-
8th May 2016, 09:47 AM
#11
Senior Member
Diamond Hubber

காபரே கானங்களில் மட்டுமல்ல....கண்ணீர் வரவழைக்கும் கானங்களிலும் கில்லாடி ராட்சஸி. வறுமையில் வாடும் குமாரி ஷீலா வயிற்றுப் பிழைப்புக்காக தன் தங்கைகளுடன் ஆடிப்பாடி பிழைப்பு நடத்தும் பரிதாபம். ஈஸ்வரியின் குரலில் ஈட்டியாகத் துளைக்கிறது இதயத்தை இப்பாடல். இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் அடிவயிறு என்னையுமறியாமல் கலங்குவதை உணருவேன். மூன்றெழுத்தில் எனக்குப் பிடித்த முத்தான முதல் பாடல்.

பாடலின் இன்னொரு விசேஷம் ஈஸ்வரியுடன் என்னுடைய இன்னொரு பிடித்தமான பாடகி சரளா கூட்டணி அமைத்ததுதான். சரியான சளைக்காத சரளா இணை...துணை... வேறென்ன வேண்டும்?
மது அண்ணாவும், நானும் இப்பாடலைப் பற்றி செல்லில் பேசி மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. அவருக்கும் மிக மிக பிடித்த பாடல். ஆனால் பாடலின் வீடியோ மிஸ்ஸிங். விரைவில் தர முயற்சி செய்கிறேன்.
தெய்வத்தின் கோவில்
தெய்வந்தான் இல்லையே
மனிதனின் பூமி
மனிதன்தான் இல்லையே
அவை இரண்டும் இல்லா வேளையிலே
ஏழைப் பெண்கள் வீதியிலே
முதலாவது சரணத்தில்,
'வாழ்வது எங்கள் ஆசை
ஒரு மாளிகை ராணியைப் போ...ல '
என்று முடித்து ஈஸ்வரி எடுக்கும் அந்த ஹம்மிங் சோகம். நெஞ்சக் காணியை அப்படியே குல்கந்து குரல் ஏர் பூட்டி உழுகிறது. வறுமையின் கொடுமையும், இளமைக்கால இன்னலையும் அந்த ஹம்மிங் ஒரே சேர பிரதிபலிக்கும்.
பின்வரும் இசையே இல்லாமல் வரும் வரிகளும் வறுமையை உணர்த்துவதே.
'ஆண்டவன் காட்டிய பாதை
ஒரு ஆண்டியின் பிள்ளையைப் போலே'
'தன்னைத்தானே காணும் உலகில் என்னைக் காண்பார் யாரம்மா?'
என்ற ஈஸ்வரி பாடும் வரிகளிலேயே அவர்களின் வறுமைக் கதை நமக்கு உணர்த்தப்படுவிடும்.
'யாரம்மா?' என்று ஈஸ்வரி முடித்தவுடன் சரளா குழுவினர் உடன் தொடரும் அந்த இரண்டு முறை 'யாரம்மா' இடியாக இருதயத்தில் இறங்கும்.
இதற்குப் பின்
சரளா சரளமாகப் பின்னுவார். டோட்டலாக பாடலைக் கேப்சர் பண்ணிவிடுவார். ஈஸ்வரிக்கே சவால் விடுவதுபோல இருக்கும்.
'தங்கைக்கென்றோர் அண்ணன் இருந்தான்
எங்கு சொல்வாய் ஏனம்மா?'
(மதுண்ணா! இந்த வரி கொஞ்சம் டவுட். சரி பார்க்கவும். காது பஞ்சர்)
(அந்தக் குரலில் அவர் பாடிய இஸ்லாமிய தனிப்பாடல்கள் கண்டிப்பாக நம் நினைவுக்கு வந்துபோகும்).
ஷீலா மெச்சூர்டான அக்கா என்பதால் ஈஸ்வரி அவருக்கான சோக வரிகளை விரக்தியாக வெளிப்படுத்துவார். உடன் தங்கை விவரமறியா இளம்பெண் என்பதால் அவளுக்காகப் பாடும் சரளா குரலில் ஈஸ்வரியை விட அதிகமாக தழுதழுப்பில் சோகம் காட்டுவார். என்ன ஒரு புரிதல் தன்மை!
இப்போது பாடல் சோகத்தின் விளிம்பிற்கு சற்றே உச்ச ஸ்தாயியை அடையத் தொடங்கும்.
'கருணை நெஞ்சைத் தேடித் தேடி கண்ணீர் சிந்தும் பெண்ணம்மா
பெண்ணம்மா
பெண்ணம்மா'
கடமை என்று ஒருவர் வந்தால் காலில் விழுவேன் நானம்மா'
முடித்தவுடன் ஈஸ்வரியின் மீண்டும் இரக்கத்தை வரவழைக்கும் சோக ஹம்மிங்.
பாடலென்றால் அப்படி ஒரு பாடல் இது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது இப்பாடல் நினைவுக்கு வராமல் போனதில்லை.
'மூன்றெழுத்'தில் இப்பாடலில் என் மூச்சிருக்கும் என்றும்.
Last edited by vasudevan31355; 8th May 2016 at 02:59 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
madhu thanked for this post
-
8th May 2016 09:47 AM
# ADS
Circuit advertisement
Bookmarks