-
12th October 2015, 08:23 AM
#611
Senior Member
Diamond Hubber
'வாழ்த்துங்கள்' படப் பாடல்கள்
மதுண்ணா!
இந்தப் படத்திற்கு இசை எல்.வைத்தியநாதன் அவர்களாம். பாடல்களைக் கேட்கும் போதே வித்யாசம் உணர முடிகிறதே. அருமையோ அருமை.
'சுக்ரா'வில் இந்தப் படத்தின் பாடல்களுக்கு விண்ணப்பித்திருந்தேன். அருமை நண்பர் கனி சிரமம் பாராமல் இப்படத்தின் பாடல்களை தேடக் கண்டு பிடித்து அளித்து மகிழ்ச்சிக் கடலில் நம்மைத் தள்ளி விட்டு விட்டார். கிடைக்காது என்றே நினைத்திருந்தேன். கனி பால் வார்த்தார். ஆனால் பாடல்கள் 'வாழ்த்துங்கள்' படப் பாடல்கள் தானா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். உங்களுக்கு ஏதாவது பிடிபடுகிறதா என்று பாருங்கள்.
பாடல்கள்.
1.வாணி ஜெயராம் பாடும் 'ஆடட்டுமா....ஆடட்டுமா' பாடல் அட்டகாசம் அண்ணா! அப்படியே வருடுகிறது நெஞ்சை. முதலில் வரும் ஹம்மிங், இசை எல்லாமே ஆஹா!
'பாடட்டுமா ஆடட்டுமா
மோகத்தின் வேகத்தில் நான் உங்கள் நெஞ்சத்தில்
பாடட்டுமா ஆடட்டுமா'
'ராரராரரராராரரி' என்று வாணி பாடுவது 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'மாங்குடி மைனர்' இரண்டையும் கொஞ்சம் ஞாபகப்படுத்துகிறது.
http://www.mediafire.com/download/9k...aadaddumaa.mp3
2. 'பூந்தேரே சின்னச் சின்னக் காலெடுத்து வா...
பூலோக ரம்பை என்று பேரெடுத்து வா'
ஐயோ! செம ரகளை மதுண்ணா! பாலா கலக்கி விட்டார் கலக்கி. இப்போது கேட்டவுடன் பாடல் நினைவுக்கு வந்து விட்டது. நூறு சதவீதம் அப்படியே டி ராஜேந்தர் அப்போது போட்ட பாடல் போல சும்மா 'ஜிவ்'வுன்னு இருக்கு. வானத்தில் பறப்பது போல 'ஜம்'
http://www.mediafire.com/download/a6...nna+chinna.mp3
3. அடுத்து ஜானகி ஜமாய்க்கிறார்.
'புதுமுகம் தரும் மதுரசம் பெற வா'
http://www.mediafire.com/download/bg...ukamtharum.mp3
அரேபியன் மியூஸிக்குடன் 'யூ நாட்டி பாய்' என்று கொஞ்சுகிறார் ஜானகி வழக்கமான முக்கல் முனல்கலோடு.
படம்தான் கொஞ்சம் சந்தேகமாய் இருக்கிறது.
4. அப்புறம் இருக்கவே இருக்கு நம்ம தாஸேட்டன் பாடும் 'அருள் வடிவே!' என்ன மாதிரிப் பாடல்! மனசு பஞ்சாய் லேசாகிறது இப்பாடலை ஜேசுதாஸ் குரலில் கேட்கும் போது. ஹேட்ஸ் ஆப் தாஸேட்டன்
http://www.mediafire.com/download/5x...iveparam...mp3
Last edited by vasudevan31355; 12th October 2015 at 08:29 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
madhu thanked for this post
-
12th October 2015 08:23 AM
# ADS
Circuit advertisement
-
12th October 2015, 08:30 AM
#612
Senior Member
Seasoned Hubber
வாழ்த்துங்கள் படத்தைப் பற்றி ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் நூலில் உள்ள தகவல்கள்
நீளம் 3844 மீ.
தயாரிப்பு செந்தாமரை கம்பைன்ஸ்
தணிக்கை 11.01.1978
வெளியீடு 14.01.1978
தயாரிப்பாளர் - போளூர் சி.எம். காசிராஜன்
இயக்கம் சி.வி.ராஜேந்திரன்
வசனம் தெள்ளூர் தர்மராஜன்
இசை எல் வைத்தியநாதன்
நடிப்பு முத்துராமன், சந்திரகலா.
நான் படம் பார்க்கவில்லை. ஒரு நண்பர் சொன்ன கதைப்படி, மூன்று அநாமதேய தொலைபேசிகளே படத்தின் கரு. கடைசியில் தமிழ் சினிமாவின் வழக்கப்படி படம் சுபமாக முடிய வேண்டும் என்பதற்காக அந்த மூன்றுமே அவர்கள் குடும்பத்தில் ஒருவர் ஒரு த்ரில்லுக்காக செய்ததாக சொல்வதாகவும் ஆடியன்ஸைப் பார்த்து எல்லோரும் வாழ்த்துங்கள் என்று சொல்வது போல முடித்திருந்ததாகவும் சொன்னார்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th October 2015, 08:32 AM
#613
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
பாலுவின் பூந்தேரே பாட்டு சிலோன் ரேடியோவில் தினமும் 8.15 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில் அடிக்கடி இடம் பெறும். சிலோனில் சூப்பர் ஹிட்.
நம்ம ரேடியோவில் அருள் வடிவே பாட்டைத் தவிர வேறெந்தப்பாட்டையும் ஒரு முறை கூட ஒலிபரப்பியதாக நினைவில்லை.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th October 2015, 08:33 AM
#614
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th October 2015, 08:35 AM
#615
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
அடி தூள். மதுர கானங்கள் அன்பர்களா கொக்கா! பாடல்களை கேட்டால் பரம சுகம். நன்றி சார்.
-
12th October 2015, 08:35 AM
#616
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
வாழ்த்துங்கள் படத்தைப் பற்றி ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் நூலில் உள்ள தகவல்கள்
நீளம் 3844 மீ.
தயாரிப்பு செந்தாமரை கம்பைன்ஸ்
தணிக்கை 11.01.1978
வெளியீடு 14.01.1978
தயாரிப்பாளர் - போளூர் சி.எம். காசிராஜன்
இயக்கம் சி.வி.ராஜேந்திரன்
வசனம் தெள்ளூர் தர்மராஜன்
இசை எல் வைத்தியநாதன்
நடிப்பு முத்துராமன், சந்திரகலா.
நான் படம் பார்க்கவில்லை. ஒரு நண்பர் சொன்ன கதைப்படி, மூன்று அநாமதேய தொலைபேசிகளே படத்தின் கரு. கடைசியில் தமிழ் சினிமாவின் வழக்கப்படி படம் சுபமாக முடிய வேண்டும் என்பதற்காக அந்த மூன்றுமே அவர்கள் குடும்பத்தில் ஒருவர் ஒரு த்ரில்லுக்காக செய்ததாக சொல்வதாகவும் ஆடியன்ஸைப் பார்த்து எல்லோரும் வாழ்த்துங்கள் என்று சொல்வது போல முடித்திருந்ததாகவும் சொன்னார்.
super.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th October 2015, 09:03 AM
#617
Senior Member
Seasoned Hubber
இசையரசி இசைத்த கீதங்கள் – 6
ஆச்சி நம்மைவிட்டு சென்றுவிட்டார். இதைவிட ஒரு இழப்பு இருக்க முடியுமா ..
இதோ ஆச்சிக்கு இசையரசியின் குரலில் சோகமான பாடல்
குந்தி புத்ருடு என்ற தெலுங்கு படத்திற்காக இளையராஜாவின் இசையில் அருமையான பாடல்
-
12th October 2015, 09:42 AM
#618
Senior Member
Diamond Hubber
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
42
'நடப்பது சுகமென நடத்து'

'மூன்று தெய்வங்கள்'
இன்றைய பாலா தொடரில் படுகுஷியான ஒரு பாடல். மூவர் கூட்டணி. அதுவும் நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் என்று. புவனேஸ்வரி மூவிஸ் 'மூன்று தெய்வங்கள்' (1971) படத்தில் நடிப்பின் தெய்வத்தோடு நவரசத்திலகம், நகைச்சுவைத் திலகம் இருவரும் இணைந்து அட்டகாசம்.
கோபுவின் கதை வசனத்தில் படமும் செம காமடி. அம்சமான ஒளிப்பதிவை பதித்தவர் கே.எஸ்.பிரசாத். தாதாமிராசியின் இயக்கத்தில் மூன்று ஜாலி புதிய பறவைகள் நம் கண்களுக்கு புதுமையாக.
மூவருக்கும் மூன்று பாடகர்கள் முறையே டி.எம்.எஸ், பாலா, சாய்பாபா என்று. மூவரும் அவரவர்கள் பாணியில் குரல் தந்து குதூகலப்படுத்தியிருப்பார்கள்.
நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் மூவருக்குமே வித்தியாசான கெட் -அப். வாக்கிங் ஸ்டிக், தொப்பி, கண்ணாடி, கோட், சூட், டை சகிதம் மூவரும் ஜாலியோ ஜாலி.
'நெஞ்சிருக்கும் வரை'யில் நடிகர் திலகம், முத்துராமன், கோபாலகிருஷ்ணன் மூவரும் சாலையில் வேகாத வெயிலில் ஆடிப் பாடும் நெஞ்சில் நிறைந்த பாடல் 'நெஞ்சிருக்கும் எங்களுக்கும் நாளை என்ற வாழ்விருக்கும்' பாடல்.
அது போல இந்தப் பாடலும் ஒரு பிரமாதமான பாடலே. கோபாலகிருஷ்ணனுக்கு பதில் இதில் நாகேஷ்.
அது வறுமையை பின்னணியாகக் கொண்ட, தன்னம்பிக்கையை தங்களுக்கே ஊட்டிக் கொண்ட வேலையில்லா தரித்திர இளைஞர்களின் தி(கொ) ண்டாட்டப் பாடல்.
இதுவோ ஜெயிலில் இருந்து தப்பி வந்து, முன்பின் தெரியாத ஒரு குடும்பத்தில் ஐக்கியமாகி, அந்தக் குடும்பத்து இளம் பெண்ணின் காதலை மட்டுமல்ல...அந்தக் குடும்பத்தையே வாழ வைக்கும் மூன்று திருடர்களின் கதை.
சந்திரகலாவின் காதலன் சிவக்குமாரின் மாமா வி.கே.ஆரை சரிகட்ட மூவரும் இளைஞர் நாடக மன்ற உடுப்புகளை மாட்டிக் கொண்டு மாறுவேடத்தில் பாடும் உல்லாச கீதம்.
இளம் சிறார்கள் இன்னிசை வாத்தியங்கள் வாசிக்க, மூவரும் மலை, கோவில் என்று வெளி இடங்களில் ஆடிப் பாடி மகிழும் பாடல். பாடல் முழுவதும் வெளிப்புறப் படப்பிப்பு.

காதில் கடுக்கணுடன், அனைத்து விரல்களிலும் வட்ட மோதிரங்கள் ஜொலிக்க, நடிகர் திலகம் செம ரிலாக்ஸாக, காமெடி பொங்க, அலட்சிய மூவ்ஸ் கொடுத்து வழக்கம் போல முதல் இடம். குழந்தைகளுடன் குழந்தையாக சின்ன சாக்ஸ் வாசித்து பாடகர் திலகத்தின் குரலில் பின்னி எடுப்பார். ஆட்டத்தில் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இந்தப் பாடலில் டி.எம்.எஸ் அவர்களின் வாய்ஸ் வழக்கத்தைவிடவும் நடிகர் திலகத்திற்கு இன்னும் பொருத்தமாக இருப்பது போல் தோன்றும்.
குறிப்பாக அந்த குறுகலான கருங்கல் தடுப்பு சுவர் பாலத்தில் 'டேப்' டான்ஸ் எனப்படும் ஆட்டத்தை நடிகர் திலகம் பின்னணி ஒலிகளுக்கு ஏற்ப சரவ சாதராணமாக ஆடி வருவது பலே பல் பல். கால்கள் அப்படியே அவர் சொன்ன பேச்சைக் கேட்கும். கால்களை மாற்றி மாற்றி வைத்து ஆடியபடியே கைகளை மார்புக்குக் குறுக்கே மடக்கியும் நீட்டியும் அவர் செய்யும் நடன அசைவுகள் அசாதாரணமானவை. அது மட்டுமல்லாமல் ஒரு கால் முழங்காலை மட்டும் உயர்த்தி முன்னும் பின்னும் ஆட்டியபடி அவர் கொஞ்சம் கூட பேலன்ஸ் தவறாமல் அந்த குறுகலான கற்பாலத்தின் மேல் ஆடி வரும்போது இந்த மனிதருக்கு தெரியாதது ஒன்றுமே இல்லையோ என்று வழக்கம் போல எல்லோர் மனமும் நினைக்காமல் இருக்காது. நன்றாக கவனியுங்கள். அவர் பின்னால் வரும் முத்துவும், ஏன் நாகேஷும் கூட இந்த இடத்தின் நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடுவார்கள்.
பின் ஒலிக்கும் விசில் சப்தத்திற்கு ஆடியவாறே ஷேக் நடை ஒன்று போட்டு வருவது படா ஷோக். தொடர்ந்து வரும் டிரம்பெட் ஒலிக்கு இடுப்பொடித்து இவர் ஆடுவது எவருமே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
ஸ்டிக் பிடித்து குனிந்து பின்பக்கம் உடலைத் தள்ளுவதைக் கூட மிகுந்த சிரத்தையுடன், பெர்பெக்ஷனுடன் செய்வார். மற்ற இருவரும் இந்த மூவ்மென்ட்டிலும் மூத்தவருக்குப் பின்னால்தான்.
கோவில் படிக்கட்டுகளில் கோயில் காளை போல துள்ளிக் குதித்து இறங்கி நண்பர்களுடன் கை கோர்த்து நடிகர் திலகம் கொண்டாட்டம் போடுவது கொள்ளை போக வைக்கும் மனதை.
முத்துராமனும் ஜாலியாக சாப்ளின் ஸ்டைலை பின்பற்றி ஆட்டம் போடுவார். நாகேஷ் பற்றி ஆட்டத்தில் சொல்லவும் வேண்டுமோ!
பாடலும், காட்சி அமைப்பும் என்னவோ காமெடி ஜாலிதான். ஆனால் நடன ஸ்டெப்கள் மிகுந்த சிரமமானவை. அதை கொஞ்சமும் சிரமம் பாராமல் மூவருமே சிரத்தை எடுத்து சிறப்பாக பாடலை முடித்துக் கொடுத்திருப்பார்கள். இதில் நடிகர் திலகத்தின் பங்கு ஜாஸ்தி. அதில் அள்ளும் வெற்றியும் ஜாஸ்தி.
நடனக்காட்சியை மிகச் சிறப்பாக அமைத்துக் கொடுத்த பி.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும், பசுமரத்தி கிருஷ்ணமூர்த்தியும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
'மெல்லிசை மன்னர்' மிரட்டியிருப்பார். ஆரம்ப உற்சாக இசையின் ஊடே டி.எம்.எஸ் 'ஓஹோஹோ லா லா லா லலா ' என்று ஹம்மிங் எடுக்கும் அழகே அழகு. அவர் பின்னாடியே தொடரும் தொடரின் நாயகரும் தன் பங்குக்கு சளைக்காமல் பிரமாதமாக 'ஹம்'முவார்.
சின்ன சின்னதாய் அவ்வப்போது ஒலிக்கும் ஹார்மோனிய ஒலிகளும், ஆர்கன்களின் இனிமையும், 'ஜிகுஜிகு'வென புகுந்து புறப்படும் புல்லாங்குழல்களின் சப்தங்களும் 'மெல்லிசை மன்னரி'ன் இசையறிவுக்குச்
சான்றுகள்.
ச்சும்மா ஜாலிப் பாட்டுதானே என்று அலட்சியம் காட்டினீர்கள் ஆனால் பல இசைச் சித்து வேலைகளை கவனித்து ருசிக்காமல் கோட்டை விட்டு விட்டவர்கள் ஆவீர்கள். அவ்வளவு சங்கதிகள் இந்தப் பாடலில் கொட்டிக் கிடக்கின்றன. பாடலின் டியூனோ அதியற்புதமானது.
நாகேஷுக்குத்தான் சாய்பாபா குரல் எவ்வளவு பொருத்தம்! இந்த காமெடி மன்னனுக்கு ஏ எல்.ராகவன், சீர்காழி, டி.எம்.எஸ் என்று அனைத்துக் குரல்களும் பாங்காகப் பொருந்தி விடுகின்றன. இத்தனைக்கும் கொஞ்சம் 'கீச்' குரல் கொண்டவர் இவர்.
முத்துவுக்கு பாலாவின் குரல் ஓகே. பாலா பாடகர் திலகத்திற்கு இனிமையாகப் பாட முயற்சித்து அதில் வெற்றியும் கண்டிருப்பார். குரல் வழக்கம் போல பனிக்கட்டி பாதாம்கீர் இனிமை. தனித் தன்மையோடு இழைந்து, குழைந்து ஒலிக்கும்.
ஒரு இடத்தில் நாகேஷுக்கு சாய்பாபா குரல் இல்லாமல் பாலா குரல் பின்னணி ஆகி விடும். இது தவிர்க்கப்பட்டிருக்கலாம். கன்டின்யூட்டியில் விடும் கோட்டை. இது போல 'கலாட்டா கல்யாணம்' படத்தின் 'எங்கள் கல்யாணம்' பாடலிலும் குரல்கள் நடிகர்களுக்கு ஒரு சில இடத்தில் மாறும்.
அடைக்கலம் கொடுத்த குடும்பத்தின் பெண்ணை காதலனுடன் சேர்த்து வைக்க மூவரும் பாடும் பாடுவது அவர்கள் பாடும் பாடல் வரிகளிலும் பிரதிபலிப்பதை உணரலாம். ('கல்யாணம் பொய் சொல்லிக் கல்யாணம், சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே) கண்ணதாசனின் மகத்தான பங்கு அது. ஒரு கல்யாணம் பண்ணி வைக்க, அது சுகமாய் முடிய, பொய் பித்தலாட்டம் பண்ணிக் கூட செய்யும் வழிகள் சரியே என்று கதையோடு ஒத்து வரும் கருத்துக்கள் சபாஷ் போட வைக்கின்றன இப்பாடலில்.

ஓஹோஹோ லாலாலலா
லலலா லலலா ஹாஹஹா ஹோஹஹோ
டி.எம்.எஸ்
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
பாலா
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
லல்லல்லல் லலலல்லல்லல் லலலல்லல் லலலல்லல்லா
போதாது நீ கண்ட ராஜாங்கம்
பாலா
பேசாதே போலி வேதாந்தம்
சாய்பாபா
பாராதே வெறும் பஞ்சாங்கம்
டி.எம்.எஸ்
உனக்கொரு உலகத்தை அமைத்து
வளர்த்து எடுத்து நடத்து
பாலா
சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே
டி.எம்.எஸ்
சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே
மூவரும்
நானென்று பேர் சொல்லி நடை போடு
ஏனென்று கேட்போரை எடை போடு
டி.எம்.எஸ்
நடப்பது சுகமென நடத்து
பாலா
வரும் நாளை உனதென நினைத்து
டி.எம்.எஸ்
வாழ்வே பெரிதென மதித்து
பாலா
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
டி.எம்.எஸ்
கல்யாணம் பொய் சொல்லிக் கல்யாணம்
பாலா
பெண் வேணும் வீட்டுக்குப் பொன் வேண்டும்
சாய்பாபா
கண் போடு மெல்லக் கை போடு
டி.எம்.எஸ்
சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே
பாலா
அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையைச் சேர்க்க வேண்டும் பெண்ணோடு
டி..எம்.எஸ்
அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையைச் சேர்க்க வேண்டும் பெண்ணோடு
மூவரும்
செல்வங்கள் கை மாறி உருண்டோடும்
உள்ளங்கள் இடம் மாறி விளையாடும்
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
12th October 2015, 11:17 AM
#619
Senior Member
Diamond Hubber
வாசுஜி...
ம.க.ம.கா ஒரு அட்சய பாத்திரம் அல்லது அமுத சுரபி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு விட்டதால் எல்லோரும் "வாழ்த்துங்கள்" என்று கேட்டுக் கொள்கிறேன்.
அட கடவுளே... இந்த மூன்று பாடல்களுமே நான் கேட்டவைதான். ராகவ்ஜி சொல்லியிருக்கிறது போல இலங்கை வானொலியில் கேட்டிருக்கலாம். நினைவில் இல்லை. ஆனால் ஒவ்வொரு பாடலையும் கேட்க ஆரம்பித்ததுமே மெல்ல மெல்ல சரிந்தோடும் அருவி போல வரிகள் நினைவுக்கு வந்து விட்டன. ம்ம்.. இது போல எத்தனை எத்தனை முத்துக்கள் எந்தெந்த சிப்பிகளுக்குள் மறைந்து கிடக்குதோ ?
முத்துக் குளிக்க வாரீயளா ?
( ஆச்சியின் மறைவு அஞ்சலிகளில் பலரும் தில்லானா மோகனாம்பாளின் பாண்டியன் நானிருக்க பாடலும் அனுபவி ராஜா அனுபவி படத்தின் முத்துக் குளிக்க வாரீகளா பாட்டும் மனோரமா சொந்தக் குரலில் பாடியதாக வரிந்து கட்டிக் கொண்டு எழுதி இருக்காங்க..அவை எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலால் பிரபலமானவை அல்லவோ... திரை இசைப் பாடல்களை மிகவும் அறிந்து திறனாய்வு எழுதும் ஒருவர் தன் பதிவில் இவ்வாறு தவறுதலாக குறிப்பிட்டு எழுதி இருந்தார். இதை பதிவில் குறிப்பிட்டால் அவருக்கு கஷ்டமாக இருக்கும் என்று தனிமடல் அனுப்பினேன்... ஹிஹி.. என்னை குரூப்பிலிருந்து தள்ளிட்டாங்க )
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th October 2015, 06:22 PM
#620
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
வாசுஜி...
திரை இசைப் பாடல்களை மிகவும் அறிந்து திறனாய்வு எழுதும் ஒருவர் தன் பதிவில் இவ்வாறு தவறுதலாக குறிப்பிட்டு எழுதி இருந்தார். இதை பதிவில் குறிப்பிட்டால் அவருக்கு கஷ்டமாக இருக்கும் என்று தனிமடல் அனுப்பினேன்... ஹிஹி.. என்னை குரூப்பிலிருந்து தள்ளிட்டாங்க )
'வெட்கப்பட வேண்டும் ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி
வேதனைப் பட வேண்டும்'
Bookmarks