-
6th November 2015, 10:28 AM
#1401
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
6th November 2015 10:28 AM
# ADS
Circuit advertisement
-
6th November 2015, 10:35 AM
#1402
Senior Member
Senior Hubber
இன்னொரு யாருக்கு யார்... அதே ஆசை முகம்
யாருக்கு யார் என்று தெரியாதா (ஆசை முகம் தானே பிற்காலத்தில் ஃபேஸ் ஆஃப் என ஆங்கிலத்தில் வந்தது?!)
திருமண மேடை தேடி வந்தேன் என் தலைவன் திருவடி நாடி வந்தேன் (அந்தக்கால மூன்று குடை ஜிமிக்கி நல்லா இருக்குங்க்ணா)
ஊரார் வார்த்தை கேட்காமல்
உற்றார் முகத்தைப்பார்க்காமல்
நேராய் நெஞ்சில் நின்றவரே
நினைவால் என்னை வென்றவரே..( சுருட்டை முடி கலையாம இருக்கே.. ஒட்டியிருப்பாங்களோ
)
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
6th November 2015, 11:16 AM
#1403
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
ரொம்ப நாளாச்சு ஈ பாட் கேட்டு..
அஹ அஹ ஹஹஹ்ஹா அஹஹ ஹஹஹா.. எல்.ஆர்.ஈ ஹம்ம்மிங்க்..
சிக்கா.... எனக்கு எல்லாம் மறந்து போச்... இந்தப் பாட் மட்டும் நினைவுக்கு வந்த்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
6th November 2015, 11:17 AM
#1404
Senior Member
Seasoned Hubber
Aasai mugam .... appaye plastic surgery etc.. nalla padam .. NT nadithirundhal adhu oru madhiri irundhirkkum. MGR too not bad. adhuvum andha Ramdoss turned MGR did so well.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
6th November 2015, 11:33 AM
#1405
Senior Member
Diamond Hubber
ஆசை முகம் .... முகமூடி கதை... அழுத்தமான கதையும் கூட... டெலிபோனுக்கு வாசனை பூசும் பெண்ணாக சரோஜாதேவி என்று நினைக்கிறேன்... பசித்தவன் முன்னே பழமாய்.... வாசுஜி... செம ரசனை... 
சிக்கா.... வாசுஜி மாதிரி விவரமா.. விளக்கமா... வியாசம் எழுதுங்க.. எனக்கும் படித்து ரசிக்க தோதா இருக்கும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th November 2015, 11:52 AM
#1406
Senior Member
Diamond Hubber
இன்றைய சிறப்புப் பாடல்.
அடுத்தது
மதுண்ணா
ராகவேந்திரன் சார்
இருவருக்கு....இருவருக்கு மட்டுமே ஒரு அரிய, அருமையான, அற்புதமான, ஈடு இணையில்லாத, ஜோரான, வித்தியாசமான, இனிமையான, அமர்க்களமான. சூப்பரான, கலக்கலான இன்னும் என்னென்ன இருக்கோ அவ்வளவும் சேர்த்து ஒரு பாடல். பாடலின் டியூனும், இசையும், குரலும், நடனமும், கோரஸும் வியப்பின் ஆச்சர்யக்குறிகள்.
பாடல் தொடங்கி ஒரு நிமிடம் ஐந்து செகண்டகளுக்கு சாக்ஸ், கிடார், என்று விதவிதமான இசைக்கருவிகளின் ஆதிக்கம்.
அப்படியே ராஜஸ்ரீயின் அமர்க்களமான பாடலுக்கான அறிமுகம். குழுவினருடன் கிளப் டான்ஸ். தம்மடித்து டான்ஸ் பார்க்கும் கனவான் முத்துராமன்.
தொட்டுப்பார்
தொடும்போது இன்பம் இன்பம்
துள்ளாத உள்ளம் துள்ளும்
மலர்ப் போன்ற கன்னம் கன்னம்
கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா
மொட்டுப்பார்
புதுத்தேனை சொட்டும் சொட்டும்
உயிர்க்காதல் கிட்டும் கிட்டும்
இளம்பாவை வண்ணம் மின்னும்
கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா
சிட்டுப்பார்
புதுப்பாடல் சொல்லும் சொல்லும்
அள்ளும் நெஞ்சை அள்ளும் அள்ளும்
உனக்காக கொஞ்சம் கொஞ்சும்
கண்ணிலே வரும் வெண்ணிலா
தொட்டுப்பார்
தொடும்போது இன்பம் இன்பம்
துள்ளாத உள்ளம் துள்ளும்
மலர்ப் போன்ற கன்னம் கன்னம்
கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா
மொட்டுப்பார்
புதுத்தேனை சொட்டும் சொட்டும்
உயிர்க்காதல் கிட்டும் கிட்டும்
இளம்பாவை வண்ணம் மின்னும்
கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா
சிட்டுப்பார்
புதுப்பாடல் சொல்லும் சொல்லும்
அள்ளாமல் நெஞ்சை அள்ளும் அள்ளும்
உனக்காக கொஞ்சம் கொஞ்சும்
கண்ணிலே வரும் வெண்ணிலா
கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா
கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா
கண்ணிலே வரும் வெண்ணிலா
கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா
கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா
கண்ணிலே வரும் வெண்ணிலா
அடடா! அடடா!
வரிகளின் முடிவில் வரும் வார்த்தைகளை இரண்டு தரம் வித்தியாசமான முறையில் பாடும்போது நாம் நம்வசம் இழந்துவிடவேண்டியதுதான். கடுமையான டியூன். பாடல் வரிகள் பளபளக்கின்றன. 'அம்மா எங்கே? அம்மா எங்கே?' என்று ராஜேஷ்ஜியைக் கேட்கத் தோன்றுகிறது.
ஆண் கோஷ்டியினர் மாறி மாறி இறுதியில் பாடும்,
'கண்ணிலே வரும் வெண்ணிலா
கண்ணில் வந்தும் கொஞ்சும் நிலா'
சுகங்களின் சொர்க்கம்.
இப்படியெல்லாம் பாட முடியுமா? இப்படியெல்லாம் டியூன் போட முடியுமா? இப்படியெல்லாம் இசை அமைக்க முடியுமா? இப்படியெல்லாம் நடனம் அமைக்க முடியுமா?
ஆச்சரியமே இறுதியில் மிஞ்சுகிறது.
இசைக்கருவிகளுக்கேற்ற அருமையான நடன அசைவுகள். மனதை விட்டு அகலுவேனா என்கிறது இப்பாடல்.
இன்று முழுக்க ஏன் இந்த வாரம் முழுதும் இந்தப் பாடல்தான்.
என்னைப் புரட்டிப் போட்ட பாடல் என்றால் மிகையில்லை.
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
Last edited by vasudevan31355; 6th November 2015 at 01:51 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
6th November 2015, 12:01 PM
#1407
Senior Member
Seasoned Hubber
Telephone cleaning lady madhunna
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th November 2015, 12:24 PM
#1408
Junior Member
Seasoned Hubber
Courtesy:Tamil Hindu
காற்றில் கலந்த இசை 29: அக உலகின் கணணீர் தேசம்
கடந்த காலத் தவறுகளின் நிழல்கள் பின்தொடர, கனத்த மனதுடன் வளையவரும் மனிதர்கள் நிறைந்த உலகம் இது. பழைய நினைவின் ஏதோ ஒரு கீற்றின் ஸ்பரிசமும் கனத்த மனதை உடைந்து வெடிக்கச் செய்துவிடும். அப்படியான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்கள் தமிழில் நிறைய உண்டு. அவற்றில் முக்கியமான சில பாடல்கள் இடம்பெற்ற திரைப்படம் ‘தியாகம்’(1978). வங்காள மொழியிலும் இந்தியிலும் ‘அமானுஷ்’ எனும் பெயரில் வெளியான திரைப்படத்தின் தமிழ் வடிவம் இப்படம். பிரதான பாத்திரங்களில் சிவாஜி, லட்சுமி. பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கடல்சார் வாழ்விடத்தில் நடக்கும் கதை இது. பணக்கார நாயகன், சூழ்ச்சி வலையொன்றில் சிக்கி, குடிகாரனாக மாறிவிட, அவனைக் காதலித்த பெண் கலங்கி நிற்கும் கண்ணீர்க் காவியம். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. ஐந்து மொழிகளிலும் அந்தந்த நிலங்களின் தன்மைக்கேற்ற இசையை வழங்கியிருந்தார்கள் இசையமைப்பாளர்கள். தமிழ் வடிவத்துக்கு இசை இளையராஜா. பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
இளையராஜாவின் இசையில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அவரது குரலுக்கு மதிப்பளிக்கும் அற்புதமான பாடல்களை இளையராஜா தந்திருக்கிறார். எஸ்.பி.பி., ஜேசுதாஸ் போன்றவர்களுக்காக இளையராஜா உருவாக்கிய பாடல்களின் நவீனத் தன்மையை, டி.எம்.எஸ்.ஸுக்காக அவர் தந்த பாடல்களில் காண முடியாது. மாறாக, எம்.எஸ்.வி. இசையில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் நீட்சியாகவே அப்பாடல்களை இளையராஜா உருவாக்கினார் என்று சொல்லலாம். எனினும், பாடல்களின் மெட்டிலும், நிரவல் இசையிலும் பழமையும் புதுமையும் கலந்த இனிமையைத் தந்தார்.
இப்படத்தில் இடம்பெறும் ‘தேன்மல்லிப் பூவே’ பாடல் ஒரு உதாரணம். டி.எம்.எஸ். ஜானகி பாடியது. கடற்கரையோரத் தென்றலின் ஸ்பரிசத்துடன் தொடங்கும் இப்பாடலின் முகப்பு இசையில் பூவை மொய்க்கும் வண்டின் ரீங்காரத்தைப் போன்ற புல்லாங்குழலை ஒலிக்க விடுவார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் ‘செல்லோ’ இசை, பிரம்மாண்டமான புல்வெளிப் பரப்பின் மீது திரட்சியான கருமேகங்களின் நகர்வைக் கண்முன் நிறுத்தும். தொடர்ந்து வீணை, வயலின் இசைக் கலவையின் சாம்ராஜ்யம் என்று அற்புதமான இசைக் கோவைகளைக் கொண்ட பாடல் இது.
‘வருக எங்கள் தெய்வங்களே’ எனும் குழுப் பாடலில் டி.எம்.எஸ்.ஸுடன் நாகூர் யூசுப், கெளசல்யா போன்றவர்கள் பாடியிருப்பார்கள். டி.எம்.எஸ். பாடிய மற்றொரு முக்கியமான பாடல் இப்படத்தில் உண்டு. அது, ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’ பாடல். செய்யாத குற்றத்துக்காக வாழ்க்கையை இழந்து நிற்கும் நாயகன் தன் மனதின் குமுறல்களை வேதனையுடன் வெளிப்படுத்தும் பாடல் இது. கடல் மேற்பரப்பின் சிற்றலைகளில் மிதந்தபடி செல்லும் படகின் மேல் தளத்தில் நின்றுகொண்டு சிவாஜி பாடுவதாக அமைக்கப்பட்ட காட்சியமைப்பு. மனதின் துயரங்களைக் கடல் காற்றுடன் கரையவிடும் பாடல். டி.எம்.எஸ்.ஸின் மெலிதான் ஹம்மிங்கைத் தொடர்ந்து ஒலிக்கும் குழலோசை, ரணத்தின் மீது வருடிக்கொடுக்கும் மயிலிறகின் மென்மையுடன் ஒலிக்கும்.
சுயஇரக்கமும் தத்துவார்த்த மனநிலையும் கலந்த குரலில் அற்புதமாகப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். மனதை நெகிழச் செய்யும் வயலின், ஆழ்மனதின் விம்மல்களை வெளிப்படுத்தும் கிட்டார், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச் செல்லும் துயர நினைவுகளின் தொகுப்பாக ஒலிக்கும் புல்லாங்குழல் என்று எளிமையான இந்தப் பாடலில் பல நுட்பங்கள் பொதிந்திருக்கும். இரண்டாவது நிரவல் இசையில், வயலின் இசைக் கோவைக்கு நடுவே ஒலிக்கும் சாரங்கி ஒரு கணமேனும் கண்ணீரை வரவழைத்துவிடும்.
இப்பாடலின் மிகப் பெரிய பலம் கண்ணதாசன். ‘பறவைகளே பதில் சொல்லுங்கள்.. மனதுக்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்’, ‘தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே… தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே’ போன்ற வரிகளை கண்ணதாசனைப் போன்ற ஞானிகளாலன்றி வேறு யாராலும் எழுத முடியாது.
இப்படத்தின் மிக முக்கியமான பாடல், ஜானகி பாடிய ‘வசந்தகால கோலங்கள்’. இளையராஜா ஜானகி இணை தந்த மிக நுட்பமான கலைப் படைப்புகளில் ஒன்று இப்பாடல். அலைகளினூடே மின்னும் ஒளித் துணுக்குகளைப் போன்ற கிட்டார் இசையுடன் இப்பாடல் தொடங்கும். வார்த்தைகளினூடே குறுக்கிடும் வலி நிறைந்த குரலில் கண்ணீரின் இசை வடிவமாகப் பாடியிருப்பார் ஜானகி. ‘கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்’ எனும் ஒற்றை வரி, எங்கோ ஒரு கடலோர கிராமத்தில், கைவிட்டுப் போன வாழ்க்கையின் நினைவுகளுடன் தவிக்கும் பெண்ணை உருவகப்படுத்தும்.
முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் சாக்ஸபோன், துயரத்தை வசதியாக வெளிப்படுத்தும் அளவுக்குப் பரந்த தனிமையைக் கொண்ட வெளியை மனதுக்குள் விரிக்கும். இரண்டாவது நிரவல் இசையில் பகிர்ந்துகொள்ள முடியாத துயர நினைவுகளின் முணுமுணுப்பைப் போன்ற மர்மத்துடன் புல்லாங்குழலை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மனதின் ரகசிய அடுக்குகளைத் துழாவும் இசைக்கோவை அது. ‘நன்றி நன்றி தேவா… உன்னை மறக்க முடியுமா?’ எனும் வரியில் ஜானகி காட்டும் பாவம்... அதை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
6th November 2015, 12:28 PM
#1409
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
சூழல் ஒன்று பார்வை இரண்டு: மனிதரின் பொய்முகம்
இப்போதெல்லாம் கிளைமாக்ஸ் சண்டைக்கு முன்பு நாயகனும் நாயகியும் குத்தாட்டம் போடுகிறார்கள். சில பத்தாண்டுகளுக்கு முந்தைய நாயகர்களோ தன்னந்தனியாகக் கொள்கை விளக்கப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். வில்லனோடு சண்டை போட்டு அடித்துத் துவைப்பதற்கு முன்பு நாயகன் தன்னுடைய செயலுக்கான நியாயத்தை முன்வைப்பதாக இந்தப் பாடல் இருக்கும். வரவிருக்கும் மோதலுக்கான முன்னுரையாக அமைந்து ரசிகர்களைத் தயார்படுத்தும்.
ஏதேனும் ஒரு பொது நிகழ்வில், அல்லது விழாவில் மாறுவேடம் பூண்டு நாயகன் பாடுவார். அல்லது ஒரு கலை நிகழ்ச்சியினூடே பூடகமாகப் பாடுவார். முன்பெல்லாம் அடிக்கடி பார்க்கக்கூடியவையாக இருந்த இந்தப் பாடல்கள் செறிந்த கருத்தும் சிறந்த இசையையும் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட இரண்டு பாடல்களைப் பார்ப்போம்.
இங்கே நாம் காணவிருக்கும் இந்திப் பாடல் இடம்பெற்ற ‘இஜ்ஜத்’ திரைப்படத்தில் ஜெயலலிதா, ஜும்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.
திரைப்படம்: இஜ்ஜத் (மாண்பு மரியாதை)
பாடலாசிரியர்: சாஹீர் லுத்யான்வி
பாடியவர்: முகம்மது ரஃபி
இசை: லட்சுமிகாந்த்-பியாரிலால்.
பாடல்:
க்யா மிலியே ஐஸே லோகோன் ஸே
ஜின் கீ ஃபித்ரத் சுப்பீ ரஹே
நக்லீ சேஹரா சாம்னே ஆயே
அஸ்லி சேஹரா சுப்பீ ரஹே
பொருள்:
மனதின் இயல்பு மறைந்து கிடக்கும்
மனிதரால் அடையும் பயன் என்ன?
(அவர்) பொய்மை முகம் புகும் நம் எதிரில்
மெய்மை முகமோ மெல்ல மறையும்
தன்னிடம் இருந்தே தன்னை மறைக்கும்
(அவர் தம்) உண்மை அடையாளம்
உணர்வது எங்கனம்?
எதனால் அவரின் புகழை ஏற்றம் செய்வது
எதை அர்ப்பணித்து இன்பம் அடைவது?
பாதி அவர்தம் குணங்கள் வெளியில்
மீதி குணங்கள் உறங்கும் நெஞ்சில்
உள்ளம் மகிழும் ஓசைகள் இயற்றி
கள்ளம் மிகுந்த பேச்சில் விரிப்பர்
உறவுகள் நீங்கள் என உயர்வாய்க் கூறி
இரவின் மடியில் இன்பம் தேடுவார்
ஆன்மா அழகின் ஆழம் வெளிப்புறம்
மேன்மை உடலின் மிடுக்கு உட்புறம்
ஒவ்வொரு இடமும் ஊரும் மக்களும்
எவரின் ஏய்ப்பால் எய்தினர் துன்பம்
அவர்தாம் அரங்கிலும் வெளியிலும் அமர்ந்து
கருணை, தர்மம் எனக் கதைப்பார் ஐயோ
செய்க தானம் எனச் செப்பும் இவர்
செய்த கொள்ளை உறங்கும் வீட்டில்
பார்ப்போம் எதுவரை இவரின் பொய் முகம்
ஆர்ப்பரிக்கும் முழக்கத்திற்கு ஆட்படும்
அழகை அச்சாரமாக்கும் ஆடையின் துணையுடன்
எதுவரை இக்கள்ள வாழ்க்கை எழுந்து நிற்கும்?
மக்களின் பார்வையில் எதுவரை மறையும்
இக்கணம் வரையில் மறைந்த யதார்த்தம் .
பொய்மை முகம் புகும் நம் எதிரில்
மெய்மை முகமோ மெல்ல மறையும்.
பொய்முகத்துடன் சமுதாயத்தில் உலாவும் நயவஞ்சகர்களைச் சற்றே கடுமையான தொனியில் சாடும் இந்தப் பாடலின் அதே கருத்துக்களைச் சிறிது தத்துவார்த்த தொனியுடன் தருகிறது தமிழ்ப் பாடல். கொள்கைப் பாடல்களில் அழுத்தமான உடல் மொழியை வெளிப்படுத்தும் எம்.ஜி.ஆர்., வழக்கத்துக்கு மாறாக, மென்மையான உடல் மொழியுடன் இந்தப் பாடல் காட்சியில் நடித்திருப்பார். பொய்முகங்களைச் சாடுவதற்குப் பதிலாக, விரக்திப் புன்னகையுடன் நொந்துகொள்ளும் தொனியில் அமைந்த இந்தப் பாடல் கருத்திலும் காட்சி அமைப்பிலும் இன்றும் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது.
படம்: தாய் சொல்லைத் தட்டாதே (1961)
இசை: கே.வி. மகாதேவன்
பாடியவர்: டி.எம். செளந்தர்ராஜன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடல்:
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
இறைவன் புத்தியைக் கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே
மனிதன் பூமியைக் கெடுத்தானே
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்
பாயும் புலியின் கொடுமையை இறைவன்
பார்வையில் வைத்தானே
புலியின் பார்வையில் வைத்தானே
இந்தப் பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே
இதயப் போர்வையில் மறைத்தானே
கைகளைத் தோளில் போடுகிறான்
அதைக் கருணை என்று அவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே
இறைவன் புத்தியை கொடுத்தானே
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
6th November 2015, 12:33 PM
#1410
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
சிறப்புக் கண்ணோட்டம்: இது திவாகர் தீபாவளி!
அவ்வப்போது முழுநீள நகைச்சுவைப் படங்களை எழுதி நடித்தாலும், ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் புதிய புதிய கதைக் களங்களில் விறுவிறுப்பான டெஸ்ட் மேட்ச் ஆடுவது கமலின் தனித்துவம். தீபாவளிப் பரிசாக கமல் தனது ரசிகர்களுக்குத் தரும் ‘தூங்காவனம்' படமும் அந்த வரிசையில்தான் வருகிறது. 2011-ல் வெளியான ‘ஸ்லீப்லஸ் நைட்' என்ற பிரெஞ்சு படத்தின் மறு ஆக்கம் என்று படக் குழு வட்டாரத்தில் சொல்லப்பட்டாலும் இது அந்தப் படத்தின் அதிகாரபூர்வமான ரீமேக்கா என்பது இதுவரை தெரியவில்லை.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் ‘திவாகர்’ என்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கமல். மனைவியைப் பிரிந்து தனது 14 வயது மகனுடன் வாழ்கிறார். எதிர்பாராமல் அவரிடம் சிக்குகிறது பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பை ஒன்று. அதைத் தனது அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று முதல் தகவல் அறிக்கையைத் தயார்செய்யத் தனது இருக்கையில் அமரும்போது ஒரு போன். போதை மருந்துப் பையைக் கொடுத்துவிட்டு மகனை அழைத்துச் செல்லும்படி நட்சத்திர ஹோட்டலும் நைட் கிளப்பும் நடத்தும் ஊரின் மாஃபியா மனிதர் சொல்ல, போதை மருந்துப் பையை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்.
இதற்கிடையில் கமலின் டிபார்ட்மெண்டிலிருந்து அவரது நடவடிக்கையைக் கண்காணிக்கக் கிளம்புகிறது ஒரு குழு. கமல் போதை மருந்துப் பையைக் கொடுத்து மகனை மீட்டாரா, இல்லையா? தன்னை மோப்பம் பிடிக்கக் கிளம்பிய தனது துறையின் சகாக்களிடம் கையும் களவுமாகச் சிக்கினாரா ஆகிய கேள்விகளுக்குப் பதில் சொல்லும் அதிரடி ஆக்*ஷன் த்ரில்லராக விரிந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறது படம்.
கமல் நடித்த ஆக்*ஷன் படங்களில் இதுவரை இல்லாத வண்ணம் இந்தப் படத்தின் ஆக்*ஷன் காட்சிகள், சேஸிங்குகள் ஆகியவற்றை ஹாலிவுட்டுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத வகையில் படமாக்கியிருக்கிறார்களாம். காரணம் 'ஸ்லீப்லஸ் நைட்' படத்தின் பணியாற்றிய கில்லஸ் கோன்செய், சில்வியன் கேபட், வெர்ஜின் அர்னாட் ஆகிய சண்டை இயக்குநர்கள் ‘தூங்காவனம்' படத்திலும் பணியாற்றியிருக்கிறார்கள்.
நீண்டகாலமாகத் தன்னுடன் பணியாற்றிய தன் இணை இயக்குநர் ராஜேஷை இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஆக்கி அழகுபார்த்திருக்கிறார் கமல். த்ரிஷா, மதுஷாலினி, ஆரண்யகாண்டம் சோமசுந்தரம், த்ரிஷயம் ஆஷா சரத், உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும் ஒவ்வொருவருக்கும் போதிய முக்கியத்துவம் கதையில் இருக்கிறதாம். வில்லன்கள் குழு படத்தின் முக்கியமான ஆச்சிரியங்களில் ஒன்று. பிரகாஷ்ராஜ், சம்பத்ராஜ், கிஷோர், யூகிசேது என்று மாஃபியா வலைப்பின்னலில் ஒவ்வொருவரும் ஒரு ரகமாக மிரட்டியிருக்கிறார்கள் என்கிறது படக் குழு.
வேதாளம் முருங்கை மரம் ஏறினால்!?
கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வெற்றிபெற்ற ‘வீரம்’ படத்தின் மூலம் இணைந்த அஜித் - இயக்குநர் சிவா - தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘வேதாளம்’. முதல்முறையாக அஜித்துடன் ஸ்ருதி ஹாசன் ஜோடி சேர்ந்திருக்கிறார். மற்றொரு முன்னணிக் கதாநாயகியான லட்சுமி மேனன் அஜித்தின் தங்கையாக நடித்திருக்கிறார். அனிருத் அஜித் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் என்கிற பரபரப்புகளைத் தாண்டி இந்தப் படத்தின் கதை மீது ஏகப்பட்ட ஊகங்கள்.
நமக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி அஜித் இந்தப் படத்தில் ஆவியாகவோ பேயாகவோ நடிக்கவில்லை. அதேபோல இந்தப் படத்தில் அஜித் இரட்டை வேடங்களிலும் நடிக்கவில்லை.
இது பாட்ஷா படத்தைத் தொட்டுக்கொண்டு அஜித்துக்கு ஏற்ப ஆல்டர் செய்யப்பட்ட ஒரு கதை என்று சொல்கிறார்கள். தன் தங்கை லட்சுமி மேனனுடன் கொல்கத்தாவில் வசிக்கிறார் அமைதியான அஜித். ஆனால் பழைய எதிரிகள் அஜித்தின் தங்கையைக் கடத்தி அவரைச் சீண்டுகிறார்கள். பொறுமை இழக்கும் அஜித் தனது பழைய முகத்தைக் காட்டுகிறார். இறுதியில் தனது எதிரிகளை எப்படி அழிக்கிறார் என்பதுதான் வேதாளம்.
இந்தப் படத்தில் தனக்குத் தங்கையாக நடித்த லட்சுமி மேனனின் நடிப்பை டப்பிங் பணியின்போது பார்த்த அஜித் வியந்துபோய் தயாரிப்பாளருக்கு போன் செய்து கூறி, கூடுதலாகச் சம்பளம் தரும்படிக் கூறினாராம்.
அஜித்தின் உயிருக்கு உயிரான நண்பராகவும் பிறகு அவரைக் காட்டிக்கொடுக்கும் துரோகியாகவும் மங்காத்தா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடமேற்ற அஷ்வின் இதில் நடித்திருக்கிறார். இவர்களோடு சூரி, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன், லொள்ளுசபா சாமிநாதன், தாபா என்று முதல் பாதிப் படம் முழுக்க இவர்களது காமெடியில் படம் குலுங்கப்போகிறதாம்.
அனிருத் இசையில் ‘ஆளுமா டோலுமா’ குத்துப்பாடலும் ஸ்ருதி ஹாசன் பாடியிருக்கும் டூயட் பாடலும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்.
செரிமானத்துக்கு இஞ்சி முரப்பா!
இந்த இரண்டு படங்களையும் பார்த்து செரிமானம் ஆகாவிட்டால் எப்படி? அதற்காகவே புதுமுகங்கள் நடிப்பில் ‘இஞ்சி முரப்பா’ என்ற படமும் துணிச்சலுடன் ரிலீஸ் ஆகிறது. எஸ். ஏ. சந்திரசேகரின் உதவியாளரான எஸ். சகா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடி சோனி சிறிஷ்டா என்ற மற்றொரு புதுமுகம்.
தங்கை மேல் அதிக பாசம் கொண்ட ஒரு அண்ணன், அவளது அனுமதியில்லால் காதலில் விழுந்தால் அந்தக் காதலுக்கு வரும் புது மாதிரியான சோதனையை நகைச்சுவையுடன் சித்தரிக்கும் ‘கமர்ஷியல் இஞ்சிமுரப்பா’வாம் இந்தப் படம்.
இந்த மூன்று நேரடித் தமிழ்ப் படங்களுக்கு மத்தியில் சல்மான் கான் - சோனம் கபூர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிரேம் ரதன் தாங் பயோ’ என்ற இந்திப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘ மெய் மறந்தேன் பாராயோ’ என்ற தலைப்புடன் வெளியாகிறது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks