Page 90 of 337 FirstFirst ... 40808889909192100140190 ... LastLast
Results 891 to 900 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #891
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    சின்னக்கண்ணா... While doing a google search, I came across the following posting by yourself:

    "சில காலம் அட்லீஸ்ட் ஒருவருடம்கழித்து ஸ்ரீதர் சிவகுமார் ஜெயஸ்ரீயை வைத்து எடுத்தார்.. தலைப்பு யாரோ எழுதியகவிதை.. க்ளைமாக்ஸை மாற்றி டாக்டர் அந்த் க் கணவனிடம் செர்த்து வைப்பதாகச் செய்திருந்தார் என நினைக்கிறேன்..அதனாலேயே அது தோல்வி அடைந்திருக்கும்..(இதையே தழுவி பாக்யராஜ் வீட்ல விசேஷங்க எடுத்தார் பிற்காலத்தில்)

    இதில் பலபாடல்கள் இருந்தாலும் தெரிந்தபாடல்.. கேஜே ஜேசுதாஸ் வாணி ஜெயராம்..இசை இளைய ராஜா..

    ம்ம் வாசு சார் மற்றவர்கள் அனலைஸ் செய்திருக்க மாட்டார்க்ள் என நினைக்கிறேன்.. நாராயணா காப்பாத்து..

    பருவம் கனிந்து வந்த பாவை வருக
    புடவை அணிந்து வந்த பூவே வருக..."

    Hmmm... "இசை இளைய ராஜா.."! Really??? All the songs in யாரோ எழுதிய கவிதை were composed by the famous Bengali musician/singer Ananda Shankar who was the son of renowned dancer Uday Shankar and the nephew of sitar maestro Ravi Shankar.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #892
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ராஜா ஜிக்கிக்கு சில பாடல்கள் கொடுத்தார்
    அபப்டி ஒரு பாடல் இதோ


  5. Likes vasudevan31355 liked this post
  6. #893
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    சுபாவின் எதிர்காற்று மலையாளத்தில் அர்த்தம் என்றும் தமிழில் எதிர்காற்று

    நல்ல படம்
    ராஜாவின் இசை
    ராஜா இல்லா ராணி என்று ராணிதான் (மதுரை வானொலி அதிகம் ஒலிபரப்பிய பாடல்)
    உமாரமணன் உடன் நெப்போலியன் என்ற அருண்மொழி


  7. Likes vasudevan31355, Russellmai liked this post
  8. #894
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

    (நெடுந்தொடர்)

    44

    'இன்று முதல் செல்வமிது '

    'வீட்டுக்கு ஒரு பிள்ளை'

    'ராமன்' பிக்சர்ஸ் ராமண்ணாவின் புதுமைச் சித்திரம் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை' படத்திலிருந்து பாலாவின் இன்றைய தொடர் பாடலைப் பார்க்கலாம்.



    ஜெயசங்கர், (இருவேடங்களில்) எம்.ஆர்.ஆர்.வாசு, மனோகர், நாகேஷ், சுருளி, சசிகுமார், உஷா நந்தினி, ஜி.வரலஷ்மி, சி.ஐ.டி.சகுந்தலா நடிக்க, இப்படத்திற்கு மூலக்கதை கொட்டாரக்கரா. 1971 ஆம் வருடம் தீபாவளிக்கு நடிகர் திலகத்தின் பாபு, திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் நீரும் நெருப்பும், கோபாலகிருஷ்ணனின் ஆதி பராசக்தி போன்ற பெரிய படங்களுடன் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற படம் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை'.

    வசனம் சுப்பு ஆறுமுகம். ஒளிப்பதிவு அமிர்தம். இசை 'மெல்லிசை மன்னர்'

    பாடல்கள் கவிஞர். இயக்கம் கனக சண்முகம். டைரக்ஷன் மேற்பார்வை ராமண்ணா.


    கதை.

    மேல்நாடு சென்று படித்துத் திரும்பும் அதே சமயம் தமிழ்க் கலாச்சாரத்தை மறக்காத, ஏழைகளுக்கு நிலத்தைத் திருப்பிக் கொடுக்க ஆர்வம் காட்டும் பணக்கார ஜமீன் வாரிசு நாயகன் ஜெய், சொத்துக்காக அவரை ஒழித்துக் கட்ட சதித்திட்டம் போடும் வில்லி சித்தி வரலஷ்மி, அவரது அல்லக்கைகள் மானேஜர் வாசு மற்றும் தம்பி என்னத்தே கன்னையா, ஜெய் காதலிக்கும் கிராமத்துக் கிளி உஷா நந்தினி, நல்ல டிரைவர் நாகேஷ், வரலஷ்மியின் நாகாரீக கவர்ச்சி மகள் நாட்டிய சகுந்தலா, அவருக்கு வெளிநாட்டு புகழ் அரங்கேற்ற ஆசை காட்டும் டூப்ளிகேட் வெளிநாட்டு ஏஜண்ட் சசிகுமார், தங்கையின் தாறுமாறு போக்கைக் கண்டு கொதிக்கும் அண்ணன் ஜெய், மானேஜர் வாசுவுடன் கள்ளக்காதல் புரிந்தது ஜெய்க்குத் தெரிந்ததால் அவரை வில்லி வரலஷ்மி டைம்பாம் காரில் வைத்து சாகடிக்க, எதிர்பாராமல் திரும்ப அதே உருவில் வேறொரு ஜெய் வருகை, கெட்ட கும்பலுக்கு அது நாயகன் ஜெய் இல்லை என்று அதிர்ச்சி, மீண்டும் வந்த புது நாயகனைக் கொல்ல சதித்திட்டங்கள், இறுதியில் புதிய பறவை பாணியில் வரலஷ்மி வாயாலேயே அவர்தான் ஜெய்யை பாம் வைத்து கொலை செய்தவர் என்று கக்க வைக்கும் போலீஸ், மாட்டிக் கொண்ட வில்லி மலையிலிருந்து கீழே விழுந்து தற்கொலை, இறுதியில் யாருமே எதிர்பாராத இன்னொரு ஆண்டி கிளைமாக்ஸ் என்று கரம் மசாலா பக்காவாக கலந்து தந்து கலக்கிய படம். வசூலில் வாகை.

    கிளைமாக்ஸ் சொல்லியே ஆக வேண்டும். இப்போதைக்கு சப்பென்று இருக்கலாம். அப்போதைக்கு அது சூப்பர்தான்.

    அதாவது ஜெய் காருக்கு சித்தி வரலஷ்மி கோஷ்டி டைம் பாம் வைக்க, அது தெரியாமல் காரில் செல்லும் ஜெய்யிடம் வழியில் லிப்ட் கேட்கிறார் டிப்-டாப் மனோகர். லிப்ட் கொடுக்கும் ஜெய்சங்கரிடமே அவர் பொருள்களைக் கொள்ளை அடித்து, அவரை கீழே இறக்கி விட்டுவிட்டு, அவரை அடித்துப் போட்டுவிட்டு காரையும் திருடிச் சென்று விடுகிறார். இப்போது காரில் ஜெய்க்குப் பதிலாக மனோகர். டைம் பாம் வெடித்துக் கார் சிதறி மலையிலிருந்து உருண்டு மனோகர் இறந்துவிட, இறந்தவர் ஜெய் தான் என்று தவறான முடிவெடுத்துவிடுகிறது பின்னால் துரத்தி வந்து கண்காணிக்கும் வரலஷ்மி கும்பல். காரிலிருந்து இறக்கிவிடப்பட்ட ஜெய் போலீசில் புகார் செய்யப் போக, அங்கே நாயகன் ஜெய் உருவத்தை ஒத்த சற்று வயதான சி.ஐ.டி ஆக இன்னொரு ஜெய். போலீஸ் ஜெய் ஒரிஜினல் ஜெய்யை தன் பராமரிப்பில் வைத்துவிட்டு, அவராக ஆக மாறி கொலைக்கான காரணகர்த்தாக்களைக் கண்டுபிடிக்க மீண்டும் வில்லி வீட்டுக்குப் போக, அவரையும் கொலை செய்ய வரலஷ்மி திட்டம் போட இறுதியில் அனைத்துத் சதித் திட்ட்டங்களும் பணால். இறுதியில் போலீஸ் ஜெய் எல்லா முடிச்சுக்களையும் அவிழ்க்க ஒரிஜினல் நாயகன் ஜெய் உஷாவுடன் சேர்ந்து படம் பார்த்தவர் அனைவரையும் சந்தோஷமாக வீட்டுக்கு சிரித்த முகத்துடன் அனுப்பி வைக்கிறார்.


    கலர்ப் பிள்ளை. அதனால் ஜெய் முதற்கொண்டு அனைவருக்கும் லிப்ஸ்டிக் செக்கச் செவேல்.

    அதே போல இன்னொரு சிறப்பம்சம். பாடல்கள். 'வீட்டுக்கு ஒரு பிள்ளை' பாட்டுக்கு ஒரு படம். விஸ்வநாதனின் விஸ்வரூபம். பாடல்கள், பின்னணி இசை என்று பிரம்மாண்டம். டைட்டில் இசை 'ராஜா' போல. (தர தகுர தகுர தகுர தகுத தா..)

    சித்தி அனுப்பி வைத்த வில்லன்களுடன் ஜெய், நாகேஷ் டிஷ்யூம் செய்ய, அப்படியே மோதி நிற்கிற ஸ்டில்கள் மத்தியில் டைட்டில் அதம் பறக்கும். லோ டிக்கெட் விசில் சப்தமும்தான். 'பரபர' டைட்டில். இன்றும் ரசிக்க, பரவசமடைய முடிகிறது.

    பாட்டுக்கு ஒரு ஈஸ்வரி. (வாசு! காலரைத்தூக்கி விட்டுக் கொள்ளுப்பா!) சும்மா அம்மணி அமளிதுமளி.

    சி.ஐ.டி.சகுந்தலா வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் அண்ணன் ஜெய்க்கு ஆட்டம் போட்டு பார்ட்டி வைப்பார். அட ராமண்ணா!

    'நாகரீகம் வருக! நவநாகரீகம் வருக!'

    ஈஸ்வரியின் அதே முத்திரை. 'ஹரே ராம் கிருஷ்ணா ராம்' பஜனையுடன்.



    ஜெய் உஷாநந்தினியை வயல்வெளி காடுகளில் துரத்தி விரட்டி 'பாடகர் திலகம்' குரலில் பாடும்,

    'நான் போட்ட புள்ளி...ஒரு மாற்றமில்லை...கல்யாணமான கன்னிப் பெண்ணே பொன்னம்மா'

    ஜாலியோ ஜாலி கலாய்ப்பு. அமிர்தத்தின் அழகான வெளிப்புறப் படப்பிடிப்பு. அம்சமான பாடல்.

    மறுபடி சகுந்தலாவின் மின்னல் வேக ஆட்டம். ராட்சஸி தாண்டவமாடிவிடுவார் சகுந்தலாவை விட. ஆனால் சகுந்தலாவின் மிகக் கடினமான ஸ்டெப்கள் நிஜமாகவே வியப்பைத் தரக் கூடியவை. ஒரு தொலைகாட்சி சேனலில் அவர் சொன்னது.

    "இதுவரை நான் ஆடிய ஆட்டங்களிலேயே நான் சிரமப்பட்டு ஆடியது இந்தப் பாடலுக்குத்தான். அவ்வளவு கடினமான நடனம். இப்போதுள்ள கவர்ச்சி ஆட்ட நடிகைகளுக்கு சவால் விடுகிறேன். இது போல ஆடிக் காட்டுங்கள் பார்க்கலாம்"

    அவர் சொன்னது உண்மையும் கூட.

    என்ன பாடல்? அடடா! என்ன பாட்டு! என்ன டான்ஸ்!



    'பெண்ணென்றால் நானன்றோ!
    சொல்லுங்கள் வேறுண்டோ!'

    'பாடகியென்றால் நீயன்றோ! இது போலப் பாட வேறுண்டோ!என்று ராட்சஸியைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது. அதுவும்,

    'சொன்னால் புரியும்...சொல்ல என்னால் முடியும்' என்று தெனாவட்டாக ஆணி அறைவாரே! அய்யோ! அமர்க்களம்.




    அடுத்து குழந்தையைக் கொஞ்சுவது போல வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்த ஜெய் குழந்தையை ஜானகி குரலில் உஷாநந்தினி கொஞ்சும் பாட்டு.

    'ஏண்டா ராஜா என்ன வேணும்
    எதைக் கேட்டாலும் அதை நான் தருவேன்
    என்ன கண்டு பயந்தாய் சொல்லு ராஜா'

    நாடாக் கட்டிலுக்குக் கீழ் நாட்டுக்கட்டை ரேஞ்சிற்கு உஷாநந்தினி பாடும்போது தியேட்டரில் பீடா, டீ ஸ்டால் காத்து வாங்கும். இதுவும் செம லோக்கல் பாட்டு.

    ஜெயசங்கரின் பணத்தையெல்லாம் சுருட்டிக் கொண்டு வில்லி வரலஷ்மி வீட்டை விட்டு கிளம்ப அதை வாட்ச் செய்யும் உஷாநந்தினி ஈஸ்வரி குரலில் கிளப்பும்

    'ஆட்டக் கடிச்சா மாட்டக் கடிச்சா
    ஆளக் கடிச்சா எங்கத்தையம்மா'

    பாடல் ஏக ரகளை. அப்போது பட்டி தொட்டியெங்கும் பிரபலம் இந்தப் பாடல். செம நக்கல், நையாண்டிகள் நிறைந்த பாடல். ராட்சஸி தமிழ்நாட்டின் பல ஊர்களில் மேடைக் கச்சேரி செய்யும் போது இந்தப் பாடலை பாடச் சொல்லி மக்கள் விருப்பப்படுவார்கள். அந்த அளவிற்கு ஹிட்டான பாடல்.

    ஈஸ்வரியை புகழ் உச்சியில் கொண்டு சென்ற லோ கிளாஸ் பாடல்.

    அப்புறம் கிளைமாக்ஸிற்கு முன்னால் ஜெய், நாகேஷ், உஷா நந்தினி வில்லி கோஷ்டியிடம் பேய்கள் கணக்காக ஒகேனக்கல் மலை அருவியில் ஆர்ப்பாட்ட இசையின் பின்னணியில் சண்டையிட்டுப் பாடும்,

    'கொண்டுவா நீதி கெட்டவனை நேர்மையற்றவனை கடவுள் முன்னே.
    தண்டனை பாதி இங்கு வரும் மீதி அங்கு வரும் விடுவதில்லை'

    அமர்க்களமான, படு அமர்க்களமான, இன்னும் அமர்க்களமான பாடல். டி எம்.எஸ், சீர்காழி, ஈஸ்வரி சாறு பிழிந்து விடுவார்கள். 'பென்ஹர்' குதிரை மாதிரி உஷா நந்தினி என்ன ஆட்டம்...என்ன ஓட்டம். (ரவி நாகேஷின் 'அன்று கண்ட முக'த்தின் 'வாடா மாச்சான் வாடா' பாடல் பாணிப் பாடல் இது)




    இப்போது அம்சமான பாலாவின் தொடரின் பாட்டு.

    தண்ணி போட்டுகிட்டு, மழையில் பனைமட்டையோடு கத்தி பிடித்து, தள்ளாடி தள்ளாடி ஜெயசங்கரை கொலை செய்யச் சுற்றும் ராமண்ணாவின் ஆஸ்தான கண்ணான 'என்னத்தெ'.

    மழை 'கொட்டோ கொட்'டென்று கொட்ட, வீராணம் சிமெண்ட் குழாய்களில் ஒயிட் ஜிப்பா அணிந்து ஜெய் சிகப்புப் புடவை, கால்களில் தண்டை, இடுப்பில் ஒட்டியாணம் அணிந்த கிராமத்து கனகாம்பர மங்கை உஷாநந்தினியுடன் செட்டில் உரசி உறவாடும் அருமையான ஜிலுஜிலு குளு குளு காதல் டூயட்.

    'இன்று முதல் செல்வமிது
    என்னழகு தெய்வமிது
    வாழ்வு வந்தது'

    பால்வடியும் குரலோனின் பசுமையான, நெஞ்சம் மறக்க முடியாத காதல் கானம். 'கடலலை தாலாட்டும் வேளாங்கண்ணி' போல பாலாவின் குரல் பாடல் முழுதும் ஆரம்பத்திலிருந்தே இதமாக நம்மை இன்பலோகம் இழுக்கும்.


    பாலாவுக்கு பொருத்தமாக ஹம்மிங் தேவதை வசந்த வசந்தா. பாலா பாட வேண்டும்...இந்த வசந்த தேவதை ஹம்மிங் தர வேண்டும். காணி நிலம் வேண்டும்...பராசக்தி காணி நிலம் வேண்டும். அங்கு கயிற்றுக் கட்டிலில் இளநீர் அருந்தியபடி இன்பமாக இந்தப் பாடலை மதுரகானங்கள் நண்பர்களுடன் கேட்டு கேட்டு பார்த்து பார்த்து மகிழ வேண்டும். பாலா, வசந்தாவைப் பற்றிப் பேசிப் பேசி மகிழ வேண்டும். நிறைவேறுமா? எண்ணம் நிறைவேறுமா?

    பாலா பல்லவி முடித்தவுடன் வசந்தா தரும்,

    'லாலாலாலாலா லாலா லாலா
    லாலாலாலாலா லாலா லாலா'

    ஹம்மிங் லாலா கடை லட்டு.

    'எடுத்தேன் நெஞ்சின் பக்கம்
    இன்னுமா கண்ணே வெட்கம்'



    என்று வரிகள் மீண்டும் ஒலிக்கும் போது சிமெண்ட் குழாயில் ஜெய் குழந்தை போல முட்டி போட்டு நகர்ந்து வர, உஷாநந்தினி இரு கைகளையும் சிமெண்ட் குழாயில் முன் வைத்து, தாங்கிப் பிடித்து உடல் வளைத்து, பெண்டாகி ஈரத்துடன் நிற்கும் அந்த போஸ்...சந்நியாசியைக் கூட சம்சாரி ஆக்கிவிடும். சமரசத்துக்கே இடமில்லை.

    'கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம்'

    என்று பாலா முடித்ததும்

    வசந்தா தரும் அந்த சுகமான,

    'யாய்யா யாய்யா யா யாய்யா யாய்யா
    யாய்யா யாய்யா யா யாய்யா யாய்யா'

    ஹம்மிங்

    வார்ரே வாய்யா!


    உஷா ஜெய் முதுகு மீது குழாய்க்குள் ஒய்யாரமாக அமர்ந்து...அதே போல் ஜெய் உஷா முதுகு மீது...ஏக ரகளைக் காதல். பாடல் முழுதுமே கட்டுக்கடங்காதக் குதிரையாய்த் திரிகிறார் உஷா நந்தினி. அம்மணியின் உடம்பு கேள்விக்குறி, கமா, ஆச்சர்யக்குறியாக வளைந்து, நெளிந்து, நிமிர்கிறது. பார்ப்பவர்கள் உடலும்தான்.

    குழாய்களின் நுழைவுப் பக்கத்தில் மின்னலை உணர்த்துவதற்காக செட்டில் ஆர்க் வெல்டிங் வைப்பார்கள் போலிருக்கிறது. நடுநடுவில் கத்தி காட்டி மிரட்டி ஆள் உயர மரத்துப் பொந்தில் கன்னையா ஒளிந்து கொள்வது...
    அவரைப் போல வரும்?... ஆனா வராது.

    'பொன்னைத்தான் தெய்வம் என்று
    போதை நான் கொண்டேன் அன்று'

    என்று ஜெய் உஷாநந்தினியை அலேக்காகத் தூக்கும் போது, அப்போது உஷாநந்தினி ஜெய் தோள்களில் சாய்ந்து குப்பற வளையும் போது அந்த மழைப் பாட்டிலும் நமக்கு 'குப்'பென்று வியர்த்து பின் உடல் சில்லிட்டு விடும்.

    அதே போல,

    'பொன்னிலே போதை இல்லை
    உன்னிடம் கண்டேன் இங்கு'

    வரிகள் முடிந்தவுடன்

    'ச்சம்ச்சம் ச்சம்ச்சம் ச்சம் ச்சம்ச்சம் ச்சம்ச்சம்
    ச்சம்ச்சம் ச்சம்ச்சம் ச்சம் ச்சம்ச்சம் ச்சம்ச்சம்'

    என்று வசந்தா பின்னி எடுக்க, அந்த வரிகளின் டியூனுக்குத் தோதாக அங்கிருக்கும் ஆலமரத்தின் விழுதுகளை காதலர்கள் ஊஞ்சல் போலப் பிடித்து தொங்கியபடி ஆடுவது அருமை.

    வசந்தா ஹம்மிங் முடித்ததும் பாலா 'ம்ம்ம்ம்'....என்றும் பின் 'ஓஓ...ஹோ' என்று தொடர்வது அருமையிலும் அருமை.

    இடையிசை டிரம்பெட்டில் கலக்கும். பல்லவி வரிகளில் கவனித்தால் 'கிளிங் கிளிங்' என்ற மழைத்துளி தெறிப்பது போன்ற ஓசை இடைவிடாது அற்புதமாக ஆங்காங்கே ஒலிக்கும். மழை சிச்சுவேஷனை இசை மழை அப்பட்டமாக அப்படியே நமக்குக் கா(கொ)ட்டும்.

    'கைகளால் அத்தான் தன்னை
    கைது செய் காதல் பெண்ணே'

    எனும் போது தரையில் தவழும் நாயகியின் கால்களைப் பிடித்து, வேகமாக இழுத்து ஜெய் அவரை அணைத்துக் கொள்வது சிலுசிலுப்பு.

    சிமெண்ட் பைப்பின் மேலும், ஆலமரத்தின் அடிவேர் சந்து, பொந்துகளிலும் காதல் ஆட்டங்கள் கன்டின்யூ ஆகும். பாம்புகள் ஊர்வது போல சேற்றில் இருவரும் மாறி மாறி ஊர்ந்து வந்து நம்மை கூர்ந்து கவனிக்க வைப்பார்கள்.


    கன்னுக்குட்டி போல 'லாலி லாலி லா லாலி லாலி' என்று உஷாநந்தினி முட்டியிட்டு, தலையாட்டியபடி சேற்றில் நகர்ந்து வருவதும் ஜோர். பாடல் முழுவதும் உஷா நந்தினி உற்சாக நந்தினி. மக்கள் கலைஞருடன் மகா நெருக்கம். கவர்ச்சி சற்று எல்லை மீறி இருக்குமே தவிர ஆபாசம் எள்ளளவும் இருக்காது என்பது இப்பாடலின் மிகப் பெரிய வெற்றி. அமிர்தம் ஒரு சிமெண்ட் பைப்பிற்குள் ஏகப்பட்ட வித்தைகளை காமெரா மூலம் செய்து காட்டுவார். திறமை.

    இந்த மாதிரிப் பாடல்களில் ஆய்வு எழுதுவது சிரமாக இருக்கிறது. பாலா திறமையை மட்டும் எடுத்து எழுதவும் முடியவில்லை. மற்றவர்களின் திறமைகளை எடுத்துச் சொல்லாமலும் திருப்திப்படவில்லை. எல்லாமே அருமையாய் இருக்கும் போது எதை எழுதுவது? எதை எழுதாமல் விடுவது என்று பெருங்குழப்பம்.

    பாலாவின் கேரியரில் கோமேதகப் பாடல். ஒவ்வொரு எழுத்தையும் அனுபவித்துப் பாடியிருப்பார்.

    'கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம்' என்பதில் சொர்க்கத்தை நமக்குக் கொண்டு வந்து காட்டுவார். 'சொர்க்கம்' என்பதை அழுத்தி பேஸ் வாய்ஸில் உச்சரிக்கும் போது மயங்காத மனம் யாவும் மயங்கும். பாடல் முழுதும் அவர் கொஞ்சமும் அலட்டாமல் அலுங்காமல் நலுங்காமல் நூல் பிடித்த மாதிரி அப்படியே வெல்லப் பாகு நீள்வதைப் போல ஒரே சீராக ஸ்ருங்கார ரசம் சொட்ட சொட்டப் பாடியிருப்பார்.

    மிக வித்தியாசமான டூயட். பாடலும். வெயிலின் சூட்டிற்கு இதமான தென்றல் போல், மழையின் குளிருக்கு பதமான வெயில் போல உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சுகம் தரும் அற்புதமான அமிர்தப் பாடல். எங்கயோ நம்மை இனம் புரியாத லெவலுக்கு அழைத்துச் செல்கிறது எப்போது கேட்டாலும் இந்தப் பாடல்.

    ஜெயசங்கரின் டூயட்களில் 'என்றும் செல்வம்' இந்தக் காதல் பாடல்.




    ம் ஹூம் ம் ஹூம்
    ம் ஹூம் ம் ஹூம்

    அஆ.........................ஆ

    இன்று முதல் செல்வமிது
    என்னழகு தெய்வமிது
    வாழ்வு வந்தது
    மஞ்சளொடு குங்குமமும்
    பிஞ்சுமுக சந்திரனும்
    காண வந்தது

    லாலாலாலாலா லாலா லாலா
    லாலாலாலாலா லாலா லாலா

    இன்று முதல் செல்வமிது
    என்னழகு தெய்வமிது
    வாழ்வு வந்தது
    மஞ்சளொடு குங்குமமும்
    பிஞ்சுமுக சந்திரனும்
    காண வந்தது

    (அழகான டிரம்பெட் ஓசை)

    எடுத்தேன் நெஞ்சின் பக்கம்
    இன்னுமா கண்ணே வெட்கம்

    ம்ஹூம் ம்ஹூம் வெட்கம்
    ம்ஹூம் ம்ஹூம் வெட்கம்

    எடுத்தேன் நெஞ்சின் பக்கம்
    இன்னுமா கண்ணே வெட்கம்
    கொடுத்தேன் கண்ணில் முத்தம்
    கொண்டுவா கொஞ்சும் சொர்க்கம்
    கொண்டுவா கொஞ்சும் சொர்க்கம்

    யாய்யா யாய்யா யா யாய்யா யாய்யா
    யாய்யா யாய்யா யா யாய்யா யாய்யா

    இன்று முதல் செல்வமிது
    என்னழகு தெய்வமிது
    வாழ்வு வந்தது
    மஞ்சளொடு குங்குமமும்
    பிஞ்சுமுக சந்திரனும்
    காண வந்தது

    பொன்னைத்தான் தெய்வம் என்று
    போதை நான் கொண்டேன் அன்று
    பொன்னைத்தான் தெய்வம் என்று
    போதை நான் கொண்டேன் அன்று
    பொன்னிலே போதை இல்லை
    உன்னிடம் கண்டேன் இங்கு
    உன்னிடம் கண்டேன் இங்கு

    ச்சம்ச்சம் ச்சம்ச்சம் ச்சம் ச்சம்ச்சம் ச்சம்ச்சம்

    ம்ம்ம்ம்

    ச்சம்ச்சம் ச்சம்ச்சம் ச்சம் ச்சம்ச்சம் ச்சம்ச்சம்

    ஓஓ......ஹோ

    (நடுவில் சந்தூர் இசையும், பின் டிரம்பெட் ஒலியும் இழையும்)

    கைகளால் அத்தான் தன்னை
    கைது செய் காதல் பெண்ணே
    முத்துப் போல் இங்கே மெல்ல
    சித்திரம் தந்தால் என்ன
    சித்திரம் தந்தால் என்ன

    லாலி லாலி லா லாலி லாலி
    லாலி லாலி லா லாலி லாலி

    இன்று முதல் செல்வமிது
    என்னழகு தெய்வமிது
    வாழ்வு வந்தது
    மஞ்சளொடு குங்குமமும்
    பிஞ்சுமுக சந்திரனும்
    காண வந்தது

    ம் ஹூம் ம் ஹூம்
    ம் ஹூம் ம் ஹூம்
    ம் ஹூம் ம் ஹூம்
    ம் ஹூம் ம் ஹூம்


    Last edited by vasudevan31355; 22nd October 2015 at 06:03 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #895
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    ஜி.வரலஷ்மி என்ற பாந்தமான, சாந்தமான, பழைய காலத்து நடிகையை ஜெய்க்கு வில்லி சித்தி ரோல் கொடுத்து, அவரை மது அருந்த வைத்து, இங்கிலீஷ் பேச வைத்து ஒருவழியாக்கியிருப்பார்கள். இதில் மானேஜர் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் கள்ள உறவு வேறயாம். மேக்-அப் கொடூரம். வில்லித்தனமும்தான்.



    இந்த நடிகை நடிகர் திலகத்தை வைத்து 'ஹரிச்சந்திரா' என்ற படத்தை நெடுங்காலமாய்த் தயாரித்தார். அவரே சந்திரமதியாகவும் ஹீரோயின் ரோல் செய்தார். இவர்தான் 'வாழ்விலே ஒரு நாள்', 'நான் பெற்ற செல்வம்' போன்ற படங்களில் நடிகர் திலகத்தின் நாயகி. எம்.ஜி.ஆர் அவர்களுடன் 'குலேபகாவலி' படத்தில் ஒரு ஜோடியாக வருவார். ('மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ')
    Last edited by vasudevan31355; 22nd October 2015 at 03:20 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes rajeshkrv, Russellmai, chinnakkannan liked this post
  11. #896
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ஹரிச்சந்திரா' படத்தில் நடிகர் திலகத்துடன் ஜி.வரலட்சுமி

    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes Russellmai liked this post
  13. #897
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'நான் பெற்ற செல்வம்' பட விளம்பரத்தில் ஜி.வரலட்சுமி.

    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes Russellmai liked this post
  15. #898
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by raagadevan View Post
    சின்னக்கண்ணா... While doing a google search, I came across the following posting by yourself:

    "சில காலம் அட்லீஸ்ட் ஒருவருடம்கழித்து ஸ்ரீதர் சிவகுமார் ஜெயஸ்ரீயை வைத்து எடுத்தார்.. தலைப்பு யாரோ எழுதியகவிதை.. க்ளைமாக்ஸை மாற்றி டாக்டர் அந்த் க் கணவனிடம் செர்த்து வைப்பதாகச் செய்திருந்தார் என நினைக்கிறேன்..அதனாலேயே அது தோல்வி அடைந்திருக்கும்..(இதையே தழுவி பாக்யராஜ் வீட்ல விசேஷங்க எடுத்தார் பிற்காலத்தில்)

    இதில் பலபாடல்கள் இருந்தாலும் தெரிந்தபாடல்.. கேஜே ஜேசுதாஸ் வாணி ஜெயராம்..இசை இளைய ராஜா..

    ம்ம் வாசு சார் மற்றவர்கள் அனலைஸ் செய்திருக்க மாட்டார்க்ள் என நினைக்கிறேன்.. நாராயணா காப்பாத்து..

    பருவம் கனிந்து வந்த பாவை வருக
    புடவை அணிந்து வந்த பூவே வருக..."

    Hmmm... "இசை இளைய ராஜா.."! Really??? All the songs in யாரோ எழுதிய கவிதை were composed by the famous Bengali musician/singer Ananda Shankar who was the son of renowned dancer Uday Shankar and the nephew of sitar maestro Ravi Shankar.
    ஹச்சோ ராகதேவன்.. தாங்க்ஸ்..எப்ப்போதோ எழுதினது.. மறந்து தவறாக எழுதிவிட்டேன்..ஷமிக்கணும்.. ஆனந்த சங்கர் உதய் ஷங்கர் மகன், ரவி ஷங்கரின் உறவு என்ற தகவலுக்கு நன்றி.. ஆமா எதுக்கு இப்போ யாரோ எழுதிய கவிதை..ம்ம் ஜெயஸ்ரீயைப் பாக்கணும்னு தோணித்தாக்கும்



    ஹி.ஹி.. நான் பார்க்காத கேட்காத வீடியோ உங்களுக்காக..

  16. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, Russellmai liked this post
  17. #899
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ம்ம் வரவர உஷா நந்தினி பாட்டாப் போட்டுக்கிட்டிருக்காங்கப்பா இன்று முதல் செல்வமிது பாட் ரொம்பப் பிடிக்கும்..அஸ்யூஸ்வல் வர்ணனை..

    //உஷா ஜெய் முதுகு மீது குழாய்க்குள் ஒய்யாரமாக அமர்ந்து...அதே போல் ஜெய் உஷா முதுகு மீது...ஏக ரகளைக் காதல். பாடல் முழுதுமே கட்டுக்கடங்காதக் குதிரையாய்த் திரிகிறார் உஷா நந்தினி. அம்மணியின் உடம்பு கேள்விக்குறி, கமா, ஆச்சர்யக்குறியாக வளைந்து, நெளிந்து, நிமிர்கிறது. பார்ப்பவர்கள் உடலும்தான். // உங்க ரசனை எனக்கு எப்பவும் ஆச்சர்யக் குறி தான்

    அமிர்தம் ஒரு சிமெண்ட் பைப்பிற்குள் ஏகப்பட்ட வித்தைகளை காமெரா மூலம் செய்து காட்டுவார். திறமை. //

    இன்னும் இங்கு வந்திருக்கும் நிறைய பாட் நாளைக்காவது கேட்டு எழுதணும்

  18. #900
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    'வீட்டுக்கு ஒரு பிள்ளை' படத்தில் ஒரு விறுவிறு காட்சி.

    இரண்டாவதாக வந்த டூப் ஜெயசங்கரையும் (சிஐடி) தீர்த்துக்கட்ட வில்லி ஜி. வரலஷ்மி ப்ளான் போடுவார். எம்.ஆர்.ஆர்.வாசு, நாகேஷ்,( நடிப்பார்) 'என்னத்தே' சகிதம் விஷம் கலந்த காப்பியை பிளாஸ்க்கில் ஊற்றி ஜெய் இருக்கும் வீட்டிற்கு எடுத்து வருவார். வீட்டின் மேல் ஏறி, கயிற்றில் சுரடு ஒன்றை மாட்டி, அந்தக் கொக்கியில் பிளாஸ்க்கை வைத்து, ஓட்டைப் பிரித்து மேலிருந்து கீழே இறக்குவார். அங்கே கீழே டேபிளில் இதே கலரில் இன்னொரு பிளாஸ்க் இருக்கும். விஷக் காப்பி உள்ள பிளாஸ்க்கை அந்த இடத்தில் வைத்துவிட்டு ஏற்கனவே அதே கலரில் இருக்கும் பிளாஸ்க்கை அந்தக் கயிற்றின் வழியாகவே எடுத்து விடுவதாக ப்ளான். வரலஷ்மி பிளாஸ்க்கை கயிற்றிலிருந்து விலக்கி கரெக்டாக டேபிளில் வைத்து விடுவார். பக்கத்தில் இருக்கும் பிளாஸ்க்கை கொக்கியில் மாட்ட எத்தனிக்கும் போது டேபிளில் உள்ள போட்டோ ஒன்றில் கயிறு கொக்கி பட்டு கீழே தவறி விழுந்து விடும். உள்ளே ஜெயசங்கர் வேறு அப்போது வந்து விடுவார். இப்போது இரண்டு பிளாஸ் க்குமே மேஜையில் இருக்கும். ஜெய் அதை கவனிக்க மாட்டார். கீழே விழுந்த போட்டாவை சற்று சந்தேகம் கொண்டு பார்த்து விட்டு, பின் அதைத் துடைத்து டேபிளில் மறுபடி வைப்பார் ஜெய். பின் வாஷ் டப் சென்று ஜெய் முகம் கழுவுவார். இதையெல்லாம் மேலே ஓட்டைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் வில்லி வரலஷ்மி இந்த டயத்தில் மறுபடி ட்ரை பண்ணி மேலிருந்து கரெக்டாக விஷமில்லாத காபி உள்ள பிளாஸ்க்கில் கொக்கியில் மாட்டி கயிற்றை மேலே ஜெய் கவனிப்பதற்குள் இழுத்து விடுவார்.

    பின் ஜெய்சங்கர் அங்கு அமர்ந்து விஷமுள்ள காபி உள்ள பிளாஸ்க்கை அறியாமல் திறந்து காபி அருந்துவார். இதை மேலே இருந்து பார்க்கும் வில்லி கீழே உள்ள தன் ஆட்களிடம் மேலிருந்து ஜெய்யைப் பார்த்தபடி நேரடி வர்ணனை செய்வார். ('இப்போ குடிக்கிறான்... குடிச்சிட்டான்') விஷக் காபி உள்ளே போனதும் ஜெய் தொண்டையைப் பிடித்துக் கொண்டு துடிப்பார். உயிருக்குப் போராடுவார். அப்படியே மேலே பார்க்கும் போது வரலஷ்மியைக் கவனித்து விடுவார். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. மேலே இருந்து வரலஷ்மியும் பயப்படாமல் ஜெய்சங்கரை நேரிடையாக பார்த்து அவர் அவஸ்தைப்படுவதைப் பார்த்து ஆனந்தப்படுவார்.

    இந்தக் காட்சி 'பரபர'வென இருக்கும். ஜெய்யிடம் வில்லி மாட்டி விட வேண்டுமே என்ற ஆர்வமும், ஜெய் தப்பிக்க வேண்டுமே என்ற பதைபதைப்பும், எங்கே ஜெய் பிளாஸ்க்கைப் பார்க்காமல் விட்டுவிடுவாரோ என்ற கவலையும், விஷ பிளாஸ்க்கை வைத்துவிட்டு நல்ல பிளாஸ்க்கை வில்லி எடுத்தவுடன் அவள் மீது கோபமும், ஜெய் தெரியாமல் விஷமருந்தியவுடன் அவர் மேல் பச்சாதாபமும், 'உச்' கொட்டும் எண்ணமும் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பிறக்கும். எனக்கல்ல.

    ஆனால் விறுவிறு சுறுசுறு பதை பதை காட்சிதான்.
    Last edited by vasudevan31355; 22nd October 2015 at 03:53 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  19. Likes Russellmai, chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •