவு மிக நன்றாக இருந்தது. வண்ணம் சற்று கூடுதலாக கண்களுக்கு இதமளித்தது. இம்மாதிரிப் படங்களில் நாயகியர் போனால் போகிறதென்று கால்வாசி உடைகள்தான் அணிந்து வருவார்கள் என்பது நமக்குத்தெரியும். கியூவில் கூட்ட நெரிசலுக்கு அதுவும் ஒரு காரணம் மொத்தத்தில் படம் திருப்தியளித்தது.
 
 உங்கள் பாடல் அலசல் பழைய நினைவுகளை கிளறிவிட்டது. நல்ல ஆய்வு. பாராட்டுக்கள்.
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
	 
- 
	
			
				
					7th October 2015, 02:57 PM
				
			
			
				
					#457
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							நன்றி ஆதிராம் சார்.
 
 புகழ் பெற்ற பாடல்களாக இருந்தாலும், பட ஆய்வுகளாய் இருந்தாலும் சரி! இல்லையாயினும் சரி!
 
 எதுவொன்றைக் கொடுத்தாலும் அவற்றின் விஷயமறிந்து ஓடோடி வந்து உற்சாகப்படுத்துவதில், அது சம்பந்தமான சரியான மேலதிக விவரங்களைத் தருவதில் தாங்கள் கைதேர்ந்தவர். அதில் தங்களுக்கு இணை தாங்களே.
 
 'மாஸ்டர்' பிரபாகரனின் படங்களைப் பட்டியல் இட்டதிலிருந்தே அன்றைய திரைப்பட விவரங்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் தாங்கள் என்று கூறவும் வேண்டுமோ? அருமை. அருமை. பாடல் பதிவுக்கேற்ற அழகான, தேவையான விவரங்கள். நன்றி ஆதிராம் சார்.
 
 அந்த 'மாஸ்டரி'ன் முகம் வாலிப வயதில் வேறு மாதிரி ஆகிப் போனது. தவிரவும் குள்ளம் வேறு. மாஸ்டர் சேகருக்கோ 'வழுவழு' முகம். இன்னொரு அதிகப் பிரசங்கி மாஸ்டர் ஒருத்தர் இருந்தார். ஸ்ரீதர். ஓவராகக் கொல்லுவார்.
 
 'யானை வளர்த்த வானம்பாடி மகன்' படம் 'மெரிலேன்ட்' சுப்பிரமணியம் தயாரித்த படம் என்று எவ்வளவு அழகாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! இவர்தானே சூப்பர் ஹிட் பக்திப்படமான 'சுவாமி ஐயப்பன்' படத்தை தன் சொந்த பேனரான 'நீலா புரடக்ஷன்ஸ்' சார்பில் தமிழ், மலையாளம் ரெண்டிலும் எடுத்து கல்லா கல்லாவாக ரொப்பிக் கொண்டது?
 
 மலையாளப் பட உலகில் 'மெரிலேன்ட்' ஸ்டுடியோ மிகவும் புகழ் பெற்ற ஒன்று.
 
   
 
 'யானை வளர்த்த வானம்பாடி மகன்' வெற்றியைத் தொடர்ந்து அதே காட்டு பாணியில் வெளிவந்த இன்னொரு படம் 'மலை நாட்டு மங்கை'. ராணி புரடக்ஷன்ஸ் தயாரிப்பு. நம்ம ஜெமினி, சசிகுமார், விஜயஸ்ரீ அப்புறம் ஆனந்தன் கூட நடித்திருப்பார்கள். மலையாள வாடை அதிகம் அடிக்கும். இயக்கம் சுப்ரமணியம்தான். தேவநாராயணன் வசனம் எழுத பாடல்களுக்கு இசை வேத்பால் வர்மா என்பவர். பின்னணி இசை மட்டும் புகழேந்தி.
 
 'வந்தாள்  காட்டுப் பூச்செண்டு'
 
 'நீலமாம் கடலலையில்'
 
 போன்ற ஜேசுதாஸின் பாடல்கள் சுகம்.
 
 உங்களுக்காக 'மாஸ்டர் பிரபாகரன்', அவர் தங்கை பேபி சுமதி இமேஜஸ் உள்ள வீடியோ கிளிப் இங்கே.
 
 
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
	 
- 
	
			
				
					7th October 2015, 04:53 PM
				
			
			
				
					#458
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
 
 ஹாய் ..
 
 செளக்கியமா.. (என்னது இதுவரைக்குமா..)
 
 யா.வ. வானம்பாடிமகன் பார்த்தது சிந்தாமணியில் புகையாய் நினைவிருக்கிறது..இந்த ஜாம் ஜாம் பாட்டு  படத்தில் மற்றும் இசைக்களஞ்சியத்தில் ஓரிரு தடவைகள் கேட்டதுண்டு..
 
 மோகினி பேய் என்று பதிவுகள்..இருந்தாலும் கும்னாம்போடவில்லையே.. பேய் வர்ராட்டாலும்  அந்தக் குரல்.. இதுவே தமிழில் நாளை உனது நாள் என வர...அதுவும் சக்தி தியேட்டரில் சரியாக ஐந்து மணிக்கு (மதியக்காட்சி இறுதி) கரெண்ட் போய் ஆறுமணிவரை வெய்ட் செய்து கரெண்ட் வராததினால் க்ளைமேக்ஸ் பார்க்காமல் வந்தது ஒரு தனி அனுபவம்..
 
 ம்ம் வாரேன் பின்ன..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
	 
- 
	
			
				
					7th October 2015, 05:12 PM
				
			
			
				
					#459
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							கலர்புல் கண்ணா!
 
 எண்ணத்தோடு வண்ணம் குழைத்து பதிவுகள் தர 'வருக வருக' என வரவேற்கிறேன்.
 
 'கும்நாம் ஹே கோயி
 பத்நாம் ஹே கோயி'
 
 எங்கே பார்த்தாலும் பேயி  
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					7th October 2015, 05:25 PM
				
			
			
				
					#460
				
				
				
			
	 
		
		
			
				
				
						
						
							
						
				
					
						
							டியர் வாசு சார், 
 
 தூண்டிவிட்டால் போதுமே, கொழுந்துவிட்டு எரிவீர்களே. அதுதான் சாக்கு என்று தகவல்களை அள்ளி எறிவீர்களே. தெரிந்த கதைதானே. இன்று நேற்றா பார்க்கிறோம்.
 
 மலைநாட்டு மங்கையை குறிப்பிட நினைத்து மறந்துவிட்டேன். அதில் ராஜஸ்ரீ, மனோரமாவெல்லாம் கூட இருப்பாங்க. மாஸ்டர் ஸ்ரீதர் பற்றி நீங்க சொன்னது சரியே. நல்லதொரு குடும்பத்துக்குள் நுழைந்துவிட்ட குறத்தி மகன் என்று சுப்பண்ணா சொன்னாரண்ணா.
 
 கேள்விப்பட்ட செய்தி ஒன்று...
 
 அப்போதைய தி.மு.க ஆட்சியில் சிறந்த திரைப்படங்கள் / கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் பழக்கம் கடைப்பிடித்து வந்தபோது 1969-ல் சிறந்த குழந்தை நட்சத்திரம் யார் என்பதில் 'வா ராஜா வா' பிரபாகருக்கும், 'கண்ணே பாப்பா' பேபி ராணிக்கும் கடும் போட்டி. (அந்த ஆண்டுதான் சிறந்த படமாக அடிமைப்பெண்ணும், சிறந்த நடிகராக தெய்வமகன் படத்துக்காக நடிகர்திலகமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்).
 
 தேர்வு முடிவுகள் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் காண்பிக்கப்பட்டபோது 'சிறந்த குழந்தை நட்சத்திரம்' என்ற இடம் காலியாக இருப்பதைப்பார்த்து அவர் விவரம் கேட்க, இருவரில் யாருக்கு கொடுப்பது என்று குழப்பமாக இருப்பதாக தேர்வுக்கமிட்டியினர் கூறினராம்,  தலைநிமிர்ந்து பார்த்து புன்னகைத்த கருணாநிதி, "இருவருக்கும் கொடுத்தால் இ.பி.கோ. வில் கைது பண்ணிவிடுவார்களா?" என்று சிரித்தவாறு 'குழந்தை நட்சத்திரம்' என்பதை அடித்துவிட்டு, 'குழந்தை நட்சத்திரங்கள்' என்று எழுதி மாஸ்டர் பிரபாகர், பேபி ராணி இருவர் பெயரையும் எழுதிக்கொடுத்து "பெரியவர்கள் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்வார்கள், குழந்தைகள் தாங்க மாட்டார்கள்" என்று கூறினாராம்.
 
 
 
 
 
 
 
Bookmarks