-
21st March 2016, 09:45 PM
#31
Junior Member
Veteran Hubber
Tributes
Shri 'Film News' Anandhan
senthil
Last edited by sivajisenthil; 22nd March 2016 at 12:31 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
21st March 2016 09:45 PM
# ADS
Circuit advertisement
-
21st March 2016, 09:55 PM
#32
Senior Member
Seasoned Hubber
என் மேல் பேரன்பு வைத்திருந்த மரியாதைக்குரிய திரு பிலிம்நியூஸ் அனந்தன் அவர்களின் மறைவிற்கு என் உளமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். அவரது மறைவு தமிழ் சினிமா உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இன்றைக்கு தமிழ் சினிமா வின் வளர்ச்சியைப் பற்றிப் பலரும் பேசுகின்றனர் என்றால் அதற்கு அடித்தளமிட்டது திரு பிலிம்நியூஸ் அனந்தன் அவர்களின் பங்களிப்பேயாகும்.
அவருடைய ஆன்மா சாந்தியடையவும் அவருடைய இழப்பைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தார் பெறவும் இறைவனை வேண்டுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
21st March 2016, 10:28 PM
#33
Junior Member
Senior Hubber
திரியின் பாகம் 18 ஐ துவக்கி இருக்கும் ஆதவன் ரவி அவர்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.
மக்கள்தலைவரின் புகழ்பரப்பும் பணியில் மேலும் ஒரு மைல்கல்லாக தங்களது பங்களிப்பு
இருக்கும்
என்பது திண்ணம்
அதுவே
எங்களது எண்ணம்.
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
Last edited by SUNDARAJAN; 21st March 2016 at 10:36 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
21st March 2016, 11:11 PM
#34
Senior Member
Devoted Hubber
நம் நெஞ்சில் என்றும் வாழும் அன்பு தெய்வம் திரியின் 18ம் பாகத்தை துவக்கிய ஆதவன் ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd March 2016, 04:11 AM
#35
Junior Member
Senior Hubber
sunderrajan sir What about SIVAKAMIYIN SELVAN function highlights and partipants speches let us also enjoy the function
-
22nd March 2016, 08:22 AM
#36
Junior Member
Newbie Hubber
நேற்றும் என் தங்கையிடமிருந்து திட்டுக்கள். திரும்ப திரும்ப சிவாஜியா? ஏன் பைத்தியமாக அலைகிறாய்? சிறுகதைகள்,நாவல்கள் எழுது. பிரசுரிக்க ஆட்கள் தயார். நீதான் எங்கள் எல்லோருக்கும் உந்துதல். உன்னுடைய பொன்னான குறைந்த அளவு நேரத்தையும் ஏன் ஒரே நோக்கத்திற்கு மட்டுமே உபயோகிக்கிறாய் ?என்று கேட்கிறாள்.(அவளும் எனக்கு ஒரு மாற்றும் குறையாத ரசிகை)
ஏன் அவரை பற்றியே எழுதுகிறேன்?
அவர் உலகத்திலேயே சிறந்த கலைஞர். விஞ்ஞானத்தில் ஐன்ஸ்டீன். கலைக்கு சிவாஜி.
அவரை பற்றி ஒரு நல்ல டாகுமெண்ட்டரி எடுக்கவும் துப்பில்லாத அரசுகள், ரசிகர்கள்,கலைஞர்கள்,சங்கங்கள், குடும்பம்.
அவரை பற்றி இதுவரை வந்த எழுத்துக்கள்,புத்தகங்கள் சராசரிக்கும் கீழே. (Y .G .மகேந்திரா போன்றோர் பாதி சுய பிரதாபம்.)
நான்தான் அவரை பற்றி எழுத தகுதியான ஒரே தமிழன். அவரை முற்றும் அறிந்தவன்.தமிழறிந்தவன்.எழுத்தறிந்தவன்.,சினிமா அறிந்தவன் ,இலக்கியம் அறிந்தவன்.சுயநலம் அற்றவன்.
ஆனால் joe ,வேலன்,P _R ,முரளி,கார்த்திக்,வாசு,ராகவேந்தர் ,சாரதி,சாரதா,ஆதிராம்,கல்நாயக்,சின்னகண்ணன்,க்ரிஷ்ணா ஜி, இவர்களெல்லாம் இருந்த போது , காத்திரமான எழுத்துக்களுக்கு உடன் வினை-எதிர் வினை ,தொடர் கருத்தலைகள் குவிந்தன. ஆனால் தற்போது எழுதி குவிக்கும் ஓரிருவர் சுய திருப்திக்கு செய்கிறார்களே தவிர மற்றவற்றை படிக்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒரு பத்திரிகை செய்தி, வலை செய்தி இவற்றுக்கெல்லாம் எதிர் விளைவுகள் அவசியமில்லை.துதி பாடல்களுக்கும் அவசியமில்லை. ஆனால் மெனக்கெட்டு எழுத படும் அறிவு பூர்வமான விஷயங்கள் உரியவர்களை போய் சேருகிறதா என்பது அவசியமான ஒன்று.
நேரத்தை மேலும் வீணாக்க விரும்பவில்லை. ராகவேந்தர் ரொம்ப பிஸி ஆகி விட்டார். முரளிக்கு நேரமில்லை. வாசுவிற்கு மனமில்லை. இப்போது இருக்கும் ஆட்களை பாம்பா,பழுதையா என்றே எடை போட முடியவில்லை.
நான் இங்கே அவற்றை போட்டு என் நேரம்,உங்கள் நேரம் இவற்றை வீணாக்காமல் மிச்சம் பிடிக்கலாம். சின்ன கண்ணனுக்கு நன்றி.
Last edited by Murali Srinivas; 22nd March 2016 at 11:59 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd March 2016, 11:28 AM
#37
Junior Member
Senior Hubber
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்.
சினிமா சம்பந்தப்பட்ட அனைத்துச் செய்திகளையும் தனது விரல் நுனியில் வைத்திருந்தவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள், நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களிடம் மிகுந்த பக்தியும், மரியாதையும் வைத்திருந்தவர். தனது சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளைச் சேகரிப்பதற்காக 20 ஆண்டுகள் சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்தில் அவருக்கென தனி டேபிள் அமைத்துத் தரப்பட்டது என்பது கூடுதல் செய்தியாகும். அன்னாரது ஆன்மா சாந்தியடைய உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் இறைவனை வேண்டுகிறோம்.
தனது தந்தையை இழந்து வாடும் டைமண்ட் பாபு அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இந்த இழப்பை தாங்கும் சக்தியை தரவேண்டும் என இறைவனை வேண்டுகிறோம். Video Courtesy For behindwoods
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd March 2016, 11:30 AM
#38
Junior Member
Senior Hubber
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, நேற்று 21.03.16 திங்கள் அன்று மதுரையில் நடைபெற்ற நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிவகாமியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழா வீடியோவின் டீஸரை பதிவேற்றம் செய்திருந்தேன். ஒரு நாளில் 800க்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். அனைவருக்கும் நன்றி. மேலும் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சிவகாமியின் செல்வன் திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் உருவாக்கியுள்ள மதுரை சிவா(ஜி) மூவீஸார் முழுக்க முழுக்க சிவாஜி ரசிகர் என்பதனை தெரியப்படுத்த விரும்புகிறேன். இவர் சினிமா வியாபாரி அல்ல. மக்கள்தலைவரின் புகழை பரப்ப வேண்டும், தலைவரது காலத்தால் அழியாத பல திரைப்படங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் டிஜிட்டலில் உருவாக்க உள்ளார்.
சிவகாமியின் செல்வன் திரைப்படத்தை நாம் வெற்றிபெற வைப்பதன் மூலம் பல நல்ல திரைப்படங்கள் (மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் படங்கள் மட்டும்) மதுரை சிவா(ஜி) மூவீஸாரால் டிஜிட்டல் படுத்தப்படும்.
உண்மையான சிவாஜி ரசிகரால் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கபட்டுள்ள சிவகாமியின் செல்வன் திரைக் காவியத்தின் வெற்றி என்பது ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் வெற்றி என்று கருதி படத்தை வெற்றிக்காவியமாக்குவோம்.
டிரைலர் வெளியீட்டு விழா முழுவதும் காண
http://www.sivajiganesan.in/SS.html
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
22nd March 2016, 11:44 AM
#39
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரியியின் பாகம் 18 ஐ
தொடக்கியுள்ள ஆதவன் ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd March 2016, 01:08 PM
#40
Senior Member
Diamond Hubber
ஆதவனாருக்கு அனைவரின் ஆதரவும் உண்டு. அதற்கு மேல் ஆண்டவரின் ஆசிகளும் உண்டு. 18 18000 ஆக வளரட்டும். 17-ஐ பக்காவாக முடித்த இளவலுக்கு என் ஆசியுடன் கூடிய நன்றிகள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks